BREAKING NEWS
Search

ரஜினி சார் ரசிகர்களை இருப்பதிலேயே சிறப்பான படைப்பால்தான் திருப்திப்படுத்த முடியும்! – கோச்சடையான் தயாரிப்பாளர்

கேன்ஸ் விழாவுக்கு ஏன் போகவில்லை கோச்சடையானும் ரஜினியும்? – தயாரிப்பாளர் விளக்கம்

kochadai-new-still-feat

மும்பை: கோச்சடையான் ட்ரைலரை இன்னும் சிறப்பாக உருவாக்கிய பிறகே சர்வதேச விழா ஒன்றில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அதனால்தான் கேன்ஸ் விழா  திட்டம் கைவிடப்பட்டது, என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியின் ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றைத் தராமல், இருப்பதிலேயே சிறப்பான படைப்பைக் கொடுத்தால்தான் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் படத்தின் முதல் முன்னோட்டக் காட்சியை சர்வதேச அளவில் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில், உலகின் முக்கிய படைப்பாளிகள் மத்தியில் திரையிட வேண்டும் என படக்குழுவினர் விரும்பினர். ரஜினியும் இதற்கு முதலில் ஒப்புக் கொண்டார்.

ட்ரைலரைப் பார்த்துப் பாராட்டிய ரஜினி, ‘இந்த ட்ரைலர் நன்றாகத்தான் உள்ளது. நிச்சயம் பெரிய மைல்கல்லாக அமையும். ஆனால் இந்தப் படம் மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம். சர்வதேச விழாவில் திரையிடுகிறீர்கள். எனவே இன்னும் சிறப்பாக தயார் செய்யுங்கள்,” என்று கூறினாராம்.

ஆனால் அப்படி தயார் செய்ய காலதாமதமாகிவிட்டதால், தனது கேன்ஸ் பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டாராம்.

ஆனால் வெளியில் பிரான்ஸ் செல்லும் அளவுக்கு ரஜினியின் உடல்நிலை இடம் தரவில்லை என்பதுபோல சிலர் கிளப்பிவிட்டனர்.

kochadaiyaan-rajini-envazhi-splt2A

இதுகுறித்துப் பேசிய தயாரிப்பாளர் முரளி மனோகர், “இது முற்றிலும் மடத்தனமான கற்பனை. ரஜினி ஒரு ஆண்டுக்கு முன்பே உங்களையும் என்னையும் போல மிக நல்ல ஆரோக்கியமடைந்துவிட்டார். ரஜினியின் புகழை சிதைப்பதாக நினைத்து தம்மைத் தாமே அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள் இதுபோன்ற செய்தியைப் பரப்புபவர்கள்.

உண்மையில் என்ன நடந்தது தெரியுமா… கோச்சடையான் ட்ரைலர் பார்த்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், இன்னும் கூட சிறப்பாக இந்த ட்ரைலரை உருவாக்கலாமே என யோசனைகள் சொன்னார். எனவே அவசர கோலத்தில் எதுவும் செய்யாமல், கொஞ்சம் பொறுமையாக இந்த ட்ரைலரை உருவாக்குமாறு ரஜினி கூறியதால், நாங்கள் கேன்ஸ் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ட்ரைலரை சிறப்பாக உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்.

கேன்ஸ் ரத்தால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வேறு சர்வதேச நிகழ்வுகள் நிறையவே உள்ளன. அதில் ட்ரைலரை வெளியிடுவோம். இன்னும் 10 நாட்களில் பிரமாதமான ட்ரைலர் தயாராகிவிடும். இந்தப் படத்துக்கு ஏராளமான உழைப்பும் அபரிமிதமான ஆற்றலும் தேவைப்படுகிறது. ரஜினி சாரின் ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றைத் தந்துவிட முடியாது. இருப்பதிலேயே சிறப்பான படைப்பால்தான் அவர்களைத் திருப்திப்படுத்த முடியும்,” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்
9 thoughts on “ரஜினி சார் ரசிகர்களை இருப்பதிலேயே சிறப்பான படைப்பால்தான் திருப்திப்படுத்த முடியும்! – கோச்சடையான் தயாரிப்பாளர்

 1. anbudan ravi

  தலைவர் ஸ்டைலில் சொன்னால் “அரை வேக்காட்டு படமும், நிரம்பாத தண்ணீர் குடமும் ஒழுங்கா வீடு போய் சேர்ந்ததா சரித்திரம் இல்லை”….எப்பூடி?

  அன்புடன் ரவி.

 2. மு. செந்தில் குமார்

  நன்றாக திருப்திகரமாக உருவான பிறகு வெளியிட்டால் போதும்.

  ஏனென்றால் பிற ரசிகர்களுக்கும் தலைவரின் ரசிகர்களுக்கும் உள்ள மிக்கியமான வேறுபாடு தலைவரின் வெற்றியை ஒவ்வொரு ரசிகனும் தன்னுடைய வெற்றியாக – தான் வெற்றிபெற்றதை போல ஆனந்தத்தில் குதூகளிப்பான்.

 3. jey_uk

  always giving some reason for postponding…been fedup hearing some reason alwys for postpondment..

 4. மிஸ்டர் பாவலன்

  ரஜினியின் நடிப்பில் பல பரிமாணங்கள் இருந்தாலும்
  அவர் நடித்துள்ள படங்களில் மகேந்திரன் படங்கள்
  தவிர்த்து பிறர் படங்கள் கமேர்ஷியலாகவே உள்ளன.
  இன்றைய மார்கெட் நிலையில் மகேந்திரன் படங்கள்
  எந்த அளவிற்கு suit ஆகும் என தெரியாத நிலையில்
  ரஜினி தன் சொந்தத் தயாரிப்பில் உலக நாயகன்
  இயக்கத்தில் இருவரும் சேர்ந்து நடித்தால் ஒரு சோதனை
  முயற்சியாக (experimental film) அமையும் என நான்
  நம்புகிறேன். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 5. Raghul

  டிரைலர் – கே இப்படியா? எனக்கி டென்ஷன் ஆஹுது… மேடம். ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *