BREAKING NEWS
Search

மே 1-ம் தேதி 11 மணிக்கு கபாலி டீசர் வெளியாவது ஏன்? – கலைப்புலி தாணு

கபாலி டீசர் மே 1-ல் வெளியாவது ஏன்?

uzhai-2

லைவரின் கபாலி டீசர் ஞாயிற்றுக்கிழமை மே 1-ம் தேதி காலை 11 மணிக்கு கலைப்புலி தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ் யுட்யூப் சேனலில்’ வெளியாகிறது.

ஏன் மே 1?

“நாற்பதாண்டுகளுக்கு மேல் தன் கடின உழைப்பால் உயர்ந்து, இன்று நாட்டின் இரண்டாவது உயர் சிவிலியன் விருதான பத்மவிபூஷன் விருதை வென்றிருக்கிறார் நமது ஒரே ஒரு சூப்பர்ஸ்டார். அந்த மாமனிதரின் அயராத உழைப்பைக் கவுரவிக்கவே உழைப்பாளர் தினத்தில் கபாலியை வெளியிடுகிறேன்!”

-கலைப்புலி தாணு, தயாரிப்பாளர்.

விஷயம் இவ்வளவுதான். மே 1-க்கான முக்கியத்துவம் இதுதான். எதற்காக கபாலி டீசரை மே 1, காலை 11 மணிக்கு வெளியிட தாணு சார் முடிவு செய்தார் என்பதற்கு சற்று முன்பு அவரே தந்த விளக்கம் மேலே நீங்கள் படித்தது.

uzhai-3

இங்கு காலை 11 மணி என்றால், வட அமெரிக்காவில் இரவு 8 – 9 மணியாக இருக்கும். உலகெங்கும் உள்ள தலைவரின் ரசிகர்கள் அத்தனைப் பேரும் மொத்தமாக விழித்திருக்கும்போதே கபாலி டீசர் வெளியாகி, அனைவரது பார்வைக்கும் செல்ல வேண்டும்.. புதிய சாதனை நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு என்று கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

நண்பர்கள், ரசிகர்கள் யாரும் வேறு எந்த நடிகர் பற்றிப் பேசியும் ஒப்பிட்டுக் கொண்டும் இருக்காமல், கபாலி டீசரைக் கொண்டாடும் மனநிலையில் மட்டும் இருங்கள்!

ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை மே 1 என்றால் ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லே.. ய்யா…’ பாடல் கேட்க வேண்டும். இந்த ஆண்டு அந்தப் பாட்டுடன் கபாலி டீசர் கலக்க வேண்டும். அவ்வளவுதான்!

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *