BREAKING NEWS
Search

மாமனிதர்களை வாழ்த்துவதும், வணங்குவதும் பண்புள்ளவர்களின் குணம்!

மாமனிதர்களை வாழ்த்துவது பண்புள்ள மனிதர்களின் குணம்!

Kuselan_rajini_still_1

டிசம்பர் மாதம் வந்தாலே மீடியாக்கள் மத்தியில் பரபரப்பு கிளம்பிவிடும். சூப்பர் ரஜினி பிறந்த நாளுக்கு சிறப்பு மலர்கள், சிறப்புப் பக்கங்கள் வெளியிட தயாராகிவிடுவார்கள்.

இன்னொரு பக்கம் டிவி சேனல்கள். எல்லா சேனல்களுமே ரஜினி பிறந்த நாளுக்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன.

சன், கலைஞர், விஜய், ராஜ் போன்ற சேனல்கள் தொடர்ந்து ஒரு வாரம் ரஜினி படங்களை ஒளிபரப்புகின்றன. குறிப்பாக ராஜ் டிவி ஒரு மாதம் முழுக்க ரஜினி படங்களை ஒளிபரப்பி வருகிறது.

ரஜினி பிறந்த நாளன்று அவருக்கு பிரபலங்களை வைத்து வாழ்த்து சொல்ல வைப்பது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கம். இதெல்லாம் டிஆர்பியை ஏற்றிக் கொள்ளும் முயற்சி என்றாலும், மாமனிதரான ரஜினியையும் பெருமைப்படுத்தவே செய்கின்றன. இதில் தவறும் இல்லை.

இந்த பிறந்த நாள் ஸ்பெஷலுக்காக, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் வரும் பிரபலங்களை ஓரம் கட்டி, ரஜினி சார் பர்த்டேவுக்கு விஷ் பண்ணுங்க, என்று கேட்பார்கள்.

99 சதவீத நட்சத்திரங்கள் நான் ரஜினியின் பரம ரசிகன் என்று ஆரம்பித்து அவருக்கு வாழ்த்துச் சொல்லி முடிப்பார்கள். பெரிய ஜாம்பவான்கள் கூட விருப்பதோடு வாழ்த்துகளைப் பதிவு செய்வார்கள்.

ஒருமுறை சிவகுமாரிடம், சார் உங்களால் வாழ்த்து சொல்ல முடியுமா? என்று கேட்டபோது, ‘என்னய்யா பேசற… ரஜினிக்கு வாழ்த்து சொல்றது எனக்கு பெருமையான விஷயம்யா.. என் நண்பர் என்பதைத் தாண்டி, நம்ம சினிமாவுக்கே தனி மரியாதை கிடைக்கச் செய்தவர்யா’, என்றார்.

ஆனால் சிலர் வேண்டுமென்றே கடுப்படிப்பார்கள்.

இப்படித்தான் போன ஆண்டு நடிகர் ஜீவாவிடம் பேட்டி கேட்டபோது, ‘ரஜினிக்கு நான் எதுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லணும்? எனக்கு அவர் சொல்வாரா?’ என்று தன் சில்லறைத்தனத்தைக் காட்டி வாழ்த்துச் சொல்ல மறுத்துவிட்டாராம், விஜய் டிவிக்கு.

இந்த ஆண்டு அதேமாதிரி சில்லறைத்தனத்தைக் காட்டியிருப்பவர், மோசமான நடத்தைக்குப் பெயர் போன சுஹாசினி. ரஜினியுடன் நடித்தவர், ‘எண்பதுகளின் ப்ளாஷ்பேக்’ போன்ற நிகழ்ச்சிகளில் ரஜினியை உரசிக் கொண்டு போஸ் கொடுத்தவர் என்பதால் ‘அவரிடம் போய் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்கள் மேடம்’, என்று கேட்டார்கள் சேனல்காரர்கள்.

உடனே அவர், ‘நான் எதுக்கு அவருக்கு வாழ்த்து சொல்லணும்? என் பிறந்த நாளுக்கு நீங்க போய் அவருகிட்ட பேட்டி கேட்டா கொடுத்துருவாரா? நான் அவருக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன்,” என்றார் வெடுக்கென்று.

இதே சுஹாஸினிதான், பிக் எப்எம் என்ற பண்பலைக்காக ரஜினியிடம் பல்லைக் காட்டிக் கொண்டு போய் போஸ் கொடுத்துவிட்டு, அதை வைத்து அந்த வானொலியை விளம்பரப்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த மாதிரி ஆட்களிடமெல்லாம் ரஜினிக்கு வாழ்த்து கேட்டு வாங்க வேண்டிய அவசியமென்ன? இவங்க வாழ்த்தியா அவர் புகழ் உயர்ந்திடப் போகுது? சொல்லப் போனால் இந்த மாதிரி நபர்கள் ரஜினியைப் பற்றிப் பேசுவதுதான் அவருக்கு அவமரியாதை! இவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் கைத்தட்டல்களுக்காக ரஜினி பெயரைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்.

முகம் தெரியாத நபராக இருந்தாலும் பிறந்த நாள், விசேஷம் என்றால் வாழ்த்துவது மனிதப் பண்பாடு. அதெல்லாம் தெரியாத நபர்களிடம் இனி ரஜினிக்கு வாழ்த்து சொல்லுங்கன்னு போய் நின்னு, ரஜினியை அசிங்கப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ரஜினியின் நண்பர்கள், நலம் விரும்பிகள் என பட்டியலெடுத்தாலே கோலிவுட்டின் 99 சதவீதம் நடிகர்கள், கலைஞர்கள் தேறுவார்கள். அவர்களிடம் முறையாக முன் அனுமதி பெற்று இதுபோல வாழ்த்துகளைப் பதிவு செய்யுங்கள்!

சுஹாசினி போன்றவர்கள் மனதளவில் ஈகோ வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். தேவையென்றால் கொஞ்சம் கூட கூச்சமின்றி மீண்டும் ரஜினியிடம் ஓடுவார்கள். ரஜினியை பெருமைப்படுத்த நினைக்கும் மீடியாக்கள் இதுபோன்ற நபர்களைத் தவிர்ப்பதே நல்லது.

-என்வழி ஸ்பெஷல்
17 thoughts on “மாமனிதர்களை வாழ்த்துவதும், வணங்குவதும் பண்புள்ளவர்களின் குணம்!

 1. Jey

  அதோடு சுஹாசினி சொல்வதைப்போல் அவர் பிறந்த நாளுக்கு தலைவரிடம் வந்து வாழ்த்துக்கேட்டால் கண்டிப்பாக தலைவர் வாயார வாழ்த்துவார். போ போ அவர் படத்த வச்சு பூஜைபோடு!

 2. srikanth1974

  மரியாதை தானா வருவது தலைவருக்கு மட்டுமே அவ்வாறு இருக்க
  அதை மற்ற பிரபலங்களிடம் தேடிப்போய் கேட்டுப்பெற சில மீடியாக்கள்
  செய்கின்ற தவறு வேதனையானது காரணம் கேட்காமலேயே எங்கள் தலைவரை மனதார வாழ்த்த கோடானுகோடி இதயங்கள் காத்திருக்கின்றன.

  தலைவா’நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்த வயதில்லை எனவே
  வணங்குகிறேன் தலைவா
  என்றும் உங்கள் அன்பு ரசிகன்
  ப.ஸ்ரீகாந்த்.

 3. kabilan.k

  நடிகர் ஜீவா தலைவரின் மிக பெரிய ரசிகர் என்று கேள்விப்பட்டேன்,சமிபத்தில் புதுயுகம் தொலைகாட்சியில் அளித்த பேட்டி ஒன்றில் கூட,எனக்கு ஒரு ஆசை என்றால் அது ரஜினி சாருடன் சேர்ந்து நடிப்பது என்று கூறினார்.அனால் இந்த சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது

 4. சிதம்பரம்

  நாங்கள் இருக்கிறோம் தலைவா உன்னில் ஒரு அங்கமாக….

  சிதம்பரம்
  இலங்கை

 5. raj

  தங்க மகன் தனி காட்டு ராஜா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 6. prakash

  ஜீவா நியூஸ் shocking. Suhasini madam, ungal birthday ku thalaivar wish panrathu irukatum but enthae media ungalakku birthday special coverage panna povathu? Konjam reality ku vaangae madam.

  Happy Birthday to thalaivar. Long live and expecting more films from you. We are restless without your movies after Endhiran with no hope for Kochadiyan.

 7. Sri

  ஹாப்பி பர்த்டே எங்கள் அன்பு தலைவாஆஆ…….நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கும் கோடானு கோடி உள்ளங்களில் ஒரு துளி…

 8. மிஸ்டர் பாவலன்

  //சுஹாசினி போன்றவர்கள் மனதளவில் ஈகோ வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். தேவையென்றால் கொஞ்சம் கூட கூச்சமின்றி மீண்டும் ரஜினியிடம் ஓடுவார்கள். ரஜினியை பெருமைப்படுத்த நினைக்கும் மீடியாக்கள் இதுபோன்ற நபர்களைத் தவிர்ப்பதே நல்லது.//

  நான் முன்பு எழுத நினைத்து எழுத மறந்த ஒரு நபரை நீங்கள்
  ஒரு நல்ல நாளும் அதுவுமாய் நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.

  ரஜினியுடன் கமலுக்கு போட்டி உண்டு. அதை கமல் அவர்களே பல
  தடவை சொல்லி இருக்கிறார். எந்திரன் படத்தில் நடிக்கவில்லை என்ற
  வருத்தமும் கமலுக்கு உண்டு. ஆனால் கமல் ரஜினியை ஏளனம்
  செய்ததில்லை. கமல்-ரஜினி நட்பு உலகம் அறிந்தது.

  ஆனால் கமல் குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கும் சுஹாசினி
  ரஜினி அவர்களை மிகவும் ஏளனம் செய்து மிமிக்ரி செய்த சத்யராஜ்
  ஷோவில் “Once more! Once more!” எனக் கேட்டு குதித்ததும் பின்
  சத்யராஜ் ரஜினி வசனத்தை சிவகுமார் போல பேசிக் காண்பித்ததை
  மிகவும் சிரித்து ரசித்ததும் கண்டு கமல்-ரசிகனான எனக்கே மிகவும்
  கோபமாக இருந்தால் அதை ரஜினி ரசிகர்கள் (அன்புத் தம்பி Deen_UK,
  ஸ்ரீகாந்த்) எப்படி எதிர்கொள்வார்கள் எனத் தெரியவில்லை.
  சுஹாசினி நடந்து கொண்டது ஆட்செபிக்கத்தக்கது.

  YouTube Link: http://www.youtube.com/watch?v=wwHZbWUiQLo

  சூப்பர் ஸ்டார் அவர்கள் பிறந்த நாளிற்கு கமல் ரசிகர்கள் சார்பில்
  எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  Happy Birthday – Rajini Sir !!!!!

  -==மிஸ்டர் பாவலன்==-

 9. cardoza

  நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் , சிங்கபூருக்கு ஒரு ஜாலி ட்ரிப் வாங்க தலைவா ….

 10. Marthu

  தங்கத்தலைவனுக்கு பிறந்தனாள் வாழ்த்துக்கள்

 11. sidhique

  அன்புள்ள ரஜினி அய்யா அவர்களுக்கு,

  காலம் கடந்து கொண்டே செல்கிறது …. !

  இப்பொழுது உதித்த …ஆம் அத்மி …கட்சிக்கே இவளவு வரவேற்பு என்றால் …மக்கள் நம்பிக்கைக்கு காலம் காலமாய் …பாத்திரமாய் இருக்கும் உங்களுக்கு????

  நமக்கு அரசியல் தேவை இல்லை ….ஆனால் ரஜினி இயக்கம் போதும் ..!

  “காலம் பொன் போன்றது ..கடமை கண் போன்றது …” தமிழக மக்களுக்காக நீங்கள் சொல்லி …செய்ய வேண்டிய … கடமை கடனை .. உணர்ந்து.. உங்கள் மக்கள் பனி விரைவில் … விஸ்வரூபம் எடுக்க என் வேண்டுகோளுடன் …. திரு.அன்பு ரஜினி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 12. sivashanmugam

  தங்கத்தலைவனுக்கு பாச தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 13. sivashanmugam

  தங்கத்தலைவா பாச தலைவா உன் பிறந்தநாள் தான் எங்களுக்கு புத்து உணர்ச்சி தினம்

 14. chenthil UK

  ஜீவா சுஹாசினிக்கு யாரும் பிறந்தநாள் பேட்டி எடுத்து போடபோவது கிடையாது .. அப்படி ஒரு நாள் வரபோவதும் இல்லை… அப்படி வந்தால் தலைவர் இது மாதிரி சொல்ல போவதும் கிடையாது… என்ன ஒன்று… இதை தைரியமா வெளிய சொல்லுங்க… அவங்கள மனசார வாழ்த்திடு போகலாம்… வெளிய நான் ரஜினி விசிறி … அது இதுன்னு சொல்லிக்கிட்டு மனசுக்குள்ள எதிரியா இருக்கிற இவங்க பேட்டி போடாமல் இருபது நல்லது…

  ரஜினி இவர்கள் வாழ்த்தி புகழடைய போவதில்லை… !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *