ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஜினியின் உடல்நிலை குறித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை, அவருக்கு கொரோனா தொற்றோ அதற்கான அறிகுறியோ ஏதுமில்லை என தெரிவித்திருந்தது. இபேபோது மீண்டும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. அவர் இன்றிரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.
யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால், யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினரும், சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரது மகள் அவரோடு இருக்கிறார்.
தெலங்கானா ஆளுநர் மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசினார். ரஜினி அவர்கள் வேகமாகக் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்,” என்று தெரிவித்துள்ளது.
– என்வழி