BREAKING NEWS
Search

‘அப்துல் கலாம் மீது என்ன கோபம்? அவர் குடியரசுத் தலைவராவது பிடிக்கவில்லையா?’ – கேள்வி பதில் – 26

கேள்வி: அப்துல் கலாம் மீது என்ன கோபம்? அவர் குடியரசுத் தலைவராவது பிடிக்கவில்லையா? – கேள்வி பதில் -26

-எஸ் ராஜ்குமார்

பதில்: அப்துல் கலாம் மீது எந்தக் கோபமும் இல்லை. அவரைச் சந்திக்க நேரம் கேட்டபோது, அடுத்த சில மணிநேரங்களில் வரச்சொல்லி பேட்டியளித்தவர். வெட்டி பந்தா என்றால் அர்த்தம் தெரியாத மனிதர். அரசுப் பள்ளியில் தமிழில் படித்து, உலகம் போற்றும் விஞ்ஞானியான இன்றைய இந்தியாவின் ஆதர்ஸ நாயகன் அவர்.

5 ஆண்டு ராஷ்ட்ரபதி பவன் வாழ்க்கை முடிந்ததும், இரண்டு சிறு பெட்டிகளில் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு, ‘இந்த நாட்டு மக்களின் அன்பை ஏராளமாகச் சுமந்து செல்கிறேன்’ என்று கூறிச் சென்ற நல்ல மனிதர். அவர் எந்தக் கட்சியையும் சாராதவர். ஆனால் ‘அறிவியல் கட்சி’க்கு தலைவர். அதனால்தான் கூடங்குளத்தின் பாஸிடிவ் பக்கங்களை மட்டும் மக்களுக்குக் காட்ட முனைந்தார், தன்னை நேசிக்கும் மக்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்படுவோம் என்பது தெரிந்தும்!

அவர் இலங்கை சென்றபோது ராஜபக்சேவுடன் கைகுலுக்கியதை எல்லோரும் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் அதில் தவறில்லை என்பது நம் நிலைப்பாடு. கலாம் அவர்கள் ஒரு ராஜரீக நாகரீகத்துக்காகத்தான் அதைச் செய்தார் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாவிட்டால் என்ன மனிதர்கள் நாம்… அவர் என்ன சுஷ்மாவைப் போல, கனிமொழியைப் போல பேழைகளில் தங்கமும் வைரமும் முத்தும் நினைவுப் பரிசுகளாகப் பெறவில்லையே!

கலாமின் பார்வை மிகத் தெளிவானது. அண்ணல் அம்பேத்கரைப் போல, இந்த தேசத்தை உண்மையாக நேசிப்பவர் கலாம். இதைவிட அவரை உயர்வான நிலையில் வைத்துப் பார்க்க முடியாது!

இங்கே நாம் எடுத்த நிலைப்பாடு… கலாம் எந்தப் போட்டியுமின்றி இந்தியாவின் முதல் குடிமகனாக வரவேண்டும். அவரது இரண்டாவது பதவிக்காலம் எந்தவித விமர்சனங்களுக்கும் அரசியல் மாச்சரியங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் போனால், அவரை இந்த போட்டிக்குள் இழுக்கவே கூடாது என்பதுதான்.

நடைமுறையில் அதற்கான வாய்ப்பே இல்லாத நிலை. ஒருவேளை ஜெயலலிதா, நவீன் பட்நாயக், மோடி, நிதீஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களும், பாஜகவும், முன்பு கலாமை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப் படுத்திய சமாஜ்வாடி கட்சியும் ஒரு சேர ஆதரிக்க, பொது வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டிருந்தால், நிச்சயம் வெற்றிக்கான வாய்ப்பு ஓரளவுக்கு இருந்தது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் கூட வேட்பாளரை அறிவிக்கலாமா, மக்களிடம் நல்லபெயர் வாங்கவாது பொது வேட்பாளராக கலாமை ஏற்கலாமா? என்று யோசித்திருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த சூழலும் இல்லை. காங்கிரஸ் நிச்சயம் கலாமை ஏற்காது என்ற நிலை. ஜெயலலிதா, நவீன் பட்நாயக் போன்றோர் சங்மாதான் வேட்பாளர் என்றார்கள். இந்த சூழலை நன்கு புரிந்திருந்தும் மன்மோகன் சிங்கை வேட்பாளராக்குங்கள் என நடக்க முடியாத ஒன்றைச் சொன்ன மமதா, இல்லாவிட்டால் அப்துல் கலாமை வேட்பாளராக்கலாம் என்று கூறிவிட்டு, அதற்கான விவாதத்தைக் கூட கூட்டணியின் தலைமையிடம் நடத்தாமல், தன்னிச்சையாக பேஸ்புக்கில் ஆதரவு திரட்டி பப்ளிசிட்டி தேடினார்.

அப்துல் கலாம் அரசியல்வாதி அல்ல. இந்த சூழ்ச்சிகள் அவருக்கு தெரியுமா தெரியாதா என்றும் நமக்குத் தெரியாது. அவர் நேர்மையாக, ‘நமக்கு நல்ல ஆதரவு இருக்கிறது’ என்று நினைத்திருக்கக் கூடும். ஆனால் மமதா என்ற அற்பமான அரசியல்வாதி, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள கலாமை பலிகடாவாக்கப் பார்த்தார் என்பதே உண்மை.

இன்னொரு பக்கம் யோசித்தால், அப்துல் கலாம் என்ற நல்ல சாதனையாளர், பேரறிவாளருக்கான மரியாதை, கவுரவம் முன்பே தரப்பட்டுவிட்டது. பாரத ரத்னா விருதுடன், குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் அவருக்குத் தந்துள்ளது இதே இந்திய அரசு.

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து கொண்டு அவர் சாதித்ததைவிட, அதில் இல்லாத கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே அதிகம். மக்களின் நாயகனாக அதை அவர் தொடரட்டும்.

அரசியல் கட்சிகளின் நம்பர் விளையாட்டாக மாறிவிட்ட குடியரசுத் தலைவர் பதவிக்கு, அரசியல்வாதிகளோடு சேர்ந்து அவரும் அடித்துக் கொண்டு தோற்பதைப் பார்ப்பதா உங்கள் விருப்பம்?

-வினோ

என்வழி ஸ்பெஷல்
42 thoughts on “‘அப்துல் கலாம் மீது என்ன கோபம்? அவர் குடியரசுத் தலைவராவது பிடிக்கவில்லையா?’ – கேள்வி பதில் – 26

 1. தினகர்

  “குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து கொண்டு அவர் சாதித்ததைவிட, அதில் இல்லாத கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே அதிகம். மக்களின் நாயகனாக அதை அவர் தொடரட்டும்.”

  குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து கொண்டு அடுத்த ஐந்தாண்டுகளை வீணாக்குவதை விட , பள்ளிகளில் மாணவர்களிடம் அந்த நேரத்தை செலவழித்தால் எதிர்கால இந்தியா மீது பெரிய நம்பிக்கை ஏற்படும்.

  ”அரசியல் கட்சிகளின் நம்பர் விளையாட்டாக மாறிவிட்ட குடியரசுத் தலைவர் பதவிக்கு, அரசியல்வாதிகளோடு சேர்ந்து அவரும் அடித்துக் கொண்டு தோற்பதைப் பார்ப்பதா உங்கள் விருப்பம்? ”

  சரியான கேள்வி. கலாமை விரும்புகிறவர்கள் நெஞ்சை தொட்டு தங்களுக்குள்ளாகவே பதில் சொல்லிக்கொள்ளட்டும்..

 2. enkaruthu

  அருமையான பதில் சார்.நான் (கோர்வையாக போட நினைத்தும் முடியாமல்) என்ன நினைத்தேனோ அப்படியே சொல்லிவிடீர்கள்.

 3. Rajkumar

  நன்றி வினோ.
  பாய்ன்ட் பாய்ன்ட்டா புட்டுப்புட்டு வச்சிட்டீங்க. ஆனாலும் இங்கே யாரும் யோசிக்க மாட்டாங்க. அல்லது தெரியாத மாதிரி நடிப்பாங்க. அவங்களுக்கு ஜெயலலிதா என்ன செஞ்சாலும் சரிதான். கருணாநிதியாலதான் அப்துல்கலாம் ஜனாதிபதியாகலன்னு முட்டாள்தனமா உளறிக்கிட்டேதான் இருப்பாங்க.

 4. மு. செந்தில் குமார்

  எப்பொழுதும் போல் அருமையான பதில்.

 5. Krishna

  //பாய்ன்ட் பாய்ன்ட்டா புட்டுப்புட்டு வச்சிட்டீங்க. ஆனாலும் இங்கே யாரும் யோசிக்க மாட்டாங்க. அல்லது தெரியாத மாதிரி நடிப்பாங்க. அவங்களுக்கு ஜெயலலிதா என்ன செஞ்சாலும் சரிதான். கருணாநிதியாலதான் அப்துல்கலாம் ஜனாதிபதியாகலன்னு முட்டாள்தனமா உளறிக்கிட்டேதான் இருப்பாங்க. – ராஜ்குமார்//

  ராஜ்குமார் அவர்களே, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சேர்த்து வெறும் 15 MP வைத்திருக்கும் ஜெயலலிதாவை கேள்வி கேட்பதை விட இவ்விரு அவைகளிலும் 300 MP வைத்திருக்கும் காங்கிரசை கேளுங்கள் – ஏன் அவர்கள் அப்துல் கலாமை ஆதரிக்கவில்லை என்று?

 6. Rajkumar

  //கலாம் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று சோனியாவுக்கு என்ற வேகிறது? எதிராளியிடம் போய், திரும்பத் திரும்ப எனக்கு வாய்ப்பு கொடு என்று கெஞ்சுவது போலிருக்கிறது. சோனியாவோ காங்கிரஸ் கூட்டணியோ ஆதரிக்காது என்று வெளிப்படையாகத் தெரிந்ததுதானே. அப்புறம் எதற்கு சோனியா ஆதரவை வேண்டி நிற்கிறீர்கள்?

  ஜெயலலிதா, நிதீஷ், பாஜக, போதாக்குறைக்கு தில்லுமுல்லு காங்கிரஸ் மமதா இருக்கிறார்களே.. அவர்களை உங்கள் ஆட்டத்தை ஆடிப் பார்ப்பதுதானே நியாயம்? அதைவிட்டுவிட்டு சோனியா உதவவில்லை என்று புலம்புவது பெட்டைத்தனமாக தெரியவில்லை.//

  -இது இதற்கு முன் தேவராஜன் போட்ட கமெண்ட். உங்களுக்கு இது போதும்!

 7. Krishna

  //இது இதற்கு முன் தேவராஜன் போட்ட கமெண்ட். உங்களுக்கு இது போதும்!//

  ராஜ்குமார் அவர்களே, அதற்கு என் பதில் இதோ –

  ஜெயலலிதா, நிதிஷ், பாஜக மற்றும் மம்தாவை ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது. இவர்கள் எல்லோரும் வேறு வேறு துருவங்கள். ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில்லை. இவர்கள் எல்லோரும் பிரிந்து இருக்கும் இந்த நேரத்தில் அதிக வாக்குகள் கொண்ட கட்சியின் தலைவரான சோனியா ஆதரித்தால் இந்த சிறு சிறு கட்சிகளுக்கு வேறு வழியே இல்லாமல் போய் இருக்கும். அவ்வளவு ஏன், ஜெயலலிதா insignificant factor ஆகி இருப்பாரே.

 8. தேவராஜன்

  /ஜெயலலிதா, நிதிஷ், பாஜக மற்றும் மம்தாவை ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது. இவர்கள் எல்லோரும் வேறு வேறு துருவங்கள். ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில்லை. இவர்கள் எல்லோரும் பிரிந்து இருக்கும் இந்த நேரத்தில் அதிக வாக்குகள் கொண்ட கட்சியின் தலைவரான சோனியா ஆதரித்தால் இந்த சிறு சிறு கட்சிகளுக்கு வேறு வழியே இல்லாமல் போய் இருக்கும். அவ்வளவு ஏன், ஜெயலலிதா insignificant factor ஆகி இருப்பாரே//.

  -ஹய்யோ ஹய்யோ, உங்க சின்னப்புள்ளத்தனத்துக்கு ஒரு அளவில்லையா? கலாமை சோனியா முன்மொழிய வேண்டிய அவசியமில்லையே. கலாம் காங்கிரஸுக்கு தேவையில்லாத ஒருவரே. கலாம் வேண்டும் என யாரெல்லாம் குரல் கொடுக்கிறீர்களோ, அவர்கள் ஒருமித்து நின்று அவரை ஆதரிக்க வேண்டியதுதானே.

  ‘ஏன்டா உங்க ஆளை ஆதரிக்காம டீல்ல விட்டுட்டீங்கன்?’னு கேட்டா, ‘நாங்க ஆதரிக்கமாட்டோம். ஆனா எங்க ஆளை நீங்கதான் ஆதரிக்கணும்..அது உங்க கடமைன்னு’ எதிரணிகிட்ட கேக்கிறீங்களே.. தெரிஞ்சிதான் பேசறீங்களா.. மேல்மாடிய யூஸ் பண்ணுங்க பாஸ்!

 9. Venkatesh, Madurai

  இந்த குடியரசுத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜக, ஜெயலலிதா, மம்தா, உள்ளிட்ட அனைவருமே தங்களுக்கு என்ன ஆதாயம் என்று பார்த்துதான் வேட்பாளர்களை அறிவித்தனர்.

  இவர்கள் யாருக்குமே நாட்டின் நலன், அல்லது நல்ல தலைவர் வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. தங்கள் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய ஒருவரை தேடி வந்தார்கள் என்பதே உண்மை.

  காங்கிரஸுக்கு அந்த கட்டாயம் எதுவும் கிடையாது. காரணம், அங்கே அமரப் போகிறவர் ஒரு பக்கா காங்கிரஸ்காரர்தான். எனவே திறமையான வேட்பாளர், எதிரணியும் மதிக்கும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளனர். ஏற்கெனவே இங்கு சிலர் கருத்து கூறியிருப்பதைப் போல, பிரணாப் ஒன்றும் சோனியாவின் ஏவலாளி அல்ல. எந்த சூழலையும் சமாளிக்கும் திறமைசாலி. அப்புறம் எப்படி, சோனியாவின் வீட்டு வேலை செய்பவர்தான் ஜனாதிபதியாக வரமுடியும் என குமரன் போன்றவர்கள் கூறுகிறார்கள்?

  காங்கிரஸ் கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை. அவர்கள் மமதாவின் மிரட்டலை பொருட்படுத்தவே இல்லை. மவுனம் சாதித்தே மமதாவை மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர்.

  இங்கே பலரும் தாங்கள் நினைப்பது, தங்கள் விருப்பத்தை சோனியாவும் காங்கிரஸ் கூட்டணியும் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள். அது எத்தனை பெரிய பேதைமை?

  காங்கிரஸ் தனக்கென வேட்பாளரை வைத்திருக்கும்போது கலாமை எதற்காக அவர்கள் பீல்ட் பண்ணனும். உங்க அணி நிறுத்தட்டுமேன்னு கேட்டால், “இல்லயில்ல, காங்கிரஸ் கலாமைத்தான் நிறுத்தனும். எங்களுக்கெல்லாம் அவரைப் பிடிச்சிருக்கு,” என்ன சின்னபுள்ளத்தனமா திரும்பத் திரும்ப அதையே சொல்லி வருகிறார்கள்.

  எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்போது சோனியாதான் அனைத்துக்கும் காரணம் என்ற பல்லவியைப் பிடித்துக் கொண்டார்கள்.

  ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்பாளர் பிரணாப். உங்களுக்கு யார்? இந்த நேரடிக் கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாமல், கண்டதையும் இங்கே எழுதக் கூடாது. எப்படிக் கேட்டாலும், தனக்கு வசதியாக பதில் சொல்லிக் கொண்டிருப்பது ஒருவித நோயுற்ற மனநிலையின் அறிகுறி.

  தேவராஜன் குறிப்பிட்டிருப்பதைப் போல கமெண்டுகளைப் படிக்கவே வெறுப்பாக இருக்கிறது எனும் நிலையை கிருஷ்ணா என்பரும், கணேஷ் சங்கர் என்பவரும் உருவாக்கி வைத்துள்ளனர் (இரண்டல்லது ஒன்றோ!!).

  கட்டுரைக்கு ஆரோக்கியமான கருத்து சொல்வது இவர்கள் நோக்கமல்ல. கட்டுரை கிடக்கட்டும். நாம் நினைப்பதுதான் சரி என எல்லோரும் பேசிவிட வேண்டும் என்ற சூழலை உருவாக்கும் ஒரு நச்சுத் திட்டம் இது.

  தமிழகத்தில் கரண்ட் இல்லை என்றால், கருணாநிதியே காரணம் என்கிறார்கள். ‘சரி*, வெளக்கெண்ணெய் வந்து ஒரு வருஷம் ஆச்சே, என்ன கிழிச்சாங்க.. இருட்டு மட்டும்தானே மிச்சம்’ என்றால், அதெப்படி ஒரு வருஷம் போதும், 10 வருஷம் வேணும் என்கிறார்கள். ஆடத் தெரியாத தாசி மேடை சரியில்லன்னு முறுக்கிக்கிட்டாளாம்!

  ஏற்கெனவே இந்த வலையில் கொஞ்ச நாள் இந்தப் பிரச்சினை இருந்து, ஓய்ந்தது. மீண்டும் அந்த நிலையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

  வெளியில் எங்களைப் போன்றவர்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

 10. குமரன்

  வினோ எனது பார்வையும் கருத்தும் இதுவேதான்.

  கலாம் மட்டும் அல்ல, எந்த குடியரசுத் தலைவரும் பதவிக் காலத்துக்குப் பிறகு இரண்டாம் முறை தொடரவேண்டும் என்றால் அது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும். அவர் மீண்டும் தேர்தலில் போட்டி இட்டு வென்றாலும் கூட அது சரியான முறையில் ஒரு குடியரசுத் தலைவருக்கு செய்யப் படும் மரியாதை அல்ல. இரண்டாம் முறை தேர்வு என வரும்போது போட்டி என்று வந்துவிட்டாலே நாட்டின் மிக உயரிய பதவிக்கு அது அழகல்ல. ஒரு வாக்கு எதிரானாலும் அவர் அப் பதவியை ஏற்கக் கூடாது.

  எனவே அவரே இந்த விவாதங்களை அனுமதித்திருக்கக் கூடாது.

  மற்றபடி கருணாநிதி அவரை ஆதரிப்பதோ ஆதரிக்காமல் இருப்பதோ ஒரு பொருட்டல்ல. ஆனால் “கலாம் என்றால் கலகம்” என்று கருணாநிதி கூறியது மாபெரும் தவறு. அவருக்கு இது வாடிக்கை. வெகு தரக் குறைவான கருத்துக்களை வேண்டும் என்றே பதிவு செய்து விட்டு பின்னால் அதற்கு ஒரு சப்பைக் கட்டு விளக்கத்தை அளித்து – in the process Karunanithi records the uncharitable comments in public.- அதன் மூலம் தனது தரக் குறைவான விமரிசனத்தை மக்கள் மத்தியில் பேச வைப்பதில் கருணாநிதிக்கு நிகர் அவரேதான்.

 11. Krishna

  //-ஹய்யோ ஹய்யோ, உங்க சின்னப்புள்ளத்தனத்துக்கு ஒரு அளவில்லையா? கலாமை சோனியா முன்மொழிய வேண்டிய அவசியமில்லையே. கலாம் காங்கிரஸுக்கு தேவையில்லாத ஒருவரே. கலாம் வேண்டும் என யாரெல்லாம் குரல் கொடுக்கிறீர்களோ, அவர்கள் ஒருமித்து நின்று அவரை ஆதரிக்க வேண்டியதுதானே.//

  என்னைப் பொறுத்த வரையில் கலாம் வரவேண்டும் என்று நினைக்கவே இல்லை. அவர் சோனியாவை பிரதமராக விடாமல் தடுத்ததன் மூலம் நாட்டுக்கு மிக பெரிய சேவையை செய்திருக்கிறார். தவிர நான் ஏற்கனவே கூறியிருப்பது போல் காங்கிரசின் சட்ட புறம்பு மசோதாக்களை தள்ளுபடி செய்தார். இனி வேறு ஒரு குடியரசு தலைவர் இது போன்று செய்ய துணிந்தால் கலாமின் example கண்ணுக்கு முன்னே வந்து அதை தடுத்து விடும் என்று நம்புகிறேன். நமது அரசியல் கட்சிகள் யாருக்கும் கலாம் வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அவர் பெயரை வைத்து கொண்டு ஏதாவது ஆதாயம் கிடைக்காதா என்று தான் அலைகிறார்கள்.

  //காங்கிரஸுக்கு அந்த கட்டாயம் எதுவும் கிடையாது. காரணம், அங்கே அமரப் போகிறவர் ஒரு பக்கா காங்கிரஸ்காரர்தான். எனவே திறமையான வேட்பாளர், எதிரணியும் மதிக்கும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளனர். ஏற்கெனவே இங்கு சிலர் கருத்து கூறியிருப்பதைப் போல, பிரணாப் ஒன்றும் சோனியாவின் ஏவலாளி அல்ல. எந்த சூழலையும் சமாளிக்கும் திறமைசாலி. அப்புறம் எப்படி, சோனியாவின் வீட்டு வேலை செய்பவர்தான் ஜனாதிபதியாக வரமுடியும் என குமரன் போன்றவர்கள் கூறுகிறார்கள்?//

  கடந்த மே மாதம் வரையிலும் ஒரு soft bureaucrat ஆக இருக்கும் ஹமீது அன்சாரி தான் குடியரசு தலைவர் என்பதை காங்கிரஸ்காரர்களே ஆங்கில சேனல்களுக்கு லீக் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இதற்கு நிதீஷ் கட்சியிடமும் ஆதரவு பெற்றுவிட்டதாக தான் காங்கிரசை ஆதரிக்கும் அந்த சேனல்களும் தெரிவித்தன. ஆனால் முலயாமுக்கு ஹமீது அன்சாரி மீது அவ்வளவு ஆர்வம் இல்லை. ஏனென்றால் பல சமயங்களில் ராஜ்ய சபை தலைவராக இருக்கும் அவர் தன கட்சி காரர்களுக்கு பேசுவதற்கு நேரம் கம்மியாக ஒதுக்குகிறார் மற்றும் தன கட்சி எம்பிக்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் முலாயம் கட்சி தலைவர்களில் ஒருவரான ராம்பால் யாதவ் ஆங்கில சேனலில் வெளிப்படையாக தெரிவித்தார். . அதனால் தான் பிரணாப் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இந்திரா காந்தியை விடவும் சீனியராக இருக்கும் பிரணாப் இருக்கும் போது ராகுல் காந்தியை கொண்டு வர முடியாது. தவிர மிக மோசமான நிதி அமைச்சர் என்று எல்லோராலும் தூற்றப்படும் அவரை நிச்சயம் அந்த பொறுப்பில் இருந்து தூக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. ஆளும் கட்சிக்கு நிதி உதவி செய்யும் corporate அமைப்புகள் அவரை தூக்க வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. எனவே தான் அவர் “உதைத்து மேலே தள்ளப்பட்டார்” என்பது நிதரிசனம்.

  //ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்பாளர் பிரணாப். உங்களுக்கு யார்? இந்த நேரடிக் கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாமல், கண்டதையும் இங்கே எழுதக் கூடாது. எப்படிக் கேட்டாலும், தனக்கு வசதியாக பதில் சொல்லிக் கொண்டிருப்பது ஒருவித நோயுற்ற மனநிலையின் அறிகுறி.//

  இதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் பிளவுண்டு கிடப்பது தான். இதற்கும் இங்கே கருத்து கூறுபவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

  //தேவராஜன் குறிப்பிட்டிருப்பதைப் போல கமெண்டுகளைப் படிக்கவே வெறுப்பாக இருக்கிறது எனும் நிலையை கிருஷ்ணா என்பரும், கணேஷ் சங்கர் என்பவரும் உருவாக்கி வைத்துள்ளனர் (இரண்டல்லது ஒன்றோ!!).//

  இது போன்ற தனிப்பட்ட கமெண்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சோனியா 2007-லேயே குடியரசு தலைவர் பதவியை அசிங்கப்படுத்தி விட்டார். இதை அவர் கட்சி MLA ஒருவரே வாக்குமூலம் கொடுத்து விட்டார். இந்த வரலாறை யார் அழிக்க நினைத்தாலும் அதை அழிக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையிலும் ஒரு அரசியல்வாதி என்ன நிலைப்பாடு எடுத்தார் என்று சொல்வதில் தவறில்லை. உண்மை அவர்களை ஆதரிப்பவர்களுக்கு கசந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

  //கட்டுரைக்கு ஆரோக்கியமான கருத்து சொல்வது இவர்கள் நோக்கமல்ல. கட்டுரை கிடக்கட்டும். நாம் நினைப்பதுதான் சரி என எல்லோரும் பேசிவிட வேண்டும் என்ற சூழலை உருவாக்கும் ஒரு நச்சுத் திட்டம் இது.//

  நான் நினைப்பது சரி என்று நீங்கள் பேச வேண்டும் என்று நான் நினைக்க வில்லை. தான் நினைத்த்தை நான் சொல்லாததால் என் கமெண்டுகளை போடவேண்டாம் என்று தேவராஜன் தான் வினோவிடம் தெரிவித்தார். ஆங்கிலத்தில் சொல்வதென்றால் “the boot is on the other leg”

  நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த 65 ஆண்டுகளில் நேரு குடும்பம் செய்த குளறுபடிகள் எல்லோருக்கும் தெரியும். இதை காங்கிரஸ் அல்லாத அனைத்து கட்சிகளும் நிச்சயம் ஏற்று கொள்வார்கள். அதைப்பற்றி நான் பேசினால் அதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

  //தமிழகத்தில் கரண்ட் இல்லை என்றால், கருணாநிதியே காரணம் என்கிறார்கள். ‘சரி*, வெளக்கெண்ணெய் வந்து ஒரு வருஷம் ஆச்சே, என்ன கிழிச்சாங்க.. இருட்டு மட்டும்தானே மிச்சம்’ என்றால், அதெப்படி ஒரு வருஷம் போதும், 10 வருஷம் வேணும் என்கிறார்கள். ஆடத் தெரியாத தாசி மேடை சரியில்லன்னு முறுக்கிக்கிட்டாளாம்!//

  ஒரு மின் திட்டம் நிறைவேற குறைந்தது இரண்டு ஆண்டுகள், அதிக பட்சம் நான்கு ஆண்டுகள் தேவைப்படும். கடந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் இருந்தது. எந்த ஒரு திட்டம் முடிக்கப்பட்டது என்று கருணாநிதியே சொல்லவில்லை. இந்த திட்டத்தை ஆரம்பித்தோம், அந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினோம் என்று தான் சொல்கிறார். அன்றைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி திறமையான அமைச்சர் என்று அவர் வீட்டிலேயே ஒப்பு கொள்ள மாட்டார்கள். “மின் தட்டுபாடு ஏன் ஏற்படுகிறது என்று தெரியவில்லை. திமுக தோற்றால் அதற்கு மின் தட்டுபாடு தான் காரணம்” என்று தான் சொன்னார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் முந்தைய அதிமுக ஆட்சி தான் காரணம் என்று பிரச்சாரத்தில் எந்த இடத்திலேயும் சொல்லவில்லை. 6 மாதத்தில் மின் தட்டுபாடு நீங்கும் என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். ஆட தெரியாத தாசி என்று நீங்கள் சொல்வது மானாட மயிலாட நிகழ்ச்சியா என்று தெரியவில்லை.

  //வெளியில் எங்களைப் போன்றவர்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.//

  மற்றவர்கள் கவனிக்கிறார்களா என்பதை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என் கருத்துக்களை மனதுக்கு தோன்றியபடி பதிவு செய்கிறேன். அதில் ஆட்சேபகரமாக ஏதாவது இருந்தால் இந்த வலை தளத்தை நடத்துகிறவர்கள் தணிக்கை செய்வார்கள், இல்லையென்றால் பிரசுரிப்பார்கள்.

  முடிவாக நான் இந்த வலைதளத்தில் கருத்து பதிவு செய்கிறவர்களை மதிக்கிறேன். அவர்களை எந்த விதத்திலும் நகைச்சுவைக்காக கூட கிண்டல் செய்ததில்லை. அவர்கள் கருத்துக்களை போடாதீர்கள் என்று வினோவிடம் சொன்னதும் இல்லை. நீங்கள் அது போல் பேசினால் எனக்கு கவலையும் இல்லை.

 12. Manoharan

  என்றைக்கு குடியரசு தலைவராக பிரதீபா பதவி ஏற்றாரோ அன்றைக்கே அதன் மதிப்பு போய்விட்டது. சேற்றுக் குட்டையில் கலாம் விழாமல் இருப்பதே நல்லது.

 13. Manoharan

  நாட்டின் முதல் குடிமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு இருந்திருந்தால் கலாம்தான் இந்தியாவின் நிரந்திர ஜனாதிபதி.

 14. பாவலன்

  //அவர்களை எந்த விதத்திலும் நகைச்சுவைக்காக கூட கிண்டல் செய்ததில்லை.// (கிருஷ்ணா)

  நகைச்சுவை தமிழர் பண்பு தான்!

  கமல் படங்களில் எனக்குப் பிடித்த ஒன்றே அவர் நகைச்சுவை தான்.
  பல்ராம் நாயுடு காரக்டரை இன்னும் மறக்க முடியாது.

  இந்த வலையில் நான் யாரையும் நகைச்சுவை செய்தது இல்லை.
  யாரும் தவறாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்பதால் தான்.
  ஆனால் மற்றபடி நான் பலரையும் வைத்து நகைச்சுவையாக
  பாடல்கள் எழுதி இருக்கிறேன். இதில் மிகவும் பிடித்தது கமலை
  வைத்து நான் எழுதிய ‘அரிது அரிது’ பாடல் தான்!

  -பாவலன்

 15. r.v.saravanan

  கலாம் எந்தப் போட்டியுமின்றி இந்தியாவின் முதல் குடிமகனாக வரவேண்டும். அவரது இரண்டாவது பதவிக்காலம் எந்தவித விமர்சனங்களுக்கும் அரசியல் மாச்சரியங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும்.

  அரசியல்வாதிகளோடு சேர்ந்து அவரும் அடித்துக் கொண்டு தோற்பதைப் பார்ப்பது கண்டிப்பாக நம் விருப்பமல்ல

 16. Rajkumar.V

  Krishna says
  ஒரு மின் திட்டம் நிறைவேற குறைந்தது இரண்டு ஆண்டுகள், அதிக பட்சம் நான்கு ஆண்டுகள் தேவைப்படும். கடந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் இருந்தது. எந்த ஒரு திட்டம் முடிக்கப்பட்டது என்று கருணாநிதியே சொல்லவில்லை

  nenga paper elam padikaringala?

  Namathu MGR, Dinamalar thavira vera ethuvume ungaluku nadu nilai pathirikaya theriyathala?

  Karunanidi ela timeum pakam pakama Avar thodankuna Min thitangala pathi solarar. Athuthan Ipa vara poguthunum solarar. Unga Amma avar solara ovoru thitathaum thappu nu solirukangala (proof panirukangala)?

 17. Rajkumar.V

  Venkatesh, Madurai says
  கட்டுரைக்கு ஆரோக்கியமான கருத்து சொல்வது இவர்கள் நோக்கமல்ல. கட்டுரை கிடக்கட்டும். நாம் நினைப்பதுதான் சரி என எல்லோரும் பேசிவிட வேண்டும் என்ற சூழலை உருவாக்கும் ஒரு நச்சுத் திட்டம் இது.

  தினமலர் படிங்க வெங்கடேஷ் . கட்டுரை முழுக்க நச்சா தான் இருக்கும். அங்க இருந்து வரவங்க எப்பிடி இருபங்க?
  இப்படித்தான் Example Krishna .

 18. Krishna

  //nenga paper elam padikaringala?

  Namathu MGR, Dinamalar thavira vera ethuvume ungaluku nadu nilai pathirikaya theriyathala?

  நான் என்றும் தமிழ் பேப்பர்களை படிப்பதே இல்லை. Deccan Chronicle, New Indian Express, Financial டைம்ஸ், TOI மட்டும் தான். முன்பு ஹிந்து படித்து கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் மாநில செய்திகளை கம்மியாக தான் போடுகிறார்கள். தேசிய மற்றும் சர்வ தேச செய்திகள் தான் வருகின்றன. எனவே தான் மேலே சொன்ன 4 நாளேடுகளை படிக்கிறேன். Financial Times மற்றும் Deccan Chronicle ஏடுகளில் கடந்த திமுக ஆட்சியின் குளறுபடிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கும் இரண்டும் காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள். அதுவும் Deccan Chronicle பத்திரிகை IPL Deccan Chargers அணியை தலைவராக கொண்டவரால் நடத்தப்படுகிறது.

  //Karunanidi ela timeum pakam pakama Avar thodankuna Min thitangala pathi solarar. Athuthan Ipa vara poguthunum solarar. Unga Amma avar solara ovoru thitathaum thappu nu solirukangala (proof panirukangala)?//

  கருணாநிதி என்றும் பக்கம் பக்கமாக ரீல் சுத்துவார். விலைவாசி உயர்வை பற்றி கேட்டால் அவரே ஒரு விலைப்பட்டியலை தயார் செய்து அதில் அரிசி, பருப்பு, மிளகு, உப்பு போன்றவற்றின் விலையை அவரே குறைத்து சொல்வார். அவர் 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டமும் முடிக்கப்படதாக தெரிவிக்க வில்லை. அந்த திட்டத்தை ஆரம்பித்தோம், இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினோம் என்று தான் சொல்வார். இப்படி தான் கடந்த காலங்களில் கூவத்தை சீரமைத்து படகு விடும் திட்டம் என்று ஆரம்பித்தார். அது படகு விழாவோடு முடிந்தது. கூவம் சீரடையக்காணோம். வீராணம் திட்டம் என்றார். ஆனால் சாலைகளில் ஆங்காங்கே வீராணம் பைப்புகள் மட்டும் தூங்கி கொண்டிருக்கும். அங்கு பலர் குடும்பம் நடத்துவதற்கு உபயோக படுத்துவார்கள். சர்க்காரியா கமிஷன் ரிப்போர்டுகளிலேயே இவருடைய ஆட்சியில் எவ்வளவு கொள்ளை போனது என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று இந்திரா அம்மையாரிடம் சரணாகதி அடைந்து சர்க்காரியா கமிஷனை குப்பையில் போட்டார்.

  //தினமலர் படிங்க வெங்கடேஷ் . கட்டுரை முழுக்க நச்சா தான் இருக்கும். அங்க இருந்து வரவங்க எப்பிடி இருபங்க?
  இப்படித்தான் Example Krishna .//

  நான் தினமலர் படிப்பதில்லை. ஆனால் தினமலரில் வரும் “நச்சுக்கள்” கடந்த கால கலைஞரின் அறிக்கைகளில் எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி அவர் உபயோகித்த வார்த்தைகளின் நச்சுக்களை விட கம்மியாக தான் இருக்கும்.

 19. தினகர்

  //நான் தினமலர் படிப்பதில்லை. ஆனால் தினமலரில் வரும் “நச்சுக்கள்” கடந்த கால கலைஞரின் அறிக்கைகளில் எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி அவர் உபயோகித்த வார்த்தைகளின் நச்சுக்களை விட கம்மியாக தான் இருக்கும்.//

  நன்றாக சீர் தூக்கி பார்க்கிறீர்கள். தினமலர் படிக்காமலேயே, அங்கு வருவதை விட கலைஞர் சொல்வது ’நச்சு’ ஆகத்தான் இருக்கும் என்று முடிவு செய்ததன் மூலம் உங்களது காழ்ப்புணர்ச்சி தெளிவாக தெரிந்து விட்டது. தினமலரை விட உங்களின் இந்த கருத்து அதிக நச்சுத்தன்மை கொண்டதாக தெரிகிறது

  இப்படி காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கும் உங்கள் கருத்துக்கள் எப்படி இருக்கும் என்பதையும் எல்லோருக்கும் எளிதாக புரிய வைத்து விட்டீர்கள் 🙂

  ”அதெல்லாம் தெரியாது, கருணாநிதி செய்தது தப்புத்தான்”. என்று ”நான் பிடித்த முயலுக்கு மூணுகால் தான் என்பது தான் எனது கொள்கை” என்று பட்டவர்த்தமாக சொல்லிவிட்டீர்கள்..

  இப்படிப்பட்ட கருத்துக்கள் என்வழியில் வரவேண்டுமா, வேண்டாமா என்பது ஆசிரியர் எடுக்க வேண்டிய முடிவு.. ஆனால் என்னைப் போன்றவர்கள் இனிமேலும் மறுத்து எழுதுவது வீண் வேலை என்பது தெளிவாக தெரிந்து விட்டது

 20. தினகர்

  “அந்த திட்டத்தை ஆரம்பித்தோம், இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினோம் என்று தான் சொல்வார்”

  அந்த திட்டங்கள் எப்போ செயல்படும் என்று தான் முதல்வர் காத்துக்கொண்டிருக்கிறார்.- சுவிட்ச் போட்டு திறந்து வைக்க.. இவரும் பத்து வருஷமா ஆட்சி செய்தாரே. இது வரை ஒரு திட்டமாவது சுயமா ஆரம்பித்து முடித்து இருக்கிறாரா? கருணா நிதி போட்டு வைத்த திட்டத்தை சுவிட்ச் போட்டு திறந்து வைத்து தன்னுடையது என்று சிறுபிள்ளை போல் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதில் ஒன்றும் குறையில்லை. இனிமேலும் மின் திட்டங்கள் பற்றி பேசினால் இப்படி லூஸ் டாக் செய்யாதீர்கள். வருடம், திட்ட விவரங்களோடு எந்த ஆட்சி என்று சொல்லுங்கள். RIA மூலம் எல்லா விவரமும் எளிதாக கிடைக்கும். நடப்பது வேறு உங்கள் ‘அம்மா’ ஆட்சி. எல்லா விவரமும், அம்மா அபிமானியான உங்களுக்கு சும்மாவே கிடைக்கலாம்.

 21. Rajkumar.V

  நான் என்றும் தமிழ் பேப்பர்களை படிப்பதே இல்லை. Deccan Chronicle, New
  krishna Says
  Indian Express, Financial டைம்ஸ், TOI மட்டும் தான். முன்பு ஹிந்து படித்து கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் மாநில செய்திகளை கம்மியாக தான் போடுகிறார்கள். தேசிய மற்றும் சர்வ தேச செய்திகள் தான் வருகின்றன. எனவே தான் மேலே சொன்ன 4 நாளேடுகளை படிக்கிறேன். Financial Times மற்றும் Deccan Chronicle ஏடுகளில் கடந்த திமுக ஆட்சியின் குளறுபடிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கும் இரண்டும் காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள். அதுவும் Deccan Chronicle பத்திரிகை IPL Deccan Chargers அணியை தலைவராக கொண்டவரால் நடத்தப்படுகிறது.

  Avlo periya Apatakara nenga????????????????.

  Jaya 1996-2001 and 2001-2006 & 20011-2012 periodla curreption nadakave ilaya???
  Sasi groupa arrest paninagale apa ela papers um avangaluku 1000 cr property iruku 5000 cr property irukunu news potangala. Jaya entha kodiya Govt Gajanala sethanga????. Apa jaya & sasi group ethum cruption panave ilayaaa?

  Sasi group Arrest panathum amma na suma va nu sombu thukuningala? ethana cr govt gajanaku vanthuchu??????

  major Industrial more than 90% develop anathu DMk periodla. Padichirukingala overu periya companyum entha periodla start anathunu parunga
  Infrastructure develop anathu DMK periodla. (Govt bulidings , maymbalam,bridges all over tamil nadu list eduthukunga 95% Dmk periodla than mudinchuthu.
  Poombukar Dmk period la than start achu
  Magalir Suyauthavi kulu DMk periodla than start achu.
  Kudisai matru variam, Ulavar santhai, 108 Ambulance, People Insurance, Samacheir kalvi.

  Itha pathi elam unga decan cronical la podalaina avanum ungala mathiri oru somba than irupan

 22. Rajkumar.V

  கருணாநிதி என்றும் பக்கம் பக்கமாக ரீல் சுத்துவார். விலைவாசி உயர்வை பற்றி கேட்டால் அவரே ஒரு விலைப்பட்டியலை தயார் செய்து அதில் அரிசி, பருப்பு, மிளகு, உப்பு போன்றவற்றின் விலையை அவரே குறைத்து சொல்வார். அவர் 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டமும் முடிக்கப்படதாக தெரிவிக்க வில்லை. அந்த திட்டத்தை ஆரம்பித்தோம், இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினோம் என்று தான் சொல்வார். இப்படி தான் கடந்த காலங்களில் கூவத்தை சீரமைத்து படகு விடும் திட்டம் என்று ஆரம்பித்தார். அது படகு விழாவோடு முடிந்தது. கூவம் சீரடையக்காணோம். வீராணம் திட்டம் என்றார். ஆனால் சாலைகளில் ஆங்காங்கே வீராணம் பைப்புகள் மட்டும் தூங்கி கொண்டிருக்கும். அங்கு பலர் குடும்பம் நடத்துவதற்கு உபயோக படுத்துவார்கள். சர்க்காரியா கமிஷன் ரிப்போர்டுகளிலேயே இவருடைய ஆட்சியில் எவ்வளவு கொள்ளை போனது என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று இந்திரா அம்மையாரிடம் சரணாகதி அடைந்து சர்க்காரியா கமிஷனை குப்பையில் போட்டார்.

  Antha plan elam DMK periodla panalainu proof paninangala JAYA & team???? Ungaluku theriuma kaligar panalainu evidance ilama comment pana kudathu. Apidi panuna Padicha muttal nu artham.

  Unga MGR& Jaya sarkariya commision base pani case potrukalamala???? court ku poi proof panaratha vitutu urelam sarkariya commision nu sona epidi???

  Unga amma TANSI case la epdi veliya vanthanga nu theriuma???
  Ipa bangalore case ean vaitha vangitu irukanganu theriumaaa?

 23. Rajkumar.V

  நான் தினமலர் படிப்பதில்லை. ஆனால் தினமலரில் வரும் “நச்சுக்கள்” கடந்த கால கலைஞரின் அறிக்கைகளில் எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி அவர் உபயோகித்த வார்த்தைகளின் நச்சுக்களை விட கம்மியாக தான் இருக்கும்.

  இதுக்கு நண்பர் தினகர் பதில் சொல்லிடறு.

 24. enkaruthu

  நண்பர்களே என் முஸ்லிம் நண்பர்கள் இதற்க்கு முந்தைய பதிவில் தினமலர் மற்றும் காலைகதிர் பற்றி சொன்னது இவ்வளவு விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரியவில்லை.கதவில் கை நசுக்கியதால் என்னால் நிறைய விசயத்துக்கு பதில் போடணும் என்று நினைத்தாலும் பதில் போடமுடியவில்லை.

  //நன்றாக சீர் தூக்கி பார்க்கிறீர்கள். தினமலர் படிக்காமலேயே, அங்கு வருவதை விட கலைஞர் சொல்வது ’நச்சு’ ஆகத்தான் இருக்கும் என்று முடிவு செய்ததன் மூலம் உங்களது காழ்ப்புணர்ச்சி தெளிவாக தெரிந்து விட்டது. தினமலரை விட உங்களின் இந்த கருத்து அதிக நச்சுத்தன்மை கொண்டதாக தெரிகிறது//

  அருமையான கேள்வி நான் கேட்க நினைத்ததை நீங்கள் கேட்டுவிட்டீர்கள். //நான் தினமலர் படிப்பதில்லை. ஆனால் தினமலரில் வரும் “நச்சுக்கள்” கடந்த கால கலைஞரின் அறிக்கைகளில் எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி அவர் உபயோகித்த வார்த்தைகளின் நச்சுக்களை விட கம்மியாக தான் இருக்கும்.//

  அதெப்படி கிருஷ்ணன் நீங்கள் தினமலரே படிப்பதில்லை என்ற பிறகு அந்த பொய்மலரில் வரும் நச்சுகளை மட்டும் எப்பொழுது படித்தீர்கள்.என்ன கனவிலா.உங்கள் குட்டு உடைத்து போய்விட்டது கிருஷ்ணன். சும்மா நடுநிலைமை போல் நடிக்காமல் ஜெயாவின் உண்மை தொண்டனாகவே நீங்கள் ஒரு தேர்ந்த அமைச்சர் போல் கமெண்ட் போடலாம்.வினோ சாரும் அனுமதிப்பார்.நாங்களும் கரண்ட் இல்லாத நேரத்தில் உங்கள் கமெண்டை பார்த்து சிரிப்பொலியில் வரும் வடிவேல் காமெடியை போல் பார்த்து சிரிப்போம்.ஐயோ ஐயோ.

 25. enkaruthu

  //ஒரு மின் திட்டம் நிறைவேற குறைந்தது இரண்டு ஆண்டுகள், அதிக பட்சம் நான்கு ஆண்டுகள் தேவைப்படும். கடந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் இருந்தது. எந்த ஒரு திட்டம் முடிக்கப்பட்டது என்று கருணாநிதியே சொல்லவில்லை//

  ஆங்கில பத்தரிகையை மட்டும் படித்து விட்டு தான் மிக மேதாவி ஆகிவிட்டதாக நினைத்துகொண்டு கமெண்ட் போடும் கிருஷ்ணன் அவர்களே.தமிழகம் ஜெயலலிதா தன்னைய முந்திய ஆட்சி காலத்தில் ஒரு மின் திட்டத்தையும் ஆரம்பிக்காததால் கலைஞர் ஆட்சியின் கடைசி காலத்தில் மின்பற்றகுறை ஆரம்பித்தது.அதற்கப்புறம்தான் போர்க்கால நடவடிக்கையில் துரைமுருகன் ஒரு பொது கூட்டத்தில்(இதை ஜெயா மறுக்க திராணியே இல்லாமல் அப்பொழுது அமைதி காத்தார்) சொன்ன திட்டமெல்லாம் ஆரம்பித்தது.இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் கலைஞரின் தா ஆட்சி காலத்தில் இந்த திட்டங்களை முடிக்கமுடியாது என்று தெரிந்தே கலைஞர் ஆரம்பித்தார்.ஈழ தமிழ் விசயத்தில் கலைஞரை நாங்கள் குறைபட்டுகொன்டாலும் மின்விசயத்தில் கலிஞர் கொண்டு வந்த திட்டங்களுக்குத்தான் ஜெயலலிதா அடிக்கல் நாட்ட போகிறார்.

 26. பாவலன்

  கிருஷ்ணாவின் மீது மேற்கண்ட சில பதில்கள் கடுமையாக
  இருந்தாலும் ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறள் வழியில்
  அவற்றில் உள்ள சாராம்சத்தை அறிந்து அவர் மேலும் என் வழியில்
  பதிவு செய்வார் என நான் நம்புகிறேன். விமர்சனங்களை
  சந்திப்பது தான் வாழ்க்கை. என் மீதும் எவ்வளவோ விமர்சனங்கள்
  வந்திருக்கின்றன. அவற்றில் தினகர் வைத்த விமர்சனங்கள் பலவும்
  நேர்மையாக இருந்தன என்பதையும் கிருஷ்ணாவின் பார்வைக்கு
  நான் வைக்கிறேன்.

  ‘உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
  உயர்ந்தாலும்..தாழ்ந்தாலும்..தலை வணங்காமல் நீ வாழலாம்..”

  -பாவலன்

 27. Krishna

  //கிருஷ்ணாவின் மீது மேற்கண்ட சில பதில்கள் கடுமையாக
  இருந்தாலும் ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறள் வழியில்
  அவற்றில் உள்ள சாராம்சத்தை அறிந்து அவர் மேலும் என் வழியில்
  பதிவு செய்வார் என நான் நம்புகிறேன். விமர்சனங்களை
  சந்திப்பது தான் வாழ்க்கை. என் மீதும் எவ்வளவோ விமர்சனங்கள்
  வந்திருக்கின்றன. அவற்றில் தினகர் வைத்த விமர்சனங்கள் பலவும்
  நேர்மையாக இருந்தன என்பதையும் கிருஷ்ணாவின் பார்வைக்கு
  நான் வைக்கிறேன்.//

  பாவலன் அவர்களே, என்னுடைய சில பதிவுகள் சிலர் மனதை புண்படுத்தியதை எண்ணி வருந்துகிறேன். எனது கருத்துகளின் கடுமையை குறைத்து கொள்கிறேன். எனது கருத்துகளின் சாராம்சத்தை ஒரே வரியில் சொல்வதென்றால்: கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்தது போல் மக்களை கடுமையாக பாதிக்கும் இரண்டு லட்சம் ஊழியர்கள் டிஸ்மிஸ், ரேஷன் அரிசி யாருக்கும் கிடையாது, யாரும் மதம் மாற கூடாது போன்ற கொடுமையான சம்பவங்கள் இன்றைய ஆட்சியில் நடை பெறவில்லை என்ற அளவில் மகிழ்கிறேன். மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் referendum முறை சில நாடுகளில் இருப்பது போல் நம் நாட்டில் இல்லை. 2014 – ல் பாராளுமன்ற தேர்தல் வரும். அப்போது மக்களின் எண்ணம் தெளிவாக தெரியும் என்பது தான் என் கருத்தின் சாராம்சம்.

 28. Rajkumar.V

  பாவலன் says
  என் மீதும் எவ்வளவோ விமர்சனங்கள்
  வந்திருக்கின்றன

  Sasi Kudumbatha jaya Arrest panapa Nenga Purachi thalaivi valganu comment potinga.
  Ipa nadunilaiyalarnu solaringa.

  Ipavathu ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறள் வழியில் Jayava pathi மெய்ப்பொருள் kandutingala???????????????????

 29. பாவலன்

  ///2014 – ல் பாராளுமன்ற தேர்தல் வரும். அப்போது மக்களின் எண்ணம் தெளிவாக தெரியும் என்பது தான் என் கருத்தின் சாராம்சம்./// (கிருஷ்ணா)

  மிகச் சரியான கருத்து. தமிழக மக்களின் எண்ணம் என்பதை அறிய
  நானும் ஆவலாக இருக்கிறேன்.

  -பாவலன்

 30. தினகர்

  “கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்தது போல் மக்களை கடுமையாக பாதிக்கும் இரண்டு லட்சம் ஊழியர்கள் டிஸ்மிஸ், ரேஷன் அரிசி யாருக்கும் கிடையாது, யாரும் மதம் மாற கூடாது போன்ற கொடுமையான சம்பவங்கள் இன்றைய ஆட்சியில் நடை பெறவில்லை என்ற அளவில் மகிழ்கிறேன் ”

  பஸ் கட்டணம், பால் விலை, மின்சார கட்டணம் மட்டும் தான் ஏத்தியிருக்காங்க. அரசாங்க ஊழியர்களை டிஸ்மிஸ் பண்ணவில்லை. கோவிலில் ஆடு, கோழி வெட்ட தடை கிடையாது. அதானாலே மக்களே சந்தோஷப்பட்டுகிடுங்கன்னு சொல்றாரு.. அப்படித்தானே ? 🙂

  இது எப்படி இருக்குன்னா, ‘ நல்லவேளை பர்ஸை மட்டும் பிடுங்கிட்டு, ஆளை விட்டுட்டான்ய்யா, அப்பாடா உயிர் பிழைத்தது’ என்று சொல்வது போல் தான் இருக்கிறது.

  ”மக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன. ‘அம்மா’ஆட்சிக்கு உலை வைக்காத பெரிய தவறுகள் நடக்காத வரைக்கும் கவலை இல்லை” என்ற ’பரந்தமனப்பான்மை’ யுடன் கூடிய சிறந்த சிந்தனையுடன் ‘ நீங்க மட்டும்’ வாழ்க வளமுடன் 🙂

 31. தினகர்

  ”என்னுடைய சில பதிவுகள் சிலர் மனதை புண்படுத்தியதை எண்ணி வருந்துகிறேன். “

  ”பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டு என்று நினைத்துக்கொள்வதை போல்” தவறான தகவல்களுடன், விவசாயிகள்,பொது மக்களின் கஷ்டங்களை கொஞ்சமும் நினைவில் கொள்ளாமல், ‘ அம்மா’ ஆட்சி சிறந்தது என்று கொடி பிடித்ததினால் மற்றவர்களின் நகைப்புக்கும் எரிச்சலுக்கும் காரணமாகத்தான் இருந்தது.. குறைந்த பட்சம் விவசாயிகள், பொதுமக்களை கஷ்டப்படுத்தும் அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்தாமலாவது இருந்திருக்கலாம்.

  மக்களுக்காகத்தானே அரசாங்கம். மக்களுக்கு கேடு என்றால் அரசாங்கத்தை எதிர்த்து கருத்து கூட சொல்லக்கூடாதா என்ன?. வட்டச் செயலாளர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

 32. Krishna

  //மக்களுக்காகத்தானே அரசாங்கம். மக்களுக்கு கேடு என்றால் அரசாங்கத்தை எதிர்த்து கருத்து கூட சொல்லக்கூடாதா என்ன?. வட்டச் செயலாளர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?//

  இந்த அரசை பற்றி கருத்து சொல்வது தவறு என்று நான் எப்போது சொல்லியிருக்கிறேன்? 30 மார்க் வாங்கி பெயிலான மாணவன் அடுத்த பரிட்சையில் 60 வாங்குகிறான் என்றால் அது நிச்சயம் சாதனை கிடையாது என்று ஒப்பு கொள்கிறேன். ஆனால் மறுபடியும் பெயிலாகாமால் இருந்தாயே என்று அந்த மாணவனிடம் சொல்வது என்ன தவறு. இன்னும் 4 ஆண்டுகள் இருக்கின்றன, அவன் பெயிலும் ஆகலாம், ஜஸ்ட் பாஸ் ஆகலாம், நிறைய மதிப்பெண்கள் பெறலாம், இதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், இதற்கு காலம் தான் பதில் சொல்லும். இதே நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது, அதற்காக காங்கிரஸ் என்ன தோற்று கொண்டேவா இருக்கிறது, 2009-ல் வெற்றி பெறவில்லையா? பெட்ரோல் உபயோகப்படுத்தும் மக்கள் தான் பால், மின்சாரம் மற்றும் பேருந்தையும் உபயோகப்படுத்துகிறார்கள். எனவே, அவர்களுக்கு மாநில ஆட்சியின் மீது என்று தனியாக கோபம் என்று வராது. பெட்ரோல் விலை ஏற்றும் காங்கிரஸ் அரசில் பங்கு பெரும் திமுக, பால், பேருந்து, மின்சார கட்டணம் ஏற்றும் அதிமுக என்று இரு கழகங்களும் இந்த விஷயத்தில் சம அளவில் உள்ளன. . எனவே deciding factor என்பது வேறு எதாவது விஷயமாக தான் இருக்குமே தவிர, கட்டண உயர்வாக இருக்காது.

 33. பாவலன்

  ///குறைந்த பட்சம் விவசாயிகள், பொதுமக்களை கஷ்டப்படுத்தும் அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்தாமலாவது இருந்திருக்கலாம்./// (தினகர்)

  தினகர் அவர்களே..உங்கள் கருத்து நியாயமானது. நான் interior TN-ஐ
  visit பண்ணி விட்டுத்தான் மக்கள் அதிருப்தியாக இருக்கிறார்கள் என
  வலையில் எழுதி இருந்தேன்.

  “சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்: அதனால்
  உழந்தும் உழவே தலை.”

  கிருஷ்ணா அவர்களே..இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தடை செய்யவேண்டும் என்ற உங்கள் கருத்தை ஏற்க முடியாது.
  அப்படி நடந்தால் தமிழகமும், கேரளமும் ஆடிப் போய் விடும்! இந்தக்
  கருத்திற்கு குமரன், நான், தினகர், என் கருத்து என பலரும் எதிர்ப்பு
  தெரிவித்ததை சுட்டிக் காட்டுகிறேன். நன்றி.

  -பாவலன்

 34. தினகர்

  “இந்த அரசை பற்றி கருத்து சொல்வது தவறு என்று நான் எப்போது சொல்லியிருக்கிறேன்”

  மக்களை வாட்டி வதைக்கும் அரசின் முடிவுகளுக்கு, தூக்கிபிடித்து ஆதரவு தெரிவித்தீர்களே. அதை விடுத்து ஏன் துணிச்சலாக அதை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடாது என்று உங்களை நோக்கித்தான் அந்த கேள்வி.

  “deciding factor என்பது வேறு எதாவது விஷயமாக தான் இருக்குமே தவிர, கட்டண உயர்வாக இருக்காது.”

  இப்போது இருக்கும் மின் தடை, கட்டண உயர்வு திமுக ஆட்சியை விட பல மடங்கு அதிகம் எனப்தை மக்கள் உணர்ந்து தான் இருக்கிறார்கள். அதன் வீரியம் அடுத்த தேர்தலில் தெரியும்

  மக்களின் அரசு எதிர்ப்பு வாக்குகளை சிதறாமல் கிடைப்பதற்காக, விஜயகாந்த் செய்த ”தெய்வத்தோடு தான் கூட்டணி” என்ற கொள்கை தியாகம் தான் அதிமுகவை ஆட்சியில் ஏறியது. திமுக தொகுதிகளின் தோல்வி வாக்கு வித்தியாசங்களை பார்த்தாலே இது புரியும்.

  மூன்று தடவை ஜெயலலிதா முதல்வர் ஆகியிருக்கிறார். ராஜீவ் காந்தி(மரணம்), மூப்பனார்(ஊழல் வழக்குகளால் தனித்து விடப்பட்ட ஜெ. விடம் எல்லா கட்சிகளையும் கொண்டு வந்து சேர்த்தவர்), விஜயகாந்த் என மற்றவர்கள் தான் அவர் ஆட்சிக்கு வருவதற்கு உதவியிருக்கிறார்கள்.

 35. தினகர்

  ”நான் interior TN-ஐ visit பண்ணி விட்டுத்தான் மக்கள் அதிருப்தியாக இருக்கிறார்கள் என வலையில் எழுதி இருந்தேன்.”

  ”இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தடை செய்யவேண்டும் என்ற உங்கள் கருத்தை ஏற்க முடியாது.”

  பாராட்டுக்கள் பாவலன். இப்போது தான் நீங்கள் நடுநிலையாளர் :). ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சி மீது அபிமானம் இருக்கலாம். ஆனால் மக்கள் பிரச்சனை என்று வரும் போது கட்சி பாகுபாடு இல்லாமல். இணையதளத்திலாவது ஒரு மித்த குரல் வரவேண்டும் என்பது தான் எனது அவா.. அது கண்டிப்பாக ஒரு புதிய மாறுதலுக்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

  மீண்டும் ஒரு முறை பாராட்டுக்கள் பாவலன். 🙂

 36. Krishna

  //இப்போது இருக்கும் மின் தடை, கட்டண உயர்வு திமுக ஆட்சியை விட பல மடங்கு அதிகம் எனப்தை மக்கள் உணர்ந்து தான் இருக்கிறார்கள். அதன் வீரியம் அடுத்த தேர்தலில் தெரியும்//

  தினகர் அவர்களே, மின் தடை, கட்டண உயர்வு ஒரு புறம் இருக்கட்டும், இன்று காலையில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன விஷயம் புதுமையாக இருந்தது. அவர் “கடந்த தேர்தலில் திமுக தோற்றதற்கு காரணம், மின் தட்டுப்பாடோ, நில அபகரிப்போ அல்ல, திமுக கவுன்சிலர்களின் அளவுக்கு மீறிய அராஜகங்கள் தான் என்று தெரிவித்தார். அதற்கு நான், அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்களை விட மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று ஜெயலலிதாவே சில நாட்களுக்கு முன் ஒப்புக்கொண்டதை பற்றி தெரிவித்ததற்கு, அவர் ஜெ சொல்வது உண்மை தான். ஆனால் அவர் இதை வெறும் கண் துடைப்புக்காக சொல்கிறாரா, அல்லது ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா அல்லது எம்ஜிஆர் செய்தது போல் மாநகராட்சியையே கலைத்து விடுவாரா என்பது இனி தான் தெரிய வேண்டும். ஆனால் அவர் பேச்சு வெறும் கண்துடைப்பு என்ற பட்சத்தில் இருந்தால், இந்த ஆட்சி நிஜமாகவே சாதனைகள் என்று ஏதாவது செய்தாலும் கூட முப்பது சீட்டுகளுக்கு மேல் தேறுவது கடினம் என்று தெரிவித்தார். இதை நினைக்கும் போது, இரு கழகங்களுக்கும் மாற்று எதுவும் ஏற்படாதா என்ற ஏக்கம் தான் ஏற்படுகிறது.

  //மக்களின் அரசு எதிர்ப்பு வாக்குகளை சிதறாமல் கிடைப்பதற்காக, விஜயகாந்த் செய்த ”தெய்வத்தோடு தான் கூட்டணி” என்ற கொள்கை தியாகம் தான் அதிமுகவை ஆட்சியில் ஏறியது. திமுக தொகுதிகளின் தோல்வி வாக்கு வித்தியாசங்களை பார்த்தாலே இது புரியும்.//

  நான் ஏற்கனவே சொன்னது போல் 1996-ல் இருந்து ஒட்டு போட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் கடந்த தேர்தலை தவிர மற்ற தேர்தலில் எல்லாம் பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் ஒட்டு போட்டு முடித்து விடுவேன். ஆனால் 2011 தேர்தலில் மட்டும் 2 மணி நேரம் மேல் கால் கடுக்க காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் போது வாக்களிக்க வந்தவர்கள் பெரும் பணக்காரர்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் (upper middle class) என்பதை கண்டுகொண்டேன். அவர்கள், வாக்கு சாவடியில் அரசியல் பேசக்கூடாது என்ற விதி முறையை பொருட்படுத்தாமல் நுனி நாக்கு ஆங்கிலத்தில் திமுகவையும் கருணாநிதியையும் திட்டி தீர்த்து கொண்டிருந்தார்கள். நீங்களே சொல்வது போல் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதற்கு இவர்கள் பெருமளவு திரண்டு வந்தது தான் கரணம் என்று தெளிவாக தெரிகிறது. இவர்கள் அடுத்த தேர்தலிலும் வருவார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல் அதிமுக கவுன்சிலர்களின் அராஜகங்கள் அடக்கப்படுகிறதா என்பது நிச்சயம் ஒரு factor ஆக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

 37. பாவலன்

  //இப்போது இருக்கும் மின் தடை, கட்டண உயர்வு திமுக ஆட்சியை விட பல மடங்கு அதிகம் எனப்தை மக்கள் உணர்ந்து தான் இருக்கிறார்கள். அதன் வீரியம் அடுத்த தேர்தலில் தெரியும்// (தினகர்)

  ‘பல மடங்கு அதிகம்’ என்பது மிகையாக இருந்தாலும், மக்கள்
  அதிருப்தி கொள்ளும் அளவிற்கு அல்லல்பட்டு வருகிறார்கள் என்பது
  உண்மை. சென்னைப் பகுதிகளில் Low Voltage-ல் மின்சாரம் வந்து
  ஒரு பொதுநல வழக்கு கோர்ட்டுக்குப் போய் தரமான மின்சாரம்
  வழங்க வேண்டியது அரசின் கடமை என நீதிபதி சொன்னதாக எதிலோ
  படித்தேன் (சமீப செய்தி). இதில் UPS, CVT வசதி இல்லாத வீடுகளில்
  உபயோகப்படுத்தும் TV, Grinder, Fridge, Computer என்ன ஆகும் என
  யோசித்துப் பார்க்க வேண்டும்.

  அடுத்த டாப்பிக்: “AIADMK கட்சிக்கு ஆறுதலான செய்தி என்ன?”
  என்றால் கீழ்க்கண்டவை:

  (1) பார்லிமென்ட் தேர்தல் வரும் 2014-க்குள் மின் உற்பத்தி
  துவங்கினால் மின் வெட்டு குறைந்து அதிருப்தி நிலை மாறலாம்.
  தேர்தல் முன் அதிரடியாக CM மின் கட்டணம் குறைப்பு, அல்லது, புதிய
  இலவச திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

  (2) 2G வழக்கு தீவிரம் அடைந்தால் காங்கிரசிற்கு நிறைய தொகுதிகள் (20-25) ஒதுக்கப் படலாம். கிருஷ்ணா சொன்னபடி இவற்றில் AIADMK ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது.

  (3) தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் (பார்லிமென்ட் தேர்தலில்)
  AIADMK கட்சிக்கான எதிர்ப்பு வோட்டுக்கள் பிரியும் வாய்ப்புள்ளது.
  கிருஷ்ணா சொன்னது போல் இது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும்.

  (4) சிதம்பரம் மீது டாக்டர் சுவாமி கொடுத்த வழக்கின் தீர்ப்பு 2014-ல்
  எதிர்பார்க்கப் படுகிறது. இதுவும் சில திருப்பங்கள் கொடுக்கலாம்.

  (5) கம்யூனிஸ்ட் AIADMK கூட்டணியில் தொடர விரும்புவது போல் உள்ளது.

  நன்றி!

  -பாவலன்

 38. Rajkumar.V

  mayaya Kandu Mayangathinga. Srilanka issuela Kalam oda stand enna? Avar Antha sambavam nadanthapa kandichu ethum pesinara? Ipa samebathula Srilanka poi Rajapakshe va santhichutu Tamilarkal Singalam Kathukanum nu solitu. Ipa elarum nala irukaratha solitu vanthar. Rajapakshe Kalama use pani than nalavanu katunan. Srilankan issue ls DMK va Kora solara vaikal than Kalam Pugal padarinka.
  corruption issue la Avaroda stand enna? Ethum vai therakama than irukarar.
  Srilankan issuela Avar Tamilarkaluku ataharava pesiruntharuna All over india intha issuela Namaku support a irunthirukum. Manasachi oda think pani parunka. Avar matum Rajapaksheva ethirthu poratam arivcaha India fulla Namaku support pannuvanga Ean Avar pannala?
  Etho avar undu avr book sale undunu irukaravara eanpa disturb panarinka?

 39. Rajkumar.V

  பாவலன் says
  என் மீதும் எவ்வளவோ விமர்சனங்கள்
  வந்திருக்கின்றன
  ராஜ்குமார் .V says
  Sasi Kudumbatha jaya Arrest panapa Nenga Purachi thalaivi valganu comment potinga.
  Ipa nadunilaiyalarnu solaringa.

  Ipavathu ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறள் வழியில் Jayava pathi மெய்ப்பொருள் kandutingala???????????????????

  Nadunilayalar Mr. pavalan nan kekakara question kelam why Answer panarathe ila. DMK, Ila Kalaigar, pathi negative news vantha vega vegama comment podaravanga elam nadunilayalar nu solikaranga. Apidi Nadunilayalara iruntha comment poda vendiyathu thana?

 40. mohamed goya sait

  dr.kalam sir avarkal 5 aandu jannathipatiyai irundhu santhetha arashiyal vathikalai veda varungala india virku paditha nermaiyana ilaigarkalai santhepathea
  mell

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *