BREAKING NEWS
Search

6000 அரங்குகளில் ரிலீசாகும் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்… இந்தியப் படங்களில் புதிய சாதனை!

புதிய சாதனை: 6000 அரங்குகளில் ரிலீசாகும் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்… !

thalaivar-spl

சென்னை: உலக அளவில் எந்த நடிகரின் படமும் வெளியாகாத அளவுக்கு 6000 திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் வெளியாகிறது!

இந்திய நடிகர்கள் என்றில்லை.. சர்வதே அளவில் வைத்துப் பார்த்தாலும் இது ஒரு புதிய சாதனைதான்!

சர்வதேச அளவில் வசூலைக் குவித்து முதலிடத்தில் இருக்கும் அவதார் படம்தான் சாதனை அளவாக அதிக அரங்குகளில் வெளியானது. அதன் பிறகு வந்த படங்களில் அவெஞ்சர்ஸ், தி டார்க் நைட் ரைசஸ் அதிக அரங்குகளில் வெளியாகின. ஹாலிவுட் படங்களுக்கு அடுத்து, அதிக அரங்குகளில் வெளியாகும் வெளிநாட்டுப் படம் கோச்சடையான்தான்!

ரஜினியின் எந்திரன் 3300 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின் வந்த சில பாலிவுட் படங்கள் – க்ரிஷ் 3, தூம் 3- கிட்டத்தட்ட 4000 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டன.

இப்போது இந்தியாவின் வேறு எந்தப் படங்களின் சாதனைகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் விதத்தில் ரஜினியின் கோச்சடையான் 6000 ப்ளஸ் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகவிருக்கிறது. மற்ற மொழிகளில் தயாராகியிருக்கும் கோச்சடையானும் வெளியாகிறது.

தென்கிழக்காசிய நாடுகளான ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், சீனா, கொரியாவில் அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகவிருக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 1000க்கும் அதிகமான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் மும்முரம் காட்டுகிறது ஈராஸ் நிறுவனத்தின் அய்ங்கரன் இன்டர்நேஷனல்.

தெலுங்கில் மட்டும் 1000 அரங்குகளுக்கு மேல் கோச்சடையானின் தெலுங்கு வடிவமான விக்ரமசிம்ஹாவுக்கு ஒதுக்கப்பட உள்ளன.

இன்று ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கோச்சடையான் தியேட்டர்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால்…

ஏப்ரல் 11 அன்று உலகெங்கும் கோச்சடையான் தினம்தான்!

குறிப்பு: அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் அபத்த சர்வே எடுக்கும் டுபாக்கூர் பத்திரிகைகள் – மீடியாக்களுக்காக இந்த செய்தி!

-என்வழி
21 thoughts on “6000 அரங்குகளில் ரிலீசாகும் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்… இந்தியப் படங்களில் புதிய சாதனை!

 1. Deen_uk

  ////குறிப்பு: அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் அபத்த சர்வே எடுக்கும் டுபாக்கூர் பத்திரிகைகள் – மீடியாக்களுக்காக இந்த செய்தி!///
  Super punch !!!!

 2. குமரன்

  அடேங்கப்பா … பிரமிப்பாக இருக்கிறது.

  டி.வி.எஸ் சுசுகி, யமஹா என்று எடை குறைவான புதிய தலைமுறை வண்டிகள் வந்த பொது எப்போதும் கனமாக இருக்கும் புல்லட் மோட்டார் பைக்குக்கு ஒரு விளம்பரம் வந்தது.

  Let the boys have the toys, it needs a MAN to ride a Bullet !!

  அந்த விளம்பர வரிகள்தான் இந்த சர்வே பார்த்த போது நினைவுக்கு வந்தது. அதெல்லாம் சின்னப் பசங்க விளையாட்டு !! அவ்வளவுதான்….

 3. saktheeswaran

  அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கோச்சடையான் உலக அளவில் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

 4. Bramma Ratchasan.....

  Vaangada Vanga En Vandikku Pinnale…Vanga than Poren.. Vetri Maalaya kai mele…
  Maaveeran Vandi Varudhu Odhungu Odhungu….
  Maaveeran Vandi Varudhu Odhungu Odhungu….

  Come on Thalaiva…We want to you storm again across the Universal Box office!!!

  Universal Superstar R a j n i in and as K o c h a d a i y a an….Gonna rock!!!.

 5. கணேசன் நா

  செம மேட்டர்……….

  தலைவர் rocks………………

 6. மிஸ்டர் பாவலன்

  லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கும்
  சூப்பர் ஸ்டார் படம் மாபெரும் வெற்றி அடைய
  மனமார்ந்த வாழ்த்துக்கள்! “உன்னோட வாழ்க்கை
  உன் கையில் இருக்கு!” என்று பாட்டிலும், வாழ்விலும்
  சாதனைகள் செய்து வரும் சூப்பர் ஸ்டார் விருதுகளுக்கும்,
  பாராட்டுகளுக்கும் உரியவர்! Advance congrats – bye!!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. ramaa

  தவறான செய்தி பரப்பாதீர்கள், நீங்கள் சொன்ன ஹாலிவுட் பட திரைஅரங்கு எண்ணிக்கைகள் எல்லாம் அமெரிக்காவில் மட்டும் ,,, அவதார் 3800 இல் அமெரிக்காவில் மட்டும், டார்க் நைட் 4400 அமெரிக்காவில் மட்டும்,,, உலஹம் முழுவதும் 12000 இக்கும் மேல,, இப்படி தவறுதலான செய்தி சொன்னால்,
  anyhow thalaivar rocks… ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு செல்வாக்கு யாருக்கும் இல்ல ,,, அது ஹாலிவுட் ஆக இருந்தாலும் சரி *****வூட் ஆக இருந்தாலும் சரி
  ______________

  Yes… agreed. Corrected the news after verified the data. Thanks.
  -Envazhi

 8. Rajagopalan

  Guys don’t get over excited. This is an animation film directed by Soundariya based on the 1st teaser. Over build up tharangae, ennakku baba naebagam than varuthu. Anyway I hope for sweet surprise.
  This time atleast Kochadayan will see the light of the day? Confirmed this time it will release? Keeping fingers crossed….

 9. Marthu

  அந்த ரெண்டு அல்ல மற்றும் சில்ல இருவரும் தெறிச்சு ஓட வேண்டும்…

  சிங்கத்தின் கர்ஜணை ஆரம்பம்….இனி சிறுநரிகளுக்கு ஏது கூடாரம்

 10. srikanth1974

  இதைவிட பெரிய சந்தோஷம் எங்களுக்கு வேறு ஏதுமில்லை
  இந்த உலகில்.

  எங்களது சந்தோஷத்தில் பங்கெடுத்துக்கொண்ட
  திரு.மிஸ்டர் பாவலன்.sir அவர்களுக்கும் நன்றி.

 11. Mahendran

  முதலில் ரசிகர்கள் இது ஒரு அனிமேஷன் படம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்! இல்லையென்றால் படம் பார்க்கும்போது ஏமாற்றமாகத்தான் இருக்கும்! அந்த ஏமாற்றம் படத்தின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும்! எனவே அதிகம் எதிர்பார்க்காதீர்கள்! அப்போதுதான் உங்களால் ரசிக்க முடியும்! படம் எப்படி இருக்குமோ என்று பயமாகத்தான் இருக்கிறது! எப்படி இருந்தாலும் இது கண்டிப்பாக குழந்தைகளை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை! கோடை விடுமுறையில் பல குழந்தைகள் இந்த படத்துக்கு கூட்டிப்போக சொல்லி அடம்பிடிக்கும் காட்சிகள் பல வீடுகளிலும் நடக்கும்!

 12. s.sudha

  படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தலைவா .நீங்கள் எப்போது வந்தாலும் வரவேற்போம்.

 13. simple fan of superstar!

  வாவ் என்ன ஸ்டைல் தலைவா! நிக்குற இந்த போஸுக்கு எந்த சில் வண்டும் நிக்க முடியாது இந்த நரைச்ச தலயோட தாடியோடவே இருக்கே உங்களோட மனமார்ந்த மலர்ந்த சிரிப்பு அதுக்கு எத்தனை சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *