BREAKING NEWS
Search

அதான் எப்போதும் அவர் சூப்பர் ஸ்டார்! – இயக்குநர் ஷங்கர்

அதான் எப்போதும் அவர் சூப்பர் ஸ்டார்! – இயக்குநர் ஷங்கர்

vairamuthu-shankar-rajini-kochadaiyaan-audio-launch_139434237020

சென்னை: புதிய விஷயங்களை எப்போதும் ஆதரிப்பதாலும், மாற்றங்களுக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்வதாலும்தான் ரஜினி சார் எப்போதும் சூப்பர் ஸ்டாராகத் திகழ்கிறார் என்றார் இயக்குநர் ஷங்கர்.

கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “அனிமேஷன் விஷயங்களை ஏற்கெனவே எந்திரனில் கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறோம். ஆனால் அதில் செட்கள் இருக்கும், ரஜினி சார் இருப்பார்… ஏதாவது ஒரு விஷயத்தை மட்டும் அனிமேட் செய்திருப்போம்.

ஆனால் சவுந்தர்யா இந்தப் படத்தில் செய்திருப்பது மிகவும் கஷ்டமான வேலை. செட்கள் இருக்காது.. ஆனால் இருப்பது போல நினைத்துக் கொள்ள வேண்டும்.. குதிரை இருக்காது.. ஆனால் குதிரையில் பயணிப்பது போல நினைத்துக் கொண்டு நடிக்க வேண்டும்.

உண்மையிலேயே சவுந்தர்யாவைப் பாராட்ட வேண்டும். அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.

புதிய விஷயங்களை எப்போதும் கேட்டுக் கொண்டு, அதை ஆதரிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அவரிடம் போய், சார் பாடல்களே இல்லாமல், ஒரு இரண்டு மணி நேரம் லைவ் ஆக்ஷன் படம் ஒண்ணு பண்ணலாமா? என்று கேட்டால், ‘சூப்பர்.. நிச்சயம் பண்ணலாம்… சொல்லுங்க’ என்று தயாராக இருப்பார்.

மக்கள் அவரை ‘நீங்க வந்தா மட்டும் போதும் தலைவா’ன்னு சொல்றாங்க. அவரோ, ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டுக் கொண்டு, அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார்.

அதனால்தான் அவர் இப்போதும் சூப்பர் ஸ்டாராகவே தொடர்கிறார். ரஜினி சாரைப் போலவே, புதிய விஷயங்களை ஆதரிப்பவர் ஏ ஆர் ரஹ்மான். வழக்கமான விஷயங்களிலிருந்து மாறுபட்ட சிந்தனையைச் சொன்னால் ஆர்வமாகிவிடுவார். இந்தப் படத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது.

அனிமேஷனுக்கென்று ஒரு பெரிய சந்தையையே இந்தப் படம் திறந்துவிட்டிருக்கிறது. இந்திய சினிமாவில் இன்னொரு பரிமாணம் இந்தப் படம்.

ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கச் செல்லும்போது, ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். நாம் பார்க்கப் போவது  புதிய தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள ஒரு படம், இந்தியாவின் முதல் முயற்சி என்பதுதான் அது. இந்த மனநிலையோடு படம் பார்க்கச் செல்ல வேண்டும்,” என்றார்.

என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “அதான் எப்போதும் அவர் சூப்பர் ஸ்டார்! – இயக்குநர் ஷங்கர்

  1. Venkat

    அவரிடம் போய், சார் பாடல்களே இல்லாமல், ஒரு இரண்டு மணி நேரம் லைவ் ஆக்ஷன் படம் ஒண்ணு பண்ணலாமா? என்று கேட்டால், ‘சூப்பர்.. நிச்சயம் பண்ணலாம்… சொல்லுங்க’ என்று தயாராக இருப்பார்…

    சூப்ப்ர்…அப்போ ஷங்கர் -தலைவர் ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு…சீக்கிரம் ஆரம்பிங்க தலைவா…

  2. குமரன்

    எப்போதும் அவர் சூப்பர் ஸ்டார்!

    இதெல்லாம் படிக்கும்போதுதான் கோச்சடையான் தாமதத்துக்கான காரணம் புரிகிறது. விஞ்ஞான ரீதியான முன்னேற்றத்துக்கும், பிரம்மாண்டத்துக்கும் ஒரு விலை கொடுத்துத்தானே ஆக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *