BREAKING NEWS
Search

என்னை அறிந்தால் – விமர்சனம்

என்னை அறிந்தால் – விமர்சனம்

30-yennai-arindhaal-141466004000
டிப்பு: அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர்

ஒளிப்பதிவு: டான் மெக்ஆர்தர்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு: ஏ எம் ரத்னம்

இயக்கம்: கவுதம் மேனன்

எண்பதுகளில் பெரும் வெற்றி கண்ட இயக்குநர்கள் தங்களுக்கென ஒரு பாணி வைத்திருந்தார்கள். படமாக்கியிருப்பதை, வசனங்களை வைத்து யார் படம் என்பதைச் சொல்லிவிடலாம். அதே நேரம் முந்தைய படங்களின் காட்சிகள் எதுவும் ரிபீட்டாக மாதிரி பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால் இன்றைக்கு ஒரே கதை, ஏற்கெனவே வைத்த காட்சிகளை வேறு நடிகர்களை வைத்து ரீமேக் பண்ணுவது தனி பாணியாகிவிட்டது. அதை கவுரவமாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள். கவுதம் மேனனும் இதிலிருந்து தப்பவில்லை என்றே தோன்றியது என்னை அறிந்தால் பார்த்தபோது.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம்… இவற்றிலிருந்து தலா முப்பது சதவீதத்தை எடுத்து என்னை அறிந்தால் ஆக்கியிருக்கிறார் கவுதம் மேனன்.

பாத்திரங்களில் கூட…  நேர்மையான அதிகாரி, மூஞ்சியை மறைக்கும் முடியுடன் கெட்ட வார்த்தை பேசும் வில்லன், ஏற்கெனவே திருமணமான அல்லது விவாகரத்தான ஹீரோயின், வன்முறைகளின் உச்சமான மோதல்கள்… அத்தனையும் இதிலும் காணக் கிடைக்கின்றன.

முதல் பாதியை சற்று சிரமப்பட்டு கடந்தால் போதும்… கடைசி நாற்பந்தைந்து நிமிடங்கள் நல்ல விறுவிறு சினிமா பார்க்கலாம்.

பார்வையாளர்களுக்கும் கவுதம் மேனனுக்கும் பழகிய கதை என்றாலும் அஜீத்துக்கு இது புதுசு. பில்டப், பஞ்ச் என பெரிதாக இல்லை. ஒரு துடிப்பான இளம் போலீஸ் அதிகாரி, காதலியை இழந்து துயரில் கதறும் காதலன், பொறுப்பான அன்பான அப்பா.. மூன்று கட்டங்களிலுமே வாழ்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகள், குறிப்பாக வில்லனுடனான வார்த்தை மோதல்களில் ரத்தத்தை சூடேற வைக்கிறார் அஜீத்.

த்ரிஷா, அனுஷ்கா, விவேக், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி என அனைவருமே பாத்திரங்களில் ஒன்றி நடித்திருக்கிறார்கள். அந்த குட்டிப் பெண் நெகிழ வைக்கிறார்.

அருண் விஜய்க்கு பெரிய பிரேக் இந்தப் படம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இரண்டு பாடல்கள் மனதைத் தொடுகின்றன. பின்னணி இசையும் பொருத்தமாக உள்ளது. டான் மெக்ஆர்தர் இன்னொரு ப்ளஸ். முதல் பாதியில் காட்சிகளை இன்னும் விறுவிறுப்பாக்கியிருக்கலாம்.

ஒரு முறை பார்க்கலாம்!

என்வழி




3 thoughts on “என்னை அறிந்தால் – விமர்சனம்

  1. sk

    movie was good..definitely worth a watch when compared to “I”
    GVM style of making is very nice…i enjoyed the movie

  2. ganesh

    sir,
    From monday, the movie is doing average coolections.Theatres like luxe has meagre audince only.Comparitively Lingaa Has drawn Huge Crowd in the Second Week also.Only Dinakaran ,Dinamalar and the Negative comments in the unwanted websites have played a role in ruining the propective audeince from watching the movie in theatre.To conclude Ennai arinthal is an avrage movie and I above avrage because of the hype by the producer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *