BREAKING NEWS
Search

அர்னாப் – சர்தேசாய்கள் ஏன் இப்படிக் குரைக்கிறார்கள்?

 இது விவாதமா குழாயடிச் சண்டையா?

21-1392971887-arnab987-600-jpg

ட இந்திய ஊடகங்கள்.. குறிப்பாக ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல்களில் செய்தி விவாதம் என்ற பெயரில் நடக்கும் குரைப்புகளும் குழாயடிச் சண்டைகளும் சகிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டன.

நேர்காணலுக்காக அல்லது விவாதத்துக்காக வருபவர்களிடம் நைச்சியமாக கேள்விகளை எழுப்பி, பல விஷயங்களை அவர்கள் வாயால் சொல்ல வைப்பதுதான் சரியான பத்திரிகையாளர் செய்ய வேண்டியது. அல்லது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்வோரிடம், சரியான தகவல்களைச் சொல்லி மடக்க வேண்டும். வருகிற விருந்தினர் ஆவேசப்படலாம். ஆனால் பத்திரிகையாளர் அமைதி காப்பதுதான் நடுநிலைக்கு அழகு. முதல்வனில் அர்ஜுன் நடத்தும் நேர்காணலைப் போல! தவறான தலைவர் தாமாகவே அம்பலப்பட்டு நிற்பார். அப்படி ஒரு சூழலை உருவாக்குவதே புத்திசாலித்தனமான பத்திரிகையாளனின் வேலை!

ஆனால் வெற்றுப் பரபரப்பு, அர்த்தமில்லாத கூச்சல்தான் தங்கள் சேனல்களை மக்கள் மத்தியில் வாழ வைக்கும் என தவறான நம்பிக்கையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்டிடிவி, டைம்ஸ் நவ், சிஎன்என் ஐபிஎன் போன்ற தொலைக்காட்சிகள்.

இந்த சேனல்களில் பணிபுரியும் அர்னாப் கோஸ்சாமி, ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத் போன்றவர்கள் கேள்விகளைக் கேட்கிற பாணி, மிகக் கேவலமானது. உச்ச கட்ட குரலில் கத்தி கூப்பாடு போட்டு, பேச வந்தவர்களை வெறுப்பேற்றுவதுதான் இவர்கள் செய்வதெல்லாம்.

ஒரு விவாதத்தை ஆரம்பிக்கும்போதே, அதில் ஒரு சார்பு நிலையை எடுத்துவிட்டு, அதையொட்டியே வந்திருக்கும் அனைவரும் பேச வேண்டும்… தங்கள் நிலைப்பாட்டை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கத்துவதைப் பார்த்திருக்கலாம்.

ராஜீல் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது மற்றும் அவர்கள் உள்பட சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது ஆகியவைதான் இன்று வட இந்திய ஊடகங்களால் பிரதானமாக பரப்புரை செய்யப்படுகின்றன.

தமிழர்கள் அவ்வளவு பேருமே தீவிரவாதிகள், தேசத்துக்கு எதிரானவர்கள் என்பது போன்ற சித்தரிப்பை வட இந்திய ஊடகங்கள் செய்ய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக டைம்ஸ் நவ்வின் அர்னாப் கோஸ்சாமியும், ஐபிஎன் சேனலின் ராஜ்தீப் சர்தேசாயும் தத்தமது சேனல்களில் விவாதம் என்ற பெயரில் அரங்கேற்றும் கேவலமான குழாயடிச் சண்டையில் தமிழர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே முடியாத சூழல்.

உச்ச நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளனர் இந்த இருவருமே. குறிப்பாக அர்னாப் போடும் கூச்சல் சகிக்க முடியாதது. ‘என் நாட்டு பிரதமரைக் கொன்றவர்களின் தூக்கு தண்டனையை எப்படி ரத்து செய்யலாம்’ என்று மாரிலடித்துக் கொண்டு கேட்கிறார் அர்னாப். இது பச்சையான நீதிமன்ற அவமதிப்பல்லவா…

இன்னொன்று ராஜீவ் காந்தி அப்போது வெறும் காங்கிரஸ் எம்பி மட்டுமே. பிரதமரல்ல. அடுத்து கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் யாருமே இப்போது இல்லை. இன்றைக்கு சிறையில் இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவர்களாகக் கருதப்பட்டவர்கள். இவர்களின் குற்றங்கள் கூட முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

இதையெல்லாம் கூட தெரிந்து கொள்ளாமல், அல்லது வேண்டுமென்றே மறைக்கும் அரைவேக்காட்டு வக்கிர புத்திக்காரர்களாகத் தெரிகின்றனர் அர்னாப்-சர்தேசாய்கள்.

பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நடுநிலைத் தன்மையே இல்லாத விவாதம் இது என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் தலையிலடித்துக் கொள்ளும் அளவுக்கு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கின்றன இந்த விவாதங்கள்.

ராஜீவ் கொலையில் நேரடித் தொடர்புள்ளவர்களாக வர்மா கமிஷனும் ஜெயின் கமிஷனும் சுட்டிக் காட்டியுள்ள சுப்பிரமணிய சாமி மற்றும் சந்திரா சாமி ஆகியோர் இப்போதும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். பெரிய சட்ட மேதாவி மாதிரி சு சாமி தொலைக்காட்சிகளில் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரை விசாரிக்காமல், இந்த 7 பேரைக் கொல்ல வேண்டும் என்பதில் இத்தனை அக்கறை ஏன்?
vlcsnap2013042018h11m20
-நேற்றைய விவாதத்தின்போது மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி இந்தக் கேள்வியை அர்னாப், சர்தேசாய்களிடம் ஆவேசமாக முன்வைத்தார். அவ்வளவுதான்.. சப்தநாடியும் ஒடுங்கிப் போய்விட்டது இந்த வாய்சவடால் ஆசாமிகளுக்கு. என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல், உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறியதோடு, அடுத்து திருமுருகன் காந்தியின் மைக்கையும் மவுனமாக்கிவிட்டார் அர்னாப். திருமுருகன் பங்கேற்ற இன்னொரு விவாதத்தில் கிட்டத்தட்ட இதே நிலைதான் ராஜ்தீப் சர்தேசாய்க்கும்.

கருத்து சுதந்திரம் என்ற கூப்பாடு இந்த நாட்டில் எத்தனை போலியாக உள்ளது பாருங்கள். சு சாமி போன்ற கிரிமினல்களை அழைத்து ராஜமரியாதையுடன் பேசவைக்கும் இந்த சேனல்கள், நியாயத்தைச் சொல்ல முயல்வோரின் கழுத்தை நெறிக்கவும் தயங்குவதில்லை. அர்னாப் – சர்தேசாய் – பர்க்கா போன்றவர்கள் பெயர்கள் வேறாக, பணியாற்றும் சேனல்கள் வேறாக இருந்தாலும், உணர்வால் அவர்கள் தமிழ் – தமிழர் விரோதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

protest3

இன்றைக்கு எந்த பத்திரிகையும், தொலைக்காட்சியும் நடுநிலையாக இல்லை என்பதற்கு ஒரு சாம்பிள்தான் இந்த விவாதம். பணம், அரசியல் இந்த இரண்டும்தான் இந்த ஊடகங்களை ஆட்டிப் படைக்கின்றன.. பத்திரிகை தர்மம் இல்லை.

இந்த சேனல்களின் மோசமான பரப்புரை காரணமாக இன்று முதல்வர் ஜெயலலிதாவின் பேனருக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர் வட மாநிலங்களில். தமிழர் மனதில் இந்தியாவை அந்நியப்படுத்தும் முயற்சியில் வெற்றி காணாமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது, வட மாநில ஊடகத்தினர்!

விதுரன்
-என்வழி ஸ்பெஷல்
23 thoughts on “அர்னாப் – சர்தேசாய்கள் ஏன் இப்படிக் குரைக்கிறார்கள்?

 1. anbundan ravi

  எதற்க்காக நாம் இன்னும் இந்தியா நம் நாடு என்று சொல்லிகொண்டிரிக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது இந்த வட இந்திய சண்டாளர்களால்.

  அமைதிப்படை என்ற பெயரில் நம் இனத்தை கொலை செய்தும் கற்பழிப்புகளும் நடந்ததே, அது வட இந்தியர்கள் மறந்து விடலாம்…நாம் மறக்க கூடாது.

  அன்புடன் ரவி.

 2. Kumar

  இன்று எனக்கு வேடிக்கையாக உள்ளது.இதே மாதிரி தான் 2009-10 வாக்கில் உச்ச நீதி மன்றம் பாபர் மச்சொதி தொடர்பாக தீர்ப்பு வெளியிட்டது.அப்போது இதே வட இந்திய மீடியாக்கள் அதை எதிர்த்தன.வினோவும் அதை மிக கடுமையாக இது ஒரு கட்ட பஞ்சயாத்து என்று விமர்சித்தார் .அப்போது நானும் இதே கேள்வியை தான் எழுப்பினேன்.இன்று வினோ அவர்களுக்கு இது நிதிமன்ற அவமதிப்பாக படுகிறது.என்ன ஒரு மாற்றம்.

  என்னை பொறுத்த வரை உச்ச நீதி மன்ற தீர்ப்பு தான் எப்போதும் மதிக்க படவேண்டியது.அதை யார் விமர்சித்தாலும் தவறு தான்.

 3. Karthik

  ஹிந்திய ஊடகங்களுக்கு தமிழர் என்றாலே வேப்பங்காய் தான் எபோதும். தமிழர்கள் நாம், இன்னும் தமிழர்களாக ஒன்று கூடாமல் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் நிச்சயம் நமக்கு நாமே அழிவை தேடிகொள்வோம்.

 4. A run Varma

  Sir ivagala viduga…. tamilnatai serntha all congress members and some dmk members ahe support matraga. …ivagala pidichi mothala jail ah podanum sir. …

 5. justin amaldas

  Anna said,
  Vadavan Nammavanum illai, Nallavanum illai,
  Tamilan says,
  I have been indian last 70 years, But i have been Tamilan Last 5000 years.

  I couldnt find thirumurugan video deate with Arnab. if you can find please do update the link.
  Here it is rajdeep sardesai getting shit from Nammavan.

 6. justin amaldas

  அண்ணா சொன்னார்
  வடவன் நம்மவனும் இல்லை நல்லவனும் இல்லை
  தமிழன்
  நான் இந்தியன் 70 வருஷமாக
  ஆனால்
  தமிழன் 5000 வருஷமாக

  நம்மவன் வீடியோ

  http://www.youtube.com/watch?v=Q7qvjLlxYsI

 7. குமரன்

  ஊடகங்கள் நீதிமன்றம் போல ஒவ்வொரு விஷயத்திலும் தீர்ப்பே வழங்கி வருவது இன்று நேற்றல்ல, சமீபத்திய பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.

  சண் தி.வியில் வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் தமக்குச் சாதகமான கருத்தை வெளியிடுபவர்களைப் பேச விடுவதும், தமது எதிர்க்கருத்தைச் சொல்வோரைப் பேசவிடாமல் இருப்பதும், அப்படியே பேசிவிட்டாலும் அதை எடிட் செய்துவிடுவதும் எப்போதும் நடக்கும் கோழைத்தனம்தான்.

  சண் டி.வி, கலைஞர் டி.வி. ஜெயா டிவி., மக்கள் டி.வி, கேப்டன் டி. வி. மெகா டி.வி. தமிழன் டி.வி. வசந்த் டி.வி என்று அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் ஒரு டி.வியை வைத்துக் கொண்டும் தத்தமக்கு சாதகமான விவாதங்களை அவ்வப்போது நடத்துவதும், அதிலும் குறிப்பாகத் தேர்தலுக்கு முன்னாள் கருத்துக் கணிப்பு, பின்னால் விவாதம் என்று நடத்துவதும் வாந்தி எடுக்கும் அளவுக்கு ஒரு பக்கச் சார்புடனேயே இருக்கின்றன.

  பார்க்கா தத் இன்று நேற்றல்ல பதினைந்து வருடங்களாகவே இதத்தான் செய்து வந்தார். கரண் தாப்பார் என்று ஒருவருக்கும் இதுதான் வேலை. சமீபத்தில் தன மகள் வயதை ஒத்த, மகளின் தோழியையே பாலியல் கொடுமை செய்து கையும் களவுமாகச் சிக்கிக் கொண்ட தருண் தேஜ்பால் காங்கிரஸிடம் கையூட்டு வாங்கி எதிர்க் கட்சிகளைக் கேவலப்படுத்தும் தொழிலை வெற்றி கரமாகச் செய்துவந்தவர்தான்.

  பத்திரிகையாளர்கள் இதெல்லாம் செய்தால் அவர்கள் பெரிய ஆட்களாகி விடுவார்கள். செய்யாவிட்டால் வினோ மாதிரி சிறு நிறுவனத்தில் வேலை செய்து காலம் கழிக்க வேண்டும்.

  நக்கீரன் தொழில் தினமும் இதேதான். நக்கீரனின் வண்டவாளத்தைப் புட்டுப் புட்டு வைத்த ஒரே ஆள் சவுக்குதான்.

  ஒருவர் கைதானவுடனே அவரைக் குற்ற வாளியாகவே சித்தரித்து செய்தியைப் பரப்புவதில் முன்னணியில் இருப்பது தொலைக் காட்சி ஊடகங்களே. குற்றம் சாட்டப்பட்டவரைக் கத்தியாக்கி போலீஸ்காரர்களுடன் படமாக்கித் திருப்பத் திருப்பக் காட்டுவது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதைச் செய்வதில் முன்னணியில் இருப்பது சண் டி.வி.ஆனால் அவர்களது செய்தி ஆசிரியர் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுக் கைதானதை காட்டாதது மட்டும் அல்ல, சிறு செய்தியாகக் கூடச் சொல்ல வில்லை. அந்த அளவுக்கு பத்திரிகைத் தர்மத்தைக் கடைப் பிடிக்கிறார்கள்.

  சண் டி.வியில் அழகிரி ஆட்கள் தினகரன் அலுவலகத்தைக் கொளுத்துவதைக் காட்டினார்கள். ஆனால் கே.டி.பிரதர்ஸ் வீட்டை சி.பி.ஐ. சோதனியிட்டதையும் அங்கே பி.எஸ். என்.எல் லிருந்து 365 தொலைபேசி இணைப்புகளைத் திருடி தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இலவசமாக சண் டி.வியின் வியாபாரத்துக்குப் பயன்படுத்தியதையும் காட்டவும் இல்லை.செய்டியாககூட சொல்லவும் இல்லை. இன்னமும் காசு கொடுத்து. சோனியாவிடம், ரோமிலிருந்து போப் அலுவலகத்திலிருந்து சிபாரிசு வாங்கி கைதாகாமல் பார்த்துக் கொண்டுவிட்டார்கள். நேர்மை! திராவிடம், தமிழர்கள் என்று பீற்றிக் கொள்வார்கள்.

  அர்னாப் கோஸ்வாமி ‘காச் மூச்’ என்று கத்துவதை எப்படித்தான் அரசியல்வாதிகள் பொறுத்துக் கொள்கிறார்களோ? பள்ளிப் பிள்ளைகளை விரட்டுவது போல விரட்டுவது நமக்கே பாவமாக இருக்கிறது. எல்லாரும் வாயைப் பொத்திக் கொண்டு அதைச் சகிப்பது அவரவரிடம் இருக்கும் கேட்ட நடவடிக்கை, ஊழல் காரணமாகவே என்றே தோன்றுகிறது.

  நீதிமன்றத் தீர்ப்பைத் தமக்கு சாதகமாக இருக்கும்போது ஆஹா ஊஹு என்று பாராட்டுவதும், இல்லாவிட்டால் அடிமட்டமாக விமரிசிப்பதும் தொடர்கதையாக எல்லாருமே செய்து வருகிறார்கள். இப்போது இவர்களும் கீழ்த் தரமாக செய்கிறார்கள்.

  ஆச்சரியமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட பேரறிவாளன் பக்க நியாயத்தை ஒப்புக் கொண்டு பேசி இருக்கிறார்.

  Trial by media என்று வலையை அலசிப் பாருங்கள். எப்படி உலகெங்கும் ஊடகங்கள் எல்லை மீறி தாமே நீதிமன்றம் போல நடந்து கொள்கின்றன எனத் தெரியும். மனித உரிமை மீறல்களில் மிகக் கொடியது Trial by media ஆகும். தமிழில் ஊடக நீதி விசாரணை. ஏனெனில் இந்த முறை விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பேச வாய்ப்பில்லை.அவரது கருத்துக்கள் இதில் பதிவதில்லை. இது குறித்த ஆழ்ந்த கட்டுரையை எழுதவேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆசை, இருந்தும் நேரம் வரவில்லை.

  உலகில் மனித உரிமை விஷயங்களில் முன்னணி வழக்கறிஞரும் அமெரிக்க அரசின் அட்டார்னி ஜெனரலாக இருந்தவருமான ராம்சே கிளார்க் சொல்கிறார்:

  “Demonisation is the most dangerous form of prejudice,” he said. “Once you call anything evil, it’s easy to justify anything you might do to harm that evil. Evil has no rights, it has no human dignity, it has to be destroyed. That’s how you get your Fallujahs, your Abu Ghraibs, your shock-and-awes.”

  இப்படித்தான் பிரபாகரனை ஒரு பயங்கரவாதியாகச் சித்தரித்தனர், அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதை முழுவதுமாக மூடி மறைத்தனர். இப்போது விவகாரத்தில் சிக்கி இருக்கும் எழுவரும் எந்த ஊடகமும், பத்திரிகைகள் உள்பட ராஜீவ் கொலையாளிகள் என்றே எழுதுகின்றன, கூறுகின்றன. அது சரியா? இல்லையே. இவர்கள் கொலையைச் செய்யவில்லை. உடந்தையாக இருந்தவர்கள், அதுதான் நீதிமன்றத் தீர்ப்பும் கூறுவது. ஆக ஊடகம் நினைத்தால் உடந்தையாக இருந்தவரைக் கொலையாளி என்று கூறிவ்டலாம் என்றால் அப்படிப்பட்ட ஊடகங்கள் கோயபல்ஸ் படத்தைத் தான் தமது அலுவலகத்தில் மாட்டவேண்டும், மகாத்மா காந்தியின் படத்தை அல்ல.

 8. குமரன்

  ராம்சே கிளார்க்கின் சொற்றொடரின் இன்னொரு பகுதி இதோ

  “With the Mass media saturating the public with perceptions that come from very slim contact with actuality and are heavily influenced by desire and prejudice, they demonise. Demonisation is the most dangerous form of prejudice. Once you call some thing evil it is easy to justify anything you might do to harm that evil. Evil has no rights, it has no human dignity, and it has to be destroyed.”

  இவர்கள் அதாவது “வெகுஜன ஊடகங்கள்” பொதுமக்களை எந்த அளவுக்கு உண்மையிலிருந்து விலக்கி அழைத்துச் சென்று புரட்டை நம்பவைக்கிறார்கள், தத்தமது கருத்தை நம்ப வைக்கிறார்கள் எனபதை அருமையாகச் சாடுகிறார். ஒருவரைச் சாத்தானாக ஆக்குவதன் மூலம் அவருக்குக் கிடக்க உள்ள எந்த உரிமையையும் இல்லாமல் ஆக்குகிறார்கள் என்பதை விவரிக்கிறார். இதுதான் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல், அதி பயங்கரமான பாரபட்சம் என்கிறார்.

 9. குமரன்

  ///அண்ணா சொன்னார்
  வடவன் நம்மவனும் இல்லை நல்லவனும் இல்லை
  தமிழன்
  நான் இந்தியன் 70 வருஷமாக
  ஆனால்
  தமிழன் 5000 வருஷமாக ///

  இதெல்லாம் எப்போதோ அரசியலுக்காகச் சொன்னது. யார் சொல்வதிலும் அலசி நல்லதை எடுத்து அல்லதை விடுவதே மனித சமுதாயத்துக்கு நமக்கு நல்லது. வட நாட்டவர் எல்லாரும் கெட்டவராகி விடுவார்களா? இல்லை தென்னாட்டவர் எல்லாரும் நல்லவர் ஆகி விடுவார்களா? நல்லதும் கேட்டதும் கலந்ததுதான் எல்லாமே. நானே ஒருபுறம் நல்லவன், மறுபுறம் கேட்டவன். இது ஒவ்வொருவருக்கும் பொருந்தும் அண்ணா, காந்தி உள்பட. நூற்றுக்கு நூறு சதவிகிதம் நல்லவனும் இல்லை. கெட்டவனும் இல்லை. நாம் அனைவரும் கடைசி வரை இந்தியராக இருப்போம் என்பதே நமக்கும் நாட்டுக்கும் நல்லது.

 10. JAI

  டியர் வினோ
  தவறு யார் செய்தலும் தவறு தான். இதிலென்ன தமிழன் வடவன்? அவர் கேட்டதில் என்ன தவறு? குறைக்கிரர்கலாம் ?
  நீங்கள் பாதிக்க்பட்ட்ருந்தால் குரைக்க மாட்டிர்கள்?
  முதலில் நியாயத்தை பேசுங்கள்.

  அப்புறம் கொல்லும் பொது அவர் பிரமதராக இல்லையாம். அமைச்சராக தான் இருந்தாராம். என்ன கொடும சார் எது ?
  நீதமன்றம் அவர்கள் மேல் குற்றம் எல்லை என்று சொல்லவில்லை.

  உலகின் எங்காவது கொலைகாரர்களுக்கு சப்போர்ட் செய்கிறார்களா?
  ராஜீவுடன் இறந்தவர்களும் தமிழர்கள் தானே!
  அவர்களுக்கு என்ன நீதி?
  அவர்களுக்கு தூக்கு தண்டனை தரவேண்டும்.

 11. குமரன்

  ஜெய் அவர்களே

  ராகுல் காந்தி தனது தந்தையைப் பிரதமராக இருந்தவரைக் கொன்றவர்களை விடுதலை செய்யலாமா என்று கேட்டால் அதில் இருக்கும் பிழையைச் சுட்டிக் கட்டுவது எப்படித் தவறாகும்? ராகுலைப் போன்ற முன்னணி அரசியவாதி இப்படிப் பிழைபடப் பேசுதல் உணர்ச்சிகளைத் தூண்டும் செயல் என்பதால்தான் கொல்லப்பட்டபோது ராஜீவ் பிரதமர் அல்ல என்பதைச் சொல்ல வேண்டி வருகிறது. இது எப்படித் தவறாகும்? இது எப்படி கொலையை நியாயப்படுத்துவதாகும்?

  சரி, அது கிடக்கட்டும்.

  எண்ணூற்றுக்கும் மேற்பட்ட இந்திய, தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த சிங்கள ராணுவம் பற்றி ராகுல் காந்தி ஏன் வாயைத் திறக்க வில்லை?

  அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூட ராகுலின் உறவினர் இல்லை என்பதால்தானே அவர் வாயைத் திறக்க வில்லை?

  எத்தனைக் கடிதங்களை கருணாநிதியும் ஜெயாவும் எழுதி இருப்பார்கள்? அதில் எதற்கும் நடவடிக்கை எடுக்காத ராகுல் இப்போது மட்டும் ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்கிறேன் என்று சட்ட மன்றத்தில் அறிவித்தவுடன், கடிதம் கிடைக்காத நிலையிலும் நடவடிக்கை எடுத்தது அப்பட்டமான இந்தியத் தமிழர்களுக்குச் செய்யப்பட்ட துரோகம். அந்தத் துரோகத்தைச் செய்த காங்கிரஸ் அரசை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

  அந்தக் கொலைகளை ராகுலும் நீங்களும் சப்போர்ட் செய்கிறீர்களா?

 12. குமரன்

  உலகில் எந்த நாட்டிலாவது தமது நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டால் இப்படி அரசாங்கமும் அதன் தலைவரும் வாயைத் திறக்காமல் பல ஆண்டுகளாக இருக்கிறார்களா?

  இரண்டு இந்திய ராணுவத்தினர் தலையைக் கொய்து எடுத்துப் போன பாகிஸ்தான் ராணுவம், அதைத் திருப்பிக் கூடத் தரவில்லை.

  இந்திய ராணுவத்தினருக்கே இந்தக் கதி என்றால் சாதாரண மக்கள் கதி என்ன என்று ஏன் ராகுல் காந்தி கேட்கவில்லை?

  நாட்டின் ராணுவத்துக்கு இப்படி வந்தால் எந்த நாடாவது சும்மா இருக்குமா?

  மோடியை இன்று ஒரு காங்கிரஸ் தலைவர் கையாலாகாதவர் என்று கூறி இருக்கிறார். அந்த சொல் முழுமையாகப் பொருந்துவது இன்றைய மத்திய அரசுக்கே. இந்திய மீனவர்களைக் காக்காத, இந்திய ராணுவத்தினர் தலைகளைத் திரும்பிக் கொண்டுவராத மத்திய அரசின் ஒவ்வொரு தலைவரும் ராகுல் காந்தியும் கையாலாகாதவரே .

 13. JAI

  டியர் குமரன்

  நான் எந்த இடத்திலும் ராகுலுக்கு சப்போர்ட் பண்ணவேயில்லை. இன்னும் சொல்லப் போனால், உலகின் மோசமான அரசு இது தான்.நம்முடை நாடு கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது..இந்த அரசு மாறவேண்டும்.இதில் எந்த மாற்றுகருத்து இல்லை.

  இந்த இதழில் வெளியான ஆனந்த விகடன் வாங்கி பாருங்கள். அந்த 15 குடும்பங்களின் கதறல்களை.

  இனிமேல் இந்த மாதிரி தவறை செய்ய நினைக்கும் போதே பயம் வர வேண்டும்.அந்த மாதிரி தண்டனை இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
  தூக்கு தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

  என்னுடைய பதிலெல்லாம் தவறு செய்தவன் தமிழன் என்கிற காரணத்துக்காக மட்டுமே சப்போர்ட் பண்ணாதீர்கள் என்பது தான்.
  இதே போல ஒவ்வொரு மாநிலமும் என் மாநிலத்தவன் தவறு செய்தலும் விடுதலை செய்யுங்கள் எண்றால் நம் நிலைமை என்ன ?நாடு முன்னேற வேண்டும் என்ற நினைப்புள்ளவர்கள், தயவு செய்து தமிழன் என்று பார்க்காமல் இந்தியன் என்று பாருங்கள்.

 14. குமரன்

  ஜெய் அவர்களே

  தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக சப்போர்ட் என்பதில்லை.

  ராஜீவ் கொலையில் நேரடித் தொடர்பு என்பது சிவராசன், தணு, சுபா ஆகியோருக்குத்தான் என்பது வெளிப்படையான விஷயம், நீதிமன்றத் தீர்ப்பும் அதுவே.

  முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும்தான் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. மீதி நால்வருக்கு ஆயுள் தண்டனைதான் விதித்தது. அவர்களும் 23 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டார்கள். இப்போது அந்த நாள்வரை விடுதலை செய்வதில் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. அதுபோலவே நளினிக்குக் கொடுக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுளாக மாற்ற சோனியா விருப்பப் படி அதுவும் செய்தாகி விட்டது. அவரும் விடுதலை செய்யப் படுவதில் தவறு இருப்பதாகப் படவில்லை.

  மீதி மூவரில் பேரறிவாளன் குறித்து அவர் நிரபராதி என எண்ண இடம் இருக்கிறது, எனவே அவரது வலக்கை மறுவிசாரணை செய்யவேண்டும் என்ற எனது கருத்தை இதே தளத்தில் இட்டிருக்கிறேன். இந்த எழுவருக்கும் ராஜீவைக் கொள்ளப் போகிறார்கள் என்ற விஷயம் முன்னதாகவே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே நீதிமன்றங்களின் முடிவும், விசாரணைக் கமிஷன்களின் ஆகும். இவர்கள் கொலையாளிகளுக்குத் துணை போனவர்களே அல்லாது கொலையாளிகள் அல்லர். இது ராகுலுக்குத் தெரிந்தும் இவர்களைக் கொலையாளிகள் என்று கூவுவது வெட்டி அரசியல்தான்.

  இனி இருப்பவர் இருவர், முருகனும், சாந்தனும் மட்டுமே. இப்படி இருக்க ஏழு பேரையும் தூக்கிலிருந்து விடுவித்து விட்ட மாதிரி ராகுல் கூவுவது வெட்டி அரசியல் மட்டுமே. அவர்கள் விரும்பும்போது பிரியங்கா வேலூர் சிறைக்கே சென்று நளினியைச் சந்தித்ததை நினைவு கூறுகிறேன். இப்போது என்னவோ தனது தகப்பனைக் கொன்றவர்கள் என்று அனைவரையும் கூறுவது சரியல்ல. அதிலும் கூட முருகனும் சாந்தனும் நளினியும் கூட கொலைக்குப் பின்னர் சிவராசனையும், தனுவையும் தப்பிக்க விட உதவியதால்தான் அவர்களுக்குத் தூக்கு விதிக்கப்பட்டது. அவர்களைக் கொலையாளிகள் என்று தீர்ப்பு இல்லை.

  எண்ணூறு இந்திய மீனவர்கள் கொள்ளப்பட்டது குறித்து ராகுல் வாய் திறக்கவில்லை. ஏனெனில் மீன்காரன் ரத்தம் தக்காளி சட்னி, ராஜீவின் ரத்தம் மட்டுமே ரத்தம்.

  இன்னும் ராஜீவுடன் செத்தவர்கள் உறவினர்கள் போலத்தான் எண்ணூறு மீனவர்களின் உறவினர்களும் என்பதை விகடன் பதிவு செய்தால்தான் நியாயம்.

 15. Krishna

  திரு குமரன் அவர்களே, ராஜீவை கொன்றது தாணு, சிவராசன், சுபா மட்டும் தான் என்று சொல்கிறீர்கள். அவர்களை தூண்டிவிட்டது யார்? அவரை பயங்கரவாதி என்று சொல்லாமல் போராட்ட வீரர் என்று ஏன் சொல்கிறீர்கள்? கொலை செய்தவரை விட அதை தூண்டியவருக்கு தான் அதிக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. ஆனால் கொலை செய்ய தூண்டியவருக்கு ஏற்கனவே கடவுள் அல்லது இயற்கை தண்டனையை கொடுத்து விட்டது. ஆகவே இவர்களுக்கு தூக்கு தண்டனை தர தேவை இல்லை. சாகும் வரையில் சிறையில் இருக்குமாறு ஆயுள் தண்டனை கொடுத்தால் போதும்.

 16. Bala

  “”ஆனால் கொலை செய்ய தூண்டியவருக்கு ஏற்கனவே கடவுள் அல்லது இயற்கை தண்டனையை கொடுத்து விட்டது””
  கிருஷ்ணன் ——– அவர்களே
  அப்பொழுது முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதும் அவர்செய்த வினைபயன் என்று சொல்கிறீர்களா?? அல்லது அவர்செய்த குற்றங்களுக்காக அவரையும் பயரங்கவாதி என்கிறீர்களா? ஊட்சநீதிமன்றமே இந்த கொலையை பயங்கரவாத செயலென்று சொல்லகூடாது..அதுபழிவாங்கும் நோக்குடனே செய்யப்பட்டது என்று சொன்னாலும் உங்களைபோன்றவர்கள் நீதிபதிகளாக மாறி உங்களுக்கு தேவையானதை சொல்லிகொன்று திரிகிறீர்கள்.
  இந்தியதண்டனை சட்டம் ஆயுள்தண்டனை என்பது எத்தனைவருடங்கள் என்று வரையறுக்கவில்லை..மாநில அரசு கைதிகிளின் நன்னடத்தை பொருத்து அவர்களது தண்டனைகாலத்தை குறைப்பது நடைமுறை.. நடைமுறை இப்படி இருக்க இந்த கொலையில் எந்த நேரடிதொடர்பும் இல்லாதவர்களாக கருதப்படும் இவர்கள் ஏன் சாகும்வரை சிறையில் இருக்கவேண்டும்..
  அனால் உங்களைபோன்றவர்கள் சுலபமாக சுப்பிரமணியசாமி போன்ற ஆசாமிகளை மறைத்து நேரடித்தொடர்பு இல்லாதவர்களை கொல்லநினைக்கும் வக்கிரபுத்தி ஏன்?

 17. குமரன்

  பிரதமராகப் பதவி வகித்ததாலேயே ஒருவர் தியாகி ஆகிவிட மாட்டார். சொக்கத்தங்கம் சோனியா காந்தியை கருணாநிதி வார்த்தைக்கு வார்த்தை தியாகத் திருவிளக்கு என்பதுவும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவி வகித்ததுடன், அவர் குண்டு வெடிப்பில் மாண்டதால் அவரைத் தியாகி என்பதுவும் ஒரே மாதிரிதான்.

  மகாத்மா காந்தி சுடப்பட்டதன் காரணம் அவர் தேசம் குறித்த கொள்கைகளால்தான் என்பதால் அந்த மரணம் அவரது தியாகத்தைப் பறை சாற்றுகிறது.

  இந்திராவும் கூட, அமிரித்சரஸ் பொற்கோவிலில் ஆயுதம் தாங்கியவர்கள் இருந்துகொண்டு மிரட்டல் செய்ததை தேசப் பாதுகாப்பு காரணமாக ராணுவ நடவடிக்கை கொண்டு அடக்கியதால் அவரது மரணம் நிகழவே அதுவும் தியாகத்தின் வகை சார்ந்தது.

  ஆனால் சஞ்சய் காந்தியின் மரணம், சந்தேகத்துக்கிடமானதே ஆனாலும் அதை எவரும் தியாகம் என்று சொல்வதில்லை.

  அதுபோலவே ராஜீவின் மரணம் விடுதலைப் புலிலளால் நிகழ்ந்தது என்றாலும் அதன் காரணம் இந்த தேசப் பாதுகாப்புக்காக ராஜீவ் செய்த நடவடிக்கைகளால் நிகழ்ந்தது அல்ல. கிழட்டு நரியான ஜெயவர்த்தனேவிடம் ஏமாந்து ராஜீவ் உடன்படிக்கை செய்தது தவறு. இந்திய ராணுவத்தை இன்னொரு நாட்டின் கட்டுப்பாட்டில் அனுப்பியது நிச்சயமாக இந்த தேசத்தை அவமதிக்கும் செயல். இன்று இறையான்மை பேசுவோர் எல்லாம் இந்திய தேசத்தின் இறையாண்மையை அன்றே ராஜீவ் இலங்கையின் காலடியில் கிடத்தியவர் என்பதை மறைக்கிறார்கள். ராஜீவ் தனது அறியாமையாலும், அனுபவமின்மையாலும் விதைத்த வினையை அறுவடை செய்தார். அதைத் தியாகம் என்பது காங்கிரசின் ஓட்டுப் பொறுக்கும் புத்தியால் வந்த விளம்பர யுக்தி. அவ்வளவே.

  மற்ற படி, சிலர் சொல்வதுபோல சந்திராசாமி, சுப்பிரமணியம் சாமி ஆகியோருக்கு எல்லாம் இந்த அளவுக்குத் தைரியமும், திறனும் கிடையாது என்பது அவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்பவர்களுக்கும் தெரியும்.

 18. Krishna

  பாலா அவர்களே, நான் ராஜீவ் காந்தி ஆதரவாளனும் அல்ல, விடுதலை புலிகளின் ஆதரவாளனும் அல்ல. அமைதிப்பூங்காவான தமிழகத்தில் ராஜீவ் காந்தியை மட்டுமின்றி பத்மநாபா உட்பட 12 பேர்களை பட்ட பகலில் படுகொலை செய்து தமிழகத்தில் ஒரு அச்ச உணர்வை அன்றைய கால கட்டங்களில் விதைத்த ஒரு இயக்கத்திற்கு ஏற்பட்ட கதி இனி எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

  ஆயுள் தண்டனை எத்தனை வருடங்கள் என்று சொல்லப்படாததால் “நன்னடத்தை” என்ற பெயரில் குற்றவாளிகளை இஷ்டத்திற்கு விடுதலை செய்ய முடியாது. இந்த காரணங்களை நான் சொல்லவில்லை – ஜெ தலைமையிலான தமிழக அரசு அந்த 7 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இது சொல்லப்பட்டிருக்கிறது. நான் சுப்பிரமணிய சாமியையோ அன்றி வேறு யாரையும் கண்மூடி தனமாக நம்புகிறவன் இல்லை. நான் பிறந்து வளர்ந்த தமிழ் மண்ணில் ஒரு படுகொலை நடந்து அது நான் சார்ந்த தேசத்தின் அரசியல் போக்கையே மாற்றிய போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு காரணமானவர்களை கடவுள் அல்லது இயற்கை தண்டித்ததில் எனக்கு துளியும் வருத்தம் இல்லை என்பதையே தெரிவிக்கிறேன். வன்முறை எதற்குமே தீர்வாகாது. ஈழ பிரச்சினை இங்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை 2009 பாராளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற அபார வெற்றி உறுதிப்படுத்துகிறது. இதை கன்னியாகுமரியில் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். அதை ஜெயலலிதா, வைகோ போன்றவர்கள் கண்டித்தார்கள். ஆனால் ஸ்டாலின் கருத்தை உண்மை என்றே 2009 தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியது..

 19. JAI

  அமைதிப்பூங்காவான தமிழகத்தில் ராஜீவ் காந்தியை மட்டுமின்றி பத்மநாபா உட்பட 12 பேர்களை பட்ட பகலில் படுகொலை செய்து தமிழகத்தில் ஒரு அச்ச உணர்வை அன்றைய கால கட்டங்களில் விதைத்த ஒரு இயக்கத்திற்கு ஏற்பட்ட கதி இனி எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் \.
  – நான் பாலாவை பாராட்டுகிறேன்
  வந்தாராய் வாழவைக்கும் தமிழகம் என்ற புகழுடன் இருந்த தமிழகத்தை பிறகு வந்தவர்களை எல்லாம் உடல்களை சிதறடித்து சாகடித்த தமிழகம் என்ற அவபெயரை ஏற்படுத்தியவர்கள் இந்த விடுதலை புலி தீவிரவாதிகள் .இந்த தீவிரவாதிகளுக்கு எல்லாம் கருணை காட்டும் உங்களை போன்றவர்களை என்னவென்று சொல்வது
  ராகுல், சோனியா அவர்கள் அப்போது அப்படி பேசினார்கள், இப்போது இப்படி பேசுகிறார்கள்?…ராஜீவ் என்ன தியாகியா ?
  என்று கேட்கிறீர்கள். ராஜீவ் தியாகியா என்பதல்ல கேள்வி ?
  ராஜீவ் என்பவர் நமது முன்னால் பிரதமர்.
  ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் தண்டனை இல்லாமல் வெளி வருவது என்பது தனிமனிதர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை, இவர்கள் வெளியே வருவது என்பது தீவிரவாதத்திற்கு கிடைத்த வெற்றியாகவும், இந்திய தேசத்திற்கு கிடைத்த தோல்வியாகவும் தான் உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படும், தீவிரவாதிகள் மத்தியில் இந்தியா ஒரு இளிச்சவாய தேசமாக பார்க்கப்படும்.இந்திய பிரதமரை கொன்றதற்க்கே தண்டனை இல்லை எனும் போது அவர்கள் மேலும் மேலும் பல கொலைகளை செய்ய தயங்க போவதில்லை

  தண்டனைகள் தருவது இனி ” ஒருவரும் ” இது போன்ற குற்றங்களில் ஈடுபட கூடாது என்பதற்காகதான். ஒரு கூட்டம் சேர்ந்து குரல் எழுப்பினால் கொலை குற்றவாளியும் “தியாகி” ஆகிவிடலாம் என்கிற “முன்மாதிரியை” உண்டாக்க முனைவது மிக ஆபத்தானது என்பதை உணருங்கள்.
  கோர்ட் மறுபரிசீலனை செய்து தூக்கு தண்டனை தரவேண்டும்.
  தரும் என்றே நம்புகிறேன்.

 20. JAI

  அமைதிப்பூங்காவான தமிழகத்தில் ராஜீவ் காந்தியை மட்டுமின்றி பத்மநாபா உட்பட 12 பேர்களை பட்ட பகலில் படுகொலை செய்து தமிழகத்தில் ஒரு அச்ச உணர்வை அன்றைய கால கட்டங்களில் விதைத்த ஒரு இயக்கத்திற்கு ஏற்பட்ட கதி இனி எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் \.
  – நான் கிரிஷ்ணவை பாராட்டுகிறேன்
  வந்தாராய் வாழவைக்கும் தமிழகம் என்ற புகழுடன் இருந்த தமிழகத்தை பிறகு வந்தவர்களை எல்லாம் உடல்களை சிதறடித்து சாகடித்த தமிழகம் என்ற அவபெயரை ஏற்படுத்தியவர்கள் இந்த விடுதலை புலி தீவிரவாதிகள் .இந்த தீவிரவாதிகளுக்கு எல்லாம் கருணை காட்டும் உங்களை போன்றவர்களை என்னவென்று சொல்வது
  ராகுல், சோனியா அவர்கள் அப்போது அப்படி பேசினார்கள், இப்போது இப்படி பேசுகிறார்கள்?…ராஜீவ் என்ன தியாகியா ?
  என்று கேட்கிறீர்கள். ராஜீவ் தியாகியா என்பதல்ல கேள்வி ?
  ராஜீவ் என்பவர் நமது முன்னால் பிரதமர்.
  ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் தண்டனை இல்லாமல் வெளி வருவது என்பது தனிமனிதர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை, இவர்கள் வெளியே வருவது என்பது தீவிரவாதத்திற்கு கிடைத்த வெற்றியாகவும், இந்திய தேசத்திற்கு கிடைத்த தோல்வியாகவும் தான் உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படும், தீவிரவாதிகள் மத்தியில் இந்தியா ஒரு இளிச்சவாய தேசமாக பார்க்கப்படும்.இந்திய பிரதமரை கொன்றதற்க்கே தண்டனை இல்லை எனும் போது அவர்கள் மேலும் மேலும் பல கொலைகளை செய்ய தயங்க போவதில்லை

  தண்டனைகள் தருவது இனி ” ஒருவரும் ” இது போன்ற குற்றங்களில் ஈடுபட கூடாது என்பதற்காகதான். ஒரு கூட்டம் சேர்ந்து குரல் எழுப்பினால் கொலை குற்றவாளியும் “தியாகி” ஆகிவிடலாம் என்கிற “முன்மாதிரியை” உண்டாக்க முனைவது மிக ஆபத்தானது என்பதை உணருங்கள்.
  கோர்ட் மறுபரிசீலனை செய்து தூக்கு தண்டனை தரவேண்டும்.
  தரும் என்றே நம்புகிறேன்.

 21. குமரன்

  ராஜீவ் காந்தியின் சேவை, தியாகம் உள்ளிட்டவை பற்றி மக்களுக்கு இருக்கும் மனநிலையை இந்தச் செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது. பிச்சைக் காரர்களுக்குப் பேசிய தொகையைக் கூடக் கொடுக்க முடியாத நிலைக்குக் காரணம் காங்கிரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், ராஜீவ் காலத்தில் இருந்து அப்படியே மாறாமல் இன்றுவரை தொடர்வதுதான்.

  செய்தி இதோ:

  தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அரசியல் கட்சியினர் தங்கள் பலத்தைக் காட்ட மாநாடுகளுக்கு குவார்ட்டர், பிரியாணி, கைச்செலவுக்கு பணம் இதுதவிர சம்பளம் எனக் கொடுத்து ஆள் பிடிப்பது வழக்கம் (ம.தி.மு.க. போன்ற சில கட்சிகள் விதிவிலக்கு).

  ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கே ஆள் பிடிக்கும் நிலைமை யாருக்கு ஏற்பட்டுள்ளது பாருங்கள்… தேசிய, பாரம்பரியம் மிக்க, இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒரு நிலைமை.

  சரி போகட்டும், பிடித்ததுதான் பிடித்தார்கள் ஊரில் எத்தனையோ பேர் சும்மா இருக்கிறார்கள். அல்லது, வெட்டிக்கதை பேசித்திரிவோரைக் கூட அழைத்து வந்திருக்கலாம். ஆனால், போயும் போயும் பிச்சையெடுப்பவர்களை பிடித்து வந்ததுதான் தமிழக காங்கிரஸின் பெரிய காமெடி.

  இந்த மாதிரி சோதனை எந்தக் கட்சிக்கும் ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை. லெட்டர் பேட் கட்சிகள் கூட இதுபோன்றதொரு நிலையைச் சந்தித்ததில்லை.

  இந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஓவர்டேக் செய்தது காங்கிரஸ்!

  ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய, தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து பாலக்கரையில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது.

  திருச்சி நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அரவானூர் விச்சு தலைமை வகித்தார். பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் மிகச் சொற்ப அளவிலே கலந்துகொண்டனர்.

  பேசாமல், அந்த ஏழெட்டு பேருடன் அரவானூர் விச்சு, தமது ஆர்ப்பாட்ட வீச்சை நடத்தியிருக்கலாம். ஆனால், விதி யாரை விட்டது?

  கூட்டம் குறைவாக இருந்ததால் மானம் போயிருமே என நினைத்த அரவானூர் விச்சுவுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. அப்பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரர்கள் மற்றும் தள்ளுவண்டி இழுக்கும் கூலித் தொழிலாளிகள் சிலரை பணம் தருகிறோம் எனக் கூறி அழைத்து வரச் சொல்லி விட்டார்.

  அழுக்குச் சட்டைகள், மழிக்காத தாடியுன், பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தவர்களின் கையில், காங்கிரஸ் கொடியைத் திணித்து நிற்கச் செய்தனர். அவர்களும் காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்வதைக் கேட்டு, ‘காங்கிரஸ் மானம் காத்த குமரன்கள்’ போல நின்றுகொண்டிருந்தனர்.

  அப்போதுதான் பிரச்னை ஆரம்பமானது.

  கூட்டத்தில், திடீரென ஜெயலலிதா உருவபொம்மையை எரிக்கப்போவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.

  “நீங்கள் பொம்மையை எரித்தாலும் சரி. டில்லியில் உள்ள உங்கள் கட்சி அம்மையை எரித்தாலும் சரி. நம்ம பேட்டாவை கொடுத்தால் போதும்” என்ற முகபாவனையுடன் நின்றிருந்தனர், ‘திடீர்’ காங்கிரஸ் தொண்டர்கள்.

  ஆனால், ஜெயலலிதா உருவபொம்மை எரிக்கும் விளையாட்டுக்கு அனுமதி மறுத்தனர் போலீசார். (பெரிய போலீஸ் படை ஒன்றும் வரவில்லை. காங்கிரஸ் பலம் தெரிந்து, ரிட்டயர் வயதில் நாலைந்து போலீஸ்காரர்களைதான் அனுப்பியிருந்தார் அப்பகுதி இன்ஸ்பெக்டர்)

  காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கையில் வைத்திருந்த உருவ பொம்மையை, விரட்டிச் சென்று பறித்தார் ஒரு போலீஸ்காரர். மற்றொரு காங்கிரஸ் நிர்வாகியோ ஜெயலலிதா படத்தை கிழித்து எறிந்துவிட்டு துள்ளி ஓடினார்.

  இதைப்பார்த்த இரு போலீஸ்காரர்கள் மூச்சிரைக்க அவரை துரத்திக்கொண்டு ஓடினர். காங்கிரஸ் நிர்வாகியோ, பாலக்கரை சந்துகளுக்குள் மாயமானாக மறைந்து மறைந்து ஓடினார்.

  பாவம் போலீஸ்காரர்கள், ஒருவழியாக துரத்திச்சென்று அவரை கைது செய்து அழைத்து வந்தனர்.

  இந்த தமாஷ் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, அதே இடத்தில் அசையாமல் கொடியுடன் நின்ற பிச்சைக்காரர்களை ஏற, இறங்கப் பார்த்த மற்றொரு போலீஸ்காரர், “நீங்களெல்லாம் காங்கிரஸ் தியாகிகளா? வண்டியில் ஏறுங்கள்” எனக் கூறினார்.

  “தியாகியா?” என திகைத்த பிச்சைக்காரர்கள் தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வசீகரிக்கப்பட்ட கதையைக் கூறவே, சிரிப்பை அடக்கிக்கொண்ட போலீசார், அவர்களை விட்டுவிட்டு, ஒரிஜனல் காங்கிரஸ் (இவர்களும்கூட டூப்ளிகேட்டாக இருக்கலாம்) கட்சியினர் ஏழெட்டு பேரை கைது செய்தனர்.

  ஆர்ப்பாட்ட முடிவில் ஹைலைட்டான விஷயம், காங்கிரஸால் வசீகரிக்கப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு ஒப்பந்தப்படி காசு போய்ச் சேரவில்லை என்பதுதான்!

  “பாவம் பிச்சைக்காரர்கள்” என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்களைவிட பாவம், பாலக்கரை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அல்லவா?

  நன்றி: http://viruvirupu.com/

 22. Krishna

  நண்பர் குமரன் அவர்களின் கருத்தை ஏற்று கொள்ளூம் அதே நேரத்தில், படுகொலை என்பது நிச்சயம் தீர்வு ஆகாது. இலங்கை யுத்தம் முடிந்த பிறகு ராஜபக்ஷே பாகிஸ்தான், சீனாவுக்கு மட்டும் இன்றி இந்திய அரசுக்கும் ரேடார்களை கொடுத்ததற்கும் யுத்த நேரத்தில் பல உபயோகமான ஆலோசனை வழங்கியதற்கும் நன்றி தெரிவித்தார். இந்த காரணங்களுக்காக பிரதமர் அவர்களையோ அல்லது காங்கிரஸ் தலைமையையோ படுகொலை செய்ய வேண்டும் என்று யாராவது புறப்பட்டால் அதை ஏற்றுகொள்ள முடியுமா? இதற்கு ஒரே தீர்வு, அவர்கள் செய்தது தவறு என்று நினைப்பவர்கள் அவர்களை தேர்தல் மூலம் அழிக்க வேண்டுமே தவிர வேறு வகையில் அழிக்க நினைப்பது குற்றம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *