ஐஸ்வர்யா இயக்கத்தில் ஓ மை காட் படத்தில் நடிக்கிறாரா ரஜினி?
கடந்த சில தினங்களாக இணையத்திலும், நாளிதழ்களிலும் அதிகமாக அடிபடும் விஷயம், ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்பதுதான்.
இந்தியில் சமீபத்தில் வெளியான ஓ மை காட் என்ற படத்தின் ரீமேக் அந்தப் படம் என்றும், அதில் அக்ஷய் குமார் நடித்த கிருஷ்ண பகவான் வேட்ததில் ரஜினி நடிப்பார் என அந்த செய்திகள் தெரிவித்திருந்தன.
இந்தப் படத்தின் உரிமையை வாங்குவதற்கான சமீபத்தில் அக்ஷய் குமாரை ஐஸ்வர்யா சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 3 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் தோல்வியால், நல்ல ஸ்கிரிப்டுக்குக் காத்திருந்த ஐஸ்வர்யாவுக்கு, ஓ மை காட், மீண்டும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டதாம். ரஜினியை வைத்து இந்தப் படத்தை ரீமேக் செய்தால், தானே அதை தயாரிக்க ரெடி என அக்ஷய் குமார் சொல்லிவிட்டாராம்.
இந்த செய்தியைப் படித்த ரசிகர்களின் உணர்வுகளை அப்படியே இங்கு எழுதிவிட முடியாது.
செய்தி இருக்கட்டும்… அது உண்மைதானா?
இதுபற்றி ஐஸ்வர்யா தரப்பில் விசாரித்தோம். ஓ மை காட் படத்தை தமிழில் இயக்க ஐஸ்வர்யா ஆர்வமாக இருப்பது உண்மையே. இதுபற்றி பேச்சு வார்த்தையும் நடந்துள்ளது.
ஆனால் தான் கவுரவ வேடத்தில் நடிப்பதில் உள்ள சிக்கல்களைப் புரிந்துள்ள சூப்பர் ஸ்டார், இந்தப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்கிறார்கள். ‘முதலில் கோச்சடையான் வெளியாகட்டும். அதன் பிறகு அடுத்த படம் குறித்துப் பேசலாம். இப்போது மீடியாவுக்கு தீனி போடும் வேலை எதையும் செய்ய வேண்டாம்’, என மகளிடமும் கூறியிருக்கிறாராம் ரஜினி!
இதைவிட முக்கியம், அடுத்து தான் நடிக்கும் படம் அதிரடி பொழுதுபோக்குப் படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் சூப்பர் ஸ்டார்!
-என்வழி ஸ்பெஷல்
ஆணியே புடுங்க வேண்டாம்
oh my god is not a great film..got average reviews only..very risky project and could back fire like baba..hope thalaivar stay away from this movie..
தலைவா;நீங்கள் எடுத்த,முடிவு .மிகச்சரியான முடிவு.எனவே,தயவு செய்து கௌரவ வேடம் ,மட்டும் வேண்டவே வேண்டாம்.இது கண்டிப்பாக,ஆலோசனையோ,அல்லது அறிவுரையோ ,என்று தவறாக,எண்ணவேண்டாம்.முழுக்க,முழுக்க,தாங்களின் நலன் கறுதி,வைக்கப்படும் ,எங்களின் பணிவான,வேண்டுகோள் மட்டுமே.
முழுக்க,முழுக்க,தாங்களின் நலன்கருதி வைக்கப்படும்,எங்களின் பணிவான,வேண்டுகோள் மட்டுமே.ஒருவேளை,தாங்களுக்கு அந்த கதை பிடித்ததென்றால் ,நீங்கள் இருவேடங்களில்,நடிக்கலாம்.[இது எனக்கே,கொஞ்சம் ஓவராகத்தான்,இருக்கு.மன்னித்துவிடுத் தலைவா.]
மோதல கொச்சடையான் ர்லீசே பண்ணுக அதுக்கபரம adutha படாத படாத பதி யோசிங்க
கொச்சடையான் ஆடியோ லஞ்ச் ????
தலைவா தயவு செய்து இந்த பாழ போன படத்துல நடிகாதீங்க ப்ளீஸ் ரவிக்குமார் or முருகதாஸ் or ராஜமௌலி படத்துல நடிங்க நாங்க உங்க கிட்ட ஸ்டைல் மற்றும் பொழுதுபோக்கு படம் தான் ககுறோம் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
ஓ மை காட் படத்தை தமிழில் இயக்க ஐஸ்வர்யா ஆர்வமாக இருப்பது உண்மையே. இதுபற்றி பேச்சு வார்த்தையும் நடந்துள்ளது.
ஓ மை காட்
Kumar rasa, Our Super Star films are always entertainment and Fights are enthusiastic. Have you seen the movie “SIVAJI, BAASHA, ANNAMALAI”.