BREAKING NEWS
Search

ரஜினியின் குறும்பு வேகம் சினம் மூன்றுக்கும் இடமுள்ள பாத்திரம் 2.ஓ சிட்டி! – ஜெயமோகன்

2.ஓ சிட்டி பற்றி ஜெயமோகன்…

chitti
‘2.ஓ’ படத்தில் சிட்டி பாத்திரம் இன்னும் விரிவாக்கப்பட்டிருப்பதாக அப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சனும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

‘2.0’ படத்தில் ஷங்கருடன் இணைந்து முதன் முறையாக வசனம் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். ‘2.0’ குறித்து ஜெயமோகன் தனது வலைப் பக்கத்தில் இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.

இப்போது முதன் முறையாக ‘2.0’ குறித்து தனது வலைப் பக்கத்தில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன்.

அப்பதிவில், “எந்திரனில் என் பணிகள் முடிந்து பல மாதகாலம் ஆகிறது. சின்னச்சின்ன மெருகேற்றல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன.

ஆர்னால்ட் ஷ்வாஸ்நெகர் நடிப்பதாக அனேகமாக உறுதியாகி இருந்தது. இறுதிநேரம் வரை முயன்றும் அதில் உள்ள சர்வதேச நிதிச் சட்டச் சிக்கல்களால் நடக்க முடியாமல் போயிற்று. அக்ஷய்குமார் அந்த வலுவான எதிர்நாயகன் வேடத்தில் நடிக்கிறார். தமிழின் இன்னொரு பெரிய கதாநாயகனை எண்ணி உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் அது. பலமுகங்கள் கொண்டது.

உடல்நலம் நன்கு தேறி இருபடங்களில் ஒரே சமயம் ரஜினிகாந்த் நடிப்பது மிக உற்சாகமான செய்தி. அவருடைய குறும்பு வேகம் சினம் மூன்றுக்கும் இடமுள்ள கதாபாத்திரமாக சிட்டி மேலும் விரிவாகியிருக்கிறது.

சங்கர் படங்கள் அவருக்கே உரிய தெளிவான ஆனால் சுருக்கமான திரைக்கதை அமைப்பு கொண்டவை. என் பார்வையில் அவரது மிகச்சிறந்த திரைக்கதை அந்நியன். அதைவிட இது ஒரு படி மேல் எனத் தோன்றுகிறது. வலுவான எதிர்நாயகன் காரணமாக எந்திரன் முதல் பகுதியைவிட தீவிரமானது.

நான் எப்போதுமே ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கும் அறிவியல்புனைவு படங்களுக்கும் ரசிகன். என்னுள் உள்ள சிறுவனை உற்சாகமடையச்செய்த கதை. அதில் பங்கெடுத்தது நிறைவூட்டுகிறது.

இதழாளர்களும் நண்பர்களும் இதைப்பற்றி மேலும் என்னிடம் ஏதும் பேச வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் இது முழுக்கமுழுக்க சங்கர் படம். நான் அதில் ஒரு பங்களிப்பை ஆற்றுபவன் மட்டுமே,” என்று கூறியிருக்கிறார்.

என்வழி




2 thoughts on “ரஜினியின் குறும்பு வேகம் சினம் மூன்றுக்கும் இடமுள்ள பாத்திரம் 2.ஓ சிட்டி! – ஜெயமோகன்

  1. Lingaa karthi keyan

    என்வழி writter அவர்களே எந்திரன்2 2.0(zero) என்று இயக்குனர் சங்கர் அவரது twitter பக்கத்தில் tweet செய்து இருக்கார் lyca production தன்னுடை twitter மற்றும் fb பக்கத்தில் 2.0(zero) என்றுதான் பெயர் வைத்துள்ளனர் அப்படி இருக்கும் போது எந்திரன்2 படத்தின் பெயரை சில பத்திரிக்கைகள் 2.0(zero) என்றும் சில பத்திரிக்கைகள் 2.ஓ என்றும் மாற்றி மாற்றி தவறாக எழுதுகிறார்கள் சரியாக எழுதுபவர்களையும் குழப்புகிறார்கள் சரியான பெயர் 2.0(zero) தான் நீங்களே மேலே உள்ள பதிவில் “2.ஓ” மற்றும் “2.0” என்று மாற்றி மாற்றி குழப்புகிறீர்கள் சரியான பெயரை அறிந்து என்வழியில் ஒரு பதிவு செய்தால் எல்லாருக்கும் உதவியா இருக்கும் reply pls requst from rajini fans…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *