BREAKING NEWS
Search

ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு?

ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு?

முன்குறிப்பு: இந்த தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் காணாமல் போய்விட்டன. இந்த ஜென் கதை பிரிவிலும் முன்பு வெளியான பல கதைகள் காணவில்லை. அவற்றை யாராவது சேகரித்து வைத்திருந்தால் தந்து உதவவும்! – ஆசிரியர்

ரு ஊரில் ஒரு ஜென் குரு இருந்தார். அவரது கருத்துக்களைக் கேட்க பல இடங்களில் இருந்தும் பல தரப்பட்டblind ஆட்கள் வருவது வழக்கம்.

ஒரு நாள், ஜென் குரு அங்கு கூடி இருந்தவர்கள் இடையே பல நல்ல கருத்துக்களை மிக சுவாரசியமாக கூறிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை.

ஜென் குரு பேசி முடிக்கும் போது இரவு வெகு நேரமாகிவிட்டது.

அந்த ஆசிரமத்தில் இருந்து காட்டு வழியாக இருளில்தான் செல்ல வேண்டும். மின்சார விளக்கு வசதி ஏதுமில்லை.

ஆசிரமத்தில் இருந்து ஒவ்வொருவராக புறப்பட்டனர். கடைசியாக கிளம்பத் தயாரானவர் ஒரு பார்வையற்றவர்.

அவரைப் பார்த்த ஜென் குரு, தனது சீடரை அழைத்து, “இந்த பார்வையற்றவர் இருளில் பத்திரமாக வீடு திரும்ப அவர் கையில் ஒரு விளக்கைக் கொடுத்தனுப்பு,”’ என்று உத்தரவிட்டார்.

சீடருக்கு இதனை கேட்டதும் மிகப் பெரிய குழப்பம்.

வந்து இருப்பவர், பார்வையே இல்லாதவர். இவருக்குத்தான் வெளிச்சமே தெரியாதே. அவர் இருளிலும் நடந்து செல்லக் கூடியவர்தானே. அப்படி இருக்கும் போது அவருக்கு ஏன் விளக்கைக் கொடுக்கும்படி குரு கூறுகிறார்? இந்த விளக்கு வெளிச்சம் அந்த பார்வையற்றவருக்கு தேவைப்படாதே? என்று சீடர் குழம்பினார்.

ஆனாலும் குருவின் கட்டளையாச்சே! அந்த பார்வையற்றவருக்கு நல்ல வெளிச்சம் தரும் விளக்கு ஒன்றை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

ஒரு வாரம் ஆனது. ஆனாலும் அந்த சீடரின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

குழப்பமான நிலையில் காணப்பட்ட அந்த  சீடரை ஜென் குரு அழைத்து, “உனக்கு என்ன சந்தேகம்? ஏன் குழம்பிப் போய் இருக்கிறாய்,” என்று கேட்டார்.

அப்போது அவரிடம் அந்த சீடர், “ஐயா! கடந்த வாரம் இங்கு வந்த கண்பார்வையே இல்லாத ஒருவரிடம் ஏன் விளக்கைக் கொடுத்து அனுப்பினீர்கள்? அந்த விளக்கால் அவருக்கு என்ன பயன் இருந்திருக்கும்?” என்று தனது மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்டார்.

என்ன பதில் சொல்லியிருப்பார் குரு? யோசிச்சி வைங்க..!

நாளைக்கு அடுத்த கதை…

-என்வழி




3 thoughts on “ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு?

  1. Krishnan

    எதிரே வருபவர் இவரை இடிக்காமல் இருக்க. பார்வை உள்ளவருக்கு வெளிச்சம் இல்லைஎன்றால் அவ்ளோதான்.

  2. சரவணன்

    ஹஹ்ஹா, எதிரில் வருபவரும் இருட்டில் எப்படி நடந்துவருவார்?. அவரும் விளக்கு கொண்டுவருவார் இல்லையா?. பின்னர் எப்படி இவர் குருடருடன் மோதிக்கொள்வார்?. எனவே குருடருக்கு விளக்குத் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *