‘சாரல் சாரல் காற்றே…’ – அண்ணாத்த இரண்டாவது பாடல் வெளியானது!

‘சாரல் சாரல் காற்றே…’ – அண்ணாத்த இரண்டாவது பாடல் வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இதன் முதல் சிங்கிளான ‘அண்ணாத்த அண்ணாத்த….’ என்ற பாடல் கடந்த 4ந்தேதி வெளியானது.

டி.இமான் இசையில் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 60 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இன்னமும் ட்ரெண்டிங்கில் உள்ளது அந்தப் பாடல்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘சாரல் சாரல் காற்றே ‘ என்ற 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. ரஜினியும் நயன்தாராவும் பாடும் டூயட் இந்தப் பாடல்.

யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராமும், ஷ்ரேயா கோஷலும் பாடியுள்ளனர். இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ரஜினியின் அழகும் உடைகளும் ரசிகர்களைக் கிறங்கடித்துள்ளது என்றால் மிகையல்ல.

Leave a Reply

Your email address will not be published.