‘தாய் தந்தைக்கு அடுத்து அண்ணன் ரஜினிதான்!’ – நெகிழ்ந்த ரசிகர்கள்

‘தாய் தந்தைக்கு அடுத்து அண்ணன் ரஜினிதான்!’ – நெகிழ்ந்த ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க, அவர் நடித்த பல்வேறு சினிமா படங்களில் கெட்டப்புகளில் வந்து போயஸ் கார்டனில் குவிந்தனர் ரசிகர்கள்.

திரைத்துறைக்கு வந்து கடந்த 45ஆண்டுகளாக வயது வித்தியாசமின்றி அத்தனை தமிழ் ரசிகர்களின் விருப்ப நாயகனாகத் திகழ்பவர் ரஜினிகாந்த். திரையில் தான் ஏற்று நடித்த அத்தனைப் பாத்திரங்களையும் தனது அபார நடிப்பால் தனித்துவம் மிக்கதாக மாற்றிய சாதனையாளர் அவர்.

மொழி் வேறுபாடின்றி அத்தனை மக்களையும் தன் வசீகர நடிப்பால் கட்டிப்போட்டிருக்கும் ரஜினிக்கு இந்த ஆண்டு மிக விசேஷமான பிறந்த நாள். ஒரு நடிகனாக, உச்ச நட்சத்திரமாகத் திகழும் அவர், இந்த ஆண்டு தனது புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, மக்கள் முன் வரவிருக்கிறார்.

இந்த ஆண்டு பிறந்த நாளை என்றுமில்லாத உற்சாகத்துடன் ரசிகர்களும், அவரை நேசிக்கும் அபிமானிகளும் கொண்டாடி மகிழ்ந்தனர். பல இளைஞர்கள் தனது குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே ரஜினியை நேசித்து பிறந்த நாள் கொண்டாடினர். பலர் சமூக வலைத் தளங்களில், ‘எங்கள் தாய் தந்தைக்கு அடுத்து நாங்கள் நேசிக்கும் மூத்தவர், அண்ணன் ரஜினிகாந்த்’ என்று பதிவிட்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி, அதைப் புகைப்படமாகப் பதிவிட்டிருந்தனர்.

இன்னொரு பக்கம், ரஜினியின் தீவிர ரசிகர்கள் சிலர், திரைப்படங்களில் அவர் ஏற்ற புகழ்பெற்ற பாத்திரங்களின் தோற்றத்திலேயே போயஸ் கார்டனில் குவிந்து, ரஜினிக்கு வாழ்த்துக் கூறினர்.

ரஜினி நடித்த மனிதன், தர்மதுரை, பாட்ஷா, அண்ணாமலை, அருணாசலம், பாபா, ரோபோ, பேட்ட, தர்பார் உள்ளிட்ட படங்களில் ரஜினியின் கெட் அப்களைப் போட்டு வந்து போயஸ் தோட்டத்தில் ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடினர் இந்த ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published.