BREAKING NEWS
Search

ரசிகர்களைப் பார்க்கும்போது ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஓடி ஒளிகிறேன்…- சூப்பர் ஸ்டார் பேச்சு!

ரசிகர்களைப் பார்க்கும்போது ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஓடி ஒளிகிறேன்…- நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!

சென்னை: என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒளிந்து ஒளிந்து வாழ்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.

பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதுதான், வழக்கம் போல விழாவின் உச்சமாக அமைந்தது.

ரஜினியின் முழுப் பேச்சு:

பத்மஸ்ரீ, உலகநாயகன், என் நண்பர், நான் முன்பே சொன்னதுபோல என் கலையுலக அண்ணா கமல்ஹாஸன் அவர்களே, அருமை நண்பர் சத்யராஜ் அவர்களே, தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்களே, இயக்குநர் பிரபு சாலமன் அவர்களே, அருமை சகோதரர் பிரபு அவர்களே… என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே…

இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி.

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான்.

இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என  டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.

நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு… என்று கூறினேன். ‘உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்’ என்றார்.

எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல… என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.

ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்… நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.

கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல… லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.

என் ரசிகர்கள், என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த சங்கடமாக உள்ளது.

காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.


என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் – படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.

நான் சினிமாவுக்கு வந்தபோது…

நான் சினிமாவுக்கு வந்தபோது, எங்க அப்பா சந்தோஷப்பட்டார். ஆனால், விக்ரம் பிரபு சினிமாவுக்கு வருகிறார் என்றதும் பிரபுவுக்கு கவலை வந்திருக்கும். பையன் அப்பா பெயரை காப்பாற்ற வேண்டுமே… நம் பெயரைக் காப்பாற்ற வேண்டுமே என்று கவலைப்பட்டிருப்பார். ஒரு சாதனையாளரின் மகனாக இருப்பது ரொம்ப பொறுப்பு மிகுந்தது.

விக்ரம் பிரபுவுக்கு பயம் இருக்கலாம். கவலை இருக்கக்கூடாது. அந்த பயத்தை போக்க பிரபு சாலமன் மாதிரி டைரக்டர்கள் இருக்கிறார்கள்.  இந்த கலையுலகமே கை கொடுக்கும்.

காலரைத் தூக்கிவிட்டா…

சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.

ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்…”நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்”னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்…,” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்
34 thoughts on “ரசிகர்களைப் பார்க்கும்போது ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஓடி ஒளிகிறேன்…- சூப்பர் ஸ்டார் பேச்சு!

 1. கணேசன் நா

  உங்களில் நாங்கள் இருக்கிறோம்.
  எங்களில் நீங்கள் இருக்கிறிர்கள்.
  ஆகவே, இப்படி பிரித்து சொல்லாதிர்கள் தலைவா.

 2. கணேசன் நா

  //**- நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!**//
  அல்ல வினோ சார்,

  கண் கலங்க வைத்த..

 3. kumaran

  தலைவர், ஒரு கடவுளும, குழந்தையும் கலந்த அதிசய பிறவி

 4. Ganesh

  அருமை நண்பர் சத்யராஜ் அவர்களே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 5. எப்பூடி...

  //அருமை நண்பர் சத்யராஜ் அவர்களே// உடலமைப்பில் உயரத்தையும் மனதளவில் மிகக் குறுகியவரும்; தலைவர் மீது தாங்கொணா வன்மத்தையும், வக்கிரத்தையும், வயித்தெரிச்சலையும் உடைய சத்தியராஜ் என்கின்ற விஷஜந்து இந்த வரவேற்ப்புக்கு கடுகளவும் தகுதியில்லாதவர்!!!

  வழமைபோல தலைவர் பேச்சு சரவெடி!!!

 6. குமரன்

  ////நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். ///

  உங்கள் உள்ளம் தான் உங்கள் மூலம்,
  அந்த நல்ல உள்ளத்தால்தான் இத்தனைப் பேர் உங்கள் பின்னால், ….. அனைவரும் உங்கள் பின்னால் இருப்பதால் …
  நீங்கள் ஒளிய வில்லை….
  நாகல்தான் உங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறோம்.

 7. chozan

  இதே தளத்தில் யாரோ கமல் ரஜினியை பார்க்கவில்லை என்று பலவிதமான அவதூறுகளை எழுதியதாக ஞாபகம். எழுதியவர்கள் விளக்கவும்/மன்னிப்பு கேட்கவும்.

  அப்பொழுதே நான் தெளிவாக எழுதினேன்
  _________
  ரஜினியைப் பார்க்க முடியவில்லையே என கமல் வருத்தப்பட்டதை பதிவு செய்த ஒரே தளம் என்வழிதான்.

  http://www.envazhi.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/
  -என்வழி

 8. M.MARIAPPAN

  தலைவர் பேச்சு மிக அருமையாக உள்ளது. தலைவர் மனம் குழைந்தை போன்றது , அதனால் தான் அவருக்கு யாரையும் எதிரியாக நினைக்க முடியவில்லை . தலைவரின் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் . வாழ்க தலைவர் , வெல்க கோச்சடையான்.

 9. மிஸ்டர் பாவலன்

  //இதே தளத்தில் யாரோ கமல் ரஜினியை பார்க்கவில்லை என்று பலவிதமான அவதூறுகளை எழுதியதாக ஞாபகம். எழுதியவர்கள் விளக்கவும்/மன்னிப்பு கேட்கவும். அப்பொழுதே நான் தெளிவாக எழுதினேன்/// (சோழன்)

  நண்பரே..கமலைப் பாராட்டி நான் எத்தனையோ பதிவுகள் எழுதி உள்ளேன்.
  தயவு செய்து அவற்றைப் படிக்கவும். நீங்கள் சொன்ன கருத்து விவாதத்தில்
  நான் எழுதியது உங்களுக்கு நினைவு இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

  “நினைவோ ஒரு பறவை… விரிக்கும் அதன் சிறகை!”

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 10. Deen_uk

  ///அருமை நண்பர் சத்யராஜ் அவர்களே//!
  உனது இந்த பச்சிளம் குழந்தை மனத்திற்கு தான் கடவுள் உன்னை தெய்வப்பிறவியாய் வைத்துள்ளான் தலைவா..கடவுள் உனக்கு நீண்ட ஆரோக்கியத்தையும்,உனது மனம்போல் வாழ்வையும் பல்லாண்டு பல்லாண்டு கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.உனது ரசிகர்களாகிய எங்களுக்கு நீ எதுவும் செய்ய வேண்டியதில்லை தலைவா..நீ நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருந்தாலே போதும்.
  (அந்த அருமை நண்பரின் நாக்கில் சனியன் தலைவிரித்து ஆடிய வீடியோவை பார்த்த எங்களுக்கே மனது வலித்தது,அருகிலிருந்து அனுபவித்த உனக்கு எப்படி இருந்து இருக்கும்? இதை மன்னிக்க ஒரு ஞானியால் மட்டுமே முடியும்.சந்தேகமே இல்லாமல் நீ ஒரு ஞானி என்பதை ஒவ்வொரு முறையும் எங்களுக்கு உணர்த்துகிறாய் தலைவா.. )

 11. Raja Boopathi

  நீங்கள் எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் தலைவா .நீங்கள் நல்லா இருந்தாலே போதும் .தலைவா நாங்கள் எப்போதுமே எல்லாரும் உங்கள் பின்னாடி தான்

  அன்புடன்
  ராஜா பூபதி
  பனவெளி

 12. தேவராஜன்

  தலைவா… எதையும் எதிர்ப்பார்த்து காட்டப்பட்டதல்ல இந்த அன்பு.. நீங்கள் நலமுடன் இருந்தால் போதும்!

 13. மிஸ்டர் பாவலன்

  ///அந்த அருமை நண்பரின் நாக்கில் சனியன் தலைவிரித்து ஆடிய வீடியோவை பார்த்த எங்களுக்கே மனது வலித்தது,///

  புரட்டு ராஜ் பின்னால் வருத்தம் தெரிவித்தாரா?

  அப்படி இருந்தால் தலைவர் பாணியில் நாமும் அவரை மன்னித்துவிடலாம்.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 14. anbudan ravi

  தலைவா உங்களை பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தைதவிர வேறு ஒன்றும் எங்கள் மனதில் இல்லை….எங்கள் ஆசான் பாரதி போல நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமாய் நீங்கள் மீண்டும் வலம்வர வேண்டும்….உங்கள் உடல் நலனையும் பேணி முடிந்த வரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலே உங்களை பார்த்த மன மகிழ்வு கிடைக்கும். வாழ்க பல்லாண்டு.

  அன்புடன் ரவி.

 15. shanmugam

  நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்”

  செம பன்ச் மா

 16. மு. செந்தில் குமார்

  தலைவரை பற்றிய செய்தியை நம் தளத்தில் படிக்கிற திருப்த்தி, ஒரு நெகிழ்ச்சி வேறு எந்த தளத்திலும் கிடைக்காது. கிடைக்கவில்லை. (ஆனந்த விகடனில் வருகிற கட்டுரைகள் இந்த தகுதியை பெற்றிருக்கும்)

  மேலும் பின்னூட்டலில் வாசக நண்பர்களின் தலைவர் சார்ந்த செய்தி பற்றிய உணர்வுப்பரிமாற்றம் என்னை வேறு உலகிற்கு கொண்டு செல்கிறது.

  ‘தலைவா.. நீங்கள் கடன்காரர் அல்ல.. இந்த அன்பு சாம்ராஜ்யத்தின் அரசர்!’

 17. naren

  ///”நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்” ///

  குட் டயலாக்… “சிவாஜி” சிவாஜியா பத்தி கரெக்ட் அ சொல்லி இருக்கார் …:)

 18. Gokul

  அந்த பொறம்போக்கு புச்சி தமிழனுமா வந்தான்

 19. மிஸ்டர் பாவலன்

  //மேலும் பின்னூட்டலில் வாசக நண்பர்களின் தலைவர் சார்ந்த செய்தி பற்றிய உணர்வுப்பரிமாற்றம் என்னை வேறு உலகிற்கு கொண்டு செல்கிறது.//

  பல பேர் எழுதினாலும் நண்பர் ‘என் கருத்து’ (AK) எழுதுவது
  தனிச் சிறப்பு வாய்ந்தது. ரஜினி மீது அவர் காட்டும் அன்பு
  அலாதியானது, உண்மையானது.

  சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பதால் “நேரில் பார்த்தால்
  AK அடித்து விடுவாரோ?” என எனக்குத் தோன்றியதுண்டு. அதனால்
  தான் வலை நண்பர்களை நான் விதிவிலக்கில்லாமல் (குமரன் உட்பட)
  சந்திக்காமல் anonymous ஆக எழுதி வருகிறேன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 20. THAMEEZ

  என்னய்யா புதுசா நான் தலைவரை பத்தி சொல்லிட போறேன் அதை நீங்களும் ஆமாம் அப்படின்னு சொல்லத்தான் போறீங்க.?!

  அதான்யா எங்கள் தலைவன்.

  அமிதாப் ஒலிம்பிக்ஸ்லே தீ பந்தம் ஏந்துவது படித்த மறு கணமே என் தலைவனும் இது மாதிரி ஏந்தணும் அப்படின்னு ஒரு ஏக்கம்!.

  அது தானா வரும்! என்ன வந்தாலும் நம்ம தலைவர் பெருந்தன்மையுடன் ஏத்துக்கமாட்டார்?!

 21. THAMEEZ

  மேடை விட்டு இறங்கும் பொது ஒரு பணிவு..
  ஏறும் பொது மட்டும் அந்த துணிவு இல்லை. இறங்கும் பொது எப்படி எங்கள் தலைவருக்கு வரும்.

  நல்ல புகைப்படம்.

 22. deen_uk

  @மிஸ்டர் பாவலன்
  ////புரட்டு ராஜ் பின்னால் வருத்தம் தெரிவித்தாரா?

  அப்படி இருந்தால் தலைவர் பாணியில் நாமும் அவரை மன்னித்துவிடலாம்.///

  மன்னிப்பு,வருத்தம் தெரிவித்தல்,இவை இரண்டு வார்த்தைகளும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது,ஜந்துக்களுக்கு அல்ல.!

  இந்த சனியனின் நாக்கு பலதடவை புரண்டு புரண்டு பேசும்!
  ஒரு நாள் புகழ்ந்து பேசும்,அடுத்த மேடையில் இகழ்ந்து பேசும்..பொறாமையின் உச்சகட்டத்தின் உருவங்கள் மூன்று..ஒன்று: சீசனுக்கு சீசன் மரம் நடும்!! பின்பு அதுவே அந்த மரங்களை வெட்டி நடுரோட்டில் போடும்!! லூசு..!!
  இரண்டு: மேடையில் தனக்கு கைதட்டல் கிடைக்காத ஒரே பொறாமையில் மேடையில் மைக்கில் வாந்தி எடுக்கும்..!!

  மூன்று:ஓவர் கான்பிடன்ட் திலகம்,யு ட்யுப் ல் அழுது அழுது கண்கள் வீங்கி ,அடுத்த நொடியில் இசைக்கருவியே இல்லாமல் வாயிலேயே இசை அமைக்கும்,(அந்த வீடியோவை தானே அப்லோட் செய்யும்!) ,இன்னும் தற்பெருமை,தற்புகழ்ச்சி செய்து,சீரியசாக பேசி ,மக்களை சிரிக்க வைக்கும்,தாடி வைத்த ஜோக்கர்! (டைம் கிடைக்கும் போது இவரோட ஆப்ரிக்கன் சிம்பொனி யு ட்யுப் ல பாருங்க!! சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடும்!!)
  தலைவர் பாணியில் இந்த காமெடி பீஸ்களை மன்னிக்க ,நாம் தலைவரும் அல்ல!
  தலைவரின் அனைத்து குணங்களையும் பின்பற்ற நான் ஞானியல்ல!
  ஞானிகளால் மட்டுமே தலைவர் போல வாழ முடியும்..

 23. அருண்முல்லை

  கடன் ஒருவன் கொடுத்தால் பலர் அவனிடம் வாங்கியிருப்பர், வாங்கிய
  பலர் ஒழுங்காக வட்டியோடு கடனைக் கட்டுவர், நீர் நல்லவரா, கெட்டவரா?கடனைத் திருப்பித்தராமல் ஓடி ஒளிகிறீரே, அடுத்த 2௦௦ கோடி முதலீட்டுப்
  படத்திற்கு இது விளம்பரமா?

 24. balaji

  ரஜினி இஸ் அல்வய்ஸ் கிரேட் உண்மை நேர்மை உழைப்பே நீ வாழ்க பல்லாண்டு

 25. மிஸ்டர் பாவலன்

  ///டைம் கிடைக்கும் போது இவரோட ஆப்ரிக்கன் சிம்பொனி யு ட்யுப் ல பாருங்க!! சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடும்!!///

  இவரது ஜேம்ஸ் பான்ட் பிட்டும் கலக்கலாக இருக்கும்! http://bit.ly/N49C4e

  -==மிஸ்டர் பாவலன் ===-

 26. Dhanasanjayan

  தலைவர் மேடை பேச்சை கேட்டு ரொம்பநாளாச்சு . ஒவோவ்ருவார்த்தையும் அமிர்தம் .தொடரட்டும் ……

 27. குமரன்

  அருண்முல்லை

  சூப்பர் ஸ்டார் ரஜினி நல்லவரா கெட்டவரா என்பது எல்லாருக்கும் ஏன், உலகுக்கே தெரியும். சும்மா படத்துக்கு இனிமேல்தான் விளம்பரம் வேண்டும் என்ற நிலையில் அவர் இல்லை. அவர் தாமாகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு கடன்காரர் என்றால் அது உங்களுக்கு இனிக்கிறதா? பொறுமை, நிதானம், அடக்கம், பெருந்தன்மை என்ற நல்ல பண்புகளை பலவீனம் என்று உங்களைப்போல நினைப்பவர்கள் இருப்பது தெரிந்துதான் நாகம் சீற வேண்டும் என்கிறோம்.

 28. s venkatesan, nigeria

  //தலைவர் பாணியில் இந்த காமெடி பீஸ்களை மன்னிக்க ,நாம் தலைவரும் அல்ல! தலைவரின் அனைத்து குணங்களையும் பின்பற்ற நான் ஞானியல்ல!// தாயை பழித்தவனை என் தாயே தடுத்தாலும் விடேன் என்ற மனநிலையில்தான் பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *