BREAKING NEWS
Search

மக்களவைக்கு இடைத் தேர்தல் வந்தால் காங்கிரஸ் அடிவாங்கும்… ஆனால் மோடி பிரதமராக முடியாது! – என்.டி.டிவி

லஞ்சம்தான் பெரிய பிரச்சினை.. மக்களவைக்கு இடைத் தேர்தல் வந்தால் காங்கிரஸ் அடிவாங்கும்.. மோடி பிரதமராக முடியாது! – என்.டி.டிவி  


டெல்லி: நாடாளுமன்றத்தை தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்திருக்கும் சூழ்நிலையில் மக்களவைக்குத் திடீர் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக என்.டி.டிவி கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

18 மாநிலங்களில் மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 125 தொகுதிகளில் 30 ஆயிரம் பேரிடம் இதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
கருத்துக் கணிப்பு விவரங்கள்

யார் ஆட்சி அமைப்பார்கள்?

மக்களவைக்கு இடைத்தேர்தல் வந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 207 இடங்களைக் கைப்பற்றும். பாஜக மட்டும் 143 இடங்களையும் கூட்டணிக் கட்சிகள் 64 இடங்களையும் கைப்பற்றும். கடந்த 2009-ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 162 இடங்களையே பெற்றிருந்தது. (பாஜக 116, கூட்டணிக் கட்சிகள் 46)

காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரையில் மொத்தம் 185 இடங்களில்தான் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாம். இதில் காங்கிரஸ் கட்சி 100 சீட்டுகள் வரை இழந்துவிடும் சூழலே நிலவுகிறதாம். கடந்த 2009 தேர்தலில் 206  இடங்களைப் பிடித்த காங்கிரஸ் இடைத்தேர்தல் வந்தால் 127ஐத்தான் கைப்பற்ற முடியும் என்கிறது இந்த கணிப்பு. 2009-ல் காங்கிரஸ் கூட்டணி 264 தொகுதிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதர கட்சிகளின் ஆதிக்கம் இடைத்தேர்தல் வந்தால் அதிகரிக்குமாம். கடந்த தேர்தலில் 117 தொகுதிகளைப் பெற்ற இதர கட்சிகள் இந்த முறைம 151 தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது.

பிற கட்சிகளுக்கு கிடைக்கக் கூடிய தொகுதிகள் (அடைப்புக்குள் 2009ல் பெற்ற தொகுதிகள்)

சமாஜ்வாதி 33 (23)
திரிணாமுல் 27 (19)
ஐக்கிய ஜனதா தளம் 25 (20)
இடதுசாரிகள் 25(24)
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 21(0)
அதிமுக 17(9)
பிஜூ ஜனாதா தளம் 14 (16)
பிஎஸ்பி 15 (21)

யார் பிரதமர்?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ராகுல்காந்தி, மன்மோகன்சிங்கை பிரதமராக ஏற்றுக் கொள்கின்றன. குறிப்பாக ராகுல் காந்திக்கு 46 சதவீத ஆதரவு உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியோ ராகுல்காந்தி, மன்மோகன்சிங், நிதிஷ்குமார் ஆகியோரை  பிரதமராக ஆதரிக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம், பாஜக, தெலுங்குதேசம், இடதுசாரிகள் நிதீஷை ஆதரிக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார், எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் பிரதமராக வாய்ப்பிருக்கிறது என்றும், மோடியை நிறையப் பேர் விரும்பினாலும் வெளிப்படையான ஆதரவு கட்சிக்குள் அவருக்கு இல்லை என்றும் சொல்கிறது கருத்துக் கணிப்பு.

ஆட்சியை நிர்ணயிக்கும் முக்கிய பிரச்சினை எது?

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, ஆட்சியை நிர்ணயிக்கும் முக்கியப் பிரச்சினையாக நிற்பது லஞ்சம்தான் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் அரசுதான் அதிக ஊழல் மலிந்தது என 54 சதவீதம் பேரும், இல்லை பாஜகதான் என 46 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவைப் பொறுத்தவரை, அங்கு ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக 48 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

-என்வழி செய்திகள்




6 thoughts on “மக்களவைக்கு இடைத் தேர்தல் வந்தால் காங்கிரஸ் அடிவாங்கும்… ஆனால் மோடி பிரதமராக முடியாது! – என்.டி.டிவி

  1. Manoharan

    காங்கிரசையும், இதாலிகாரியையும் ஒழிப்பதே நம் வேலை.

  2. Manoharan

    உங்கள் தலைப்பிலேயே காங்கிரஸ் சோப்ளாங்கி ஆகிவிட்டது என்பதை உணர்த்திவிட்டீர்கள். காங்கிரஸ் …கங்கிரஸ் ஆகிவிட்டதே……. LOL…

  3. R. Hari hara krishnan

    என். டி. டி. வி. போன முறை குஜராத்தில் சென்ற முறை மோடி முதல் வராக முடியாது என்று, இந்த மாதிரி இடைதேர்தல் அல்ல அந்த மாநில பொதுதேர்தலுக்கான முடிவிற்கு முந்தைய கருத்துகணிப்பு நடத்தி, அவர் இரண்டாம் முறையாக தனி பெரும் மெஜாரிட்டி பெற்று ஆட்சி பெற்று அமர்ந்தபோது, அவர்களுடிய லைவ் நிகழ்ச்சியை றது சைதாது இன்னும் நாங்கள் மறக்கவில்லை. சும்மா இந்த ஏன் வினோ சார், அது தங்களுக்கு வசதியாக மறந்து விட்டதா?

  4. மயானன்

    மோடி வந்தால் நல்லது. தனது மதத்தை நேசிப்பது மதவாதம் இல்லை. மாறாக மதம் மாற்றும் இழிவு செயலை செய்வதே மதவாதம் ஆகும்.

  5. தினகர்

    இடைத்தேர்தல் வரப்போவதும் இல்லை.. பாஜக வெற்றி பெறப்போவதும் இல்லை.. இன்னும் இரண்டு வருட ஆட்சியில் மன்மோகன் மீண்டும் வீறு கொண்டு வருவார். மூன்றாவது தடவையாக பிரதமர் ஆவார்.

  6. Kaathavarayan Marmayogi

    NDTV என்பதன் முழு விரிவாக்கம் Nehuru Dynasty T V ஆகும். CONgress இன் அறிவிக்கப்படாத பிரசார பீரங்கி ஆகும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *