BREAKING NEWS
Search

‘உடனடி ஜாமீன் அவசியமில்லை’.. இதற்கு அர்த்தம் என்ன?

‘உடனடி ஜாமீன் அவசியமில்லை’.. இதற்கு அர்த்தம் என்ன?

jayalalithaa-new

திமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், இப்போது ‘தமிழக மக்களின் முதல்வர்’ ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டு, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அதற்கு நீதிபதி சொன்ன காரணம்: “ஜெயலலிதாவிற்கு உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டிய அவசியம் இல்லை!”

இதற்கான அர்த்தம் உண்மையிலேயே விளங்கவில்லை. இது நீதிபதியின் தனிப்பட்ட பார்வையா, சட்டத்தின் பார்வையா என்றும் புரியவில்லை. இது தீர்ப்பு மீதான விமர்சனமல்ல. தீர்ப்பின் நோக்கம் புரியாததால் எழுந்த கேள்விகள்!

’18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிச்ச இல்ல.. இப்ப பார் நாங்களும் திருப்பி அதையே செஞ்சு காட்டப் போகிறோம்’ என்று சட்ட அமைப்பு சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. தனி மனிதனுக்கும் சட்ட அமைப்புக்கும் அப்புறம் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.

ஒரு தனி நபர் தனக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்த முனையத்தான் செய்வார். அதில் தவறுமில்லை. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்து, தண்டனை ரத்தானால், இப்போதைய சிறைவாசத்துக்கு நிவாரணம் உண்டா? ஜெயலலிதாவுக்காக மட்டும் இதைக் கேட்கவில்லை.. இதற்கு முன் வைகோ 500 ப்ளஸ் நாட்கள் இருந்தபோதும் இதே கேள்வியைக் கேட்டுள்ளோம்.

‘ஜெயலலிதாவுக்கான இந்த ஜாமின் மறுப்பு, இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேயுடன் பிரதமர் மோடி கட்டித் தழுவி எந்தவித சிறு எதிர்ப்புமின்றி உரை நிகழ்த்தும் வரை தொடருமோ? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் வரை நீட்டிக்கப்படுமோ’ என்ற கேள்விகள் இப்போது புறந்தள்ள முடியாதவையாகி உள்ளன!

இதுவரை தீர்ப்பை மெச்சிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ‘ஏதோ அரசியல் குத்து இருப்பது போலத்தான் தெரிகிறது’ என முணுமுணுப்பதைக் கேட்க முடிகிறது.

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள், தீக்குளிப்புகள், உண்ணாவிரதங்கள், பிரார்த்தனைகளில் சில திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகங்களாக இருந்தாலும், (தனியார் பள்ளி கொள்ளையர்கள் நடத்திய உண்ணாவிரத நாடகம் போல) பல இடங்களில் பொதுமக்களும் கறுப்புத் துணி அடையாளத்துடன் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது. இந்த ஆதரவை வலிந்து இழக்கும் வகையிலான சட்ட ஒழுங்கு மீறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது இப்போது பொறுப்பில் உள்ளவர்கள் கடமையாகும்.

கருணாநிதி வலியுறுத்தும் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையை முதல்வர் பன்னீர்செல்வம் இப்படி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது!

அரசின் தலைவராகப் பொறுப்பேற்ற ஆரம்ப மாதங்களில் வெறும் கருணாநிதி எதிர்ப்பு அரசியலுக்காக சமச்சீர் கல்வி போன்ற நல்ல விஷயங்களில் முட்டுக் கட்டைப் போட்டு வந்த ஜெயலலிதாவை நாம் கடுமையாக எதிர்த்துள்ளோம். இப்போதோ, அதையெல்லாம் தாண்டி வந்து 70 சதவீதம் மக்கள் முதல்வராக அவர் செயல்பட்டார். அம்மா சிமெண்ட் போன்ற மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு, மூவர் தூக்கை நிறுத்தும் விஷயத்தில் அவர் காட்டிய உறுதி, பிரதமராக இருந்தாலும் மோடிக்கும் ஒரு தயக்கத்தை உண்டாக்கிய தைரியம் போன்றவற்றில் ஜெயலலிதா ஜொலிக்க ஆரம்பித்தார். அவரது சொத்துக் குவிப்பு வழக்கு, தண்டனை குறித்து மக்களிடம் எதிர்மறை விளைவுகள் ஏற்படாமல் போனதற்கு மேற்சொன்னவைதான் முக்கிய காரணம்.

இந்த இடைவெளியில் மலையைப் பிளந்து மல்லாத்தி விடலாம் என சுண்டல் கட்சிகளான பாஜக போன்றவை விடும் அரசியல் அறிக்கைகள் ரொம்பவே தமாஷாக உள்ளன.

இப்போதைய சூழலில் ஜெயலலிதா மீண்டு வருவது தமிழக அரசியலுக்கு அவசியமானது. ஈழ வியாபாரிகள், சு சாமி போன்ற சிங்கள தரகர்களை ஒழித்து, அரசு ரீதியான ஆதரவு ஈழத் தமிழருக்குக் கிடைக்க ரொம்பவே அவசியமானது!

-வினோ
என்வழி
49 thoughts on “‘உடனடி ஜாமீன் அவசியமில்லை’.. இதற்கு அர்த்தம் என்ன?

 1. RAjiniRasigan

  Hi Vino,

  I am started to think that you are biased now….to support for Elam/ to oppose Modi you need her to come out !!!! you are indirectly supporting JJ and wishing to get a bail. It means you are not really care what she did.

  I don;t think she can do a change in Tamilnadu politics, if you think she can then you are going to be disappointed

 2. chozhan

  சரியா சொன்னீர்கள் இதில் அரசியல் உள் நோக்கம் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை

 3. Jayakumar

  ஹலோ வினோ,
  உங்கள் கருத்து மிகவும் விநோதமாக உள்ளது. உங்களைப்போன்ற இந்த வழக்கின் அனைத்து விசயங்களும் தெரிந்தவர்களே குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது என்பதை நினைத்து சிரிப்பதா இல்லை வருத்தப்படுவதா என்று புரியவில்லை. யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவன் அரசனாக இருந்தாலும் சரி இல்லை ஆண்டியானாலும் சரி. ஜெயலலிதா இப்போது இலங்கை,காவேரி , முல்லை பெரியார் பிரச்சனை போன்றவற்றில் நன்றாக செயல்பட்டார் என்பதில் எனக்கும் எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்…..

  தாமதமாக வந்தாலும் சிறப்பான தீர்ப்பு. யார், எவர் என்று பாராமல், விருப்பு வெறுப்பின்றி பார்த்தால், உழல செய்பவர்கள் இனி கொஞ்சமாவது யோசிப்பார்கள் என்பது மிக்க மன நிறைவைத் தருகிறது.

  அந்த நீதிபதி எத்தனை விதமான அழுத்தங்களைச் சந்தித்திருப்பார் என்று சிந்தித்துப் பார்த்தால், அவருக்கு நமது ஜனநாயக சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருப்பது புரிகிறது. மைக்கேல் குன்ஹாவும், அவருக்கும் முன்னர் வழக்கை விசாரித்த 13 நீதிபதிகளுக்கும் பாராட்டுக்கள்.

  டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு உதவிய காஞ்சி சங்கராச்சாரியாரை இந்த முறை அணுக இயலாமல் போனது நாட்டின் தேசத்தின் அதிர்ஷ்டம். இறைவனின் செயல்பாடுகள் என்றுமே விசித்திரமானவை. இறுதித் தீர்ப்பு எவரையுமே அகங்காரத்தில் இருந்து மீண்டு உண்மை நிலையை உணர வழிகோலும். ஜெயாவுக்கு அந்தத் தருணம் இது.

 4. bahrainbaba

  தீர்ப்பும் சரியானதே.. நீதிபதி இவர்களின் ஜாமீன் மனுவை நிராகரித்ததும் சரியானதே..
  ஜெயா ஒன்றும் பெரிய நல்லாட்சி தந்து விடவில்லை.. ஈழ ஆதரவும் கிடையாது.. ஒன்றும் கிடையாது.. விடுதலைபுலிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் தீர்ப்பை வேறு நீதி மன்றத்திருக்கு மாற்ற சொல்லி கோரியது எதற்க்காக.. புலிகள் எங்கே இருக்கிறார்கள் ?..
  அம்மா என்ற ஜெயாவின் ஆடை மொழி பெயரில் திட்டங்கள் ஆரம்பிக்க வேண்டிய நோக்கம் என்ன.. தமிழ்நாடு அரசு திட்டம் என்று அதற்க்கு பெயர் வைத்தால் வரவேற்கலாம்..
  உண்மையா சொல்லனும்னா..
  இவங்க ஆட்சி ஒரு கவர்ச்சி ஆட்சி..
  ஒரு ரோடு ஒழுங்கா போடுறது கிடையாது..
  தண்ணி பிரச்சினைக்கு இன்னும் ஒரு ஸ்டேப் கூட எடுக்கல..

 5. kumar

  உங்கள் கருத்து தப்பு. யாராக இருந்தாலும் செய்த தப்புக்கு தண்டனை பெற்றுதான் ஆகவேண்டும்.

 6. senthil

  இதில்..பெரிய அரசியல் உள் குத்து எதுவுமில்லை.. வழக்கை கர்னாடகத்திலிருந்து டில்லிக்கு மாற்றிகொள்ள இந்த தலைவலியிலிருந்து வெளி வர மானில அரசும்.. நீதிமன்றமும் இணைந்து எடுத்துள்ள முடிவு.
  உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும்..இல்லாத பட்சத்தில் சிறை மாற்றம் நிகழும்!!
  மோடி தமிழக எதிர்ப்பை ஒரு பொருட்டாய் எடுப்பதே இல்லை. நம்மிடம் கேள்வி கேட்கும் எம்பி யாருமில்லை அதுவே காரணம்..
  மற்றவை எல்லாம் கற்பனையே

 7. arulnithyaj

  வினு.. இதை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை..ஜெய தமிழ் ஈழத்திற்கு என்ன செய்து விட்டார்..வேறு வழி இல்ல்லாமல் எதோ செய்வது போல் நடித்தார்..இதே விடுதலை புலிகளை தமிழ் நாட்டில் வேட்டை ஆடியதும் அவர்தான்..கருணாநிதியாவது விடுதலை புலிகளால் ஆட்சி இழந்தார் (1991) 14 வருடங்களுக்கு பிறகு கிடைத்த ஆட்சியை..அவர்கள் விடுதலை புலிகளை எதிர்க்க..காரணமாவது இருக்கு..ஆனால் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது எதிர் கட்சியாக என்ன செய்தற் ஜெயா? மூவர் தூக்குக்கு சட்டமன்றத்தில் எதிரப்பு என்று அறிவித்து விட்டு டெல்லி கோர்ட்ல ஆட்சேபனை இல்லை என்று சொன்னார்ர்..பார்லிமென்ட் தேர்தலுக்காக மூவர் தூக்கையும் ரத்து செய்வதாக அவசரமாக தீர்மானம் போட்டார் …முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடிப்பார் ..விடுதலி புலிகளால் உயிர்க்கு ஆபத்துன்னு ஜாமீன் கேட்பார்…வினு 91 முதல் அரசியல் நிகழ்வுகளை பார்த்துகிட்டு வருகிறேன் வினோ ஜெய & கலைஞர் (இவராவது எதாவுது தமிழ்,திராவிடம்,பெரியார்நு சொல்லுவார்) இருவரும் ஊழல் பேர்வழிகளே..தயவு செய்து ஜெயா கைதுக்கு,ஜாமீன் தராதுக்கு வேற காரணம் சொல்லாதீங்க ..சில நியாயம் இருந்தாலும்..

 8. Raj

  vino u r biased, i haven’t expected from you. every one should respect the verdict. what is happening in tamil nadu is a shame for tamil n tamil people. all are supporting and doing bandh for a corrupt lady. shame!!!!!! shame!!!!!!!

 9. Prasad

  India is the only country where we analyze so much about criminals.we should all be thankful to the judge(hats off)who has given this historic verdict.Instead we bring in so much permutations and combinations and keep saying its politically motivated.
  CM post is not a kings post, it is people servant’s post.Jaya never realized it and her corruption was very open and she did that with lot of arrogance and she is paying the price now.

 10. Nakeeeran

  Vino,

  உங்களுடைய கருத்து தமிழ்நாட்டு மக்களின் மனதை பிரதி பலிக்கிறது…. இன்று தான் நீங்கள் நாடு நிலையாக செயல் பட்டு உள்ளீர்கள்

 11. Sargunam

  ஜெயலலிதா ஒண்ணும் ரொம்ப நல்லவங்க கிடையாது…..

  நீதிபதியின் இன் தீர்ப்பு மிக மிக சரியானது…..

  இவங்க ஆட்சிக்கு வந்து முதல்ல என்ன பணங்கன்னு உங்க எல்லாத்துக்கும் நினைவு இருக்கோ இல்லையோ … எனக்கு நல்ல நினைவு இருக்கு…

  சென்னை ல இருக்கிற பஸ் எல்லாத்தோட கலர் எ யும் மாத்தி அடிச்சதுதான் எதுக்குன்ன அது கலைனர் ஆட்சி காலத்துல இருந்த கலர் ஆம் ..

  பேருந்தோட கலர் உங்கள என்னங்க பண்ணுச்சி …!!!!

  மக்கள் வரிபனதுல கட்டின தலைமை செயலகம்…

  எல்லாத்துக்கும் என்ன காரணம் ” போட்டி, பொறாமை, திமிர் தான் கரணம்…

  எல்லாத்துக்கும் மேல எங்க அன்பு தலைவர ( TAMIL CINEMA 100 YEARS FUNCTION )
  அவமானபடுத்தியது..

  ( எந்த ஒரு ரஜினி ரசிகனும் இதை மறக்க மாட்டான் …..)

 12. Devaraj

  Hi Vino,biased analysis.
  What has she done, even before assembly elections you listed all the administrative mistakes, why sudden change in opinion.
  Name one good scheme by JJ, apart from idli ,dos ai scheme.
  Regarding Srilankan issue she flip flopped clearly to gain political mileage,not genuine.
  All the good schemes,railways, highways, secretariat,library Samaseer Kalvi everything was stopped.
  Think again before publishing in this site. A Thaliver fan should never support a corrupt convict be it from Admk or DMK.
  Cheers
  Dev.

 13. Jayakumar

  ஹலோ வினோ,

  உடனடி ஜாமீன் அவசியமில்லை. இதற்கு அர்த்தம் என்னவென்றால், மக்களின் ஆதரவை பெற்று ஆட்சியில் அமர்ந்துகொண்டு, ஊழல் புரிந்து விட்டு அந்தகுற்றம் நிரூபணம் ஆகி தண்டனைபெற்ற குற்றவாளிக்கு உடனே ஜாமீன் வழங்கி வீட்டிற்கு அனுப்பினால், 18 ஆண்டுகளாக ஒரு வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்கிய சட்டத்திற்கு என்ன மதிப்பு இருக்கிறது? சிறையில் அவர் ஒன்றும் கஷ்டப்படவில்லை. அவருக்கு வேண்டிய வசதிகள் சிறை நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்படுகிறது. மருத்துவ வசதிகளும் உள்ளது. வேறு என்ன வேண்டும் ஒரு குற்றவாளிக்கு? அனைத்து விசயங்களும் தெரிந்தவர்களே குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கினால், நாம் இனிமே ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கவும், பேசவும் தகுதி இழந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது.

 14. Jayakumar

  ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 1,136 பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பு விவரத்தை படிக்க படிக்க ஏராளமான தகவல்கள், திகில் விஷயங்கள், அதிர வைக்கும் விவகாரங்கள்… தீர்ப்பிலிருந்து கொஞ்சம் இதோ….

  பெயர்: ஜெயலலிதா தொழில்: முதல் அமைச்சர் (அரசு ஊழியர்) முந்தைய சொத்து மதிப்பு: முதல்வர் ஆகும் முன் ஜெயலலிதா காட்டிய மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2 கோடி

  1991-1996 காலகட்டத்தில் வருமானம்: முதல்வர் சம்பளம் மாதம் 1 ரூபாய். மற்ற வகைகளில் ரூ. 9.91 கோடி (இதில் பல வங்கிகளில் வாங்கிய லோன்களும் அடக்கம்) 1991-1996 காலகட்டத்தில் செய்த செலவு: ரூ. 8.49 கோடி மிச்சம் இருந்தது: ரூ. 1.4 கோடி இந்த காலகட்டத்தில் ஜெ., சசி, இளவரசி வாங்கிய சொத்துக்களின் மதிப்பு: ரூ. 55 கோடி. இவர்களது செலவுகளையும் கணக்கில் சேர்த்தால் சொத்தின் அளவு மொத்தம் ரூ. 63.5 கோடி கேள்வி: வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இவ்வளவு சொத்தும் பணமும் எங்கிருந்து வந்தது? சசிகலாவின் வருமானங்கள் மூலமாக இந்தப் பணம் வந்திருக்கலாமே என்று வாதாடக் கூட முடியாது. காரணம், ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன், ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலா வாழ ஆரம்பிப்பற்கு முன் அவரது சொத்து விவரங்கள் இவை தான். பெயர்: சசிகலா தொழில்: ஏதும் இல்லை. அரசுத்துறையில் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்த கணவர் நடராஜனின் வருமானம் மட்டுமே முந்தைய சொத்து மதிப்பு: 1987ம் ஆண்டு நடராஜன் வீடு வாங்கவே லோன் வாங்கியுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க ரூ. 3,000 லோன் வாங்கியவர் நடராஜன். நடராஜனின் தந்தை சாமிநாதன் மன்னையார் மற்றும் சித்தப்பா பழனிவேல் ஆகியோருக்கு சேர்த்தே 24 ஏக்கர் நிலம் தான் இருந்தது. நடராஜனின் தாயார் லீலாவதி பெயரில் 3.5 ஏக்கர் நிலம் இருந்தது. ஆக, நடராஜன் தந்தை-தயாருக்கு என சொந்தமாக இருந்தது 17.5 ஏக்கர் நிலம் மட்டுமே. இந்த நிலம் நடராஜனுக்கு மட்டும் சொந்தம் அல்ல. உடன் பிறந்தவர்களுக்கும் பங்கு இருந்தது. இதன்மூலம் நடராஜனுக்கு பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை என்பது நிரூபணமாகிறது. சசிகலாவின் தந்தை விவேகானந்தன் ஒரு நாட்டு வைத்தியர். அவருக்கும் 9 பங்காளிகளுக்கும் சேர்த்து இருந்த மொத்த நிலமே வெறும் 81 சென்ட் மட்டுமே. இந்த சொத்தில் சசிகலா, வனிதா மற்றும் 6 சகோதரர்களுக்கு பங்கு இருந்தது. இதனால் சசிகலாவுக்கும் பூர்வீகச் சொத்துகள் என சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. மேலும் சசிகலா வருமான வரி கூட கட்ட வேண்டிய நிலையில் கூட இருந்தது இல்லை. ஜெயலலிதாவுடன் வசிக்க ஆரம்பித்த பிறகே அவரது வருமானம் கிடுகிடுவென அதிகரித்து வருமான வரி கட்டவே ஆரம்பித்தார். அப்படி என்றால் இளவரசி மூலமாக கிடைத்த வருமானத்தில் ரூ. 53.60 கோடி சொத்துக்களை வாங்கியிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. காரணம், இளவரசியின் பொருளாதார நிலைமை இருந்த நிலை அப்படி… பெயர்: இளவரசி தொழில்: ஏதும் இல்லை வருமானம், முந்தைய சொத்து மதிப்பு: இவரது கணவர் ஜெயராமன் உணவு வழங்கல் துறையில் வேலை பார்த்த கிளார்க். வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க இளவரசி தாக்கல் செய்த வருமான சான்றிதழில் கூறியுள்ளபடி ஆண்டு வருமானமே ரூ. 48,000 தான். அதாவது, மாத வருமானம் ரூ. 4,000 மட்டும் தான். (ஜெயலலிதாவின் ஹைதராபாத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியானவர் ஜெயராமன் என்பது குறிப்பிடத்தக்கது) சரிப்பா, அப்படீன்னா சுதாகரன் என்ற மாபெரும் மனிதர் இருக்கிறாரே. அவரது வருமானம் மூலம் சொத்துக்களை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் வாங்கியிருப்பார்கள் என்று வண்டு முருகன் வக்கீல் கூட வாதாட முடியாது. காரணம், பெயர்: வி.என்.சுதாகரன் தொழில்: அப்படி ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை சசிகலாவின் அக்காள் வனிதாமணி- டி.டி.விவேகானந்தனின் மகனான சுதாகரன் வங்கி கணக்கு ஆரம்பிக்கும் நிலைக்கு வந்ததே 1992-ம் ஆண்டு தான். இந்தக் கணக்கை தொடங்க சுதாகரன் செலுத்திய பணமே வெறும் ரூ. 105 தான். நல்லா படிங்க 105 ரூபா தான். இவர் தான் ஜெயலலிதாவால் தத்து எடுக்கப்பட்டு, வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்டு பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக திருமணம் நடத்தப்பட்டது. இந்த நிலைமையில் இருந்தவர்கள் தான் அடுத்த 5 வருடத்தில் தமிழகம் முழுவதும் 306 சொத்துக்களுக்கு அதிபதி ஆகி உள்ளனர். அதன் விவரம் இதோ இந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு ரூ. 2,847 கோடி என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ சரி, இந்தப் பணம் எப்படித்தான் வந்திருக்க வேண்டும்? ரோடு காண்ட்ராக்ட், தொழிற்சாலைக்கு அனுமதி, அரசு ஊழியர் டிரான்ஸ்பர், அரசு பஸ்களுக்கு டயர் வாங்குவதில் கமிஷன், பத்திரப் பதிவுத்துறையில் இருந்து தினமும் இவ்வளவு வர வேண்டும் என துறைவாரியாக பல வகைககளிலும் லஞ்சம் வசூலிக்க முடியும். அரசின் சார்பில் கக்கூஸ் கட்டுவதில் இருந்து செத்தவரை எரிக்கும் மின்சார மயானம் வரை எல்லா வகைகளிலும் எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்க பல பல வழிகள் கையாளப்படுகின்றன. (உதாரணத்துக்கு ரோடு காண்ட்ராக்டில் எப்போதுமே 35 சதவீதம் கமிஷனாகவே போய்விடும். அது எந்த ஆட்சியாக இருந்தாலும். ரூ. 10 கோடி மதிப்பில் போட வேண்டிய சாலைக்கு ரூ. 3.5 கோடியை அமைச்சருக்கும் கவுன்சிலர்களுக்கும் ஊராட்சி, நகராட்சி அதிகாரிகளுக்கும் கிளார்க், பியூன்களுக்கும் லோக்கல் கட்சிக்காரர்களுக்கும் லஞ்சமாக தந்துவிட்ட காண்ட்ராக்டர் மிச்சமிருக்கும் ரூ. 6.5 கோடியில் தான் ரோடே போடுவார். இவர்களுக்கு தேனை அள்ளித் தந்துவிட்டு காண்ட்ராக்டர் புறங் கையையா நக்க முடியும்?. அவர் ரோடு போட வேண்டிய பொருள்களின் தரத்தில் கையை வைப்பார். இதனால் தான் ரோடு போட்டுவிட்டு ரோடு ரோலர் போகும்போதே அதன் சக்கரத்திலேயே பாதி ரோடும் சேர்ந்து ஒட்டிக் கொண்டு போய்விடுகிறது) துறைவாரியாக அமைச்சர்கள் தினந்தோறும் இவ்வளவு தர வேண்டும், வாரம் இவ்வளவு தர வேண்டும், மாதம் இவ்வளவு தர வேண்டும், இத்தனை கோடி திட்ட ஒப்புதலுக்கு இவ்வளவு பர்சன்ட் கமிஷன் வாங்கித் தர வேண்டும் என டார்கெட் வைத்தோ மற்றும் நேரடியாகவோ தான் இந்தப் பணத்தை இவர்கள் வசூலித்திருக்க வேண்டும். லஞ்சத்தை செக்கிலோ, டிடியாகவோ வாங்க முடியாதே. இதனால் பெரும்பாலும் பணமாகவோ, நகைகளாகவோ, அசையும்- அசையா சொத்துக்களாகவோ வந்திருக்க வேண்டும். பணமாக வந்ததை வெள்ளையாக்க வேண்டுமே.. அதற்காகவே உருவாக்கப்பட்டன டுபாக்கூர் நிறுவனங்கள். அவை இதோ… i. M/s.J. Farm Houses; ii. M/s.J.S. Housing Development; iii. M/s.Jay Real Estate; iv. M/s.Jaya Contractors and Builders; v. M/s.J.S. Leasing and Maintenance; vi. M/s.Green Farm Houses; vii. M/s.Metal King; viii. M/s.Super Duper TV (P) Ltd., ix. M/s.Anjaneya Printers Pvt. Ltd., x. M/s.Ramraj Agro Mills Ltd., xi. M/s.Signora Business Enterprises Pvt., Ltd., xii. M/s.Lex Property Development Pvt., Ltd., xiii. M/s.Riverway Agro Products Pvt., Ltd. xiv. M/s.Meadow Agro Farms Pvt., Ltd., xv. M/s.Indo Doha Chemicals & Pharmaceuticals Ltd., xvi. M/s.A.P. Advertising Services; xvii. M/s.Vigneswara Builders; xviii. M/s.Lakshmi Constructions; xix. M/s.Gopal Promoters; xx. M/s.Sakthi Constructions; xxi. M/s.Namasivaya Housing Development; xxii. M/s.Ayyappa Property Developments; xxiii. M/s.Sea Enclave; xxiv. M/s.Navasakthi Contractors and Builders; xxv. M/s.Oceanic Constructions; xxvi. M/s.Green Garden Apartments; xxvii. M/s.Marble Marvels; xxviii. Vinod Video Vision; xxix. Fax Universal; xxx. Fresh Mushrooms; xxxi. M/s.Super Duper TV., and xxxii. M/s.Kodanadu Tea Estate; இந்த நிறுவனங்களில் எந்த பிஸினசும் நடக்கவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம். இவை எதையும் தயாரிக்கவும் இல்லை, விற்கவும் இல்லை. ஆனால், பணம் மட்டும் இந்த நிறுவனங்கள் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு வந்து குவிந்து கொண்டே இருந்தது. இந்த நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்திலும் எதையும் உற்பத்திச் செய்யவில்லை. பொருள்களை வாங்கி விற்கவும் இல்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன என்று சசிகலா, இளவரசியின் ஆடிட்டர் பாலாஜி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதாவது இவை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்கள். லஞ்சமாக வந்த பணத்தை வங்கிகளில் போடவும், அதை வெள்ளையாக மாற்றி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனின் கணக்குகளுக்கு மாற்றவும் மட்டும் இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு ஜெயலலிதாவும் சசிகலாவும் மொத்தம் 52 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் இந்த நிறுவனங்களுக்காக போலி பேலன்ஸ் ஷீட், லாப – நட்டக் கணக்கு விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதும் நிரூபணமாகியுள்ளது. லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணத்தை போயஸ் கார்டனில் வேலை பார்த்த கார் டிரைவர் ஜெயராமன் என்பவர் மூலமாக சசிகலா மூட்டைகளிலோ அல்லது பைகளிலோ கொடுத்து, கூடவே பூர்த்தி செய்யப்பட்ட சலானையும் கொடுப்பார். அதை இந்த டிரைவர் எடுத்துச் சென்று சசிகலா சொன்ன வங்கியிலு, சொல்லும் கணக்கில் போட்டுவிட்டு வருவார். இதை ஜெயராமனே சாட்சியாக அளித்துள்ளார். நம்மைப் போன்றவர்கள் வங்கிக்குப் போய் வீட்டுக்கு ஒரு பத்தாயிரம் அனுப்ப முயன்றால் பேன் கார்டு கொண்டு வா, ஈ கார்டு கொண்டு வா என்று வங்கிகளில் ரூல்ஸ் பேசி திருப்பி அனுப்புவார்கள். ஆனால், ஒரு டிரைவர் மூட்டையிலும் பையிலும் கொண்டு வந்த லட்சக்கணக்கான பணத்தை, கேள்வியே கேட்காமல் வாங்கி கணக்கில் போட்ட வங்கி அதிகாரிகளை என்னவென்று சொல்வது.. அதாவது அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் பணம் இது என்பதால் கப்சிப் என வாங்கி வரவு வைத்துள்ளனர். இவ்வாறு இந்த நிறுவனங்களுக்கு வந்த பணம் பின்னர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

 15. s. venkatesan, nigeria

  உங்கள் கருத்து தவறு. யாராக இருந்தாலும் செய்த தப்புக்கு தண்டனை பெற்றுதான் ஆகவேண்டும்.
  1. அவர் உண்மையாகவே ஈழம் மற்றும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாளரா? அல்லது ஒவ்வொரு தேர்தலுக்காக போட்ட வேடமா?
  2. இலவசங்கள் கொடுத்து நாட்டை கெடுக்கிறாரா? அல்லது பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வைத்து இருக்கிறாரா? (கடந்த மாதம் வெளிவந்த தகவலில் தமிழ்நாடு கடைசி இடத்தில் உள்ளது – one india நியூஸ் )
  3. நீங்கள் சிறந்த பத்திரிக்கையாளர். 1991-96-இல் வாங்கிய பதிவு செய்த சொத்துக்கள் அவரின் பரம்பரை சொத்துக்கள் என்று நம்புகிறீர்களா?

 16. subash

  நன் சாகுற வரைக்கும் rajini ரசிகன் தான் .. ne oru political katchi ku support ah pesuna …nan ippadi thaan thituven

 17. subash

  incase rajini bjp la serthuda ..un moojiyae kondu enga vaipa ..nee ninaikalam yen comment kevalama irukunu … ne rajini perula unaku pudicha kazhi ya perusa pesura … nan enaku pudicha kazhi ya pathi pesurenn… ithula enna thappu..

 18. குமரன்

  இது சட்டத்தின் சரியான பார்வை.

  இப்போது தரப்பட்ட தீர்ப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தாள், ஜெயலலிதா பதவி இழந்திருக்க வாய்ப்பில்லை. உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அளித்த தீர்ப்புக்குப் பின்னரே இரு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்றவர்கள் தமது எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. , அமைச்சர் பதவிகளை உடனடியாக இழக்கிறார் என்ற நிலை நிறுவப்பட்டது.

  வழக்கை வினோதமான காரணங்களுக்காக இழுத்தடித்தவர் ஜெயலலிதாதான்.

  தமிழில் மொழிபெயர்ப்பு வேண்டும் என்று ஒரு மனு.
  எனக்கு அதே அரசு வழக்கறிஞர்தான் என்று ஒரு மனு. இப்படி ஒரு மனுவை வேறு யாராவது செய்தால் கதையே வேறு. ஆனால் ஜெயாவின் இந்த மனுவுக்கும் அவருக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே பவானி சிங்கைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நியமித்தது. அந்த பவானி சிங்தான் தற்போது பிணை தரக்கூடாது என்று எழுத்துப் பூர்வ மனு தாக்கல் செய்து, காலையில் பலமாக என் தரக்கூடாது என்று வாதாடிவிட்டு, மதியம் எமக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை என்று சொல்கிறார். அவர்தான் தனது மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை என்று இரு முறை வாய்தா வாங்கினார்.

  ஆக பவானி சிங்கும் ஜெயா சார்பாகவே வாதாடினார். இதை நீதிபதி குன்ஹா தீர்ப்பிலேயே சொல்லி விட்டார்.

  அதனால்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகராவும், பவானி சிங்கின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தவே, மதியம் அவரைப் பார்த்து நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டு, அவரும் ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டார். பிறகு, நீதிபதி சரியான தீர்ப்பை வழங்கினார்.

  உழல வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் ஊழல் செய்யும் நாடு இது ஒன்றாகத்தான் இருக்கும்.

  ஓர் உழல முதல்வர் தண்டிக்கப்பட்டதில் நேர்மையையும், நாணயத்தையும் விரும்பும் அனைவரும் மனதார மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

  அதிமுக அடிமைகளும், அடிவருடிகளும்தான் இதற்கு விதவிதமான காரணங்களைக் கற்பிக்கின்றனர் என்றால், வினோவும் கூட அவர்க்ளின் பொய்ப் பிரசாரத்துக்கு மயங்கி விடக் கூடாது.

  கிடைத்திருப்பது உழலுக்கான தண்டனை. இதை ஏதோ அரசியல், காவேரி, இலங்கை என்றெல்லாம் திசை திருப்பி, ஜெயாவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி 2016 தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஆபாச ஆர்ப்பாட்டங்களை அதிமுகவினர் நடத்தி வருகின்றனர். அதற்கு உள்ளே இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூலம் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். இது தெரிந்துவிடக் கூடாது என்று தாம் யாரையும் பார்ப்பதில்லை என்று நாடகம் நடிக்கிறார்.

  ஆ ஊ என்றால் அதிமுகவினர் 2G என்று வலைப்பக்கங்களில் திசை திருப்பும் செயலில் ஈடுபடுகின்றனர். அந்த வழக்கில் விசாரணைக் கைதியாக ஆ. ராசா ஒன்றரை வருடம் ஜாமீன் இல்லாமல் இருந்தார்.
  சரத்குமாரும் இன்னபிற குற்றம் சாட்டப்பட்டவர்களும் அப்படியே இருந்தனர். கனிமொழி ஆறு மாதம் இருந்தார்.

  ஜெயாவோ தீர்ப்பு வந்த பின்னர் பத்து நாள் இருப்பதற்கே நாட்டையே பாடாய்ப் படுத்தி விட்டார்.

  போதாக் குறைக்கு, ஒருவேளை அப்பீலில் வென்றுவிட்டால் நான் சிறையில் இருந்த காலத்தை யார் தருவார் என்று கேள்வி வேறு.

  இந்தமாதிரி வாதங்களை எடுத்துக் கொடுக்க சோ என்று ஒரு வேஷதாரி முன்னால் நிற்கிறார். ஆ. ராசா உள்ளே இருந்த போது கொக்கரித்த சோ இப்போது ஒப்பாரி வைக்கிறார். கேடுகெட்ட பிழைப்பு.

  இந்த சோ ஜெயாவின் பினாமியை, சாராயக் கம்பெனிகளிலும், தாது மணற்கொள்ளை வைகுண்டராஜன் கம்பெனிகளிலும் இயக்குனராக இருந்தது வெளிவந்து விட்டது.

  தற்போது நடந்து வரும் மிடாஸ்-டாஸ்மாக், மற்றும் தாதுமணல் கொள்ளை ஊழலில் மறைமுகப் பங்கு கொண்ட சோ இப்போது தண்டனைக் குற்றவாளி ஜெயாவுக்கு ஆதரவாகப் பேசாமல் என்ன செய்வார்?

 19. குமரன்

  இப்போதைய சூழலில் ஜெயலலிதா மீண்டு வருவது தமிழக அரசியலுக்கு ஆபத்தானது.

  அது நடந்தால் தமிழ்நாட்டை மட்டும் அல்ல, அனைத்திந்தியாவையே அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

  ஊழல் பூதம் விழுங்கிவிடும்.

 20. குமரன்

  பா.ஜ.க. சு.சாமி போன்ற குறுகிய பார்வைகளை விட்டு உழல தழைக்கக் கூடாது என்ற பார்வை மிக அவசியம்.

  இவர்கள் தமிழ் நாட்டில் கால்பதித்தல் அவ்வளவு எளிதல்ல. அனால் உழலை விரட்டக் கிடைத்த அறிய சந்தர்ப்பத்தை இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைகளை நம்பி இழந்து மோசம் போய்விடக்கூடாது. இந்த ஏமாற்று வித்தையின் தோற்றக் கரு சோவுடையது, சீமான் போன்றோர் மூலம் விதைக்கப் படுகிறது.

 21. குமரன்

  வினோதினி உள்ளிட்ட பெண்கள் மீதான ஆசிட் வீச்சுக்கு அத்தனைப் பத்திரிகைகளும் பக்கம் பக்கமாக எழுதின.

  தமிழ் நாட்டில் ஒரு பெண்ணின் முகத்தில் முதல் முதல் ஆசிட் வீச்சு எப்போது தெரியுமா?

  ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா முகத்தில் வீசிய நிகழ்வே முதல் நிகழ்வு. காரணம் அவர் அன்றைக்கு முதல்நாள்தான் ஜெயாவுடைய ஆணைப்படி ஸ்பிக் பங்கு விஷயத்தில் நடக்க மறுத்தார். ஒரு பெண்ணே இப்படிப்பட்ட செயலைச் செய்யக் காரணம் என்பதை எவரும் பகிரங்கமாக எழுதுவதில்லை.

  இப்போது அவர் ஒரு பெண் என்பதால் ஜாமீன் வேண்டுமாம், அதுவும் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப் பட்டபின்னால்!

 22. subash

  sorry for using bad words sterday night .. i had drink that time .. any way once again sorry for using such words.. i’m die hard rajini fan as wll as BJP .. so try to avoid criticizing any political party in your website .. bcs all rajini fans are in different party …. they r seeing this website only for rajini news not for polital news .. if u post such like news it will hurts some some rajini fans like me … pls try to consider this in future

 23. subash

  கோவத்துல திட்டுவதும் பிறகு அது தப்பு என உணர்த்து மன்னிப்பு கேட்பதும் ரஜினி ரசிகனின் குணம் …

 24. naarathar

  வினோ அவர்கள் பதிவிட்ட பதிப்பை விமர்சனம் செய்வதால் எந்த பலனும் யாருக்கும் கிடைத்து விடுவதில்லை …

  தமிழகத்தின் இன்றைய சூழலில் நல்ல அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ள ஒரு நபர் கூட இல்லை ? அதுமட்டும் இல்லாமல் யோக்கியர்கள் என்று சொல்லுவதற்கும் தலைவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
  கோடியில் புரளும் யார் யாரெல்லாமோ சொகுசாக அறிக்கை விட்டுக்கொண்டும் .கடிதம் எழுதிக்கொண்டும் இருக்கையில் ஜெ ஜெ அவர்கள் மட்டும் ஏன் நீதி என்று சொல்லிக்கொள்ளும் சூழ்ச்சியில் தள்ளப்பட வேண்டும் ?
  ஐந்து பைசா திருடுவது தப்பில்லை ! ஐந்து ஐந்து பைசா வாக நைசா திருடுவது மகா தப்பில்லையா !!

  புரிந்துகொள்வோர் புத்திசாலி !

  நாராயணா ! நாராயணா !!

 25. குமரன்

  வினோ இதுவரை எழுதியவற்றுக்கும் இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ள நிலைப்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு ஏற்க முடியவில்லை.

  கனிமொழி, ராசா ஆகியோர் கைது செய்யப்பட்ட போது ஒருலட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று சி.ஏ.ஜி. அறிக்கை வந்தபோது எடுத்த நிலைப்பாடும் சரி, இப்போது எடுக்கும் நிலைப்பாடும் சரி, ஊழல் செய்தவர்களுக்கு ஆதரவாகவே அமைந்து விட்டது வருத்தம் தருகிறது. உழல எப்போது யார் செய்தாலும் கண்டிக்கப் பட/ தண்டிக்கப்பட வேண்டியது.

  அரசியல் ரீதியாக வெறு ஒருவர் அதனால் வெற்றி பெறக் கூடும் என்பதால் ஊழல் செய்தவரை இப்போது ஆதரித்து விடுவோம் என்ற போக்கு ஒவ்வொரு முறையும் உழல செய்பவருக்கே சாதகமாக அமைகின்றன என்பதற்கு நான் மேலே கொடுத்த இரு உதாரணங்கள் போதும்.

  அரசியல் சுழலை ஒதுக்கி உலகை எதிர்ப்பதே நியாயம் ஆகும். நியாயத்தை ஒவ்வொருவரும் தெளிவாக, துணிவாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

  என்வஜியின் முந்தைய பக்கங்களை அதிலும் குறிப்பாக 2011 ஆம் ஆண்டுப் பக்கங்களைப் புரட்டினால், உங்களிடம் இருக்கும் முரண்பாடு வெளிவரும். நான் தேடினேன், தங்கள் நூலகத்தில் (archives ) 2011 மட்டும் இல்லை. 2010, 2012,2013 உள்ளன.

 26. குமரன்

  “50 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அம்மா அவர்களின் சிறைதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் விலைமதிப்பற்ற உயிரைவிட்டுள்ளனர்.”

  – ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பு குமுறுகிறது

  அவருக்கு அவரது “அம்மாவின் பொன்மொழி” என்னவென்றால் “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்”

 27. குமரன்

  பிழைகளைத் திருத்தி பின்வருமாறு படிக்கவும். எனது பிழை பொருத்தருள்க.

  அரசியல் சுழலை ஒதுக்கி உழலை எதிர்ப்பதே நியாயம் ஆகும். நியாயத்தை ஒவ்வொருவரும் தெளிவாக, துணிவாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

  “என்வழி”யின் முந்தைய பக்கங்களை அதிலும் குறிப்பாக 2011 ஆம் ஆண்டுப் பக்கங்களைப் புரட்டினால், உங்களிடம் இருக்கும் முரண்பாடு வெளிவரும். நான் தேடினேன், தங்கள் நூலகத்தில் (archives ) 2011 மட்டும் இல்லை. 2010, 2012,2013 உள்ளன.

 28. மிஸ்டர் பாவலன்

  குமரன் அவர்களே – எஸ். பி. உதயகுமாரன் என்ற AAP கட்சிக்காரர்
  ரஜினிக்கு ஒரு open letter எழுதி உள்ளார். இதில் “ரஜினி அரசியலுக்கு
  வர வேண்டாம்.. அப்படி வந்தால் அவரது Super Star பட்டத்தை இழக்க
  நேரிடும்!” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்..

  -== மிஸ்டர் பாவலன் ==

 29. arulnithyaj

  டியர் குமரன்,

  மிக அருமையான பின்னோட்டம்..ஊழல் என்பது மிக கொடிய நோய்..அது சட்டபூர்வமாக நிருபிக்கப்பட்ட பிறகும் அதில் இவர்கள் செய்வது விதண்டாவாதம்..நண்பர் பாவலன் சார்.. இங்கே ஜெ ஜெ பற்றிய விவாதம் நடை பெறுகிறது..அதை பற்றிய உங்கள் கருத்தை சொல்லுங்கள்..திரு உதய குமரன் அவர்கள் கடிதம் பற்றியது அல்ல..

 30. s venkatesan, nigeria

  தலைவர் அரசியலுக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை அவரும், அவர் குடும்பமும் அவரின் ரசிகர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் superstar ஆக இருப்பது கமல் ரசிகர்களோ மற்ற கட்சிகளோ முடிவு செய்ய கூடியது இல்லை. அவர் வந்தால் தங்களால் தாக்கு பிடிக்க முடியாது என்று பயத்தால் அவருக்கு எச்சரிக்கை செய்வது வடிவேலு சினிமாவில் எச்சரிக்கை செய்வது போல இருக்கிறது.

  நவம்பரில் ஐ படம் வருவதால் உத்தம வில்லன் அடுத்த வருடத்திற்கு புறமுதுகிட்டு ஓடி விட்டதாக வரும் தகவல் உண்மையா?

 31. Rajkumar

  வினு.. இதை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை..ஜெய தமிழ் ஈழத்திற்கு என்ன செய்து விட்டார்..வேறு வழி இல்ல்லாமல் எதோ செய்வது போல் நடித்தார்..இதே விடுதலை புலிகளை தமிழ் நாட்டில் வேட்டை ஆடியதும் அவர்தான்..கருணாநிதியாவது விடுதலை புலிகளால் ஆட்சி இழந்தார் (1991) 14 வருடங்களுக்கு பிறகு கிடைத்த ஆட்சியை..அவர்கள் விடுதலை புலிகளை எதிர்க்க..காரணமாவது இருக்கு..ஆனால் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது எதிர் கட்சியாக என்ன செய்தற் ஜெயா? மூவர் தூக்குக்கு சட்டமன்றத்தில் எதிரப்பு என்று அறிவித்து விட்டு டெல்லி கோர்ட்ல ஆட்சேபனை இல்லை என்று சொன்னார்ர்..பார்லிமென்ட் தேர்தலுக்காக மூவர் தூக்கையும் ரத்து செய்வதாக அவசரமாக தீர்மானம் போட்டார் …முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடிப்பார் ..விடுதலி புலிகளால் உயிர்க்கு ஆபத்துன்னு ஜாமீன் கேட்பார்…
  என்வழி & வினோ வழி ஜெயா வழி யாகி 3 வருடம் ஆகி விட்டது.

 32. karthick

  ஹாய் வினோ அம்மாவுக்கு ஜிங் ச்சா போட்டது போதும்….அப்புறம் நீயும் கம்பி என்ன வேண்டிவரும் ………..கண்ணா…. “நல்லவங்கல ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்டு விடுவான்”…இது எப்படி இருக்கு..

 33. மிஸ்டர் பாவலன்

  “..அவரது சொத்துக் குவிப்பு வழக்கு, தண்டனை குறித்து மக்களிடம் எதிர்மறை விளைவுகள் ஏற்படாமல் போனதற்கு மேற்சொன்னவைதான் முக்கிய காரணம்….” (வினோ)..

  அம்மா உணவகங்கள் பற்றி வினோ எழுதி இருந்திருக்கலாம்..

  சிறப்பான கட்டுரை – வாழ்த்துக்கள்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 34. sekar

  ஊழலுக்கு ஆதரவாக எங்கு குரல் எழுந்தாலும் அது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியதுதான். தண்டனையின் வீரியத்தை காவேரி ஈழம் என திசை திருப்பும் வினோவிற்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

 35. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  உழல் செய்தது யாரானாலும் –
  அது கருணாநிதி, கே.டி. பிரதர்ஸ், ஆ.ராசா, கனிமொழி ஆனாலும்
  எடியூரப்பா, ரெட்டி பிரதர்ஸ் ஆனாலும்,
  ஜெயலலிதா-சசிகலா ஆனாலும்

  ஒரே நிறைதான்.

  மாட்சிமை பொருந்திய சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என்று சொல்வதே சரி.

  இந்தக் கட்டுரை தவறான பார்வையில் அமைந்துள்ளது.
  இது ஜெயா ஆதரவு நிலை என்பதால் நீங்கள் பாராட்டுகிறீர்கள்.

  ஆனால் இதே வினோ, இதே என்வழியில் 2011 சட்டமன்றத்தேர்தலின் போது ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் செய்த 2G ஊழல் குறித்த கட்டுரைகளில் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்தபோது நீங்கள் ஒப்பவில்லை.

  அப்போது வினோவுக்கு சட்டமன்றத் தேர்தலில் ஜெயா வந்துவிடக் கூடாது என்ற ஆதங்கம், அதனால் ஊழலானாலும் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் குறித்த இளகிய போக்கு அவரிடம் இருந்தது.

  இப்போது தமிழ் நாட்டில் திமுகவும், அதிமுகவும் பலமில்லாவிட்டால் பா.ஜ.க வந்துவிடுமோ என்ற அச்சம். அதனால் இப்போது ஜெயா மீது இளகிய போக்கு அவரிடம் இருக்கிறது.

  அரசியல் சூழல், நமது ஊழல் குறித்த பார்வையை மாற்றக் கூடாது என்பது எனது நிலைப்பாடு.

  தேர்தலில் எவர் வெல்வார், எவர் தோற்பார் என்பது நமது கவலையாக இருக்கக் கூடாது.

  உண்மை, நேர்மை, நன்னடத்தை, அகிம்சை ஆகிய நற்பண்புகள் வெல்ல வேண்டும்.

  ஊழல், அராஜகம், சர்வாதிகாரப் போக்கு ஆகியவை தோற்க வேண்டும்.

  அதுதான் நேர்கொண்ட பார்வை. அப்படிப்பட்ட பார்வை ஒரு எழுத்தாளருக்கு மட்டும் அல்ல, அது நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.

 36. குமரன்

  அதிமுகவினர் நடத்திய அராஜக, ஆபாசப் போராட்டங்களில் பயந்து போன மக்கள் (இதில் கருணாநிதியும் அடக்கம்) அமைதியாக இருப்பதால், ஜெயா மீது பரிவு என்ற முடிவுக்கு எவரும் வந்துவிட வேண்டாம். மக்களைப் பொறுத்த மட்டில் தெளிவாக மனத்தில் வைத்திருப்பார்கள் என்பது கடந்த கால வரலாறு.

  என்ன ஒன்று, ஊழல் பணத்தை வாரி வழங்கி ஓட்டுப் பொறுக்கும் திறமை அதிமுகவுக்கு உள்ளது. சில சமயம் மக்கள் அதையும் முறியடிக்கும் வல்லமை படைத்தவர்கள். படிக்காதவர்கள், ஏழைகள் என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம். திடமான உறுதியான முடிவைத் தக்க சமயத்தில் நிச்சயம் எடுப்பார்கள்.

 37. bahrainbaba

  குமரன்

  தங்களின் கருத்துக்களும் அதற்கு பின்னால் இருக்கும் நிதர்சனமான உண்மைகளையும் முழுமையாக வரவேற்கிறேன்..

  ” தேர்தலில் எவர் வெல்வார், எவர் தோற்பார் என்பது நமது கவலையாக இருக்கக் கூடாது.

  உண்மை, நேர்மை, நன்னடத்தை, அகிம்சை ஆகிய நற்பண்புகள் வெல்ல வேண்டும்.

  ஊழல், அராஜகம், சர்வாதிகாரப் போக்கு ஆகியவை தோற்க வேண்டும்.”

  ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய நிலைப்பாடு..

 38. Jayakumar

  மிஸ்டர் குமரன்,

  தங்களின் கருத்துக்களும் அதற்கு பின்னால் இருக்கும் நிதர்சனமான உண்மைகளையும் முழுமையாக வரவேற்கிறேன்..

  ” தேர்தலில் எவர் வெல்வார், எவர் தோற்பார் என்பது நமது கவலையாக இருக்கக் கூடாது.

  உண்மை, நேர்மை, நன்னடத்தை, அகிம்சை ஆகிய நற்பண்புகள் வெல்ல வேண்டும்.

  ஊழல், அராஜகம், சர்வாதிகாரப் போக்கு ஆகியவை தோற்க வேண்டும்.”

  ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய நிலைப்பாடு..

  உங்கள் கருத்து மிகவும் அருமை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இவ்வாறு சிந்திக்க ஆரம்பித்தால், விரைவில் நம்மளை ஆள்வதற்கு நல்ல அரசியல்வாதிகள் கிடைப்பார்கள்.

 39. Jayakumar

  மிஸ்டர் குமரன்,

  தங்களின் கருத்துக்களும் அதற்கு பின்னால் இருக்கும் நிதர்சனமான உண்மைகளையும் முழுமையாக வரவேற்கிறேன்..

  ” தேர்தலில் எவர் வெல்வார், எவர் தோற்பார் என்பது நமது கவலையாக இருக்கக் கூடாது.

  உண்மை, நேர்மை, நன்னடத்தை, அகிம்சை ஆகிய நற்பண்புகள் வெல்ல வேண்டும்.

  ஊழல், அராஜகம், சர்வாதிகாரப் போக்கு ஆகியவை தோற்க வேண்டும்.”

  ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய நிலைப்பாடு..

  உங்கள் கருத்து மிகவும் அருமை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இவ்வாறு சிந்திக்க ஆரம்பித்தால், விரைவில் நம்மளை ஆள்வதற்கு நல்ல அரசியல்வாதிகள் கிடைப்பார்கள். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.

 40. குமரன்

  என்னைப் பொறுத்த மட்டில் ரஜினி அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லது.

  அவருக்கு நல்லதா இல்லையா என்றால் ஒருவேளை நல்லதாக அமையும் வாய்ப்பு குறைவு. அவரது உடல்நிலையில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுப் பிழைத்து வந்திருக்கிறார்.

  ஆனால் குறைந்த பட்சம் அவர்போன்றவர்கள்ஆவது அரசியலுக்கு வரவேண்டும் என்றாவது விரும்புகிறேன்.

  ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழப்பார் என்று சொல்ல அவசியமே இல்லை. அப்பட்டம் யாரும் கொடுத்து வந்ததல்ல. மக்கள் அவரை அப்படி ஏற்றுக் கொண்டார்கள். அதை யாரும் பறிக்க முடியாது.

  அப்படியே அந்தப் பட்டம் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. ஒரு நல்ல மனிதருக்கு இப்படிப்பட்ட விஷயங்கள் ஜுஜ்ஜுபி.

  மக்களைப் பொறுத்த மட்டில் அவர் மீது உள்ள அன்பும் பாசமும் எள்ளளவும் எள் முனையளவும் குறையவே குறையாது.

  எந்த இடத்துக்குப் போனாலும் ரஜினி அந்த இடத்தில் சூப்பர் என்ற முதல் நிலையில்தான் இருப்பார். அது போதும்.

 41. குமரன்

  ஒருவேளை ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்று இல்லாமல் வேறு ஒரு பட்டம் கொடுத்திருந்தால்?

  சற்றே யோசித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். அப்போது அந்தப்பட்டம்தான் தமிழ் தரையின் முதல் ஆள் என்பதைக் காட்டும் அல்லவா?

  ஆக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தால் ரஜினிக்குப் பெருமை என்று நினைப்பது தவறு.

  ரஜினிக்கு அது பட்டமானதால் அந்தப் பட்டம் முதல் இடத்தைப் பிடித்தது என்பதுதான் உண்மை. ஆக பெருமைப் படவேண்டியது அந்தப்பட்டம்தான். ரஜினியிடம் அப்பட்டம் இல்லையானால், அப்பட்டம் தனது ஜொலிப்பை இழந்து விடும்.

 42. மிஸ்டர் பாவலன்

  குமரன் அவர்களே.. உங்கள் கருத்துக்கு நன்றி.. நீங்கள்
  Twitter வருவதுண்டா? டாக்டர் சுவாமி போன்ற பிரபலங்கள்
  நமது tweets-களுக்கு பதில் தந்து கலக்குகிறார்கள்.. நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 43. Arun

  என் தலைவன் ரஜினிக்கு அப்புறம் நான் மிகவும் மதிச்சது வினோ சார் தான் . நீங்கள் இப்படி பேசினது ரொம்ப கஷ்டமா இருக்கு சார் .JJ AMMA நல்லது பண்ணிருந்தா ….கண்டிப்பா அவுங்க ஜெயிச்சு வருவாங்க …… நீங்க எப்பவும் நடுநிலையா இருங்க சார் .

  ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கை விடமாட்டான் .கெட்டவங்களுக்கு நிறையா கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான் .

  ஆணவம் எப்போதும் நல்லதுக்கு இல்லை. விட்டு கொடுப்பவன் கெட்டு போக மாட்டான் .கெட்டு போறவன் விட்டு கொடுக்க மாட்டான்.

  என் உயிர் தலைவா நீ வாழ்க .

 44. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  சுப்பிரமணியம் சுவாமி மீது எனக்கு என்றுமே அதிக ஈடுபாடு இருந்ததில்லை.

  ஆனாலும், ஊழலுக்கு எதிராக வெறும் லெட்டர் பேட் கட்சியை வைத்துக் கொண்டு அவர் செய்த சாகசங்கள் போற்றத் தக்கன.

  தமிழ்நாட்டிலேயே ஒரு பெண் முகத்தில் முதல் முதலாக ஆசிட் வீசப்பட்ட நிகழ்வு:….. சந்திரலேகா ஐ.ஏ.எஸ். முகத்தில் ஜெயலலிதா ஆணையின் படி வீசப்பட்டதுதான்.

  சந்திரலேகா, ஐ.ஏ.எஸ், ஸ்பிக் பங்குகளை முத்தையா வகையாறாவுக்கு டிட்கோ விற்பனை செய்யச சொல்லி ஜெயலலிதா போட்ட உத்தரவை மதியாததற்குத் தண்டனையாக சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது.

  அது வரை சுவாமிக்கு சந்திரலேகா பழக்கமானவர் இல்லை. அந்த சமயத்தில் சந்திரலேகாவுக்கு ஆதரவாகத் துணை நின்று மருத்துவ வசதி செய்த சுவாமியின் மனிதாபிமானத்தைப் போற்றுவார் எவரும் மனிதாபிமானம் பேசும் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லை.

  வினோதினிக்கு ஊர் ஊராய் ஒப்பாரி வைத்த தமிழ்ச் சமுதாயம், ஜெயலலிதாவுக்குப் பயந்து சந்திரலேகாவுக்குப் பரியாது, சுவாமியின் மனிதாபிமானத்தைப் போற்றாது வாயை மூடிக் கொண்டதும்தான் அவலம்.

  ஆனால், ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் சுவாமியை என்னால் மன்னிக்க முடியாது. அதன் முத்தாய்ப்பாக ராஜபக்சேக்குப் பாரத ரத்னா தரவேண்டும் என்ற அவரது கோரிக்கை அவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் போக்கிவிட்டது.

 45. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே….

  நான் சுவாமியின் லெட்டர் பேட் கட்சி பற்றிக் கூறினேன்.

  சமீபத்தில் “கலைஞரின் திமுக ரப்பர்ஸ்டம்ப் பேட் கட்சி”யாகிவிட்டது என்ற தகவல் பற்றி நாம் விவாதிக்கவே இல்லை !!!

  கொஞ்சம் யோசித்து அது எப்போது என்று கூறுங்கள் !!!

 46. குமரன்

  ஊளலுக்குத் துணை போவதில் இன்றைய ஊடகத் துறையின் பங்கு குறித்த அருமையான கட்டுரை வினவு தளத்தில் உள்ளது.

  அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை இது.

  http://www.vinavu.com/2014/10/16/media-brokers-bat-for-corrupt-jaya/

  ஒரு பகுதி இதோ:

  “கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா என்று அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அம்பானி, டாடா, அதிகாரிகள், கலெக்டர், தாசில்தார்கள், கார்ப்பரேட் முதலாளிகள் போன்ற ஊழல் கூட்டாளிகளையும் கைது செய்! சிறையில் அடை! சொத்துக்களை பறிமுதல் செய்!” என்ற நியாயமான தர்க்கமுடிவிற்கு வரவேண்டியவர்கள், எந்த சமூகப் பிரச்சனைகளையும் விவாதம் என்ற பெயரில் நீர்த்துப்போகச்செய்வது, அதன் அடிப்படையான விசயத்தை தொடாமலேயே திட்டமிட்டு திசை விலக்குவது என்ற நவரசங்களிலும் ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதிகளைவிட அபாயகரமானவர்கள் இந்தவகை ஊடக ஆதாயக் கும்பல்கள். கூலிக்கு ஒப்பாரி வைக்கும் கும்பலைவிட கொடியவர்கள் கூலிக்கு நிகழ்ச்சி நடத்தும் ஊடக வாடகை ஜென்மங்கள்!
  ……………………………………………
  இன்னும் பல சிந்தனையாளர்களும் நம்மைத் துரத்துகிறார்கள்… மக்களே, சுற்றிப் பாருங்கள், அம்மா மட்டுமா ஊழல்?… இதோ வரிசையில் அறிஞர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *