BREAKING NEWS
Search

சர்ச்சைகளைக் கிளப்பிய விஜய் விருது வழங்கும் விழா.. அடுத்த ஆண்டு தொடருமா?

சர்ச்சைகளைக் கிளப்பிய விஜய் விருது வழங்கும் விழா.. அடுத்த ஆண்டு தொடருமா?

vijayawards_
விஜய் டிவி விருதுகள் 2015 வழங்கும் விழா பெரும் சர்ச்சைக்கிடையே நேற்று மாலை சென்னையில் நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர்களில் கமல், தனுஷ் மட்டுமே பங்கேற்றனர். பங்கேற்ற மீதி நடிகர்களில் ஜெயம் ரவி போன்றவர்கள் பாதியிலேயே வெளியேறினர்.

விஜய் டிவியின் செல்ல நாயகன் என்று அழைக்கப்பட்ட சிவகார்த்திகேயன் கூட பாதியிலேயே வெளியேறிவிட்டதுதான் ஆச்சர்யம். கூடவே நிகழ்ச்சி நடந்த விதம் குறித்து சிவகார்த்திகேயன், “இந்நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். குடிக்க தண்ணிக் கூட தரமாட்டார்கள். அடுத்த முறை வரும்போது எல்லாம் புளி சோறு, தக்காளி சோறு கட்டிக் கொண்டு வந்துவிடுங்கள்” என்று மேடையில் பேசியது வந்திருந்தவர்களை மட்டுமல்ல, சேனலையும் அதிர வைத்திருக்கும்.

பெரும்பாலும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத இளையராஜா, முதல் முறையாக விஜய் விருது நிகழ்ச்சிக்கு வந்தார். அவருக்கு ‘செவாலியே சிவாஜி கணேசன் விருது’ வழங்குவதாகக் கூறி அழைத்து வந்திருக்கிறார்கள்.

“ஒரு மணி நேரம்தான் இருப்பேன்,” என்று கூறிவிட்டு வந்த இளையராஜாவை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தனர். விருது வழங்குவதற்காக வரவிருந்த சிவாஜி குடும்பத்தினர் கடைசி வரை வரவே இல்லை. எனவே விருது வாங்காமலே கிளம்பிவிட்டார் இளையராஜா. கடைசி வரை அந்த விருது யாருக்கு என்றும் அறிவிக்கவே இல்லை.

நிகழ்ச்சிக்கு பெரிய வில்லியாக அமைந்தார் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவரது கூச்சல் மற்றும் நிகழ்ச்சியை நடத்திய விதம் பலரையும் எரிச்சலடைய வைத்தது. இதனை பலர் வெளிப்படையாக நிகழ்ச்சியிலேயே தெரிவித்துவிட்டனர்.

நிகழ்ச்சியில் சில முக்கிய விருதுகளை கடைசி வரை அறிவிக்கவில்லை. மேலும் தான் ஒளிபரப்பு உரிமை பெற்றுள்ள காவியத் தலைவன், குக்கூ, ஜிகிர்தண்டா போன்ற படங்களுக்கே அதிக விருதுகளை அறிவித்திருந்தது விஜய் டிவி.

ரஜினிக்கு விருது..

லிங்கா படத்துக்காக அனைவருக்கும் பிடித்தமான நாயகன் விருதினை (Most favourite hero award) சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவித்துள்ளது விஜய் டிவி.

lingaa3

ரஜினி விஷயத்தில் பல முறை முட்டி மோதிப் பார்க்கிறது இந்த சேனல். இதுவரை நான்கு முறை அவருக்கு வெவ்வேறு தலைப்புகளில் விருதுகள் கொடுத்தாலும், அவற்றை விழாவுக்கு வந்து பெற்றுக் கொள்வதைத் தவிர்த்து வருகிறார் ரஜினி. இந்த முறையும் அப்படியே. விஜய் விருதுகளின் தரம், நோக்கம், தரப்படும் விதம் அவருக்கு நன்கு தெரியும் என்பதாலேயே இந்த தவிர்ப்பு.

இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான முறையில் நிகழ்ச்சி நடந்ததாக பலரும் விமர்சிக்கும் வகையில் இந்த ஆண்டு விஜய் விருது விழா நடந்துள்ளது. அடுத்த ஆண்டு விழா நடக்குமா? அதற்கு தமிழ் திரையுலகம் ஒத்துழைப்பு தருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்த ஆண்டு நடந்த சொதப்பல்கள்.

-என்வழி




3 thoughts on “சர்ச்சைகளைக் கிளப்பிய விஜய் விருது வழங்கும் விழா.. அடுத்த ஆண்டு தொடருமா?

  1. மிஸ்டர் பாவலன்

    //நிகழ்ச்சிக்கு பெரிய வில்லியாக அமைந்தார் டிடி எனும் திவ்யதர்ஷினி.//

    வெறுப்படையும் வகையில் அதிகம் நடந்து கொள்வது டிடியா அல்லது
    சின்மயியா என்பதில் ரசிகர்கள் இடையே ஒரு சர்ச்சை நிகழ்ந்து
    வருகிறது. சூப்பர் ஸ்டார்-விக்ரம் அடுத்து இணைந்து நடிக்க இருக்கும்
    ஷங்கர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இவர்கள் இருவரையும்
    சேர்த்து நிகழ்ச்சி நடத்தி தர ஒப்பந்தம் செய்து நடத்தினால் இந்த பெரும்
    சர்ச்சை தீர்ந்து விடும்! நன்றி!!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  2. rajagopalan

    Heart broken after seing the tweets by Vijay Fans regarding the Vijay awards…
    One sample I will put what they had written – they had put only Japan people had selected Most favourite hero , not by Indians & they had put the images of Linga Climax fight…
    Please do something on these so called nonsense Vijay fans…

  3. kannadasan.k

    Vijay awardsla epo sharuk khan ku sivaji award koduthangalo apaye therinchathu antha award tupakurnu………………thalaiva padathuke award koduthavanga thane………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *