8 பேருக்கு கொரோனா… அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து… சென்னை திரும்புகிறார் ரஜினி!

8 பேருக்கு கொரோனா… அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து… சென்னை திரும்புகிறார் ரஜினி!

ஹைதராபாத்: ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படைக்குழுவில் 8 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. 9 மாதங்களுக்குப் பிறகு தொற்று ஓரளவு குறைந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினியும் இரவு பகலாக, நாளொன்றுக்கு 14 மணி நேரம் நடித்து வந்தார்.

இந்த நிலையில், அண்ணாத்த படக்குழுவில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் ரஜினிகாந்துக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும்,  விரைவில் அவர் சென்னை திரும்புவார் என்றும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

– என்வழி

Leave a Reply

Your email address will not be published.