BREAKING NEWS
Search

காங்கிரஸ் ‘தலைவர்’ ராகுல் காந்தி… நம்பலாமா?

தமிழகத்தில் ரஜினிகாந்த்… மத்தியில் ராகுல் காந்தி?

IMG_7829_800x533
2009-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீது எந்த நம்பிக்கையும் இல்லை. மரியாதையும் இல்லை. ராஜிவ் காந்தியின் கொலை என்பது விடுதலைப் புலிகளின் வேலை மட்டுமில்லை. அதையும் தாண்டிய சில சக்திகளின் கைகள் அதில் இருக்கின்றன என்பது தெள்ளத் தெரிந்தும், ஒரு இனத்தையே கருவறுக்கத் துணை போனார்கள் என்ற கோபம் குறையவில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் கேவலமாக்த தோற்று ஆட்சியையும் இழந்தார்கள். சோனியா காந்தியின் தலைமை வலுவற்றுப் போனது. அடுத்து ராகுல் காந்திதான் தலைமைக்கு வரவேண்டும். அவரோ கேலிப் பொருளாகவே பார்க்கப்பட்டார்.

ஆனால் காலம் மெல்லத் திரும்ப ஆரம்பித்தது. கேலிக்குரிய நபராகப் பார்க்கப்பட்ட ராகுலின் பேச்சில் பெரிய பக்குவம். பணமதிப்பிழப்பு, அவசர கோலத்தில் ஜிஎஸ்டி அமல் என துக்ளக்கை விட மோசமாக ஆடிக் கொண்டிருக்கும் மோடியின் தவறுகளை ஆணித்தரமாக அவர் எடுத்து வைக்கும் பாங்கு, முக்கியமாக ஏழை மனிதர்கள் பால் காட்டும் அன்பு… இவை எல்லாமும் ராகுல் மீது புதிய வெளிச்சம் பாய்ச்ச வைத்திருக்கின்றன.

“அரசியல்வாதிகள் மனதில் தோன்றவதை சொல்லமாட்டார்கள் ஆனால் நான் அப்படியில்லை. நான் என் மனதில் பட்டதைத் தான் சொல்வேன். நான் அடிக்கடி என் தந்தையைப் பற்றி நினைத்துப் பார்ப்பதுண்டு. என்னுடைய அப்பாவை விடுதலைப் புலிகள் கொன்றனர். ஆனால் இலங்கை கடற்பகுதியில் அவர்களின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு கிடந்த காட்சியை பார்த்து எனக்கு துக்கமாக இருந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன். குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.

உடனே பிரியங்கா காந்திக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பிரியங்காவிற்கு பிரபாகரனைப் பற்றி நன்றாகத் தெரியும். என்னுடைய அப்பாவின் கொலைக்குக் காரணமானவர் இறந்து கிடக்கிறார். ஆனால் எங்களுக்கு துக்கமாக இருந்தது, எங்களுக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது. எந்த விதத்திலும் மகிழ்ச்சியடையவில்லை, ஏனோ மிகவும் துக்கப்பட்டோம்.
Rahul3
பிரபாகரனின் கடைசி மகனின் வாழ்க்கை எவ்வளவு போராட்டமாக, துயரமாக இருந்ததோ அப்படித்தான் நாங்களும் தந்தையை இழந்து கஷ்டப்பட்டோம். நாங்கள் வளர்ந்த விதம் என்று கூட சொல்லலாம். இதற்காக நீங்கள் எங்களை முட்டாள், கோமாளி என்று என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டோம்,” என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் கூறிய பதில் என்னை வியப்பின் உச்சத்துக்கே கொண்டுபோனது. காரணம் அதில் நடிப்பில்லை.

வலுவான தலைவர் என்று கூறிக் கொண்டு ஏழைகளை நசுக்குவதும், அப்பாவி மக்களின் சேமிப்புகளைப் பிடுங்கி பணக்கார முதலைகளுக்கு கடனாகத் தருவதும், வங்கிகளை மக்களைச் சுரண்டும் கொள்ளைக் கூடங்களாக மாற்றுவதும்… போதும் போதும். நாடு மோசமான பாதையிலிருந்து, கொடூரமான பாதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

மாற்றம் வேண்டும். தேசம் நல்ல இதயம் கொண்ட, மக்களை நேசிக்கிற தலைவனுக்காகக் காத்திருக்கிறது. தமிழகம், இந்தியா இரண்டிலுமே அத்தகைய தலைமை மாற்றம் வேண்டும், உடனடியாக.

தமிழகத்தில் அந்த மாற்றம் தரும் தலைவர் ரஜினிகாந்த் என்பது தெளிவாகிவிட்டது. மத்தியில் அந்த மாற்றத்தைத் தரப் போகிறவர் ராகுல் காந்தியா… ? பார்க்கலாம்!

– வினோ
2 thoughts on “காங்கிரஸ் ‘தலைவர்’ ராகுல் காந்தி… நம்பலாமா?

  1. SRM

    WHY DO YOU WANT TO GO WITH THE PEOPLE WHO SWINDLED THE COUNTRY FOR MORE THAN 70 YEARS….????? WHAT CAPACITY HE HAS THAT TOO TO RULE THE COUNTRY…??? GIVE ME ONE EXAMPLE WHERE HE HAS PROVED HIS ABILITY…?????? DON’T DO THIS RUBBISH COMPARISION OF THALAIVAR WITH THE CRUDE POLITICIANS FOR EVER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *