BREAKING NEWS
Search

என்கவுன்டர்: போலீஸ் செய்தது சரியா… மனித உரிமை மீறலா?

என்கவுன்டர்: போலீஸ் செய்தது சரியா… மனித உரிமை மீறலா?

ஐந்து கொள்ளையர்களைச் சுட்டுக் கொன்றது போலீஸ் என்ற செய்தி வந்ததும், முதலில் ‘அட பரவால்லியே’, என்றவர்கள் அடுத்த சில நிமிடங்களில் ‘அடடா… போலீஸ் அவசரப்பட்டுவிட்டது’ என்றனர். இன்னும் சில நிமிடம் கழித்து ‘அது எப்படிய்யா சுடலாம்… உஷாரா வளைச்சுப் பிடிச்சிருக்க வேணாம்… என்ன போலீஸ்’ என்றனர்.

இந்த நிமிஷம்… ‘போலீஸ் சுட்டது தப்பு. அவங்களைப் பிடிச்சிருக்கணும்.. போலீஸ் மேல விசாரணை கமிஷன் வைக்கணும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அறிவு ஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் தருவோர், இந்த என்கவுன்டரைக் கடுமையாகக் கண்டித்து எழுத ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு நேர் எதிராக, அபரிமிதமான வரவேற்பு காணப்படுகிறது.

‘சென்னையில் 2 வங்கிககளில் பல லட்சம் பணத்தைத் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வினோத்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று அதிகாலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து என்கவுன்டர் மூலம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்’, என்ற செய்திதான் இன்று காலை கண் விழித்தெழுந்ததும் மக்கள் கண்ணில் பட்டு அதிர வைத்தது.

வரவேற்பு

செய்தியைக் கேட்டதிலிருந்து, ஒரு ஹீரோவைக் கொண்டாடும் மூடுக்குத் தாவிவிட்டனர் மக்கள்.

சம்பவம் நடந்த பகுதியான வேளச்சேரிவாசிகள் கூறுகையில், “எங்களுக்கு இத்தனை அருகேயே இந்த பயங்கரக் கொள்ளையர்கள் வசித்து வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும் போலீஸார் வேகமாக செயல்பட்டு அவர்களை சுட்டுக் கொன்றிருப்பது நிம்மதியாக உள்ளது. மக்களைத் தாக்குவோம் என்று கொள்ளையர்கள் கூறியதால் அவர்களை சுட்டுக் கொன்றதாக போலீஸார் கூறியுள்ளனர். எனவே விபரீதம் நடப்பதற்கு முன்பே போலீஸார் செயல்பட்டிருப்பது வரவேற்புக்குரியது,” என்றனர்.

தமிழகம் முழுக்க மக்கள் பரவலாக ‘இது சரியான நடவடிக்கைதான்’ என்று வரவேற்றுள்ளனர்.

‘இனிமேலாவது கொள்ளையடிக்கும் எண்ணம் யாருக்காவது, குறிப்பாக வட இந்தியாவிலிருந்து இங்கு பிழைக்க வந்திருப்பவர்களுக்கு இருந்தால் அதைக் கைவிடுவார்கள்’ என்று நம்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.

கட்சிக்கு அப்பாற்பட்டு பலரும் போலீசாரின் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளனர்.


எதிர்ப்பு

ஆனால் அதேசமயம், இந்த என்கவுன்டரை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,  இது சட்டவிரோதமான கொலை என்பதில் சந்தேகமில்லை. நேற்றுதான் ஒரு குற்றவாளியின் போட்டோவை சென்னை போலீஸ் கமிஷனர் காட்டி வெளியிட்டார். ஆனால் பத்து மணிநேரத்திற்குள் அந்த நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேலும், போலீஸ் கமிஷனர் நேற்று காட்டிய நபரைத் தவிர மேலும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்பது எப்படி நிரூபிக்கப்பட்டது. அவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை, நிரூபிக்கவில்லை.

மேலும், சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் தங்கியிருந்த வீடு என்பது குறுகலான சந்தில்தான் அமைந்துள்ளது. போலீஸார் பெருமளவில் அந்த இடத்தை முற்றுகையிட்டிருந்தனர். எனவே ஐந்து பேரும் நிச்சயம் தப்பி ஓட வாய்ப்பில்லை. அப்படி இருக்கையின் ஏன் என்கவுண்டர் செய்ய வேண்டும். அவர்களை உயிரோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியாகத்தான் தண்டித்திருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் தமிழகத்தில் உள்ள மின்வெட்டு, விலைவாசி போன்ற பிரச்சினைகளை திசை திருப்ப ஜெயலலிதாவின் போலீஸ் ஆடும் நாடகம் இது என்று கூறியுள்ளனர்.

மாஞ்சோலைத் தொழிலாளர் மீது நடந்த துப்பாக்கி சூடு, பரமக்குடி போலீஸ் கொலைகள் மற்றும் வங்கிக் கொள்ளை என்ற பெயரில் ஐந்து இளைஞர்களைக் கொன்றது என போலீஸ் அத்துமீறிப் போய்க் கொண்டுள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தப் போகிறது. சட்டத்தை போலீஸார் அப்பட்டமாக கையிலெடுத்துக் கொண்டுள்ளனர் என மரண தண்டனைக்கு எதிரான அமைப்பு குரல் கொடுத்துள்ளது.

இந்த போலீஸ் என்கவுன்டர் சரியா… தவறா?

மனித உரிமை ஆர்வலர்கள் கோருவது போல இந்த இளைஞர்களை சுற்றி வளைத்திருக்க வேண்டுமா… அல்லது வேறு வழியின்றி சுட்டுவிட்டோம் என போலீஸ் கூறுவதை ஏற்பதா..?

பரமக்குடி, மாஞ்சோலை துப்பாக்கி சூடுகளும், இன்றைய என்கவுடன்டர்களும் ஒரே தட்டில் வைத்து அலசக் கூடியவைகளா?

நீங்க என்ன சொல்றீங்க?

-என்வழி ஸ்பெஷல்
28 thoughts on “என்கவுன்டர்: போலீஸ் செய்தது சரியா… மனித உரிமை மீறலா?

 1. Mariraj

  இது முற்றிலும் தவறான செயல் தான். இது காவல் துறையின் இயலாமையை காட்டுகிறது.

 2. raja

  //ஆனால் அதேசமயம், இந்த என்கவுண்டரை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

  //
  இவர்கள் வீட்டில் இதுபோல கொள்ளை நடந்தால் துடிப்பார்கள் இல்லையெனில் மனித உரிமை என பிதற்றுவார்கள்

 3. raja

  இந்த கொள்ளையர்களால் பாதிக்கபட்டவர்கள் மனிதர்கள் இல்லையா ? அவர்களுக்கு உரிமை இல்லையா ?

 4. raja

  //நேற்றுதான் ஒரு குற்றவாளியின் போட்டோவை சென்னை போலீஸ் கமிஷனர் காட்டி வெளியிட்டார். ஆனால் பத்து மணிநேரத்திற்குள் அந்த நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
  //
  பிடிக்கவில்லை என்றால் போட்டோ இருக்கு ஆளை பிடிக்கவில்லை என சொல்வார்கள் , பிடித்தால் அதுக்கும் ஒரு கதை சொல்வார்கள்

 5. குமரன்

  ///நீங்க என்ன சொல்றீங்க?///

  வினோ, fantastic approach!

  எதைச் சொன்னாலும் இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று கேள்வி வேறு. இப்படிப் போட்டால், அவரவரும் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதையும் நிலை செய்ய விளக்கங்கள் கொடுக்கட்டுமே !

  அது சரி,
  நாங்க சொன்ன பிறகு
  நீங்க என்ன சொல்றீங்க?

 6. குமரன்

  சரி, நான் என்ன சொல்கிறேன்?

  மனித உயிர் விலை அற்றது. எந்த மனிதனும் தனது தாய் தந்தைக்குக் குழந்தைதான், மனைவி/ கணவனுக்கு உறுதுணைதான் .

  ஆனால் மனித உரிமை என்பது அடுத்தவர் மனித உரிமையை நாம் மதிக்கும் வரைக்கும்தான் கோர முடியும். எதற்கும் எல்லைகள் உண்டு.

  இவர்கள் வெறும் கொள்ளையர்கள் மட்டும் அல்ல, ஆயுதத்தை வைத்து கொள்ளை அடிப்பவர்கள், இரண்டு முறை வெற்றி கரமாக பட்டப் பகலில் பல லட்சம் ரூபாயை வங்கிகளில் கொள்ளை அடித்தவர்கள். விட்டால் பல கோடி தேற்றி அதனை மூல தனமாக வைத்து சோமாலியா போல பெருமளவில் கடத்தலும், கொள்ளைகளும் செய்யும் வாய்ப்பும், வயதும் உள்ளவர்கள். இவர்களை உடனடியாகத் தடுத்து நிறுத்துவது சமுதாயத்தின் பாதுகாப்புக்கு உடனடி அவசியம்/ தேவை.

  என்வழியே கூட இந்த வகைக் கொள்ளைகள் குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதவும், கார்ட்டூன் வெளியிடவும் காரணம், இந்தக் கொள்ளைகள் மக்கள் மனதில் ஏற்படுத்திய பயம் நிறைந்த தாக்கம்தான்.

  எனவே மக்களுக்குத் தாம் நல்ல சூழலில், பாதுகாப்பாக வாழ்கிறோம் என்ற எண்ணத்தைத் தரவும், மேலும் சில வலி தவறிய இளைஞர்கள் இதுபோன்ற கொலை/ கொல்லைப் பாதைக்குப் போகாமல் தடுக்கவும், இந்த என்கவுண்டர் தேவையாகி விட்டது.

  சிறிய சந்து என்பது, என்கவுண்டரின் அவசியத்தை அதிகரிக்கிறது.

  துப்பாக்கியுடன் ஒரு திருடன் அங்கிருந்த மற்றொரு வீட்டுக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டு அந்த வீட்டிலுள்ளவர்களைச் சுட்டுவிட்டால்?

  அல்லது ஐந்து பெரும் ஆளுக்கொரு வீட்டில் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்தால்?

  அவர்கள் போலீசைச் சுட்ட பின்னர் போலீசுக்கு வேறு வழியே இல்லை, அவர்களைச் சுடுவதைத்தவிர. எனவே போலீஸ் நடவடிக்கை காலத்தின் கட்டாயம். மிகவும் சரியானதும் நியாயமானதும் ஆகும்.

 7. Ganesh Shankar

  நடந்தது நல்லதற்கே.
  மக்களை கொள்வோம் என்று காவல்துறை வீட்டை முற்றுகை இட்டும் கூறி இருகிறார்கள்.திருந்துவதாக இல்லை.

  இனிமேல் அடுத்தவர்கள் இதே மாதிரி செய்ய நினைத்தால்,இதை பார்த்தாவது கொஞ்சம் பயம் வரும்.

  இந்த மனித உரிமை பேசுபவர்கள் எல்லாரையும்,ஒரு முறை இவர்கள் போன்றவர்களோடு மோத விட்டால் தான் புத்தி தெளியும்.

  இதே இவர்கள் காவல் துறை உயிரோடு பிடிக்க வேண்டும் என்று பொறுமை காத்து,அதற்குள் அந்த கொள்ளையர்கள் அங்கே வசிப்பவர்களை யாரையாவது சுட்டு இருந்தால்,அப்போது காவல் துறை என்ன செய்தது??எடுத்து சுட்டு இருக்க வேண்டாமா என்று குரல் கொடுத்து இருப்பார்கள்.பேசுபவர்கள் பேசி கொண்டு தான் இருப்பார்கள்.மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் இந்த நாடகமான உலகத்தை.

 8. chenthil (UK)

  Something fishy seems to happen. As people started saying tamilnadu law and order is not right, some persons who are supposed to be of some other case.. could be killed, by govt themself telling money has aquired as for them 14 lakhs is small amount. What about the crores of money in coimbotore? Another encounter ready in coimbtore then??

  If there is no politics, then I do appreciate the quick step.

 9. மிஸ்டர் பாவலன்

  ///ஆனால் அதேசமயம், இந்த என்கவுண்டரை மனித உரிமை
  ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். ///

  உலக நாயகன் தயாரித்த “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”
  படத்தில் (Tamil Remake of Satyamev Jayate – Vinod Khanna movie),
  சத்யராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருவார். அதில் இது
  போன்ற மனித உரிமை ஆர்வலர் பத்திரிக்கையாளராக
  வருவார். அவரது வீட்டில் திருடு போய் சந்தேகத்தில்
  ஒருவரைப் பிடித்து லாக்-அப்பில் வைப்பார்கள். சத்யராஜ்
  அவரை வெளியில் அழைத்து பிரியாணி எல்லாம் கொடுத்து
  உபசரிப்பார். “என்ன ஆச்சு?” என விசாரிக்க வருபவர் சத்யராஜ்
  உபசரித்து கவனிப்பதைப் பார்த்து வெறுத்து விடுவார். “நீங்கள்
  தானே மனித உரிமை மீறல் இதெல்லாம் எழுதுறீங்க, அதான்
  இப்படி உண்மையை வரவழைக்கிறேன்” என்பார். பின் அவர்
  மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள சத்யராஜ் தட்டுத் தட்டி
  உண்மையை வரவழைப்பார்.

  அதிரடி நடவடிக்கைகளுக்கு புரட்சித் தலைவி பெயர் பெற்றவர்.
  சங்கரன் கோயிலில் அவர் வெற்றி பெறுவதை இந்த அதிரடி
  என்கவுன்டர் ஊர்ஜிதம் செய்து விட்டது. புரட்சித் தலைவிக்கு
  அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 10. Jegan

  this incident may put an end to further bank thefts.
  but Encounter just for 14 lakhs theft…..,? ….if so then what is the punishment for 2G SCAM, commantealth corruption, banglore asset case,adarsh case,abdul kasab’s case …..?….banks have nothing to lose…
  To lend a loan for a comman man, these banks demand 100 formalities, but for mallaiya-s they voluntarily declare the loan amounts…….

 11. ஊர்க்குருவி.

  சமூக விரோதிகளையும் கொள்ளையர்களையும் வளரவிடக்கூடாது. இருந்தும் பொலிஸ் அவசரப்பட்டுவிட்டது என்பதே எனது கருத்து. சரியா தப்பா என்றால் இரண்டுக்கும் நிறைய நியாயப்படுத்தல்கள் வைக்கமுடியும்.

  என்றாலும் இது தொடர்ந்தால் பின்னால் சர்வாதிகாரம் தொடரும்.

 12. Anbudan Ravi

  பிடித்து ஜெயிலில் போட்டு பிரியானிக்கி செலவு செய்வதை விட போட்டு தள்ளுவதே மேல். இவர்கள் மனிதர்கள்தான் ஆனால் இப்படிப்பட்ட மனிதர்கள் நம் நாட்டிற்கு தேவை இல்லை. உடனே அரசியல்வியாதிகளை என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது….எவர் ஒருவரும் மக்கள் செல்வாக்கு உள்ளவரை அவர்களை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது…மக்கள் அவர்களை நிராகரித்தால் அவர்களே நடுத்தெருவிற்கு வந்துவிடுவார்கள்.

  அன்புடன் ரவி.

 13. மிஸ்டர் பாவலன்

  ///அவர்கள் போலீசைச் சுட்ட பின்னர் போலீசுக்கு வேறு வழியே இல்லை, அவர்களைச் சுடுவதைத்தவிர. எனவே போலீஸ் நடவடிக்கை காலத்தின் கட்டாயம். மிகவும் சரியானதும் நியாயமானதும் ஆகும்.////

  திரு.குமரன் அவர்கள் ‘யுவர் ஆனர்!’ எனத் துவங்கி இதே
  சரத்துக்களைக் கோர்ட்டில் வைக்கலாம். ஒரு சிறந்த
  பப்ளிக் பிராசிக்யூட்டரின் வாதம் போல் இது இருக்கிறது.
  (இங்கு நான் பார்க்கும் சில காமன்ட்டுகள், கருத்துக்கள்
  குற்றவாளிகளுக்கு ஆஜராகும் வக்கீல் கருத்துக்கள் போல்
  உள்ளன.)

  இன்று அறுபத்தி நான்காம் பிறந்த நாள் காண்கிறார்
  மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி
  டாக்டர் ஜெயலலிதா.

  அம்மா, உங்களை வாழ்த்த வயதில்லை – வணங்குகிறோம்!

  நாளை நமதே! எந்த நாளும் நமதே!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 14. அண்ணாமலை

  “எவர் ஒருவரும் மக்கள் செல்வாக்கு உள்ளவரை அவர்களை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது…மக்கள் அவர்களை நிராகரித்தால் அவர்களே நடுத்தெருவிற்கு வந்துவிடுவார்கள்.”

  சூப்பருங்க ரவி. இது அண்ணாமலை பன்ச்.

 15. arulselvan

  At least one man they catch alive. Because they should tell about the remaining people and persons behind them.

  Also only 2 revolvers caught in the room. So only 2 are trying to shoot the police.

 16. Manoharan

  இப்ப புரியுதா ஏன் ஆ.ராசா வெளியில் வர மாட்டேன் என்று சொல்கிறார் என்று ? வந்தால் ஒரு என்கவுண்டர் போதும். Finished.

 17. raja

  ஆளாளுக்கு என்கவுண்டருக்கு ஆதராவும் எதிராவும் பேசிகிட்டு இருக்கீங்க .. ஆனால் என்னோட கவலை எல்லாம் இன்னொருத்தர் மேலதான் , அது அந்த வீட்டோட ஓனர்.. பாவம் அவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி வாயை கட்டி வயித்தை கட்டி பல லட்சம் முதலீடு போட்டு வீட்டை கட்டி கடைசியில இப்படி ஆகிபோச்சி , இனி அவரால அந்த வீட்டை விக்கவும் முடியாது , யாரும் வாடகைக்கும் வரமாட்டானுக … அதுமட்டும் இல்லாம விசாரணைகர பேர்ல இன்னும் அஞ்சி வருசத்துக்காவது வாரத்துக்கு ஒருவாட்டி போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டி வரும் … குற்றவாளிகள் மேல பரிதாபம் காட்டுரவங்க கூட அந்த அப்பாவி மேல காட்ட மாட்டேங்கிறீங்களே…

 18. Kill

  கொல். கொல். சட்ட மாவது மண்ணாங்கட்டியாவது. அதுவெல்லாம் வெள்ளைக்காரணுக்கு. பெரிய பெரிய தொகையில அப்பி வைச்சிகிருக்கே குடும்பங்கள். அவைக்கு காவல் காவல் கொட்ங்கோ. இதைப் பற்றிய திரைப்படம் எப்ப வரும்?

 19. Jegan

  It doesnt mean that v are supporting the criminals, but v are questioning about the partiality of punishment……

 20. மிஸ்டர் பாவலன்

  ///ஆளாளுக்கு என்கவுண்டருக்கு ஆதராவும் எதிராவும் பேசிகிட்டு இருக்கீங்க .. ஆனால் என்னோட கவலை எல்லாம் இன்னொருத்தர் மேலதான் , அது அந்த வீட்டோட ஓனர்.. ////

  ராஜா அவர்களே.. ராமலிங்க வள்ளலார் கருணை மழை
  பொழிவது போல் நீங்கள் காட்டும் கருணையை நான்
  பாராட்டுகிறேன். ஆனால் வீட்டோட ஓனர் வாடகைக்கு விடுவது
  என்றால் பொதுவாக சிறிய குடும்பமாக விரும்புவார்கள்.
  குடும்பத் தலைவர் எங்கு வேலை செய்கிறார் இதெல்லாம் பார்ப்பார்கள்.
  (கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போனால்
  ரொம்ப நல்லது.) ஆனால் இப்படி கும்பலாக இருக்கும் North Indian
  Bachelor Boys-ற்கு அவர் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கனுமா?
  தண்ணி அடித்து விட்டு, டாம் தூம் என இங்கிலீஷ், ஹிந்தி மியுசிக்
  அலற விட்டு கொலை வெறி ஆட்டம் போட்டால் அக்கம், பக்கத்தில்
  இருப்பவர் நிலை என்ன? இதையெல்லாம் அவர் எண்ணிப்
  பார்த்திருக்க வேண்டாமா? `பெரிய வாடகை வாங்கத்
  தயார், நல்ல லாபம் பார்க்கலாம்’ என அவர் நினைத்தது
  அவ்விடத்தில் என்கவுண்டரில் முடிந்திருக்கிறது.

  -== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *