BREAKING NEWS
Search

ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது ஏன்? பயமா? – கேள்வி – பதில்

ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது ஏன்? பயமா? – கேள்வி – பதில் 31

jaya-2years

கேள்வி: ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து ஏதாவது எழுதியிருப்பீர்கள் என்று பார்த்தேன். ஆனால் அமைதியாக தலைவர் செய்திகளுக்கு தாவிவிட்டது ஏன்? வழக்கு பயமா? ஜெ அவ்வளவு நல்லாட்சியா தந்துவிட்டார்?

– தேவராஜன், எஸ் வெங்கடேசன், ரா சிவகுமார், நாட்ரம்பள்ளி செந்தில்

பதில்: நினைத்தேன், இப்படி ஒரு கேள்வி எழும் என்று. நீங்கள் மட்டுமல்ல, நிறைய நண்பர்கள் கேட்டுவிட்டார்கள்.

எழுத வேண்டாம் என்ற நினைப்பு ஒன்றுமில்லை. நேற்று முழுக்க ஒவ்வொரு நாளிதழும் நான்கு பக்கங்களுக்கு அம்மா ஆட்சியின் சாதனைகள் என்று விளம்பரங்களாய் வெளியிட்டுத் தள்ளியதைப் பார்த்தபோது, ஒரு சலிப்பே வந்துவிட்டது.

பொய்யெனத் தெரிந்தும் விளம்பரங்கள் தருகிறார்கள்… அது பொய்தான் எனத் தெரிந்தே ஊடகங்கள் அலங்காரமாய் பரப்புகின்றன. மக்களும் மிகுந்த கவனத்துடன் அந்த விளம்பரங்களை செய்திகளைப் படிக்கும் பாவனையுடன் படிப்பதை நேற்று முழுக்க பார்க்க முடிந்தது.

ஒரு பக்கம் ஒரேயடியாக ஜெயலலிதாவின் பாதார விந்தமே சரணம் என ஒரு கோஷ்டியும், இன்னொரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு ஜெயலலிதா திட்டித் தீர்க்கும் கோஷ்டியுமாய் சமூக வலைத் தளங்கள்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே ஒருவித சலிப்பும் மன முறுகலும் ஏற்பட்டு எழுதத் தோன்றாமல் போய்விட்டதுதான் உண்மை.

இன்னொன்று, ஜெயலலிதா ஆட்சி சாதனையா வேதனையா என்பதை மீடியா சொல்லித்தானா மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? அந்த அளவுக்குக் கூட அவர்களால் சுயமாக யோசிக்க முடியாமல் போய்விட்டதா?

பொழுதுபோக்கு போதை, டாஸ்மாக் போதை, எப்போதும் எதாவது ஒரு அக்கப்போருக்கு அலைபாயும் போதை… என போதையில் மிதக்கும் இந்த மக்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் ஏற்கப் போவதில்லை. பார்த்து, பட்டு, திருந்தினால் திருந்தட்டும்… இல்லை மீண்டும் இதேமாதிரி ஒரு ஆட்சியை அனுபவிக்கட்டும் என்ற மனநிலைதான் மக்களுக்காக எழுதிய பலர் மனதிலும் இன்றைக்கு உள்ளது.

மற்றபடி, அவரை விமர்சித்து எழுதினால் வழக்கு வரும் என்று ஒரு போதும் பயந்ததில்லை. காரணம் கருணாநிதி, ஜெயலலிதா இருவர் ஆட்சியிலுமே இதுபோன்ற வழக்குகளைச் சந்தித்து வெளிவந்த அனுபவம் உண்டு.

ஜெயலலிதாவின் ஆட்சி சரியில்லை என்றால், அது அவர் தவறல்ல. அவரைப் பற்றி நன்கு தெரிந்தும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களின் தவறு அது. தங்களுக்காக உண்மையாய் உழைக்கும் எந்த அரசியல்வாதியையும் அவர்கள் அங்கீகரித்ததே இல்லை.

கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளாக மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்துவரும் வைகோ போன்றவர்களை இன்னும் கூட தோற்கடித்துதானே இவர்களுக்குப் பழக்கம்… அதை விவாதப் பொருளாக்கி ரசிக்கிற குரூர மனம் படைத்தவர்களுக்கு ஏற்ற ஆட்சிதான் இது.

நல்லவர்கள் ஏன் அரசியலுக்கு வர மறுக்கிறார்கள்… அல்லது விலகி ஓடுகிறார்கள்? இந்த மக்களின் மனநிலை புரிந்துதான். அரசியலில் இவர்களுக்கு எப்போதும் ஒரு அக்கப்போர் தேவை. அது சுவாரஸ்யமாக புனையப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த பாம்பு – கீரி சண்டையைத் தாண்டிய ஆரோக்கிய அரசியல் சூழல் இனி உருவாகுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டதால்தான், ரஜினி போன்ற நல்ல மனிதர்கள், அரசியலை சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய நிலை!

கேள்விக்கு வருகிறேன்… ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி பற்றிய தனி கட்டுரை இன்று வெளியாகிறது.

அதற்கு முன் சுருக்கமாக…

ஜெயலலிதாவின் இந்த இரண்டாண்டு ஆட்சி மட்டுமல்ல.. அடுத்த மூன்றாண்டு கால ஆட்சியிலும் பெரிதாக எந்த மாறுதலும் வந்துவிடாது. 110 விதியின் கீழ் அறிவிப்பு மழை மட்டும் ஓயாமல் பொழியும். இது வெறும் அறிக்கை ஆட்சி…

வானத்தைப் போல என்ற படத்தில் தன் மட்டமான ஹோட்டலுக்கு வந்து ‘மகராசன் நல்லாயிருக்கணும்’ என தன்னை வாழ்த்தும் பிச்சைக்காரனுக்கு, இட்லி, கெட்டிச் சட்னி, பூரி, கிழங்கு எல்லாம் கட்டித் தரச் சொல்வார் சொல்வார் செந்தில். ஆனால் தரமாட்டார். ‘நீ நல்லதா நாலு வார்த்தை சொன்னே. நானும் நல்லதா நாலு வார்த்தை சொன்னேன். சரியா போச்சு.. போயிட்டு வா..’, என்பார்.

அந்த பிச்சைக்காரன்தான் தமிழ்நாட்டு மக்கள்!

-வினோ
என்வழி ஸ்பெஷல்
32 thoughts on “ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது ஏன்? பயமா? – கேள்வி – பதில்

 1. தேவராஜன்

  தலைவரே… கலக்கிட்டீங்க. நான் மொக்கையா ஒரு கேள்வி கேட்டதுக்கு இப்படி ஒரு பதிலா… 100 சதவீதம் கிரௌண்ட் ரியாலிட்டி!

 2. Seelan

  சரியான நெத்தியடி பதில்.இருந்தாலும் அவர் சிலவற்றை செய்திருக்கிறார்

 3. Kannan

  கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளாக மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்துவரும் வைகோ போன்றவர்களை இன்னும் கூட தோற்கடித்துதானே இவர்களுக்குப் பழக்கம்…
  .
  ஆணித்தரமான உண்மை…

  .
  கண்ணன்

 4. ularal

  அவ்வளவு மோசம் இல்லை, மின்சாரம் தவிர

 5. MATHAN

  தி மு க காரரிடம் கேள்வி கேட்டால் பதில் இப்படிதானே வரும். என்வழி கருணாநிதி என்கிற முகமூடி அணிந்த கருணாநிதி வழி.

 6. ச.அலாவுதீன்

  மிஸ்டர் வினோ…..அம்மாவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியை விமர்சிக்கிறேன் என்று உங்கள் வலைத்தளத்தில் காலம் காலமாக உலவும் சில அம்மாவின் பக்தர்கள் இருக்கிறார்கள்…(நாஞ்சில் , பாவலர்… போல ).அவர்களின் கோப தாபங்களுக்கு ஆளாகிடாதிர்கள்……ஆனால் நான் அம்மாவின் அபிமானி அல்ல…. “தல சும்மா புட்டு புட்டு வைங்க” ஒரு விரிவான அலசலான கட்டுரை எதிர் பார்க்கிறேன்….

 7. Krishna

  “கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளாக மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்துவரும் வைகோ போன்றவர்களை இன்னும் கூட தோற்கடித்துதானே இவர்களுக்குப் பழக்கம்”
  விருதுநகர் தொகுதி தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் வரையிலும் வைகோ தான் சுமார் 5000 வாக்குகள் முன்னணியில் இருந்தார். ஆனால் கடைசி அரைமணி நேரத்தில் காங்கிரசின் மாணிக்க தாகூர் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட சிவகங்கையில் சிதம்பரம் பெற்ற “வெற்றி” போல தான். மொத்தத்தில் வைகோவை தோற்கடித்தது தமிழக மக்கள் அல்ல, திமுக-காங்கிரஸ் அணியுடன் மறைமுகமாக கூட்டணி வைத்த தேர்தல் கமிஷன் தான்.

 8. நாஞ்சில்மகன்

  அம்மாவின் சாதனைகள்.

  1 . 20 கிலோ இலவச அரிசி
  2 . அந்தோதய அண்ணா யோஜன அட்டைதாரர்களுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி
  3 . அரசாங்க பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை 6 மாதங்களாக அதிகரிப்பு
  4 . தாலிக்கு 4 கிராம் இலவச தங்கம்

  5 . படித்த பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ 25000

  6 . ஏழை பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ 50000

  7 . மீன்பிடி இல்லாத மாதங்களில் மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ 2000 மாக அதிகரிப்பு

  8 . மூத்த குடிமக்கள் , மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கான மாத உதவித்தொகை ரூ 1000 மாக அதிகரிப்பு

  9 . 12 லட்சம் மாணவர்களுக்கு 912 கோடி செலவில் இலவச மடிகணினிகள்

  10 . ரூ 1250 கோடி செலவில் 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மின் விசிறி , கிரைண்டர் மற்றும் மிக்சீ

  11. ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பை பள்ளிகளின் மூலமாக பதிவு செய்தல்

  12. 60000 பசுமை வீடுகளை 1080 கோடி செலவில் கட்டுதல்

  13. மருத்துவ காப்பீடிற்க்காக ரூ 750 கோடி

  14. இலங்கை தமிழ் அகதிகளுக்கான மாதாந்திர உதவி தொகை ரூ 1000 மாக அதிகரிப்பு

  15. 100 உயர் நிலைபள்ளிகளை மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல்

  16. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான தாங்கும் விடுதிகளை ரூ 83 . 40 கோடி செலவில் மேம்படுத்துதல்

  17. பத்திரிக்கயாளர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ 6000 மாக அதிகரிப்பு

  18. ஆதி திராவிடர்களுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ 5007 கோடி ஒதுக்கீடு

  பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 4 சீருடைகள்

  உலகிலேயே தங்கத்தை இலவசமாக வழங்கியது இந்த ஆட்சிதான்
  இந்தியாவிலேயே விலை குறைவாக உணவு கிடைக்கும் இடம் அம்மா உணவகம்தான்.

  ஆயிரம் ரஜினியும் வைகோவும் வந்தாலும் அம்மாவின் இந்த திட்டங்களை தர முடியாது. அவரது ஆட்சி வரப்ோவதில்லை. அப்படி வந்தாலும் அதன் பயன் ஐஸ்வா்யாவுக்கும் சௌந்தர்யாவுக்கும் தனுஸ்க்கும்தான் ோய் சேரும். அதைத்தான் கருணாநிதி செய்தார் . அதனால்தான் இன்று வீட்டில் ஒய்வு எடுக்கிறார். அம்மாவுக்கு என்று யாரும் இல்லை.கடைசியாக 2011 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மூன்றாவது முறையாக முதல்வராய் இருக்கிறார். எம்.ஜி.ஆர் கூட இந்த மாபெரும் வெற்றியை பெற்றது இல்லை. ஒரே ஒரு முறை வைகோவை MLA ஆக ொல்லுங்கள்.

 9. நாஞ்சில்மகன்

  நீங்க நல்லா இருக்கோணும்
  நாடு முன்னேற
  இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
  வாழ்வு முன்னேற

  உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
  உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்

  மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
  என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்

  நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
  நீதிக்கு இது ஒரு போராட்டம்,
  இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

  வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
  இல்லாமல் மாறும் பொருள் தேடி,
  அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
  இந்நாட்டில் மலரும் சமநீதி.
  நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
  இருந்திடும் என்னும் கதை மாறும்,

  ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
  இயற்கை தந்த பரிசாகும்,
  இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
  நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
  நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
  அல்லதை நினைப்பது அழிவாற்றல்

  நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
  நீதிக்கு இது ஒரு போராட்டம்,
  இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
  அம்மா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
  அம்மா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

  பாடுபட்டு சேர்த்த பொருளை
  கொடுக்கும் போது இன்பம்
  வாடும் ஏழை மலர்ந்த முகத்தை
  பார்க்கும் போது இன்பம்
  பேராசையால் வந்த துன்பம்
  சுயநலத்தின் பிள்ளை
  சுயநலமே இருக்கும் நெஞ்சில்
  அமைதி என்றும் இல்லை

  காற்றும் நீரும் வானும் நெருப்பும்
  பொதுவில் இருக்குது
  மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
  பிரிந்து கிடக்குது
  பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
  மனிதன் இதயமே
  உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்
  அமைதி நிலவுமே

  நதியை போல நாமும்
  நடந்து பயன் தர வேண்டும்
  கடலை போல விரிந்த
  இதயம் இருந்திட வேண்டும்
  வானம் போல பிறருக்காக
  அழுதிட வேண்டும்
  வாழும் வாழ்க்கை உலகில்
  என்றும் விளங்கிட வேண்டும்

  ———————————————————————————————————–
  ———————————————————————————————————-

  நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
  நீதிக்கு இது ஒரு போராட்டம்,
  இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

  வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
  இல்லாமல் மாறும் பொருள் தேடி,
  அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
  இந்நாட்டில் மலரும் சமநீதி.
  நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
  இருந்திடும் என்னும் கதை மாறும்,

  ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
  இயற்கை தந்த பரிசாகும்,
  இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
  நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
  நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
  அல்லதை நினைப்பது அழிவாற்றல்

  நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
  நீதிக்கு இது ஒரு போராட்டம்,
  இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

 10. Nagenthirakumar

  Mr.Nanchil Megan, ilavasamaga nalu porul kodutha athu sathanaiya? Siriputhan varugirathu. Rajini vanthal avaradu gudumbam than nalla irugum nu solranga. Amma atcchila entha kudumbam nalla irugunu ungalugu theriyala?…….

 11. மிஸ்டர் பாவலன்

  நண்பர் அலாவுதீன் அவர்களே:

  //மிஸ்டர் வினோ…..அம்மாவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியை விமர்சிக்கிறேன் என்று உங்கள் வலைத்தளத்தில் காலம் காலமாக உலவும் சில அம்மாவின் பக்தர்கள் இருக்கிறார்கள்…(நாஞ்சில் , பாவலர்… போல ).//

  நாஞ்சில் பாட்டு நல்லா இருக்கு! ஆனால் அதில் அம்மா உணவகம்
  தமிழகத்தில் பத்து மாநகராட்சியில் விரைவில் இயங்க இருப்பது
  பற்றியும், ஸ்பெஷல் ஐட்டங்கள் (பொங்கல், சப்பாத்தி போன்றவை)
  குறைந்த விலையில் வழங்க இருப்பது பற்றியும் எழுதி இருக்கலாம்.
  இரண்டு ஆண்டு சாதனைகள் என நாஞ்சில் வெளியிட்ட லிஸ்ட்டில் பல
  விட்டுப் போயிருப்பதால் அதை அவர் சீர்தூக்கி பார்ப்பார் என நம்புகிறேன்.

  “பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும் போது இன்பம்
  வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும் போது இன்பம்”
  — இந்த வரிகள் அம்மா உணவகத்தில் நினைவு படுத்துகின்றன.

  “பேராசையால் வந்த துன்பம், சுயநலத்தின் பிள்ளை
  சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை”
  — இந்த வரிகள் எந்தக் கட்சிகளைக் குறிக்கிறது என நண்பர்கள் அறிவார்கள்.

  கரண்ட் கட் பெரிய குறையாக உள்ளது. அதை அம்மா விரைவில் சரி
  செய்வார் என நம்புவோம். நன்றி. வணக்கம்.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 12. Jegan

  Where is electricity?
  What is the price of milk and stationaries?
  What is the rate of bus ticket, electricity?
  What is the fees for education?
  Why wasting so much of crores to erect a statue in madurai in her own old cinema getup?

 13. மிஸ்டர் பாவலன்

  //Why wasting so much of crores to erect a statue in madurai in her own old cinema getup?//
  (ஜெகன்)

  மதுரையில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப் பட இருக்கிறது,
  குமரியில் இருக்கும் வள்ளுவர் சிலையை விட உயரமாக
  நிறுவப் பட இருக்கிறது என செய்திகள் படித்தேன். ஆனால்
  எந்த ‘get-up’-ல் சிலை இருக்கும் என எதுவும் தகவல்
  தினமலரில் நான் படிக்கவில்லை. ‘Cinema get-up’ என்பது
  நம்பும்படி இல்லை.

  கலைஞர் திருவள்ளுவர் சிலை அமைத்ததால் அதை விஞ்சும்
  வகையில் தமிழ்த் தாய் சிலை அமைக்க J.J. செயல்படுகிறார் போல்
  தெரிகிறது. ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ அனைவரும் பாடும் நிலையில்
  தமிழ்த் தாய் சிலை நமது மொழி, பண்பாடு இவற்றின் சிறப்பை
  உலக மக்களுக்கு பறை சாற்றுவது போல் அமையும். மதுரை
  நல்ல இடம். இந்த சிலை வைக்கும் முடிவு நல்ல முடிவு தான்.

  நாஞ்சில் பாட்டு எழுதுற மாதிரி நானும் ஒரு பாட்டு கீழே
  தருகிறேன். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த பாட்டு
  ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ போல் உள்ளது. நாஞ்சில் போன்ற
  நண்பர்கள் படித்தால் வேறொரு சிறப்புப் பொருளும் தெரியும்.
  நண்பர்களுக்கு நன்றி, வணக்கம்!!

  —————- சிறப்பு பாடல் ————————-

  தாயில்லாமல் நானில்லை!
  தானே எவரும் பிறந்ததில்லை!
  தமிழ்க்கொரு தாய் இருக்கின்றாள்!
  என்றும் நம்மை காக்கின்றாள்! (தாயில்லாமல்)

  ஜீவநதியாய் வருவாள்!
  தமிழ்த் தாகம் தீர்த்து மகிழ்வாள் !(ஜீவநதியாய்)
  தவறினைப் பொறுப்பாள்!
  தர்மத்தை வளர்ப்பாள்!
  தரணியிலே வளம் சேர்த்திடுவாள்! (தவறினை)

  தாயில்லாமல் நானில்லை!

  சங்க மதுரையில் நடப்பாள் !
  பொங்கும் தமிழை வளர்ப்பாள்! (தூய)
  சந்தமில்லாமல் பாட்டிசைத்தாலும் (2)
  தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்!

  தாயில்லாமல் நானில்லை!

  மேக வீதியில் நடப்பாள்!
  உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் !(மேக)
  மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்!
  மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்! (மலைமுடி)

  தாயில்லாமல் நானில்லை!

  ஆதி அந்தமும் அவள்தான்!
  நம்மை ஆளும் நீதியும் அவள்தான் ! (ஆதி)

  அகந்தையை அழிப்பாள்!
  ஆற்றலைக் கொடுப்பாள்!
  அவள்தான் அன்னை மகா சக்தி!
  அம்மா வணங்கும் மகா சக்தி!

  அந்த தாயில்லாமல் நானில்லை!
  தானே எவரும் பிறந்ததில்லை!
  தமிழ்க்கொரு தாய் இருக்கின்றாள்!
  என்றும் தமிழைக் காக்கின்றாள்!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 14. குமரன்

  ஜெயலலிதா தாம் முற்றும் துறந்த துறவி, அரசியல் துறவி, சுயநலமே இல்லாதவர், பொதுநலத்துக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளுகிறார்.

  கருணாநிதி எப்படித் தன்னைத் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் வாழ்வது போல நடித்துத் தனக்காகவும் தனது குடும்பத்துக்காகவுமே பல்லாயிரக் கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்துப் பத்துக்கும் மேற்பட்ட தனது தலைமுறைக்குச் சேர்த்து வைத்திருக்கிறாரோ, அதைப் போலவே ….

  ஜெயலலிதாவும் இப்போது துறவு/ பொதுநல நாடகம் நடத்தி, எப்படியாவது மத்திய அரசில் பதவியையும் முக்கியத்துவத்தையும் பிடித்துப் பல்லாயிரம் கோடிகளைக் கொள்ளையடித்துத் தனது/ சசிகலா குடும்பத்துக்கும் சேர்த்துவைக்க தனது வியூகத்தை வகுத்து விட்டார்.

  ஜெயாவின் புகழ் பாடும் நாஞ்சில் சம்பத்துக்குக் கிடைத்த இன்னோவா காரும், பணவரவுகளும், இங்கே ஜெயா புகழ் பாடும் நாஞ்சில் மகனுக்கும் கிடைத்தால் ஆஹா, நம்மவருக்கு இதுவாவது கிடைத்ததே என்று மகிழலாம்! ஒருவேளை ஜெயா இதைப் படித்துத் தமது அமைச்சரவையில் இன்னுமொரு அடிமையாக அமர்த்தி “அழகு பார்க்கலாம்”, அப்படிச் செய்தால் கூட நம்மவருக்கு இது கிடைத்ததே என மகிழலாம்.

  நாஞ்சில் மகன் கொடுத்திருக்கும் சாதனைப் பட்டியலில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இலவசங்கள் எவையும் அனைத்து மக்களையும் அடைவதும் இல்லை, அதனால் எந்த நன்மையையும் விளையவும் இல்லை. இலவச ஆடும் மாடும் கிராமத்து பொருளாதாரத்தை உயர்த்தியதாகத் தெரிய வில்லை, அப்படியானால் அவை வெறும் விளம்பரத்துக்காக என்பது உறுதியாகிறது.

  இரண்டாண்டு முடிந்த அன்று முழுப்பக்க முதல்பக்க விளம்பரத்தைக் கண்டதும் எனது மனைவியார் சொன்னது – “அறிக்கை அரசியின் ஆட்சிக்கு விளம்பரம் வேறா?” –

  இதனால் அறியப்படுவது யாதெனில், இவரது இரண்டாண்டு ஆட்சியின் அவலங்களை விமரிசிக்கத் தேவையே இல்லை. ஆண் பெண் அனைவரும் இந்த அவலத்தின் நிலையை அறிவர். வினோ மட்டும் அல்ல, அனைவருமே இன்று ஜெயாவை அறிக்கை அரசி என்றுதான் சொல்கிறார்கள். ஆணவ அரசி, அகந்தை அரசி, அராஜக அரசி, அழகான அரக்கி என்றெல்லாம் சொல்லி வந்த மக்களை அறிக்கை அரசி என்று சொல்ல வைத்தது இந்த ற்றண்டாண்டு ஆட்சியே!

  அகம்பாவம், அராஜகம், அடக்குமுறை இவற்றாலும் நாட்டை ஆள முடியும் என்பதை மக்கள் இவரைப் பார்த்து உணர்ந்தும் கூட, கருணாநிதி லட்சக் கணக்கில் ஈழத்துத் தமிழர்களைக் கொன்றாலும் பரவாயில்லை, எனது குடும்பம் மத்திய அமைச்சரவையில் பல பதவிகள் பெற்று பல்லாயிரம் கோடிகளைக் கொள்ளை அடித்தால் போதும் என்று இத்தாலி நாட்டின் சதிகாரி, இனப்படுகொலையில் ராஜபக்சேவின் கூட்டாளி சோனியாவை சொக்கத்தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை என்றெல்லாம் பாராட்டிக் காலடியில் வீழ்ந்து கிடந்த அவலத்தால் ஆட்சிக்கு
  வந்தவரே ஜெயலலிதா.

  இந்த இரண்டு பேரையும் தோற்கடித்து வைகோ போன்ற நேர்மையான, உண்மையான, தேசப் பற்றாளரைப் பதவியில் அமர்த்தும் அளவுக்குத் தமிழக மக்கள் பக்குவம் பெறாததன் பலனையே அனுபவிக்கிறோம். ஆனாலும் காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் எல்லாம் தீரும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை.

  இந்தப் பதிவு, என்கருத்து அவர்களுக்கும், தேவராஜன் அவர்களுக்கும் Dedicate செய்யப்படுகிறது! இப்படிப்பட்ட எந்தப் பதிவையும் அவர்கள் படித்ததாகக் காட்டிக்கொள்ளவே மாட்டார்கள் என்பது தெரிந்தும்!!

 15. Jegan

  ‘Her Old cinema getup’statue model
  source ‘dinathanthi’,date (on the very next day after she announced)
  do anyone heard about ‘tamilthai’ in history?
  Like the wings of horse in merina beach,they ll not only change history but they ll change zoology,botany also.

 16. நாஞ்சில்மகன்

  ///////வைகோ போன்ற நேர்மையான, உண்மையான, தேசப் பற்றாளரைப் பதவியில் அமர்த்தும் அளவுக்குத் தமிழக மக்கள் பக்குவம் பெறாததன் பலனையே அனுபவிக்கிறோம். ஆனாலும் காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் எல்லாம் தீரும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை///////

  யார் இந்த வைகோ? லட்சோபம் லட்சம் இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்தியவர். 20 வருடங்களுக்கு முன்பு அவரை நம்பி பல ஆயிரங்களை இழந்தவன். இதோ இந்த பதிவை எழுதும் போது எனது வீட்டின் அருகில் நடக்கும் ஒரு திருமணத்திற்க்கு நான்கு கார்கள் பின் தொடர வைகோ செல்கிறார். எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே என்று வருத்தபடுகிறேன். இன்று அவருடன் இருக்கும் ஒரு பிரபலமானவரை சொல்ல முடியுமா? ஏதோ வினோ போன்ற கொஞ்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

  இவர் செல்லாத கட்சி எது. வெற்றி கொண்டான் சொன்னார் வைகோ வாழ்க்கையில் ஒரு தடவை கூட MLA ஆகி இந்த சட்டமன்றத்திற்கு போக போவது கிடையாது. அவர் உன்மையிலேயே நல்ல அரசியல்வாதி என்றால் அம்மா கொடுத்த 12 சீட்டுகளை பெற்று வெற்றி பெற்று அம்மாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்க வேண்டும். இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் வைகோவுக்கு இனி கிடைக்க போவதில்லை. இப்போது வரும் லோக்சபாவுக்கு யாருடன் கூட்டனி வைக்க போகிறார் . அம்மாவுடன்தான். ஆண்மை இருந்தால் தான் எந்த கட்சியுடனும் கூட்டு கிடையாது என்று சொல்லட்டும்.

  தைரியம் என்றால் அது அம்மா ஒருவருக்குத்தான் . எந்த கருணாநிதி கைது பண்ணினரோ அவரை பிடித்து உள்ளை வைத்தாரே இதுதான் தைரியம். மன்னிக்கவும் தலைவரின் ரசிகர்கள். ரஜினி, வைகோ எல்லாம் உலக மகா கோ*****ள். வென்று காட்டுங்கள் வைகோ அம்மாவை எதிர்த்து வென்று காட்டுங்கள். இந்த தமிழகம் மீண்டும் உங்களுக்கு மாலையிடும். இழந்த செல்வாக்கை பெறுவீர்கள் . ரஜினி எதற்கு வம்பு என்று ஒதுங்கி விட்டார் . நீங்கள் ஏதோ துள்ளி கொண்டு இருக்கிறிர்கள். உங்கள் வீரத்தை இலங்கையிலிருந்து வரும் அப்பாவி தமிழனிடமும் அப்பாவி சிங்களடனிமும் காண்பி்த்து கொண்டு இருக்கிறிர்கள். இன்றும் இலங்கையில் சிங்களனுடன்தான் கொழும்புவில் தமிழன் 10 லட்சம் போ் வசிக்கிறார்கள். சென்னையில் புத்ததுறவியை தாக்கினால் நமது தமிழன் கொழும்புவில் அடிபடுவானே என்ற விவஸ்தை கூட இல்லாமல் மதிமுக கருங்காலிகளை விட்டு இந்த வேலைகளை செய்கிறிர்கள். இதே தளத்தில் வினோ வைகோவுடன் இருந்தற்க்கு பாவ மண்ணிப்பு கேட்கத்தான் போகிறார். அதை நான் காணத்தான் போகிறேன்.

  வைகோ விட்டு விலகியவர்கள் லிஸ்ட வேண்டுமா. தருகிறேன் என்னுடைய அடுத்த பதிவில்.

 17. anbudan ravi

  எப்பொழுது வைகோ வெற்றி பெறுகிறாரோ அப்பொழுதுதான் மக்கள் திருந்தி விட்டதாக அர்த்தம்…..அதுவரை மக்கள் முட்டாள்களே…நான் உட்பட.

  அன்புடன் ரவி.

 18. Kumar

  2011 தேர்தல் பொது , ஜெயாவுக்கு கருணாநிதி பெட்டெர்னு சொல்லி நக்கீரன் பத்திரிகையோடு சேர்ந்து திமுக ஜெயிக்கும்னு சொன்னீக.இப்ப என்னடான்ன வைகோ ஜெயிக்கலை , மக்கள் பக்குவம் பெற வில்லைனு சொல்றீங்க.உண்மையான பத்திரிகை காரங்க மற்றும் அரசியவாதிகள் என்றும் மக்களை குறை கூற மாட்டார்கள்.என்றும் நான் கூறுவது என்னவென்றால் இன்னும் அதிகாரம் ஏறும் அளவுக்கு வைகோ கட்சி தன்னை வளர்த்து கொள்ளவில்லை.வைகோ இன்னும் மக்களுகாக போராட வேண்டும்.

 19. குமரன்

  ஜெகன் அவர்களே

  தமிழ்த்தாய் என்பது உருவகம், அனைவருமே அவரவர் மொழியைத் தாய் மொழி என்றே சொல்கிறோம். அப்படிப்பட்ட மொழியைத் தாயாக உருவகித்து எழுந்ததே தமிழ்த்தாய்.

  அதனால்தான் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடல் உருவாகியது, அதையும் நமது அரசுப் பாடலாக அரசு ஏற்றிருக்கிறது, அந்தப் பாடலின் உயிர் வரிகளைக் கருணாநிதி வெட்டினாலும் கூட அதை அரசின் பாடலாக ஏற்றமை சிறப்பே. கருணாநிதி அந்த உயிர் வரிகளை வெட்டியதன் காரணம் அவரது காழ்ப்பு உணர்வே அல்லாமல் வேறில்லை.

  வள்ளுவருக்குக் கோட்டமும், சிலையும் அமைத்ததும் சிறப்பே, ஆனாலும் வள்ளுவர் அவதரித்த திருமயிலையில் உள்ள அவரது கோவிலைக் கருணாநிதி கண்டுகொள்ளாததிலும் அவரது மலிவான அரசியலும் காழ்ப்புணர்ச்சியும் நிறையவே உள்ளன.

  தமிழ்த்தாய் சிலை அமைப்பதும் சிறப்பே. அதில் குற்றம் ஏதும் தென்படவில்லை.

  தமிழர்தம் கற்பின் அடையாளமாகக் கண்ணகியின் சிலையை நிறுவிய கருணாநிதி அதற்கான மாதிரியாக ஏற்றது ஒரு நடிகையை, அதுவும் இருமணம் (விவாக ரத்து இல்லாமல், கருணாநிதி போலவே!) செய்த ஒரு நடிகையை. மேலும் அதிக விவரங்கள் அவை நாகரிகம் கருதி வெளியிடவில்லை. புரிந்து கொள்க.

  அதுபோல அல்லாமல், தமிழ்த்தாயின் சிலை உயிர்ப்புடன் அமைவதும், எந்தவொரு மனிதப் பிறவியின் சாயலிலும் இல்லாமலும் இருக்க இறைவனை வேண்டுவது ஒன்றே வழி. ஏனெனில் கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

 20. குமரன்

  அந்த நடிகைக்கு ஒரு சவுகரியம் என்னவென்றால், இருவர் பெயரும் ஒன்றே !!!!
  கிருஷ்ணமூர்த்தி!!

 21. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே!

  வழக்கம் போலவெ ரீமிக்ஸ் அருமை. ஆனால் எங்கோ இடிக்கிறது!!
  ///
  அகந்தையை அழிப்பாள்!
  ஆற்றலைக் கொடுப்பாள்!
  அவள்தான் அன்னை மகா சக்தி!
  அம்மா வணங்கும் மகா சக்தி!
  ///

  சரியா வணங்கலையோ? அகந்தையை அழித்த மாதிரி தெரியலையே?

  ஆனால் ஒரு ஆறுதல்.
  மற்றவர்கள் போல அவரையே அன்னை மகா சக்தி என்று நீங்கள் சொல்லவில்லை, அதுவரைக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றியும். என்ன உங்களுக்கு இன்னோவா காரோ, பணமுடிப்புகளோ, அமைச்சர் பதவியோ, No chance ! தப்பித்து விட்டீர்கள் !!!!

 22. குமரன்

  திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் இருப்பதால் அங்கே அவருக்கு மாலை அணிவிக்கும் வேலை அரசியல்வாதிகளுக்கு இல்லை.

  ஆனால் மதுரையில் தமிழ்த்தாய் சிலை இருந்து அதுவும் 133 அடிக்கும் மேல் இருந்தால் ….

  அப்பப்பா ..
  அம்மம்மா …

  எப்படி மாலை போடுவது? அதற்கு ஒரு மாடிப்படி வேறு கட்டுவார்களோ, லிப்ட் வைப்பார்களோ ? சுதந்திர தேவி சிலை போல ? சரி லிப்டுக்கு மின்சாரம் ?

  ஆஹா ……… இப்பவே கண்ணக் கட்டுதே ………

 23. srikanth1974

  திரு.குமரன்.சார் ‘அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்.
  அவர் கருத்து தான் எனது கருத்தும்.நன்றி சார்
  என்றும் உங்கள் அன்பு சகோதரன்
  ப.ஸ்ரீகாந்த்.

 24. மிஸ்டர் பாவலன்

  எனது நகைச்சுவை ரீமிக்ஸை படித்து விட்டு குமரன் எழுதினார்:

  “வழக்கம் போலவெ ரீமிக்ஸ் அருமை. ஆனால் எங்கோ இடிக்கிறது!!”
  (குமரன்)

  அறிஞர் குமரன் அவர்களே:

  எனது பாடலில் நான் குறிப்பிட்டிருந்தேன் –>

  “சந்தமில்லாமல் பாட்டிசைத்தாலும் (2)
  தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்!”

  இதில் “சந்தமில்லாமல் பாட்டிசைத்தாலும்” என குறிப்பாக இரு
  வார்த்தைகள் கொடுக்கப் பட்டுள்ளன. அதாவது `பாடல் பொருந்தாமல்
  எழுதப் பட்டுள்ளது~’ என நாசூக்காக குறித்துள்ளேன். அதில் எந்த வரிகள்
  பொருந்தவில்லை, “இடிக்கிறது” என நண்பர்கள் தேடி கண்டு கொள்ளட்டும்!

  நன்றி, வணக்கம்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 25. மிஸ்டர் பாவலன்

  //என்றும் உங்கள் அன்பு சகோதரன்
  ப.ஸ்ரீகாந்த்.//

  நண்பர் ஸ்ரீகாந்த், குமரன் அவர்களே:

  முன்பு “அன்பு சகோதரர்கள்” என ஒரு படம் வந்தது.
  அதில் எஸ். வி. ரங்கா ராவ் என்ற ஒரு நடிகர்
  மிக சிறப்பாக நடித்திருப்பார். “முத்துக்கு முத்தாக”
  என்ற பாடல் கண்டசாலாவின் இணைய குரலில்
  நல்ல பாடல் வரும். கண்ணதாசனின் வைர வரிகள்.

  “ஒன்று பட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை!”

  -== மிஸ்டர் பாவலன் ==-

 26. MATHAN

  மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் கட்சி தோல்வியையே சந்திக்க நேரிடும் என்றும் தமிழகத்தில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஹெட்லைன்ஸ் டுடே- சி வோட்டர் இணைந்து தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்றும் திமுகவுக்கு 4 தொகுதிகள்தான் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 27. அ.சத்தியதேவன்

  இவ்வளவு சொல்லுகின்றீர்களே!

  இந்த ஆட்சியின் போது மின்சாரப் பற்றாக்குறை ஏற்படவில்லை! இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு! அவர்கள் அப்போதே மின் நிலையங்களை சரியாகப் பராமரித்து வந்திருந்தால் இப்போது தடையற்ற மின்சாரம் கிடைத்திருக்கும்! இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்திட முடியாது!!

  தற்போது உள்ள தமிழகத்தில் “நரேந்திர மோடி”யின் ஆட்சியே வந்தாலும் மின் பற்றாக் குறையை சரி செய்ய முடியாது!!

  ” நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல”

  நான் ஒரு மாணவன்!

  நண்றி!

 28. கடலூர் சித்தன்.ஆர்

  வாழ்க திராவிடம்! வாழ்க அண்ணா (NAAAAMAM)!!!

  //அன்பு குடியரசே..! ( இல்லை.. இல்லை..) தமிழ்க்’குடி’அரசே..!
  முன்பு பூரண மதுவிலக்கை ரத்துசெய்து
  பின்பு மெல்ல ஏன் நீ ‘மலிவு விலை மது’ தந்தாய்? – அன்று…

  ‘கள்ள மதுவை ஒழிக்க’ என காரணித்தாய் – உன்
  உள்ள நாட்டம் – கொள்ளை இலாபம்
  அள்ள மட்டும் – என்பதனை ஏன் மறைத்தாய்? – இன்று…

  திகட்டத்திகட்ட டாஸ்மாக் குவிக்கும் நிதிகண்டு – அதை
  பகட்டு விளக்கால் அலங்கரித்து பட்டித்தொட்டி எங்கும்
  சகட்டு மேனிக்கு பொது இடங்களிலும் ஏன் திறந்தாய்?

  கள்ளுண்ணாமை எனும் குறளதிகாரம் இயற்றிய
  வள்ளுவரை வாழ்த்தி வானுயர சிலைவடித்த நீ
  கிள்ளுகீரை என அவர்தம் அறிவுரையை ஏன் புறந்தள்ளினாய்?

  குடிமக்களின் நலன் காக்கும் அரசே குடியரசு – எனில்
  குடிமக்களின் சுகவாழ்வில் அக்கறையற்று தன்
  வடிகட்டின சுயநல டாஸ்மாக் சுரண்டலுக்காக…

  குடிமக்களை ‘குடிக்கும் மாக்களா’க்கி என் இந்திய மனிதவளத்துக்கு
  வெடிவைக்கும் மேற்படி தமிழ் ‘குடி’ அரசுக்கு கொடியேற்ற இனி
  ‘குடியரசு தினம்’ எனும் பெயரில் ஏதேனும் ஒன்றுண்டா..? – சுதியேற்ற இனி…
  ‘குடி’அரசு தினமே… எல்லா நாளும் தமிழ்நாட்டில்…//

  ( http://pinnoottavaathi.blogspot.com/2011/01/26-1.html )-நன்றி.

  ஹிஹும்..ஹிஹும்…..வாழ்க! வளர்க!… “கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றி மூத்த தமிழ் குடி.”
  “வாழ்க திராவிடம்!” “வாழ்க அண்ணா (NAAAAMAM)!!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *