சிரஞ்சீவி, சச்சின், மம்மூட்டி, மோகன்லால், ஏஆர் ரஹ்மான், ஆனந்த் மகிந்திரா….. வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார்!

சிரஞ்சீவி, சச்சின், மம்மூட்டி, மோகன்லால், ஏஆர் ரஹ்மான், ஆனந்த் மகிந்திரா….. வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார்!

லைவர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாளையொட்டி பிரபல நடிகர்கள் சிரஞ்சிவி, மகேஷ்பாபு, மோகன் லால், துல்கர் சல்மான் , சிவகார்த்திகேயன் மற்றும் நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரில் வாழ்த்துத் தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் குவிந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டங்களை உறுதியாக அறிவித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது. அவருக்கு தலைவர்கள்- பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

ரஜினிகாந்த்துக்கு பிரபல தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சிவி, மகேஷ் பாபு, மலையாள நடிகர்கள் மோகன்லால், துல்கர் சல்மான், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, நடிகைகள், கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இவை சில முக்கிய பிரபலங்களின் வாழ்த்துப் பதிவுகள். இவை தவிர, டைம்ஸ் குழுமம் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்கள், அமெரிக்கா – கனடாவைச் சேர்ந்த ஹாட்ஸ்டார் குழுமம், சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்கள், ஸ்மூலி போன்ற செயலி நிறுவனங்கள்… என பலரும் வாழ்த்து மழைப் பொழிந்துள்ளனர்.

இந்திய அளவில் மட்டுமல்ல… சர்வதேச அளவிலும் கூட வேறு யாருக்கும் இப்படி வாழ்த்துகள் குவிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். 

-என்வழி

 

Leave a Reply

Your email address will not be published.