BREAKING NEWS
Search

பாபநாசம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ரஜினி சார்தான்! – ஜீத்து ஜோசப்

பாபநாசம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ரஜினி சார்தான்! – ஜீத்து ஜோசப்

rajinikanth

பாபநாசம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் முதலில் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை, என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படம், தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளது. ரஜினி லிங்கா படம் நடிக்கும் முன்பே த்ரிஷ்யம் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஜீத்து ஜோசப்பை அழைத்திருந்தார்.

இருவரும் மீண்டும் படம் பார்த்து, இந்தக் கதையை தமிழில் பண்ணலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் பிறகு அதில் கமல் நடித்தார்.

ஏன் இந்தப் படத்தை ரஜினி பண்ணவில்லை? ஜீத்து ஜோசப்பிடம் கேட்டபோது, “ரஜினி சாருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடித்துவிட்டது. மோகன்லால் மாதிரி இவருக்கும் பிரமாதமான பாடிலாங்குவேஜ். ரஜினி அந்தப் பாத்திரத்துக்கு வேறு பரிமாணம் கொடுத்திருப்பார். ஆனால் இரண்டு காட்சிகள் எங்கள் இருவருக்குமே நெருடலாக இருந்தன.

ஒன்று அந்தப் பாத்திரத்தை போலீஸ் ஸ்டேஷனில் அடிக்கும் காட்சி. முகத்தில் ஷூவால் மிதிப்பார் ஒரு சாதாரண காவலர். அடுத்து க்ளைமாக்ஸ். இந்த இரண்டையும் ரஜினி ரசிகர்கள் ஏற்பார்களா என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. ரஜினியும் அதை ஒப்புக் கொண்டார்.

எனவே வேறு ஒரு கதையுடன் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். நிச்சயம் அவரை புதிய கதையோடு சந்திப்பேன்,” என்றார்.

-என்வழி




9 thoughts on “பாபநாசம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ரஜினி சார்தான்! – ஜீத்து ஜோசப்

  1. Sankar

    பாபநாசம் படம் பார்த்தேன். முதலில் மனதில் தோன்றியது இது தான். தலைவர் நடிச்சிருந்தா நல்ல இருந்திருக்கும் இன்னும். பெண் பிள்ளைகளிடம் பாசம் காட்டும் தகப்பனாக தலைவர் தான் நல்ல செய்திருப்பார். “அண்ணாமலை” பட காட்சி ஒன்று போதும். பாபநாசம் படம் பார்க்கும் போதே தலைவர் இந்த காட்சியில் இப்படி பண்ணி இருப்பார் அப்படி பண்ணி இருப்பார் என்று தோணியது. என்னமோ தலைவர் கிட்ட இருந்து ஒரு மாஸ்டர் கிளாஸ் performance மிஸ் பண்ணிடோமோனு தோணுது. ஜீது ஜோசப் interview படிக்கும் போது சந்தோசம் ஒரு ரசிகனா நான் தலைவர் தான் இந்த படத்துக்கு பெஸ்ட் nu நினைச்சது சரி தான். அவர் interview பத்தி padikarathuku முன்னாடியே என் மனசுல படம் பார்க்கும் போதே தோணின விஷயம். தலைவா இந்த மாதிரி படங்களும் பண்ணுங்க.

    அபாரமான நடிப்பு கலைஞன் நீங்க. இந்த படத்தில் கமல் நடிப்பு அந்த அளவு இல்லன்னு தான் தோணுது. உங்களால மட்டும் தான் இந்த கேரக்டர் இன்னும் bettera பண்ணி இருக்க முடியும்.

  2. chozhan

    சங்கர், ரஜினி நல்ல படம் நடிக்கவேண்டும் என்ற ஆசை சரி ரஜினி மட்டும் தான் நடிக்கமுடியும் கமல் சரியில்லை என்று சொல்வது சரியில்லை. கமல் ஏற்கனவே மகாநதியில் நடித்து விட்டார் . என்னை கேட்டால் ரஜினி நடித்து இருந்தால் த்ரிஷியம் பேர் கேட்டு இருக்கும்.

  3. sankar

    சோழன்,

    நான் கமலை நடிக்க வில்லை என்று சொல்ல வில்லை. தலைவரால் இந்த கேரக்டர் bettera பண்ணி இருக்க முடியும்னு தான் சொன்னேன். இது என்னோட கருத்து. கமலோட பல படங்களில் நடிப்பை பார்த்து admire பண்ணி இருக்கேன். ஆனா இந்த படம் தலைவர் பண்ணி இருந்த நிச்சயம் வேற ஒரு பரிமாணம் கிடைத்து இருக்கும். தலைவர் பண்ற எல்லா படமும் நல்ல படம் தான். மக்களுக்கு பிடிக்காமல் போன படங்களையும் சேர்த்து தான்.அந்த படங்களையும் ரசிச்சு பார்த்தேன் பார்ப்பேன். Yenna அவர் தலைவர்.

    உங்கள் மனதை புண்படுத்தும் நோக்கம் இல்லை.
    நன்றி.

  4. Nanda

    //Chozhan// – Dont underestimate thalaivar. Don’t forgot his good old movies.. ராகவேந்திர, Aarilirunthu Arubathu வரை, நெற்றிக்கண். etc… Rajini will act any kind of role.. Thats why the director approced rajini first. Read the article man…

  5. குமரன்

    தலைவர் இந்த ரீமேக்கில் நடிக்காதது நல்லதுதான். எப்போதுமே ரீமேக்கில் நடிக்கும்போது முதலில் நடித்தவர் நடிப்போடு ஒப்பிடத் தோன்றும்.

    பாபநாசம் படத்தின் சில காட்சிகளைத் தொலைக் காட்சியில் பார்க்கும்போது, த்ரிஷ்யம் படத்தில் நடித்த மோகன்லாலின் நடிப்புதான் சிறப்பாக இருப்பதாக எனக்குப் படுகிறது.

    நிற்க, தேவையில்லாமல் நெல்லைத் தமிழை நுழையமுடியாத தன வாயில் நுழைத்து கமல் படத்தின் சிறப்பைக் கெடுத்துவிட்டார். பல வசனங்கள் சரியாகப் புரியவில்லை. கவுதமியின் பிளவுஸ் ஒரு கிராமத்துப் பெண்ணின் பிளவுஸ் போல இல்லை. த்ரிஷ்யம் படத்தில் இருந்த எளிமை, இயற்கை ஆகியவை பாபநாசம் படத்தில் இல்லை. மலையாளப் படத்தைப் பார்த்துக்கூட நம் கலைஞர்கள் இயற்கையாகப் படம் எடுக்கக் கற்றுக் கொள்ள வில்லையே?

    தலைவர் ஒரிஜினலாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற ஒரு Performance ஐ மீண்டும் தர அதற்கென்று ஒரு கதையை உருவாக்கி நடிப்பதுதான் ஒரு கலைஞனாக அவருக்குச் செய்யப் படும் சிறப்பு.

  6. srikanth1974

    பாபநாசம் கதையில் ஒருசில காட்சிகளை சற்று மாற்றியமைத்தால்
    எங்கள் தலைவருக்கும்,இந்தக் கதை பொருத்தமாகவே இருக்கும்.என்பது
    எனது தாழ்மையான கருத்து.

  7. srikanth1974

    அன்புள்ள ஆசிரியர் திரு.வினோ அவர்களுக்கு வணக்கம்’

    உங்கள் பார்வையில் பாபநாசம் திரைப்படத்தின் விமர்சனங்களை ஆவலோடு
    எதிர்பார்கிறேன்.

    அன்புடன்
    ஸ்ரீகாந்த்

  8. kalaivanan

    படம் ச்….சும்மா எங்கயோ போயிருக்கும்…..

  9. ganesh

    Thalivar Acted Excellantly In The Climax Of Kuselan .No Body has recoganised that. In Papanasam the script is the hero .had it been thalivar ,he would have added more natural way of prensentation.Even In Lingaaa Rajalingeswarans Performance is Superb. But the press and other factors have massacared the movie.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *