BREAKING NEWS
Search

சங்கரன் கோயில் இடைத் தேர்தல்: மாற்றம் விரும்புவோரின் ஆதரவு யாருக்கு?

சங்கரன் கோயில் இடைத் தேர்தல்: மாற்றம் விரும்புவோரின் ஆதரவு யாருக்கு?

ங்கரன் கோயில் இடைத் தேர்தல் வரும் மார்ச் 18-ம் தேதி என நாள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் இரண்டாவது இடைத் தேர்தல் இது.

வழக்கமாக இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது அதிசயமான நிகழ்வுதான். காரணம். ஆளும் கட்சியின் செல்வாக்கு, நினைத்ததை செய்து முடிக்கும் வசதி, அதிகார பலம் போன்றவை தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆனால் இந்த முறை, ஒரு புதிய சூழல் காணப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து நிற்கிறது. நாளும் ஒரு பிரச்சினை, தினமும் ஒரு வழக்கு, நீதிமன்றங்களின் கண்டனம், வரலாறு காணாத மின்வெட்டு, விலை உயர்வு, தொழில்கள் முடக்கம், நல்ல மழை பெய்தும் விவசாயம் பாதிப்பு… என பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இத்தனைப் பிரச்சினைகள் இருந்தாலும், சங்கரன் கோயிலில் நாங்கள் ஜெயிப்போம். எங்களை எதிர்க்க திராணி இருக்கிறதா என எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டுள்ளார் ஜெயலலிதா.

தனது அத்தனை அராஜகத்தையும் தமிழக  மக்கள் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டுள்ளனர். எனக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்பது அவர் பார்வை.

இந்த நேரத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.கவுக்கு மாற்றாக எது வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் ? என்ற கேள்விக்கு  வந்த பதில்கள்: ம.தி.மு.க – 65%. பா.ம.க. – 6%. தே.மு.தி.க. – 18%. காங்கிரஸ் – 11%.

ஆக மாற்றம் வேண்டும் என விரும்புவோரின் தெரிவு மதிமுகதான் என்ற நிலை உருவாகியுள்ளது.

மதிமுக போஸ்டர்கள். ஒரு சாம்பிள்...

இதற்கு முக்கிய காரணம் வைகோவின் அரசியல் நேர்மை, தேர்தல் லாப நஷ்டங்கள் கருதாமல் மக்களுக்காக அவர் களமாடும் பாங்குதான். அவரும் ஆரம்பத்தில் கூட்டணி பேரங்களில் சிக்கி தனித்தன்மையை இழந்துவிட்டார் என்றாலும், இப்போது அந்த அடையாளத்தை மீட்டெடுத்து உண்மையான மக்கள் தலைவராக உருவெடுத்துள்ளார்.

வைகோ என்றதும் சிலர் ஈழப் போராட்டத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. அதுவும் படித்த, அரசியல் ஆர்வம் கொண்ட சிலரே இந்த வேலையைச் செய்கின்றனர். இது தவறு. ஈழப் போராட்டத்தை விட, பல மடங்கு அதிகமாக அவர் கவனம் செலுத்துவது தமிழக மக்களுக்கான போராட்டங்களில்தான் என்பதை அவரை ஆரம்பத்திலிருந்து கவனிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இன்று நேற்றல்ல… மதிமுக ஆரம்பித்த காலகட்டத்திலிருந்தே குரல் கொடுத்துவரும் ஒரே தலைவர் வைகோதான். மதிமுகவின் ஆரம்ப மாநாட்டு தீர்மானத்திலேயே, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார் வைகோ. கோவையைச் சுற்றியுள்ள நீராதரங்களை கேரளா எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பதை அம்பலப்படுத்தி, அந்த மாநில அரசுக்கே சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் வைகோ.

மதுரை யானை மலையை காத்து நின்ற பெருமை வைகோவுக்குதான் உண்டு. இல்லாவிட்டால் இந்நேரம் அந்த மலை கிரானைட் குவாரியாகிவிட்டிருக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டம், விவசாயிகளின் பிரச்சினை, விலைவாசிக்கு எதிரான போராட்டம், குடிநீர் பிரச்சினை, சமச்சீர் கல்விக்கான போராட்டம் என அனைத்திலுமே முதல் குரல் வைகோவுடையதுதான்.

சங்கரன் கோயில் இடைத் தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றிவிடப் போவதில்லைதான். ஆனால் அடுத்த மாற்று யார் என்பதைக் கோடிட்டுக் காட்ட இது ஒரு வாய்ப்பு. இத்தனை ஆண்டுகள் போராடிவரும் வைகோவின் அரசியல் பயணத்துக்கு புதிய உந்துதலை இந்த முடிவு அளிக்கும்.

இன்றைய கள நிலவரப்படி சங்கரன் கோயிலில் அதிமுக முதலிடத்திலும், அதற்கு சற்றே பிந்தைய நிலையில் மதிமுகவும் உள்ளன. மற்ற கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில்தான் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குகளும் கூட இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. அதேநேரம், இந்த இடைத்தேர்தல் பணிகளை எல்லோருக்கும் முன்னாள் ஆரம்பித்திருப்பது மதிமுகதான். எங்கு பார்த்தாலும் மக்கள் பிரச்சினைகளை முன் நிறுத்தும் கருத்துப் படங்கள் கொண்ட போஸ்டர்களை மதிமுகவினர் ஒட்டி வருகின்றனர்.

இரண்டாமிடத்தில் உள்ள வைகோவின் மதிமுகவுக்கு முதலிடம் அளிப்பதன் மூலம், தங்களுக்கான ஒரு உண்மையான போராளியை தக்கவைத்துக் கொள்ள முடியும் மக்களால்.

அதே நேரம், ‘கொடுத்த ஆதரவை தவறாகப் பயன்படுத்தினால் மக்கள் மன்றத்தில் உடனடி தண்டனை கிடைக்கும்.. தவறுகளைத் திருத்திக் கொண்டே தீர வேண்டும்’ என நிர்பந்தத்தை ஆட்சியாளர்களுக்கு உண்டாக்க முடியும்.

என்ன செய்யப் போகிறார்கள் சங்கரன் கோயில் வாக்காளர்கள்?

-விதுரன்
47 thoughts on “சங்கரன் கோயில் இடைத் தேர்தல்: மாற்றம் விரும்புவோரின் ஆதரவு யாருக்கு?

 1. palPalani

  நாம் உணர்ச்சி வேகத்தில் பல முடிவுகளை எடுத்துள்ளோம், சமீப காலமாக பெரிய திருடனுக்குபதிலாக சின்ன திருடன் என்ற நிலைக்கு வந்துள்ளோம். இதுபோன்ற இடைதேர்தளிலாவது மாற்று சக்தியை நோக்கி செல்வோம்.

 2. thileepan

  வெற்றி ம தி மு க தான். மாற்றம் வேண்டும்

 3. r.v.saravanan

  கொடுத்த ஆதரவை தவறாகப் பயன்படுத்தினால் மக்கள் மன்றத்தில் உடனடி தண்டனை கிடைக்கும்.. தவறுகளைத் திருத்திக் கொண்டே தீர வேண்டும்’ என நிர்பந்தத்தை ஆட்சியாளர்களுக்கு உண்டாக்க இந்த தேர்தல் உதவும் உதவ வேண்டும்

 4. ஊர்க்குருவி.

  அரசியலுக்கு தகுதியானவர்களென்றால் கருணாநிதி, ராமதாஸ், ஜெயலலிதா போன்றவர்களை சொல்லலாம். ஆனால் மனிதாபிமானத்துடன் கூடிய நல்ல மனிதர் என்றால் வைகோ ஒருவரைத்தான் காணமுடிகிறது.,

  வெளுத்ததெல்லாம் பால் என நம்பி நிறைய அரசியல்வாதிகளிடம் ஏமாந்தவரும் வைகோ. தமிழ்நாடு அவரை ஒரு முதல்த்தர தலைவராக்கி பொறுப்பை கொடுத்தால் பிரதியுபகாரம் பார்க்காமல் சேவை செய்யக்கூடியவர். நிச்சியம் நிறைய நல்லது பற்றி சிந்திக்கக்கூடியவர்.

  சில சந்தற்பங்களில் வேறு தெரிவு இல்லாததால் சூழ்நிலை சார்ந்து அவர் எடுத்த முடிவுகள் சற்று கசப்பானவை. அதை அவர் நன்கு உணர்ந்திருப்பார் என்றே சமீபத்திய நகர்வுகள் உணர்த்துகின்றன. மக்கள் கருணாநிதி ஜெயலலிதா என்ற மாயைக்குள் இருந்து வெளிவரவேண்டும் நல்ல தலைமையை துணிவுடன் தெரிவு செய்ய தயங்கக்கூடாது.

 5. Muthu

  Sankaran koil people should give impact or full stop to arrogant Jayalalitha Govt… They have to use their power for right person in right time. Selfish less leader Vaiko need to be motivated by offering great success in the forthcoming bi eleation…

 6. Ganesh Shankar

  திரு.வைகோ அவர்கள் நல்ல தலைவர் தான்.ஆனாலும் ஒட்டு மொத்த வாக்காளர்களும்,அவரின் பக்கம் போவர்கள என்பது சந்தேகம்.அதை இந்த தேர்தலில் பார்க்கலாம்.

  ஆனாலும்,இந்த ஆட்சியில் ஒரு சில விடயங்களை தவிர்த்து,நன்றாக தான் செயல்படுகிறது.
  ஒரு உணர்ச்சி வேகத்தில் மின் வெட்டு,பேருந்து கட்டண உயர்வு என்றெல்லாம் பேசுகிறார்கள்.
  ஆனால்,என்ன செய்ய முடியும் 50 ,000 கோடி கடன் வைத்திருகிறது மின்சார வாரியம்.மத்திய மத்திய ரிசர்வ் வங்கி,இனிமேல் கடன் அளிக்க கூடாது என்று சொல்லிவிட்டது.கடந்த ஆண்டிகளில் பராமரிப்பே சரி இல்லாமல் இருந்து இருக்கிறது.எல்லாம் வீணாகி விட்டது.அதை சரி செய்வது ஒரு,இரு மதங்களில் முடியாது.ஒரு சில வருடங்கள் ஆகலாம்.ஆனால்,அதற்காக இதில் கட்ட வேண்டிய முமரத்தை தமிழக அரசு காட்ட தவற கூடாது.அதுவும்,சரியான பதில் இது நாள் வரை சென்று கொண்டு இருக்கிறது.
  பேருந்து கட்டணம்,நிறைய பேருந்துகள் அடமானத்தில் இருக்கிறது.போக்குவரத்து துறை நட்டத்தில் இருக்கிறது,அவ்வாறு இருக்கையில் நாளை மக்களுக்கு போக்குவரத்துக்கு சேவை வேண்டும் என்றால்,கடனை அடைக்க வேண்டும்,சரி செய்ய வேண்டும்.இதற்கு நிதி,என்ன மத்திய அரசா கொடுக்கிறது??
  இவளவு இருக்கிறது?? விழுந்து இருந்ததை மேல் எடுக்க முயற்சிகள் நிறைய தேவை,அதற்க்கு நேரமும் தேவை.
  மேலும் சமசீர் கல்வி என்பது சரி இல்லை.அது சமமான கல்வி என்னும் நோக்கத்தில் சம தாழ்ச்சி கல்வி முறை.நாட்டில் உள்ள எல்லாரும் நன்றாக படிக்கச் வேண்டும் என்பதி விட்டு விட்டு,எல்லாருக்கும் ஒரு கேவலமான கல்வியை கொடுத்து,அதை எல்லாரும் படிக்க ஏற்பாடு செய்து விட்டால் என்ன சொல்வது.நாடும்,மக்களும் சமமான அறிவாளியாக இருக்க பயன்பட வேண்டும்,அதை விடுத்து சமமான முட்டாளாக இருக்க வழி வகுக கூடாது. தரத்தை குறைத்து,சமத்துவத்தை கொண்டு வரேன் என்பது எல்லாரையும் பாழாக்கும் செயல்.
  முல்லை பெரியார் விடயத்தில் முதல்வர் நன்றாகவே அணுகுகிறார்.தமிழக கடமையை விட்டுக்கொடுக்க முடியாது என்கிறார்.
  ஒரு சில விடயங்களில் இந்த அரசு தவறு செய்கிறது.குறிப்பாக அண்ணா நூலகம் மாற்றல் என்பதெல்லாம் தேவை இல்லாத ஒன்று.ட்சட்ட சபை நிகழ்வுகள் இரண்டு கட்சியும் செய்தது நன்றாகவே இல்லை .

 7. குமரன்

  தக்க நேரத்தில் வந்த நல்ல கட்டுரை.

  தமிழருவி மணியன் போன்ற நடுநிலை தவறாத சிறந்த சிந்தனையாளர்களும் தற்போதைய சூழலில் வைகோவைத்தான் ஆதரிக்கிறார்கள்.

  சென்ற தேர்தலிலே கூட வைகோ தனித்து நின்றிருந்தால், திமுகவுக்கு எதிரான அத்தனை ஓட்டுக்களும் ஒட்டு மொத்தமாக அதிமுகவுக்கு விழுந்திருக்காது. மக்கள் இத்தனை அசுர பலத்தை அகந்தைக்குக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

  இப்போதிளிருந்தாவது வைகோ தனித்து நிற்கவேண்டும். ஒரு மாற்று சக்தியை உருவாக்கி மக்களுக்கு முன் நிறுத்தினால் மக்கள் அந்த சக்தியை ஆதரிப்பது உறுதி.

 8. enkaruthu

  என் கருத்தும் இதுதான்.விஜயகாந்தை அந்த அம்மா சீண்டியதும் எப்படியாவது வோட்டுகளை பிரிக்கவேண்டும் என்பதற்காகதான்.இந்த தருணத்தில் விஜயகாந்த் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.

 9. mani

  இல்லை மதிமுகவிருக்கு விருதுநகர் ( சிவகாசி ) திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற ஒருசில மாவட்டங்களில் மட்டும் குறிப்பிடும் படி செல்வாக்கு உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவும் குறிப்பாக சங்கரன்கோவில் சிவகாசி போன்ற தொகுதிகளில் வைகோ தாங்கி நிற்கும் நாயுடு சமுதாயத்தினர் பெரிதும் உள்ளனர் அதனால் இயற்கையாகவே அவர் வோட்டு எதிர்பாக்கலாம் சங்கரன்கோவில் பக்கத்தில் உள்ள எனது தொகுதியான தென்காசியில் கூட வைகோ 4 சதவிகித வாக்கு மேல் எதிர்ப்பாக முடியாது . ஆனால் தேமுதிக வின் நிலை வேறு தமிழ் நாட்டுள் அணைத்து வட மாவட்டங்களில் ஒன்றிய ரீதியாக கடைசி முளை வரை கால் பதித்துள்ளது தெற்கு மாவட்டங்களில் குறிப்பிட்ட வோட்டு வங்கியை பெற்றுள்ளது இயற்கையாகவே அது மாற்றாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை கடந்த உள்ளாட்சி தேர்தலில் வைகோ பெற்ற வாக்கு வங்கி வெறும் 3 சதவிகிதம் தான் என்பதை அனைவரும் மனதில் வைத்து கருத்தை பதிவு செய்யவும் இந்த 3 சதவிகிதத்தை 5 சதவிகிதமாக மாற்றலாமே தவிர மாற்றத்தை எதிர்பாக்க முடியாது இதே போல் தேமுதிக 10 சதவிகிதம் வாக்கு பெற்றுள்ளது சென்ற உள்ளாட்சி தேர்தலில் 10.11 சதவிகிதம் வாகை பெற்றுள்ளது அதனால் விஜயகாந்த் ஒரு மாற்றம் உருவாக்கலாம் ( அதுவும் கூட்டணி பலதொடுதான் ) வைகோ வெல்ல வாய்ப்பு இல்லை .

 10. தினகர்

  மதிமுக வெற்றி பெற்றால் தமிழக அரசியலில் புதிய வழி பிறக்கும்..

 11. GokulDass

  ஆமாம் மதிமுக தான் மாற்று எனது ஆசையும் அதான்

 12. Karthik

  உங்க கட்டுரைல உள்ள மாதிரி நடக்க.. தமிழக வாக்களர்கள் எல்லாம் அவ்வளவு புத்திசாலிகள் அல்ல.. ரொம்ப ஆசை படாதிங்க நண்பர்களே.. Tamil Nadu voters, sadly not deserve a leader like vaiko.. sorry !

 13. மிஸ்டர் பாவலன்

  @இளங்கோ – குமுதத்தில் வந்த சர்வே ரெசல்ட் சரியா?
  (கேப்டன் செல்வாக்கு சற்று சரிந்திருப்பதாக சர்வே சொல்கிறது)

  @கார்த்திக் – நீங்கள் சொல்வது 100 % சரி!
  மின்வெட்டு பல இடங்களில் மோசமாக இருந்தாலும்,
  இந்த தேர்தலில் சங்கரன் கோயில் தொகுதியில் ஆளும் கட்சி
  தோல்வி உற்றால் அவர்கள் அம்மாவின் கோபத்தை
  சந்திக்க நேரிடும் என்ற பயம், இலவசம் எதுவும் கிடைக்காமல் போகலாம்
  என்ற பயம், இது போன்ற factors இருக்கின்றன. தி.மு.க. ஒரு வேட்பாளரை
  அறிவித்திருக்கிறது. வை.கோ. ஒருவரையும், கேப்டன் ஒருவரையும்
  (கம்யூனிஸ்ட் நிலை தெரியலை) நிறுத்தினால் ஆளும் கட்சி
  மீதான எதிர்ப்பு வோட்டு பிரிந்து அ.தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு
  இருக்கிறது. (சங்கரன் கோயிலில் மின்வெட்டு கடும் பாதிப்பு
  இருந்தால் – அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர் –
  எதிர்த் தரப்பில் யார் ஜெயிக்கற படி இருக்காங்களோ அவர்களுக்கு
  மக்கள் வோட்டுப் போட்டு வெறுப்பைக் காண்பிக்கலாம். )

  கூடங்குளம் திட்டத்தை உடனே துவக்கினாலே மின்வெட்டு குறையும்
  என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும். உதயகுமார் மீது நடவடிக்கை
  எடுத்தாலும் மக்கள் ஆதரவு பெருகலாம். அம்மா என்ன செய்வார்கள்,
  எப்படி முடிவு எடுப்பார்கள் என பொறுத்துப் பார்த்தால் தெரியும்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 14. http://koothadiveddai.blogspot.com/

  //இல்லை மதிமுகவிருக்கு விருதுநகர் ( சிவகாசி ) திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற ஒருசில மாவட்டங்களில்

  மட்டும் குறிப்பிடும் படி செல்வாக்கு உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவும் குறிப்பாக சங்கரன்கோவில்

  சிவகாசி போன்ற தொகுதிகளில் வைகோ தாங்கி நிற்கும் நாயுடு சமுதாயத்தினர் பெரிதும் உள்ளனர் அதனால்

  இயற்கையாகவே அவர் வோட்டு எதிர்பாக்கலாம் சங்கரன்கோவில் பக்கத்தில் உள்ள எனது தொகுதியான

  தென்காசியில் கூட வைகோ 4 சதவிகித வாக்கு மேல் எதிர்ப்பாக முடியாது//

  அந்தக்கருத்து கடந்தகால வழித்தடத்தின் ஒரு பார்வை மட்டுமே. காழ்ப்புணர்வான எடுத்துக்காட்டும் கூட, அவற்றை

  தூக்கிவைத்து இதுதான் எல்லை என காட்டிவிட முடியாது. அக்கருத்துத்தான் சாத்தியம், சத்தியமானது என்று நியதியாக இருந்திருந்தால் வைகோ அரசியலில் இருந்து விலகியிருப்பார் அல்லது கிடைத்த சந்தற்பங்களில் பதவிகளை பெற்று சந்தற்ப அரசியல் நடத்தியிருக்கக்கூடும்.

  அரசியல் ஒரு இரவில் மாற்றியமைத்துவிடக்கூடிய ஒன்று அல்ல. உணர்வு மயமான ஆதரவுகள் ஒரு சில நாட்களில்

  குவிந்துவிடலாம். அப்படி கட்சிகளை கைப்பற்றியவர்கள்தான் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள். வைகோ

  அவர்கள் தனது தலைமையில் ஒரு கட்சியை ஒரு அசாதாரண நிலையில் தோற்றுவித்தவர். நிதானமாக நியாயமாக

  போராடக்கூடியவர். பதவிகளை நோக்கி அவர் ஓடியதில்லை.

  ஜெயலலிதா, கருணாநிதி போன்றோரை தவிர்த்து இன்றிருக்கும் அடுத்த மட்ட கட்சிகளான பாமக, விசி, கட்சிகளின்

  தலைவர்களான ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் போல மக்களால் புறந்தள்ளப்பட்டவருமல்ல.

  எந்தச்சந்தற்பத்திலும் புறணி கூறி அரசியல் செய்யாமல் பிரச்சினைகளுக்காக போராடுபவர். முல்லை பெரியாறு, சேது சமுத்திரத்திட்டம். கூடங்குளம் போராட்டம் ஈழத்தமிழருக்கான போராட்டம் இப்படி தொலைநோக்கோடு அரசியல் செய்பவர்.

  பழைய தரவுகளின்படிதான் தொடர்ச்சியாக ஆதரவு இருக்கவேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. முதல் நிலையில் இருக்கும் அரசியல் கட்சிகளில் அக்கட்சிகளின் தலைமையின் பண்புகளை சீர்தூக்கி பார்த்தால், வைகோ மிகவும் வித்தியாசமானவராகவே இருந்து வருகிறார். வாஜ்பாய், மன்மோகன் சிங்கம் போன்றோரின் மத்திய அரசில் எவ்வளவோ வாய்ப்புக்கள் இருந்தும் அவைகளை பெற்று உல்லாசமான வாழ்வு வாழ வைகோ அவர்களுக்கு அதிக சந்தற்பங்கள் கிடைத்திருந்தும் அவர் மயக்கமடையவில்லை.

  கருணாநிதியின் மனைவிகள், இணைவிகள், துணைவிகள், தொடங்கி கொள்ளு பேரப்பிள்ளை வரையில் வாரிசுக்களை உலகம் அறிந்திருக்கிறது. வைகோவின் குடும்பம் வாரிசுகள் பற்றி நிறையப்பேருக்கு தெரியாது. இப்படியான ஒரு தலைவர் கிடைப்பதே அரிதிற்கரிது. பத்திரிகைகள் மேற்கொண்ட மக்களின் கருத்துக்கணிப்பும் வைக்கோவின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

  இன்றைய தமிழகத்தின் அரசியல்வாதிகளில் சுயநனனில்லாத பொதுநலனில் அதிக கரிசினைகொண்ட ஒருவரென்றால் அது வைகோ ஒருவரே “வெல்லட்டும் நியாயம்” http://koothadiveddai.blogspot.com/

 15. http://koothadiveddai.blogspot.com/

  //இல்லை மதிமுகவிருக்கு விருதுநகர் ( சிவகாசி ) திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற ஒருசில மாவட்டங்களில் மட்டும் குறிப்பிடும் படி செல்வாக்கு உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவும் குறிப்பாக சங்கரன்கோவில் சிவகாசி போன்ற தொகுதிகளில் வைகோ தாங்கி நிற்கும் நாயுடு சமுதாயத்தினர் பெரிதும் உள்ளனர் அதனால் இயற்கையாகவே அவர் வோட்டு எதிர்பாக்கலாம் சங்கரன்கோவில் பக்கத்தில் உள்ள எனது தொகுதியான தென்காசியில் கூட வைகோ 4 சதவிகித வாக்கு மேல் எதிர்ப்பாக முடியாது//

  அந்தக்கருத்து கடந்தகால வழித்தடத்தின் ஒரு பார்வை மட்டுமே. காழ்ப்புணர்வான எடுத்துக்காட்டும் கூட, அவற்றை தூக்கிவைத்து இதுதான் எல்லை என காட்டிவிட முடியாது. அக்கருத்துத்தான் சாத்தியம், சத்தியமானது என்று நியதியாக இருந்திருந்தால் வைகோ அரசியலில் இருந்து விலகியிருப்பார் அல்லது கிடைத்த சந்தற்பங்களில் பதவிகளை பெற்று சந்தற்ப அரசியல் நடத்தியிருக்கக்கூடும்.

  அரசியல் ஒரு இரவில் மாற்றியமைத்துவிடக்கூடிய ஒன்று அல்ல. உணர்வு மயமான ஆதரவுகள் ஒரு சில நாட்களில் குவிந்துவிடலாம். அப்படி கட்சிகளை கைப்பற்றியவர்கள்தான் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள். வைகோ அவர்கள் தனது தலைமையில் ஒரு கட்சியை ஒரு அசாதாரண நிலையில் தோற்றுவித்தவர். நிதானமாக நியாயமாக போராடக்கூடியவர். பதவிகளை நோக்கி அவர் ஓடியதில்லை.

  ஜெயலலிதா, கருணாநிதி போன்றோரை தவிர்த்து இன்றிருக்கும் அடுத்த மட்ட கட்சிகளான பாமக, விசி, கட்சிகளின் தலைவர்களான ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் போல மக்களால் புறந்தள்ளப்பட்டவருமல்ல. எந்தச்சந்தற்பத்திலும் புறணி கூறி அரசியல் செய்யாமல் பிரச்சினைகளுக்காக போராடுபவர். முல்லை பெரியாறு, சேது சமுத்திரத்திட்டம். கூடங்குளம் போராட்டம் ஈழத்தமிழருக்கான போராட்டம் இப்படி தொலைநோக்கோடு அரசியல் செய்பவர்.

  பழைய தரவுகளின்படிதான் தொடர்ச்சியாக ஆதரவு இருக்கவேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. முதல் நிலையில் இருக்கும் அரசியல் கட்சிகளில் அக்கட்சிகளின் தலைமையின் பண்புகளை சீர்தூக்கி பார்த்தால், வைகோ மிகவும் வித்தியாசமானவராகவே இருந்து வருகிறார். வாஜ்பாய், மன்மோகன் சிங்கம் போன்றோரின் மத்திய அரசில் எவ்வளவோ வாய்ப்புக்கள் இருந்தும் அவைகளை பெற்று உல்லாசமான வாழ்வு வாழ வைகோ அவர்களுக்கு அதிக சந்தற்பங்கள் கிடைத்திருந்தும் அவர் மயக்கமடையவில்லை.

  கருணாநிதியின் மனைவிகள், இணைவிகள், துணைவிகள், தொடங்கி கொள்ளு பேரப்பிள்ளை வரையில் வாரிசுக்களை உலகம் அறிந்திருக்கிறது. வைகோவின் குடும்பம் வாரிசுகள் பற்றி நிறையப்பேருக்கு தெரியாது. இப்படியான ஒரு தலைவர் கிடைப்பதே அரிதிற்கரிது. பத்திரிகைகள் மேற்கொண்ட மக்களின் கருத்துக்கணிப்பும் வைக்கோவின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

  இன்றைய தமிழகத்தின் அரசியல்வாதிகளில் சுயநனனில்லாத பொதுநலனில் அதிக கரிசினைகொண்ட ஒருவரென்றால் அது வைகோ ஒருவரே “வெல்லட்டும் நியாயம்” http://koothadiveddai.blogspot.com/

 16. Raasu

  இளங்கோ
  ஒரு வாசகராக உன் வேலை என்னவோ அதை மட்டும் பார். விஜயகாந்தைத் தவிர உலகில் வேறு எவரும் தலைவரே இல்லை எனும் உன்னைப் போன்றவர்களுக்கு இங்கே கருத்து சொல்லக் கூட தகுதியில்லை. ரஜினி வழியா, வைகோ வழியா, கருணாநிதி வழியா என்பதை மற்ற வாசகர்கள் சொல்லட்டும். வந்துட்டான்.

  நேத்துப் பெஞ்ச மழையில முளைச்ச காளான்களெல்லாம் வைகோவைப் பத்தி பேசுதுங்க. பாழாப் போன அரசியல் நல்லவங்களை மட்டும் தொடர்ந்து சோதிக்கத்தான் செய்யுது. இளங்கோ போன்ற விஷமிகள் கருத்தை என்வழியில் பார்க்கக் கூட விரும்பவில்லை வினோ. ப்ளீஸ். இந்தாளு இப்படி கருத்து எளுதறது இது முதல்முறையல்ல. நிறைய முறை இப்படி விஷம் தெளிச்சிருக்கான்.

 17. Raasu

  கருணாநிதி பத்தி எழுதினா திமுக வழி, வைகோவை நல்லா எழுதினா வைகோ வழி… ஜெயலலிதாவைப் பாராட்டினா ஜெவழின்னு சொல்லுவியோ. இளங்கோ முதல்ல மனுசனா இருக்கப் பாரு. கண்ணுல விஜயகாந்த் என்ற புரையை ஏத்திக்கிட்டுப் பாத்தா உனக்கு எல்லாமே இப்படித்தான் தெரியும். நீயெல்லாம் ********************. இப்படித்தான் எழுதுவே.

 18. Raasu

  சட்டசபைக்குள்ள நாக்க நீட்டி ‘..**தா’ என்று பேசியதே பெரிய சாதனை என்று நினைத்து பொங்கறாங்கய்யா கைப்புள்ளங்க. ************** வைகோ காலைக் கழுவி குடிச்சாலும் நல்ல அரசியல் வராது* உங்களுக்கு.

 19. மிஸ்டர் பாவலன்

  //மறுபக்கம் “வைகோ வந்தால் நல்லா இருக்கும்”……….!!//

  @இளங்கோ

  இது அம்பி விக்ரம் ஆசை போல் அப்பாவித் தனமாக இருக்கு!
  கார்த்தி சொன்னது போல் இது நடக்காது. குமுதம் சர்வே சரி என்று
  தான் நான் நினைக்கிறேன். கேப்டனின் செல்வாக்கு சட்டசபை
  சண்டைக்குப் பின் சற்று சரிந்திருக்கிறது. அவர் குழம்பிப் போய்
  இருப்பதாக பத்திரிகைகள் சொல்கின்றன. Clear picture தெரிய
  கொஞ்ச நாள் ஆகும்.

  சென்னையில் மின்வெட்டு உயர்வு, பிற நகரங்களில் மின்வெட்டு
  குறைப்பு, கூடங்குளத்தில் நிபுணர்கள் அறிக்கை, அதன் பின்
  விரைவில் நல்ல முடிவு, புதிய நடவடிக்கை என அதிரடி அரசியல்
  செய்து அ.தி.மு.க. கட்சி தான் சங்கரன் கோயில் தேர்தலில்
  அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெரும் என நினைக்கிறேன்.
  இவ்வாறு கணிப்பை எழுதுவதால் என்னை ‘அ.தி.மு.க. ஆதரவாளர்’
  என நினைக்க வேண்டாம். நான் ஒரு நடுநிலையாளர்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 20. TAMILMAGAN

  சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்க வாய்ப்பு இருப்பது உண்மைதான். அது யதார்த்தமும் கூட. ஆனால் வைகோவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் ஆசை. அதற்குக் காரணம் அதிமுக – திமுகவின் அக்கிரமங்கள்தான். நல்ல மனிதர், நல்ல தலைவர் வைகோ வரட்டும். தேமுதிக, பாமக, காங்கிரஸ் போன்றவை oliya vendiya, அழிக்கப்பட வேண்டிய கட்சிகள்.

 21. enkaruthu

  //வை கோ உட்பட பலர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகிறேன் பேர்விழி என்று ஓடி செல்வார்கள்!
  ஆனால்…. ரஜினியே சென்று நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த .. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரில் … விஜயகாந்தும் ஒருவர்!//

  ஐயோ சாமி இயங்கோ எங்கள் தலைவர் அவர் பெண்ணின் கல்யாண பத்திரிகை கொடுத்து கொண்டிருக்கும் பொழுது விஜயகாந்த் பிறந்த நாள் ஒரு சில நாளில் வருவதை தெரிந்துகொண்டு சரி அன்னைக்கு போய் பத்திரிகையை கொடுத்துவிட்டு அப்படியே வாழ்த்திவிட்டு வரலாம் என்ற நல்ல எண்ணத்தில்தான் சென்றார்.யாரை யாரோடு ஒப்பிடுகிறாய் .என் தலைவர் 1996 இல் அமைதியாக இருந்ததால் கிடைத்த பிச்சைதான் உன் விசயகாந்தின் இன்றைய அரசியல் நிலை.என் தலைவர் இப்பொழுது ஒரு கை அசைத்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் வந்தால் உன் தலைவர் நிலை சொம்புதான் .
  அப்புறம் இயங்கோ ஒருவர் மேடையில் பேசும்பொழுது அவருக்காக என் தலைவர் விசில் அடித்த ஸ்டில் மிக பிரபலம்.அந்த பேச்சாளர் யார் என்றால் வைகோ .அதனால் இயங்கோ வேறு எங்காவது போய் இப்படி எல்லாம் பேசு.

 22. தினகர்

  “தினகர் “அந்நியன்” விக்ரம் போல (ஒரே சமயத்தில் அம்பி .. அந்நியன் போல) .. மாறி… மாறி …. சூப்பரா … பேசறாரு…!
  ஒருபக்கம் “ஸ்டாலின் வருகால முதல்வர் ….!”…..
  மறுபக்கம் “வைகோ வந்தால் நல்லா இருக்கும்”……….!! ”

  ஹாஹாஹாஹா

  இளங்கோ, ஆனாலும், விஜயகாந்த் அளவுக்கு உங்களுக்கு வேகம் / கோபம் வருதப்பா 🙂

  ஏனுங்க .. எந்த ஒரு வாக்கியத்திற்கும் இடம் பொருளுக்கு தகுந்தவாறு தான் அர்த்தம் எடுத்துக்கனும் என்று நான் சொல்லித்தான் தெரியனும்ன்னு இல்லே.

  சட்டசபை காட்சிகளை பார்த்து ஸ்டாலின் நம்பிக்கையாக தெரிகிறார் என்றேன்.. அங்கிருந்த மூவரில் ஸ்டாலின் திறமையாளர் என்ற கருத்து அது.

  இங்கு சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் மதிமுக வெற்றி பெற்றால் புதிய வழி பிறக்கும் என்றால், ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் அதே சமயத்தில் இந்த தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்ற ஆவல் தான்.

  போன தேர்தல் முடிவுகளைப்பார்த்தால் இரண்டு லட்சம் வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில், திமுக பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்று இருக்கிறது.. இப்போது அதிமுக மீது மக்களின் கோபம் வெளிப்பட்டால் திமுக வே வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இளங்கோவின் கேப்டனின் ஆதரவும் அதிமுகவிற்கு இப்போது இல்லை.

  ஆனால் சென்ற தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை, மதிமுகவின் கணிசமான வாக்குகளும் திமுகவிற்கு தான் கிடைத்தது. மதிமுகவிற்கு செல்வாக்கான தொகுதி இது. அதனால் மதிமுக வெற்றி பெற்றால் மக்களின் மாற்று சக்தி எதிர்ப்பார்ப்பு எல்லா அரசியல்வாதிகளுக்கும் புரியும்.. தமிழக அரசியலில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. இது தான் நான் சொல்ல வந்த கருத்து.

  சங்கரன்கோவிலில் ஏதாவது ஒரு ‘திமுக’ தான் வெற்றி பெறும்
  முன்னால் இனிஷயல் இல்லாமலோ அல்லது ‘அ’ அல்லது ‘ ம’ இருக்கலாம் ஆனால் ‘முதிக’ போட்டியிட்டால் டெப்பாசிட் காலி என்பது உறுதி.. அது தெரிஞ்சு தான் ; கவர்னர் ஆட்சியில் தேர்தல் போட்டியிடுவோம் ன்னு கேப்டன் சவால் விட்டாரு. எந்த ஊரில் கவர்னர் ஆட்சியில் இடைத்தேர்தல் நடக்கும்?. அரசியல் சாசனமும் புரியல்லியா?.

  “ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்துங்கள் மக்கள் ஆதரவை பார்க்கலாம்” என்று சொல்லியிருந்தால் சூப்பர் சவாலாக இருந்திருக்கும். இவர் சவாலுக்கு பதிலாக அம்மா ஆட்சியை கலைத்து கூட விட்டிருக்கலாம். நாட்டிற்கும் விஜயகாந்த் புண்ணியத்தில் நல்லது நடந்திருக்கும் 🙂

 23. தினகர்

  “என்னை ‘அ.தி.மு.க. ஆதரவாளர்’ என நினைக்க வேண்டாம். நான் ஒரு நடுநிலையாளர்.- மிஸ்டர் பாவலன் ”

  திரும்பி வந்த பாவலன் திருந்தி விட்டாரோ என்று நினைத்தேன்….ஆனால்……?.

 24. enkaruthu

  //என்னை ‘அ.தி.மு.க. ஆதரவாளர்’
  என நினைக்க வேண்டாம். நான் ஒரு நடுநிலையாளர்.//

  நினைக்கிறதா. உங்களை எப்பவோ admk ஆதரவாளர் என்று நாங்கள் உறுதி செஞ்சாச்சு.சும்மா நடுநிலையாளர் என்று சொல்லி உங்களை வைத்து நீங்களே காமெடி கீமெடி செய்து கொள்ளாதீர்கள்.

  எந்த பிரச்சினை ஆனாலும் சரி அது எப்படி பாவலன் என்னெனவோ உளறிவிட்டு கடைசியில் ஜெயலலிதாவை ஆதரித்து விடுகிறீர்கள்.இதில் நடுநிலை காமெடி வேறு .இதே கலைஞர் ஆட்சியாய் இருந்தால் பல பாட்டுகளை எல்லாம் பாடி புலம்பி இருப்பீர்கள் .ஆனால் இப்பொழுது current கட்டுக்கு சப்பை கட்டு கட்டுகிறீர்கள்.நாங்கள் கேட்பதெல்லாம் நாங்கள் வந்தால் ஆகஸ்ட் மாதத்தில் மின்வெட்டே இருக்காது என்று காது கிழிய ஜெயலலிதா சொன்னார் .இருந்தாலும் மக்கள் எதோ பிரச்சினை என்று மேலும் 6 மாதம் பொறுத்திருந்து பார்த்து மேலும் பல மணி மின்வெட்டு அதிகமானதால்தான் இன்று போராட்டம் பண்ணுகிறார்கள்.என்றும் எப்பொழுதும் நியாத்தை பேச வேண்டும் அதுதான் கடவுளுக்கு பிடிக்கும்.பாவலன் என்றைக்கும் நம் ஆள், நம் ஆள் என்ன தப்பு பண்ணினாலும் அவன் தலைமை இருந்தால்தான் நம்மவாளுக்கு என்றும் safety என்பதையெல்லாம் தள்ளிவிட்டு யோசித்து கருத்தை எழுதுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு நடுநிலையாளர் என்ற பட்டமும் நெஞ்சு உருத்தாதனமும் இருக்கும்.

 25. mani

  இங்கு விஜயகாந்தை ரஜினி ரசிகர்கள் ஏன் தாழ்த்துகிறீர்கள் என்று என் போன்றோருக்கு நன்றாக தெரியும் நீங்கள் தாழ்த்துவதன் நோக்கம் புரிகிறது அதற்க்கு விஜயகாந்தோ அவரின் தொண்டர்களோ பொறுபேற்க முடியாது ஆனால் நீங்கள் தால்துவதநாளோ வைகோவை உயர்துவதநாளோ விஜயகாந்த் தாழ்ந்துவிடுவார் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். இங்கு ரஜினி ரசிகர்கள் ஒன்றை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் வைகோ இந்த பரிதாப நிலைக்கு வர யார் காரணம் ???? உங்கள் தலைவர் ரஜினிதான் என்பது அரசியலை உற்று நோகும் அனைவரும் அறிவர் அன்று 1996 இல் வைகோ தனியாக போராடும் சூழல் உருவானது மதிமுக வின் செல்வாக்கு மிகுந்த காலம் அது வைகோ நேரடியாக வே ரஜினியிடம் சென்று உங்கள் பெயரையும் உங்கள் ரசிகர்களையும் சிலர் ( கருணாநிதி – மூப்பனார் ) அரசியலிற்காக use செய்கிறார்கள் அதை நீங்கள் அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டி கேட்டு கொண்டு சென்றார் அதற்க்கு ரஜினியும் சம்மதம் தெரிவித்தார் ஆனால் நடந்தது என்ன ? நாடே அறியும் ! அதன் பின் வைகோ அம்மாவையும் யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ அவரிடமும் கூட்டணி வைத்து தனது பெயர் புகழ் அனைத்தையும் கெடுத்து கொண்டார் என்பது அனைவரும் அறிவர் .
  இன்று என்வழி வைகொவழி யாக மாறி பல நாள் ஆகிவிட்ட சூழலிலும் நீங்கள் உயர்துவதனால் உயர்ந்து விடுவார் என்று நினைக்க வேண்டாம் அவர் தாழ்ந்ததற்கு நீங்கள் தான் முக்கிய காரணம் இது வரலாறு மறைக்க பட்ட உண்மை

 26. குமரன்

  தினகர்

  ///திரும்பி வந்த பாவலன் திருந்தி விட்டாரோ என்று நினைத்தேன்….ஆனால்……?.///

  நான் இப்போதும் சொல்வதும் நம்புவதும் … ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு. இதில் எது தவறு எது சரி என்று யார் தீர்மானிக்க முடியும்? எனது இந்தக் கருத்தும் கூட தவறாக இருக்கக் கூடும், எவரேனும் தவறான கருத்துக் கொண்டிருந்தால் கூட எவரும் எவரையும் திருத்தவும் முடியாது.

  இதை வேறு எவர் என்றாலும் நான் காணாதது போல ஒதுங்கி விடுவே, ஆனால் தினகர் என்பதால்தான், நீங்கள் நியாயத்தை உணர்பவர் என்பதால்தான் சொல்கிறேன்.

 27. தினகர்

  “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு. இதில் எது தவறு எது சரி என்று யார் தீர்மானிக்க முடியும்?”

  குமரன், பாவலன் ‘ நடு நிலையாளர்’ என்று குறுப்பிட்டத்தை தான் நான் சொன்னேன், அவருடைய பாணியிலேயே யோசித்து பாருங்கள்.. சரியாகத்தெரியும்..

  அவருடைய கருத்துக்களை குறிப்பிட்டு ‘ திருந்தினார், திருந்தவில்லை என்று ஏதும் சொல்லவில்லை’ அவருடைய கருத்துக்களை நான் குறையோ குற்றமோ கண்டுபிடிக்கவில்லை.

 28. மிஸ்டர் பாவலன்

  //சும்மா நடுநிலையாளர் என்று சொல்லி
  உங்களை வைத்து நீங்களே காமெடி கீமெடி
  செய்து கொள்ளாதீர்கள்.// (என் கருத்து)

  என் கருத்தின் தன் கருத்துக்கு முன் வணக்கம்
  செய்து, பண்பட்ட வலையில் கண்ணில் தென்பட்ட
  கட்டுரைகளுக்கு தொன்பட்ட கருத்து எழுதாமல்
  பொன்பட்ட நேரத்தில் சொல்வண்ணம் காட்டாமல்
  சுருக்கமாகவே கருத்துக்கள் வலைப் பலகையில்
  கைவண்ணம் செய்து பதிவேற்றம் செய்கிறேன்.

  அரசியல் அதிகம் எழுத விரும்பவில்லை. அப்படி
  எழுதினாலும் என்னால் உருப்படியாக ஒன்றும்
  ஆகப் போவதில்லை. அதனால் பொதுவான கருத்துக்கள்
  மட்டுமே நான் இனி தொடர்ந்து எழுதுவேன்.

  நடேசன் தேர்வு செய்து எழுதும் குறள்கள் ஆழமான
  கருத்துக்கள் கொண்டவை. அவர் ‘தினம் ஒரு குறள்”
  என்ற பகுதியில் எழுதினால், அவர் பதிவை கருத்து
  பகுதியில் “கௌரவம்” மிக்க பிரபல வழக்கறிஞர், பல
  பட்டங்களைப் பெற்ற சிம்மக் குரலோன், சைதாப்பேட்டை
  குமரன் அவர்களும் கருத்து பதிவு செய்வார். குமரன்
  AIR, தூரதர்ஷன் (பொதிகை) நிகழ்ச்சிகளிலும்
  வர்ணனை, பேட்டிகள் கொடுத்திருக்கிறார். குமரன்
  ஆன்மிகம், சட்டம் இரண்டிலும் கரை கண்ட அறிஞர்.
  குமரனும், நடேசனும் அவர்கள் தமிழ் அறிவை
  பகிர்ந்து கொள்ளனும் (‘kollanum’ என type செய்தால்
  `கொல்லணும்’ என வருகிறது!) ஹி.. ஹி..

  -==== மிஸ்டர் பாவலன் ===-

 29. தினகர்

  “ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்துங்கள் மக்கள் ஆதரவை பார்க்கலாம்” என்று சொல்லியிருந்தால் சூப்பர் சவாலாக இருந்திருக்கும்”

  சட்டசபையில் ஒழுங்காக சவால் கூட விடத்தெரியவில்லை என்பதைத்தான் அப்படி சொன்னேன் நண்பரே.. ‘ திராணி’ இருக்கா என்று கேட்டவுடன் இவர் ‘ ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க திராணி’ இருக்கா என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்திருக்கலாம். முஷ்டியை உயர்த்த்தி நாக்கை துருத்தி போஸ் கொடுக்க வேண்டிய வேலையே இல்லையே?

  ஒருவேளை அப்படி கேட்டிருந்து ஆட்சியை கலைக்காவிட்டால் இவரது கேள்விக்கு ஜெ தோற்று விட்டதாக தானே இருக்கும். கொஞ்சம் நிதானமும், சிந்திக்கும் திறனும் எந்த ஒரு தலைவருக்கும் தேவை.. அது இவருக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அவரது நடவடிக்கைகளே சொல்கிறதே தவிர யாரும் அவரை ஏதும் சொல்லவில்லை.

 30. தினகர்

  “அரசியல் அதிகம் எழுத விரும்பவில்லை. அப்படி எழுதினாலும் என்னால் உருப்படியாக ஒன்றும் ஆகப் போவதில்லை ”

  அதாவது அம்மா ஆட்சியைப் பற்றி என்ன எழுதினாலும் உருப்படியாக ஒன்றும் ஆகப் போவதில்லை – அப்படித்தானே பாவலன்?

 31. Raasu

  //காலம் காலமாய் திட்டம் வகுத்து அதற்காக கடுமையாக உழைத்து…. இன்று கடவுளின் ஆசியால் இந்த சாதனைகளை படைத்தார் விஜயகாந்த்.

  ரஜினிக்கு என்னைக்குமே அரசியல் ஒத்து வாராது! தமிழ் நாட்டை தவிர அவருக்கு பல ஊர்களில்… நாடுகாளில் பிசினஸ் இருப்பதாக (தமிழுருவி மணியன் கூட சமீபத்தில் சொன்னார்) தெரிகிறது! அதை கவனித்து கொள்ளவும் ….எல்லோருக்கும் நல்லவராய் இருக்க வேண்டும் … (ஜெயா உட்பட)… என்ற நினைப்பிற்கு பெயர் என்னவோ? அவர் அரசியலுக்கு வராததற்கு பல சொந்த காரணங்கள் இருகின்றது!//

  -திரு வினோ, எனது கருத்தில் தாங்கள் கைவைத்ததில் வருத்தமில்லை. நியாயம்தான். ஆனால் இந்த ஆள் திரும்பத் திரும்ப விஷம் கக்குகிறான் பாருங்கள். ரஜினி ரசிகன் என்ற போர்வையில் இங்கே கருத்து சொல்ல ஆரம்பித்து, தன் உண்மையான நிறத்தைக் காட்டுகிறான். கர்நாடகத்தில் அவருக்கு என்ன தொழில்கள் இருக்கின்றன என்று இவர் போய் பார்த்தாரா? அப்படியே இருந்தாலும் ரஜினி என்ன சட்டவிரோதமாகவே தொழில் செய்கிறார்?

  ரஜினிக்கு அரசியல் ஒத்து வராதாம். ரஜினி வந்தால் விஜயகாந்த் மாதிரி உதவாக்கரைகள் இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவார்கள். அந்த பயத்தில் உளருகிறார் இந்த ஆசாமி. எல்லாருக்கும் நல்லவராக இருந்து அரசியல் செய்வது ஒரு உயர்ந்த தலைவனின் பாங்கு. எங்கள் தலைவனுக்கு அந்த பண்பு உண்டு. மனிதர்களில் மாணிக்கம்… தலைவர்களில் தலைசிறந்தவர் அவர். அவரைப் பற்றி பேசக்கூட இந்த இளங்கோ போன்றவர்களுக்கு அருகதையில்லை. களத்துக்கு வந்தால் உன் கருத்தைச் சொல்லிவிட்டுப் போவதுதானே. அதைவிட்டு, என்ன ‘…’ என் தலைவனைப் பற்றி எழுதுகிறாய்?

 32. Simple Fan of Superstar!

  வந்துட்டான்டா பர்மனன்ட் காளான். உன் டாஸ்மாக் தலைவன் விஜயகாந்த் ஜால்ரா சத்தம்தான் என்வழியில சிரிப்பா சிரிக்குதே. அதை வேறு தேடி படிக்கணுமா? நீ ஒரு ரஜினி ரசிகன் இல்லை. போலி. அந்த மாஸ்கை மாட்டிக் கொண்டு விஜயகாந்தின் கோவணத்தை தூக்கிக் கொண்டு திரிகிறாய்.

  விஜயகாந்த் என்ற உதவாக்கரைக்கு நீ தரும் ஆதரவை உன்னோடு வைத்துக்கொள். அந்த குப்பையை இங்கே வந்து கொட்டாதே. கருணாஸ் சொன்னது உன்னைப்போன்றவர்களுக்குத்தான். என் தலைவன் யோசிக்கும் நேரத்தில் கட்சி ஆரம்பித்தவனை, என்னமோ ஐந்தாண்டு திட்டம் போட்டவன் மாதிரி இங்கே பீத்தறே.

  எதுக்கெடுத்தாலும் விஜயகாந்த் இதைப் புடுங்கினான், அந்த கழட்டினான், கடவுளே அவனைத்தான் நம்பி இருக்குன்னு ஓவர் அலும்பு பண்றே.

  த பார். இந்த தமிழ்நாட்டுக்கு இன்னிக்கு சூழ்நிலைக்கு வைகோ வரட்டும். இல்லேன்னா அதிமுகவே ஜெயிக்கட்டும். வேறு யாரும் ஆணியே புடுங்க வேணாம். இதுதான் ரஜினி ரசிகர்களின் மனசு.

 33. enkaruthu

  //\\என் தலைவர் 1996 இல் அமைதியாக இருந்ததால் கிடைத்த பிச்சைதான்.

  நல்ல காமெடி ..:த//

  இயங்கோ இயங்கோ எதப்பா காமெடி 1996 இல் எங்கள் தலைவர் கட்சி ஆரம்பித்திருந்தால் உன் டாஸ்மாக்காந்த் கடைசி வரை டாஸ்மாக்லே குந்திருக்கவேண்டியதுதான்.சரி இயங்கோ உனக்கு திராணி திராணி திராணி இருந்தால் என்வழி சார்பாக ஒரு சர்வே போவோம் ரஜினி முதல்வராக இருந்தால் நாடு நல்லாருக்குமா அல்லது விஜயகாந்த் இருந்தால் நல்லா இருக்குமா என்று கேட்டு பார்போம் அப்புறம் தெரியும் உங்கள் நிலை.

  எங்கள் தலைவர் 1996 ல் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆனால் கடந்த 15 வருடங்களாக மக்களும் சரி மீடியாவும் சரி அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்கலாம் என்று சொன்னால் முதல் கேள்வி அவரின் அடுத்த படமாக எப்போ என்று இருக்கும் அடுத்து அவர் அரசியலுக்கு வருவது எப்போ என்ற கேள்வியாக இருக்கும்.இது காமெடியா.

  காமெடி என்று சொன்னதும்தான் ஒரு நினைவு வருகிறது உங்கள் தலைவர் சரக்கு அடித்துவிட்டு வேட்பாளர் பெயரையே மாற்றி சொன்னார்.அந்த வேட்பாளர் உடனே இது என் பெயர் இல்லை என்று சொன்னவுடன் ஒரு நல்லா தலைவன் என்ன சொல்லிருக்கவேண்டும் தவறாக வேட்பாளர் பெயரை சொல்லிவிட்டேன் மன்னிக்கவும் என்று சொல்லிருக்கவேண்டும்.அதுதான் நாகரிகம் அதை விட்டு விட்டு அந்த வேட்பாளரை அவர் மனைவி முன்பும் அவர் ஊரை சேர்ந்த மக்களும் முன்பும் அடித்தால் அந்த வேட்பாளர் எப்படியா போய் ஒட்டு கேட்க முடியும்.சத்தியமாக சொல்கிறேன் அந்த வேட்பாளரின் மனைவி கூட விஜயகாந்தால் அவர் கணவருக்கு ஒட்டு போட்டிருக்கமாட்டார். இவனெல்லாம் ஒரு தலைவன் இவனுக்காக வக்காலத்து வாங்க வந்துட்ட.

  //காலம் காலமாய் திட்டம் வகுத்து அதற்காக கடுமையாக உழைத்து…. இன்று கடவுளின் ஆசியால் இந்த சாதனைகளை படைத்தார் விஜயகாந்த்.//

  அய்யயோ ஒரு சீட் வென்றது சாதனையா.ராமதாஸ் அவர்களின் ஆள் அராஜகம் செய்ததால் வந்த வெற்றி.கண்ணு போன மேயர் தேர்தலில் கூட உங்கள் பெயர் கொண்ட உங்கள் கட்சியின் மாநில நிர்வாகி எங்கள் மாவட்டத்தின் ரஜினி மன்ற தலைவரின் ஆதரவை வேண்டி அவர் வீட்டில் நின்னது பேசினது எல்லா ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு .

  இன்றும் உங்கள் ஆள், வடிவேல் சொல்வது போல் வாய் strongu ஆனால் உண்மை நிலவரம் வீக். சரி இளங்கோ விஜயகாந்த் இந்த தேர்தலில் நிப்பாருங்கரே அப்படி நின்னாலும் அவர் வெல்ல போவதும் இல்லை ஏனென்றால் கலைஞரும் அவர் வேட்பாளரை அறிவித்துவிட்டார். இனி உன் தலைவன் நிலை காமெடிதான் .இடை தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெரும் என்றாலும் ஒரு 6000 ஒட்டு வாங்க சொல் பார்க்கலாம்.

  சட்டசபையில் நடந்த விசயத்துக்கு விஜயகாந்துக்கு ஆதரவாகத்தான் கருத்து போட்டேன் .ஆனால் என் தங்க தலைவருடன் ஒப்பிடும்பொழுது என் தலைவரை பெயரில் இருந்து பல விசயங்களில் copy அடித்து வரும் விஜயகாந்த் ஒண்ணுமே இல்ல.

 34. mani

  /// இடை தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெரும் என்றாலும் ஒரு 6000 ஒட்டு வாங்க சொல் பார்க்கலாம். ////

  விஜயகாந்த் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உயர்ந்து உள்ளார் என்பது நாடறிந்த உண்மை. பொறாமை என்றால் என்ன என்பதை இங்கு தான் நான் பார்கிறேன் ஆனால் இவ்வளவு பொறாமை கூடாது . இது கெடுதலில் தான் முடியும்

 35. மிஸ்டர் பாவலன்

  ///விஜயகாந்த் அரசியலில் தவிர்க்க முடியாத
  சக்தியாக உயர்ந்து உள்ளார் என்பது நாடறிந்த உண்மை./// (மணி)

  கடந்த இரு தேர்தல்களில் அவருக்கு என ஒரு வாக்கு வங்கி
  (%) இருந்தது உண்மை. அதைக் கணக்கு செய்து தான் சோ
  மிகவும் முயற்சி செய்து அ.தி.மு.க.-தே.மு.தி.க.-கம்யூனிஸ்ட் என
  ஒரு வெற்றிக் கூட்டணியை அமைத்துக் கொடுத்தார். கேப்டன்
  தனியாக நிற்க வேண்டும், வோட்டைப் பிரித்து கழகத்திற்கு
  வெற்றி தரனும் என அரசியல் சாணக்கியன் கலைஞர் எவ்வளவோ
  முயற்சி செய்தும் அது நிறைவேறாமல் போய்விட்டது. அடுத்து வரும்
  பார்லிமென்ட் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ்-தே.மு.தி.க. ஒரே அணியில்
  நிற்கலாம். தே.மு.தி.க. தனியாக நின்றால் அவர் வோட்டைப் பிரித்து
  தி.மு.க.-விற்கு உதவி செய்வார். அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணியில்
  பிளவு ஏற்பட்டிருப்பது அரசியல் சாணக்கியன் கலைஞருக்கு
  பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். கேப்டனை உசுப்பி விட்டு,
  அவரைத் தனியாக நிற்க வைக்க எல்லா முயற்சிகளும் இனி நடக்கும்.
  ராஜ தந்திரி சோவுடன் முதல்வர் இதை எப்படி எதிர்கொள்கிறார் என
  அ.தி.மு.க. ஆதரவாளர்களும், நடுநிலையாளர்களும் பொறுமையுடன்
  எதிர்பார்த்து வருகின்றனர்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 36. Raasu

  நன்றி Simple Fan of Superstar!

  இதான் தலைவர் ரசிகரோட நெத்தியடி பதில்!

 37. unmaivirumbi

  சங்கரன்கோவில் இடை தேர்தலில் கல நிலவர படி அதிமுக முன்னனியல் இருப்பது ஓரளவு உண்மையே.சட்டசபை விவாதத்தில் எதிர் கட்சி தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் சில பிரச்சனைகளை பற்றி பேசியதும் உண்மையே.அதே சமயத்தில் ஆளும் கட்சியாகவும் இல்லாமல் எதிர் கட்சியாகவும் இல்லாமல் ஏன் பிரதிநிதித்துவம் கூட இல்லாமல் விலைவாசி உயர்வு, முல்லை பெரியார் பிரச்சனை,பாலாற்று பிரச்சனை போன்ற மக்கள் பிரச்சனைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு போராடுகிற திரு,வைகோ அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்பது தான் நடுநிலை வாக்களர்களின் எண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *