BREAKING NEWS
Search

பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை! – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

ரஜினியை வைத்து ஒரு மரண மாஸ் படம் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களை எல்லாம் மறுபடி மறுபடி பத்து நாட்களுக்குப் பார்க்க வேண்டும்.

பேப்பர் பேனா எடுக்க வேண்டும். எந்தெந்த படத்தில் எதையெதை ரசித்தோம் என்று பட்டியல் போட வேண்டும்.

இப்போது அந்தப் பட்டியல் அயிட்டம்ஸ் அனைத்தையும் மேஜையில் பரப்பி வைத்துக்கொண்டு அதையெல்லாம் இணைக்க ஒரு கதை பேச உட்கார வேண்டும்.

திரைக்கதை முடித்துவிட்டு இதில் இயக்குனரின் முத்திரை தெரிய ஏதாவது செய்ய வேண்டுமே என்று யோசிக்க வேண்டும்.! கடைசி 30 நிமிடங்களுக்கு திரைக்கதையில் பின்னி பெடலெடுக்க வேண்டும்.

இதைத்தான் செய்திருக்கிறார்
கார்த்திக் சுப்புராஜ். ஹேட்ஸ் ஆஃப்!

ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களும் இந்த ரஜினியை ரசிப்பார்கள். என்ன ஒரு ஸ்டைல்! என்ன ஒரு எனர்ஜி! படம் முழுக்க ரஜினி தர்பார்தான்.

சிம்ரன் மீண்டும் அழகாக மாறி விட்டாரா இல்லை.. அழகாகக் காட்டியிருக்கிறாரா கேமிரா மேன் திருநாவுக்கரசு?

இயக்குனர் மகேந்திரன், நவாசுதீன், சசிகுமார், விஜய்சேதுபதி, த்ரிஷா எல்லோருமே அந்தந்த பாத்திரங்களுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறார்கள்.

அனிருத்தின் பின்னணி இசை.. வாவ்!

உத்தர பிரதேசக் காட்சிகளில் கத்தரி போட மறந்துவிட்டார்கள். அதனால் அவ்வளவுதான் தீபாவளி பட்டாசா? சரக்கு முடிந்ததா என்று நினைக்கும்போது துவங்கும் பத்தாயிரம் வாலா சரம் கிளைமாக்ஸ் வரை அதிர்ந்துதான் ஓய்கிறது.

பேட்ட!
ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை!
முதல் பாதி ரஜினி கோட்டை.
அப்புறம் கொஞ்சம் சேட்டை!
கிளைமாக்சில் இயக்குனரின் ராஜ பாட்டை!

– பட்டுக்கோட்டை பிரபாகரன்




One thought on “பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை! – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *