BREAKING NEWS
Search

அட, போலீஸ் பத்தி பாலா சொன்னதும் சரிதான்!

அட, போலீஸ் பத்தி பாலா சொன்னதும் சரிதான்!

வன் இவன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் போலீஸ்காரர்களை கிட்டத்தட்ட ‘கைப்புள்ளைக’ ரேஞ்சுக்குதான் காட்டியிருப்பார் பாலா. ‘இப்படிக் கூட அப்பிராணியா இருப்பாங்களா போலீஸ்காரர்கள்… திருடனிடம் போய் டேய் கண்ணா வாடா… வந்துடறா ராசா என கெஞ்சுவார்களா’ பலரும் விமர்சித்திருந்தார்கள்.

ஒரு காட்சியில், ஜில்லாவில் உள்ளவர் திருடர்களெல்லாம் திருந்த வேண்டும் என்று அய்யனாருக்கு கிடாவெட்டி விருந்து வைப்பார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். அதற்கு விருந்தாளிகள் யார் தெரியுமா… பிரபலமான கேடிகள்தான். இனிமேலாவது திருடமாட்டேன்னு திருநீறு போட்டுக்கிட்டு விருந்து சாப்பிடுங்கப்பா என்பார்.

இந்தக் காட்சியை கிண்டலடிக்காதவர்கள் இல்லை. ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவத்தைப் படித்த பிறகுதான், பாலா உண்மையிலேயே இப்படி நிறைய போலீஸைப் பார்த்திருப்பார் என்று நம்ப முடிந்தது!

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் செய்திருப்பதைப் பாருங்கள்.

இது ஏதோ அந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நடந்த சமாச்சாரமில்லை. மொத்த மாவட்டத்துக்கும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு விசேஷ சமாச்சாரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொலைகள், கொள்ளைகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறதாம். குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திணறுகிறதாம் போலீஸ். தினமும் செய்தித் தாள்களில் குற்றப் பக்கங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போக, மேலிடத்தில் தொடர்ந்து விசாரிப்புகள். இதனால் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட போலீஸார் வரை ஏக டென்ஷன். ஸ்டேஷன் நிம்மதியே போச்சு என ஒவ்வொரு அதிகாரியும் கூடிப் புலம்ப, கடைசியில் வந்தது அந்த ஐடியா.

அதுதான் அம்மனுக்கு படையல்… கிடாவெட்டு!

இனி மாவட்டத்தில் கொலை, கொள்ளை என எதுவும் நடக்ககூடாது என  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருவண்ணாமலையில் உள்ள பச்சையம்மன் கோயில் வளாகத்தில் கிடாவெட்டி சாமிக்கு படையலிட்டனர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள்.

“அம்மா தாயே… எதாவது குத்தங்குறை இருந்தா மன்னிச்சிட்டு, இனி மாவட்டத்தில் குற்றங்கள் குறைய அருள் பாலிக்கணும்,” என நெடுஞ்சான்கிடையாக விழுந்து கும்பிட்டனராம் பல அதிகாரிகள்.

இதற்காக 30க்கும் மேற்பட்ட போலிஸார், தங்களுக்கு அரசு தந்த வாகனங்களில் ஆடுகளை ஏற்றி வந்து,  வெட்டி படையலிட்டுள்ளனர். பின் கறி விருந்தை ரசித்து ருசித்து சாப்பிட்டார்களாம்.

சமாச்சாரம் தெரிந்ததும் ஏக ஆர்வமாகிவிட்ட ஊள்ளூர்வாசிகள் கோயிலுக்குப் படையெடுப்பதற்குள் விருந்து முடிந்துவிட்டதாம்.

எத்தனை குற்றவாளிகளை விருந்துக்கு அழைத்து வந்தனர் என்ற விவரம்தான் தெரியவில்லை!

குறிப்பு: அதுக்காக போலீஸ் ரொம்பத்தான் நல்லவங்கன்னு நினைச்சிட வேணாம். அவங்களோடு இன்னொரு பக்கம்… கொடூரத்தின் உச்சம்!

-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “அட, போலீஸ் பத்தி பாலா சொன்னதும் சரிதான்!

 1. S.ALAVUDEEN

  குறிப்பு: அதுக்காக போலீஸ் ரொம்பத்தான் நல்லவங்கன்னு நினைச்சிட வேணாம். அவங்களோடு இன்னொரு பக்கம்… கொடூரத்தின் உச்சம்!

 2. s venkatesan, nigeria

  //குறிப்பு: அதுக்காக போலீஸ் ரொம்பத்தான் நல்லவங்கன்னு நினைச்சிட வேணாம். அவங்களோடு இன்னொரு பக்கம்… கொடூரத்தின் உச்சம்!//
  திரு வினோ, சிரிக்கலாம் என்று நினைக்கும் போதே பயமுறுத்துகிறீர்களே

 3. arivu

  athan ippo vanthirukkuthe kashmirla onga police senjathellam parpome enna sollureenga endu ithukku channel 4 vedio parunga

 4. தினகர்

  “சிரிக்கலாம் என்று நினைக்கும் போதே பயமுறுத்துகிறீர்களே”

  வெங்கடேசன், ஊருக்கு போகனும்ன்னு நினைச்சாலே பயம் வருதா? :). அந்த அளவுக்கு இன்னும் மோசம் ஆகல்லன்னு நினைக்கிறேன்.. நல்லவங்க இன்னும் ’பெரும்பான்மையினரா’ இருக்காங்கன்னு தான் என்னோட கணிப்பு..

 5. enkaruthu

  நித்தியானந்தா: நான் ஆதினம்.
  கௌண்டர்: நான் மட்டும் என்ன ஆன்னு தினமும் சோறு திங்கிரவன்தான்.அதனால் என்னையும் ஆதினம் என்று சொல்லாலாமா.

  நித்தி:தினமும் நாங்கள் காலையில் எழுந்தவுடன் ஆனந்த எல்லை நோக்கி போகிறவர்கள்.

  கௌண்டர்: ஆனந்தத்தை நோக்கி போறியா இல்லை ஆனந்தியை நோக்கி போறியா .காலையில் எழுந்தவுடன் பாத்ரூமை நோக்கிதாண்டா எலோரும் போவார்கள் இவன் மட்டும் ஆனந்தத்தை நோக்கி போவானாம் அடிச்சு விடுறான் பாரு.

  நித்தி:காமத்தால் ஆண்டவனை அடையலாம்.

  கௌண்டர் :டேய் பன்னாட அதற்க்கு உன் மனைவியைத்தான் use பண்ணி கடவுளை அடைந்திருக்கவேண்டும். அடுத்தவன் மனைவியை use பண்ணி அல்ல.

  நித்தி: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.

  கவுண்டர்:நீ ஒன்னும் சொல்ல வேணாம் .நீ யாரென்று எனக்கு தெரிந்துவிட்டது.இதற்க்கு மேல் நீ பேசின செருப்ப எடுத்து பிய்ய பிய்ய அடித்துவிடுவேன்.ஒழுங்கா ஓடி போயிரு.

  நண்பர்களே இந்த பதிவிருக்கு இந்த கருத்து சம்பந்தம் இல்லைதான்.ஆனால் கடவுள் பற்றிய விஷயம் என்றாலே நித்தி தான் என் நினைவிற்கு வருகிறது.அதனால்தான் இதை இங்கு போட்டேன்.

 6. raja

  அம்மா ஆட்சியில் அவர்கள் இன்னும் கொடூரமாக மாறுவார்கள் … இப்பொழுதெல்லாம் காரோ இல்லை பைக்கோ எடுத்து கொண்டு கிளம்பும் பொது பெட்ரோலுடன் அவர்களுக்கும் சேர்த்து ஒரு நூறு ருபாய் தனியாக எடுத்து வைத்து கொண்டுதான் கிளம்பவேண்டியதாக இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *