BREAKING NEWS
Search

இவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக இருக்கும்?

இவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக இருக்கும்?

த்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ப சிதம்பரம் பெயர் முதலிடத்தில் இருந்தாலும், அவரை உள்துறை விட மறுக்கிறது!

சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் சூழலில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார்.

அதேநேரம், பெருந்தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு தோதான நபரை லாபி பண்ண ஆரம்பித்துள்ளன.

நிதித்துறையில் பெரும் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் செய்ய வேண்டிய நிலை, பெருமளவு அந்நிய முதலீடு தேவைப்படும் இந்த சூழலில்… 2014 தேர்தலின் வாக்கு வங்கி பாதிக்காத அளவு செயல்படக் கூடிய அந்த திறமையாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழலில் பிரதமரே கூட நிதித் துறையை கையாளளாம். ஆனால், பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பொறுப்பையும் இப்போது அவரால் கவனிக்க முடியுமா என்பது கேள்விக்குறி.

மற்ற திறமையாளர்கள் யார் என்று பார்ப்போம்…

சிதம்பரம் என்றால் வைட்டமின் ‘ப’!


நிதித் துறை பொறுப்பு என்றதும் தானாகவே அடிபடும் பெயர் இப்போதைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்தான். அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் பொருளாதாரத்தை நன்கறிந்தவர் சிதம்பரம்.

2004-2008ம் ஆண்டில் இவர் நிதியமைச்சராக இருந்கபோதுதான் நாடு 9 சதவீத வளர்ச்சியைக் கண்டது.

சர்வதேச பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டபோதும், நிலைமை சமாளித்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்து காட்டினார்.

ஆனால், அதே காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்களால் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் மீது கடும் கோபம் கொண்ட சோனியா அவரை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

உள்துறையை கொஞ்சமாவது செயல்படும் துறையாக மாற்ற ப.சிதம்பரமே சரி என்று மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முடிவு செய்து அவரை உள்துறை அமைச்சராக்கினர்.

உள்துறை அமைச்சராக ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாகவே உள்ளன. கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. மாதிரிதான் உள்துறையை கையாண்டு வருகிறார் சிதம்பரம். தினமும் ஐ.பி உள்ளிட்ட உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை, வாரந்தோறும் உள்துறை-உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் கூட்டாக ஆலோசனை, கிடைக்கும் ரகசிய தகவல்கள் வெளியே லீக் ஆகிவிடாமல் கட்டிக் காத்து உடனடி நடவடிக்கைகள் எடுத்து உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிதம்பரத்தின் பங்கு மிகச் சிறப்பாகவே உள்ளது.

இதற்கு முன் இந்தத் துறையை கையாண்ட சிவராஜ் பாட்டீல் அந்தத் துறையை சீரழித்து வைத்த நிலையில், அதை சரி செய்யவே சிதம்பரத்துக்கு நெடு நாட்கள் பிடித்தன. இப்போது அந்தத் துறையிலிருந்து சிதம்பரத்தை மாற்ற சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் விருப்பமில்லை என்கிறார்கள்.

எனவே சிதம்பரமே விரும்பினாலும், உள்துறை அவரை ‘சிறைவைத்துவிட்டது’ என்பதுதான் உண்மை என்கிறார்கள்.

மான்டேக் சிங் அலுவாலியா:


பிரதமர் மன்மோகன் சிங்கின் வலது கரமான இவர் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக உள்ளார்.  முழுமையான பொருளாதார வல்லுனர். அரசியல்வாதி இல்லை.

இதனால் எதையும் பட்டவர்த்தனமாக சொல்லிவிடும் இயல்புடையவர். மானியங்களை கட்டுப்படுத்தி அரசின் செலவைக் குறைத்து, அந்தப் பணத்தை நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்தச் சொல்பவர். பெட்ரோல், டீசலை விலையை மானியத்தைக் கொடுத்து குறைக்க வேண்டியதில்லை என்பவர்.

அதே நேரம் உலக வங்கி, ஐஎம்எப் போன்றவற்றின் பிரநிதியாகவே செயல்படும் அளவுக்கு சார்புடையவர் என்ற விமர்சனம் இவர் மீது உள்ளது.

இவர் நிதியமைச்சரானால் பங்குச் சந்தைகளில் பணம் புரண்டோடும் என்கிறார்கள். அந்த அளவுமுதலீட்டாளர்களுக்கு ஆதரவாக இருப்பார். ஆனால், சாமான்ய மக்களின் மேல் சுமையை ஏற்றிக் கொண்டே இருப்பார்!

சி.ரங்கராஜன்:


முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான சி.ரங்கராஜனுக்கு உடம்பெல்லாம் பொருளாதார மூளை என்கிறார்கள். ஆனால் பணவீக்கம் பற்றி இவர் சொல்லும் கருத்துகள், கணிப்புகள் ஜோசியத்தையே தோற்கடித்துவிடும். அப்போதுமட்டும் இவர் பொருளாதார நிபுணரா… மரத்தடி ஜோசியக்காரரா என்ற நினைப்புதான் வரும்!

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள இவரும் மானியங்களுக்கு எதிரானவர்தான். தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளர்.

ஆனால் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர என்ன பண்ணலாம் என்ற சிந்தனை இம்மியளவும் இல்லாதவர். இவர் நிதி அமைச்சரானால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தோஷப்படலாம். இந்திய மக்களுக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ ஒரு பலனும் இருக்காது!

ஆனந்த் சர்மா:


வர்த்தகத்துறை அமைச்சரான ஆனந்த் சர்மாவுக்கும் நிதியமைச்சராகும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சர்மாவுக்கு பிடித்த துறை வெளியுறவுத்துறை தான். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக வர்த்தகத்துறைக்கு அமைச்சராக்கினர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.

அவரும் அந்தத் துறையை ‘அனுபவித்து’ நடத்துகிறார். மகா செலவாளி. ஒவ்வொரு வெளிநாட்டு டூரின்போதும் இவர் அழைத்துச் செல்லும் நூற்றுக்கணக்கான வெட்டி ஆபீஸர்களை வெட்டிவிட்டாலே துறையின் வீண் செலவு குறையும்… செய்வாரா?

தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளரான சர்மா சர்வதேச அளவில் நிதி நிலைமை சரியில்லாதபோதும் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஓரளவு முயற்சிகளை எடுத்து வருபவர்.

சர்வதேச அரசியல், பொருளாதார விவகாரங்களில் அதீத ஆர்வம் கொண்ட இவர் கடுமையான உழைப்பாளி. ஆனால், நிதித்துறையை நிர்வகிக்கும் அளவுக்கு இவரிடம் திறமை உள்ளதா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. முதலாளிகளால் விரும்பப்படும் அமைச்சர் என்பது இன்னொரு மைனஸ்!

ஜெய்ராம் ரமேஷ்:


ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் எல்லோருக்குமே நண்பர். முதலீட்டாளர்களுக்கு ஆதரவான, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவான நபர்தான். காங்கிரஸுக்கேற்ற பக்கா அரசியல்வாதி.

கடந்த 2 முறையும் மத்தியில் காங்கிரஸ் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். சோனியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பாஜக ஆட்சியின் கடைசி ஆண்டில், தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று ஒரு போலி பிரச்சாரம் முன் வைக்கப்பட்டு கோடிக்கணக்கான பணம் செலவில் டிவி, பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தபோது அதை சமாளிக்க சோனியாவால் உத்தரவிடப்பட்ட நபர் ஜெய்ராம்.

”காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்” (இது காங்கிரஸின் கை..  எப்போதும் சாதாரண மக்களுடன் கைகோர்த்து நிற்கும்..) என்ற பதிலடி விளம்பரத்தை ஜெய்ராம் ரமேஷ் முன் வைக்க, வெங்காய.. ஸாரி வெங்கய்யா நாயுடுவும் பிரமோத் மகாஜனும் ஷைனிங் குறைந்து மூலையில் உட்கார்ந்துவிட்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் காங்கிரஸ் பிரச்சாரத்துக்குத் தலைமை தாங்கினார் ரமேஷ். இதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார். ஜெயித்தும் கொடுத்தார்.

பலவிஷயங்களில் போலித்தனமான மரபை உடைக்க விரும்புபவர் ஜெய்ராம் ரமேஷ். இவருக்கு அரசியல் தெரிந்த அளவுக்கு டெக்னாலஜியும் தெரியும், பொருளாதாரமும் தெரியும்.

நல்ல விஷயமென்றால் எதிர்க்கட்சியையும் பாராட்டுவார். தப்பு என்றால் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அல்லது முதல்வராகவே இருந்தாலும் லெப்ட் ரைட் வாங்கிவிடுவார்.

இந்தியாவில் ரூ 60,000 கோடியை நிலக்கரித்துறையில் முதலீடு செய்ய வந்த வேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் விதிகளைக் காட்டி ஏராளமான தடைகளைப் போட்டவர் ரமேஷ்தான்.  இதனால்தான் இவரை ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றினார் பிரதமர்.

ஆனால், அதிலும் கலக்கி வருகிறார் ஜெய்ராம் ரமேஷ். இவரிடம் உள்ள நல்ல விஷயம், பணக்காரர்களுக்கு ஒரு விலையிலும் ஏழைகளுக்கு ஒரு விலையிலும் எரிபொருள்களை விற்கலாம் என்பது.

டீஸல் கார்களுக்கு கூடுதலாக ரூ 2 லட்சம் வசூலித்துவிட்டால், பெட்ரோலுக்காக அதிக விலை கொடுத்து வயிறெரிபவர்கள் கொஞ்சம் சமாதானமாவார்களே என்பதுதான். மேலும் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சலுகைக் கட்டணத்தில் டீசல் தரலாம் என்றும் கூறி வருகிறார்.

காங்கிரஸ் வழக்கம்போல இந்த நல்ல யோசனையைக் கண்டு கொள்ளவில்லை.

ப சிதம்பரத்துக்கு அடுத்து பொருத்தமான சாய்ஸ் இந்த ஜெய்ராம் ரமேஷ்தான்.

பிரதமரின் தலைவர் சோனியா மனசுக்குள் என்ன இருக்கிறதோ… பார்க்கலாம்!

-என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “இவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக இருக்கும்?

 1. Siva

  Already read this same article in one india. As a reader of this website for more than 3 to 4 years now, i thought it would be better if you would have quoted the original article from which 90% of the above material has been picked up.
  ________________
  No need for that. Because that was also mine.. written by me. இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை. இந்தத் தளத்துக்கேற்ப சற்று மாற்றித் தந்துள்ளேன். ஒவ்வொரு கட்டுரைக்கும், செய்திக்கும் இதையெல்லாம் விளக்கமாக எழுதிக் கொண்டிக்க முடியாது. அது சரி, உங்களுக்கேன் இந்தக் கவலை எல்லாம். அது என்வேலை. இங்கே நான் தருவதைப் படியுங்கள்!

  -Vino

 2. arulselvan

  வினோ,
  ஒருவரும் சரி இல்லை.

  நேரம் இருந்தால் இதை படிக்கவும்.

  ரஜினியின் பொய்

  http://www.arulselvan.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *