BREAKING NEWS
Search

வீரா, விருமாண்டிக்குப் பின் ரஜினி, கமல் படங்களில் இசையமைக்காதது ஏன்? – இளையராஜா பதில்

வீரா, விருமாண்டிக்குப் பின் ரஜினி, கமல் படங்களில் இசையமைக்காதது ஏன்? – இளையராஜா பதில்

Jaya Tv 14th Anniversary Stills (71)

சென்னை: வீரா, விருமாண்டி படங்களுக்குப் பிறகு ரஜினி, கமல் படங்களில் பணியாற்றாதது ஏன் என இசைஞானி இளையராஜா பதில் அளித்துள்ளார்.

ரஜினி, கமல் நடித்த அதிகபட்ச படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இவர்கள் இணைந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலத்தை வென்றவை. இன்றும் புதிதாகவே இருப்பவை.

ஆனால் ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த வள்ளிக்குப் பிறகு, வீரா படத்தில் மட்டுமே இளையராஜா பணியாற்றினார். இந்த இரு படங்களிலும் மிகப் பெரிய பலமாக நின்றது இளையராஜாவின் இசை.

அதேபோல, கமல் இயக்கி நடித்த விருமாண்டிக்குப் பிறகு கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. விருமாண்டியின் பெரிய பலமும் ராஜாவின் இசைதான்.

இதுபற்றி குமுதத்தில் இளையராஜாவைக் கேளுங்கள் பகுதியில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா இப்படி பதிலளித்துள்ளார்.

“விருமாண்டி”க்கு பின் அவரும், “வள்ளி”க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ? (வீரா என குறிப்பிட மறந்துவிட்டார்கள்)

என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு “இளையராஜா”வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது.

காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்?

எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம்.

ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை.

tamil-actor-kamal-hassan-ilayaraja-rajinikanth

-இப்படிக் கூறியுள்ளார் இளையராஜா.

இந்த கேள்வி பதில் பகுதியை விரும்பிப் படித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. சமீபத்தில் ராஜாவைச் சந்தித்த போதுகூட, இந்த கேள்வி பதில் பகுதி அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் என்று கூறியுள்ளார்.

சந்திரமுகி படத்துக்கும், குசேலனுக்கும் இளையராஜாவையே இசையமைக்க வைக்க விரும்பியதாகவும், தயாரிப்பாளர்கள் மற்றும் சூழ்நிலை காரணமாகவும் அது முடியாமல் போய்விட்டது என ரஜினி தெரிவித்தது நினைவிருக்கலாம்.

-என்வழி செய்திகள்




21 thoughts on “வீரா, விருமாண்டிக்குப் பின் ரஜினி, கமல் படங்களில் இசையமைக்காதது ஏன்? – இளையராஜா பதில்

  1. Nirmal

    இளையராஜா இசை அமைத்த ரஜினி கிடைசி படம் வீரா, வள்ளி அல்ல

  2. அலாவுதீன்

    “எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம்.
    ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை…………”

    கடைசியா என்னதான் சொல்ல வரார் இளையராஜா…..?? வள்ளி விருமாண்டி படத்திற்கு பிறகு வந்த கமல் ரஜினி படங்களின் இசை இவர் இசை அமைத்து இருந்தால் இதைவிட மேலும சிறப்பாக கொடுத்து இருப்பேன் என்கிறாரா…? இல்லை அந்த படங்களின் இசை ஒரு குப்பை என்கிறாரா….? “தர்மம் தலை காக்கும்…..ஆனால் கர்வம் தலை வாங்கும்…… ” ….முத்து….படையப்பா….சந்தரமுகி….எந்திரன்….பாடல்களுக்கு இப்ப என்ன கேடாம்….அது ரசிக்க பட்ட இசை இல்லையா…..இல்லை ரசிகர்கள் எல்லாம் தலையாட்டி பொம்மைகளா…..இவர் எல்லாரையும் கேவல படுத்துகிறார்….அட்ரஸ் இல்லாமல் போன எவ்ளோ பட இசைக்கு சொந்த காரர் …இளையராஜா…..என்னைக்கோ போட்ட நல்ல இசை தான் இன்னும் இளையராஜா மேல ஒரு மரியாதை வச்சிக்க காரணமா இருக்கு…..மறந்து விடவேண்டாமே….”

  3. அலாவுதீன்

    எந்திரனுக்கும் சிவாஜிக்கும் இளையராஜா இசை அமைத்திருந்தால் எப்படி இருந்த்திருக்கும். அய்யோ….. நினைக்கவே முடியவில்லை. நீங்கள் தலை சிறந்த்த….. இசையமைப்பாளர் தான் பட் நாட் எனிமோர். உங்கள் இசை எனக்கு பிடிக்கும் . ஆனால் ஒரு மனிதனாக நான் உங்களை வெறுக்கிறேன். எனக்கு தெரிந்த்து 2 இசையமைப்பாளர்கள் உங்கள் காலத்திலேயே வாழ்கிறார்கள்.நீங்கள் அவர்களிடமிருந்து மனித பண்புகளை கற்றுகொள்ளலாம்.இதையெல்லாம் எங்கே கேட்க போகின்றீர்கள்..உங்கள் காதுக்குள் தானே தலைக்கண இசை எந்நேரமும் இசைத்துகொண்டுள்ளதே?

  4. Ananth

    ஏதோ ஒரு ப்ளாக்-இல் இளையராஜா பற்றி இப்படி எழுதி இருந்தாங்க – legend -கும் ஒரு end உண்டு :). msv பாடல்களை இப்போது கோச்சடையன் படத்துக்கு போடா முடியுமா?அது மாதிரிதான்.

    no doubt he WAS a great music director and we still cherish his music. Its will be true for ARR too after sometime.

  5. முத்துசிவா

    அண்ணாமலையிலிருந்து தலைவர் பெயர் போடப்படும் போது வரும் டைட்டில் மியூசிக்கிற்கு தியேட்டரே அதிரும்..

    ஆனா வீரா வில் அதே டைட்டிலிற்கு இளையராசா ஒரு மியூசிக் போட்டுருப்பாரு பாருங்க… கண்றாவி…
    தலைவரின் தற்போதைய படங்களுக்கு கண்டிப்பாக இளையராஜா உகந்தவர் அல்ல….

  6. NAREN

    ராஜா , மணிரத்னம் திடீர்னு எதாவது அறிக்கை விட்டு … இல்ல்ளன சம்பந்தம் இல்லாம பதில் சொல்லி …. அவுங்களே குழப்பத்துல மாட்டிகுறாங்க …

    ஒன்னும் புரியல .. சொல்ல தெரியல …

  7. enkaruthu

    நண்பர்கள் இங்கே சொல்வது தலைவர் மேல் உள்ள பாசத்தால்.ஆனால் தலைவரே இதை ஏற்கமாட்டார்.முத்துக்கு முன்பு வரை நம் தலைவர் படத்துக்கும்(உதாரணம் தளபதி) கமல் படத்துக்கும் இளையராஜாதான் ஆஸ்தான இசை அமைப்பாளர்.திறமையால் நான் மதிக்கும் இளையராஜா இப்படி சொல்ல கூடாததுதான்.ஏனென்றால் ரஜினிக்கு எந்த ஒரு இசை அமைப்பாளரும் தேவை இல்லாததுதான்(உதாரணம் தேவா) ஏனென்றால் தலைவர் படத்தில் பணியாற்றும் எந்த ஒரு தொழிலாளியும் அந்த படத்தை விளம்பரம் ஆக்கி கொள்வார்கள்.

    ஆனால் இளையராஜா போன்ற இசைஞானிகள் தலைவரும் கமலும் இன்றும் இளையராஜாவை புகலும்பொலுது இளையராஜாவின் இந்த பதில் தேவை இல்லாதுதான்.

  8. Jegan

    Nowadays his music suits only for award type class movies ..eg director bala’s films…..thalaivar always update himself according to fans pulse…..so he choose the latest……..

  9. மிஸ்டர் பாவலன்

    இளையராஜா பழைய சினிமா படங்களுக்கு (70, 80 ஆண்டுகளில் வந்தவை)
    நன்றாக இசை அமைத்தார். கண்ணதாசன், வாலி, வைரமுத்து, புலமை
    பித்தன் போன்ற பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களுக்கு நல்ல இசை
    அமைத்து பல படங்கள் வெற்றி பெற துணை செய்தார். அவர் இசைக்கு
    தேசிய விருதுகள் வாங்கி உள்ளார்.

    ஆனால் அவரை கர்நாடக சங்கீத இசை மேதைகளுடனோ, மேற்கத்திய
    Bach, Mozart, Beethoven போன்ற மேதைகளுடனோ ஒப்பிட முடியாது.
    அவர் ஒரு Symphony-க்கு இசை அமைத்ததாக சொன்னாலும் அது
    வெளி வந்தால் தான் அவர் இசையின் தரத்தை இசை மேதைகள்
    மதிப்பிட முடியும்.

    ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கிய பின், உடனேயே “எல்லாப் புகழும்
    இறைவனுக்கே” என்று தமிழிலேயே அடக்கமாக சொன்ன பண்பு
    பாராட்டத் தக்கது. “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்பார் வள்ளுவர்.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  10. soundar

    ஒருவேளை நடிகர் மோகனுக்கு வேண்டுமானாலும் நட்டம் இருந்திருக்கலாம்.

    சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானி கமல் விசயத்தில், நட்டம் இசைஞானி இளையராஜாவுக்கே…

  11. kabilan

    இளங்கோ சார்,அவங்க எல்லாம் என்ன சொல்றங்கான அவர் legend என்பதை மறுபதற்கில்லை,இப்ப உள்ள trend கு அவர் கரெக்ட் அஹ இல்லன்னு நினைகுரங்க அவளவுதான் .அதற்கு எடுத்து காட்டாக அவர் இசை அமைத்த சமிபத்திய படங்களின் பாடல்களை கேட்டாலே தெரியும் .டோனி,சென்கத்து பூமியிலே,மனசெல்லாம்,அழகர் மலை ,ஜகன் மோகினி,வால்மீகி .விதி விலகு பாலாவின் படங்களும் ,நீதானே என் பொன் வசந்தமும் .அத்துடன் அவர் கூறிய பதிலில் யாரும் ரசிக்காத உண்மை என்ற பெயரில் ஒரு திமிர் தெரிகிறது.அதற்கு தான் இவ்ளவு பதிலும்.அவர் வர்ணஜாலமே காட்டினாலும் அவர் பதில் தவறே .அவர் இல்லாததால் தலைவருக்கு எந்த நஷ்டமும் இல்லை என்பதே உண்மை .ரஹ்மான் அவர்களும் ஒரு உண்மையான ,மகத்தான இசை கலைஞரே

  12. kabilan

    அந்த பட்டியல் இன்னும் பெரிய நீளம் அஜந்தா ,மாய கண்ணாடி,ஒரு நாள் ஒரு கனவு ,கரகாட்டகாரி ,உளியின் ஓசை ,இனிமே நாங்கதான் ,தனம் ……….இன்னும் நீளும் பெரிய பாட்டியல் .சமிபத்திய ரிலீஸ் ஆனா மறந்தேன் மன்னித்தேன் கூட ………..

  13. srikanth1974

    நண்பர் கபிலன்.உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்.உங்கள் பட்டியலில்
    பொன்னர் சங்கர் இடம்பெறவில்லை அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  14. kabilan

    நன்றி srikanth1974 சார் .இன்னும் நிறைய இருக்கும்னு நினைக்கிறன் சார்.

  15. RAAJ

    1980 KALILUM thalaivar padankalil vasool sathanai padaitha pala padngal ilayaraja isai illai.oorkaavalan,manithan,pondravi.1990 kalilum annamalai,basha ,arunachalam(APPAVE 25 CRORE MEL VASOOL) DEVA MUSICIL VANTHA VASOOL SATHANAI PADANGAL.TAMIL CINEMA SARITHIRATHILEYE ATHIGA THEATRE GALIL 100 NAATGALUKKU MEL OODIYE CHANDRAMUKI KOODA VIDYA THAN MUSIC.ILAYARAJA raga thevan thaan marukka mudiyaathu.avarin isayil casette sales athigam vitrathu kooda PRIYA JONY combination thaan.aanaaal A.R.RAHMAN ENDRA oru nalla manithanin varavirkku piragu karvam pidithavargal onnum illamal poi vittaargal.puriyaatha oru visayam ivar eppadi RAMANA MAHA RISHI patri pesugirar endru.RAMANARAI vanangupavargal karvam kollavo aganthaiyaai pesavo maattaargal.

  16. Raja gomez

    திரு. இளங்கோ சொல்வதில் உண்மையிருக்கிறது,இளையராஜா ஒரு சகாப்தம் என்பதில் வேறு கருத்தில்லை, ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு இளையராஜா அவர்கள் பொருத்தமானவர் தானா என்பதை துருவி ஆராய்வதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை….
    ராஜா …..தோஹா ,கத்தார்

  17. MOHAN

    இளையராஜா ஒரு நல்ல இசை கலைஞர் தான்; ஆனால் அந்த கலைஞருக்கு தலைக்கனமும் கொஞ்சம் அதிகம் தான்!!!

    நான் நேரடியாக பார்த்த நிகழ்வு.
    மதுரையில் அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டில் இவர் மேடை ஏறியதும் ஆரவாரம் பொங்கியது ரசிகர்கள் அனைவரும் இவரை பாடச் சொல்லி குரல் எழுப்பினோம். ஆனால் அந்த மனுசன் சொன்ன ஒரு விரி பதிலில் அனைவரும் வாயடைத்து போய்விட்டோம்.
    அவர் கூறிய பதில் ” நா ஒன்னும் இங்க பாடுறதுக்காக வரல, என்னால பாட முடியாது” அப்படினு சொன்னாரு.

    அந்த நொடியிலிருந்து அந்த இசைஞானியை வெறுத்துவிட்டேன்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *