BREAKING NEWS
Search

இது தனியாள் செஞ்சதில்ல.. கூட்டு சதி! – பகுதி 2

லிங்காவுக்கு எதிராக நடந்த சதி என்ன? ஏன் செய்கிறார்கள்?

10479955_10205359670539563_8244000875692130712_n

லிங்காவுக்கு எழுந்த எதிர்ப்பார்ப்பு, அந்தப் படத்தில் ரஜினியின் தோற்றம், நம்ப முடியாத வேகம்… இனி காலத்துக்கும் இவரைத் தாண்டி ஒருவராலும் வர முடியாது என்ற நிஜம்… இதே வேகத்தில் இவர் அரசியலுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான், லிங்காவுக்கு எதிரான பெரும் சதியைச் செய்யத் தூண்டியுள்ளது.

லிங்கா நஷ்டம் என்ற பெயரில், ரஜினியின் புகழையும் செல்வாக்கையும் அழிக்கும் முயற்சியை சிலர் திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர்.

இது இணையத்தை வாசிக்கும் அனைவருக்குமே கிட்டத்தட்ட தெரிந்திருக்கிறது.

ஒரு பக்கம் ரஜினியை தலைவர் என்று சொல்லிக் கொண்டே அவருக்கு வயதாகிவிட்டது.. ரசிகர் பலம் இல்லை.. இனி அவர் படங்களுக்கு வியாபாரமில்லை என்ற விஷமப் பிரச்சாரத்தை விநியோகஸ்தர்கள் என்ற போர்வையில் இந்த கும்பல் செய்துவருகிறது.

இந்த கும்பலை இயக்குபவர்கள் யார்?

இவர்கள் இருவரோ மூவரோ அல்ல.. ஒரு பெரிய அணி.

இந்த அணியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்துக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கும் நடிகர் அல்லது நடிகர்கள், ரஜினியின் திரை ஆதிக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறுமிக் கொண்டிருக்கும் திரையுலகினர் சிலர் உள்ளனர்.

அவர்களுக்கு சீமான், பண்ருட்டி வேல்முருகன், ராமதாஸ் போன்ற அரசியல்வியாதிகள் துணை நிற்கின்றனர். இரண்டு பெரிய கட்சிகளின் ஆதரவும் இவர்களுக்கு உண்டு என்கிறார்கள்.

ரஜினியை எப்படியாவது அரசியல் பக்கம் வரவிடாமல் தடுக்க வேண்டும். அதற்கு முதலில் அவரது திரை ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும். அப்படித் தகர்த்துவிட்டால் அவரது அரசியல் பிரவேசம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் குறைந்துபோகும் அல்லவா..

இதை நோக்கித்தான் இந்த கும்பல் காய் நகர்த்துகிறது.

மேம்போக்காக லிங்கா பிரச்சினை.. உள்ளே பார்த்தால், ரஜினியை முடக்கிவிடப் பார்க்கும் மாபெரும் சதி.

அதற்காகத்தான் எத்தனை கீழ்த்தரமான போராட்டங்களை செய்ய முடியுமோ அத்தனை கீழ்த்தரமாக அவர்கள் இறங்குகிறார்கள்.

‘ரஜினியை நம்பினால் இனி தெருவுக்கு வந்து பிச்சைதான் எடுக்க வேண்டிவரும்.. ரஜினி படங்களுக்கு வியாபாரமில்லை. அவர் படங்களை இனி வாங்கக் கூடாது..!’

– நேற்று நடந்த பிரஸ் மீட்டில் நிருபர்கள் மத்தியில் சிங்கார வேலன் வாசித்த அறிக்கையில் இடம்பெற்ற வாசகங்கள் இவை. இது ஒன்றே போதும், இவர்களின் நோக்கம் லிங்காவுக்கு நஷ்ட ஈடு வாங்குவதல்ல. ரஜினியின் ஆதிக்கத்தை தகர்ப்பதுதான் என்பதைப் புரிந்து கொள்ள.

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன நடந்தது என்பதை தனியாகத் தரவிருக்கிறேன். செய்தியாளர்களின் எந்த கேள்விகளுக்கும் இந்த சிங்காரவேலன் கும்பலால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் இருதரப்பும் மோதிக்கொள்ளும் சூழல். பிறகு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பிரஸ் மீட்டை முடிக்கும் போது, முழுக்க முழுக்க ரஜினியை கேவலப்படுத்தும் ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அதாவது, ரஜினி வீட்டு முன் பிச்சைப் போராட்டம் நடத்துவார்களாம். அதற்கு ராமதாஸ் மாதிரி ஒரு அரசியல்வாதி வந்து முதல் பிச்சை போட்டு ஆதரிப்பாராம்.

அடப்பாவிகளா…

எத்தனை எத்தனை கோடீஸ்வரர்களை உருவாக்கிய அந்த மாமனிதரை, இணையற்ற கலைஞனை இப்படியா கொச்சைப்படுத்துவீர்கள்.. உலகில் படம் நஷ்டமடைந்ததற்காக பணத்தை திருப்பித் தந்த ஒரே நடிகர் ரஜினிதான். அவரை இப்படி காயப்படுத்துகிறீர்களே, உங்களுக்கு மனசாட்சி இல்லையா? லிங்காவில் சம்பாதித்த கோடிகளை கணக்கு காட்டாமல் மறைத்துவிட்டுப் போய்த் தொலையுங்கள். ஆனால் கூசாமல் நஷ்டக் கணக்கு காட்டி, பணத்தைப் பறிக்கவும், அவரது இடத்தை கேள்விக்குறியாக்கவும் இத்தனை அநியாயமாகவா நடந்து கொள்வது?

lingaa3

-இந்த கேள்வியைக் கேட்டது ரசிகனில்லை.. அங்கு வந்திருந்த சில பத்திரிகையாளர்கள்தான். ஆனால் அதைப் பற்றி சிங்காரவேலன் கும்பல் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெரிய அசைன்மென்ட் இது. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கீழ்த்தரமாக இறங்கத்தான் போகிறார்கள். இல்லாவிட்டால், நஷ்ட ஈடு கேட்டு இவர்கள் நடத்தும் இந்த மாதிரி பிரஸ் மீட்டுகளுக்கு செலவிட எப்படி லட்சக் கணக்கில் பணம் வருகிறது?

பிச்சைப் போராட்டம் நடத்தும் இந்த மோசடிப் பேர்வழிகள், மீடியாவுக்கும் வேறு சிலருக்கும் பணத்தை அள்ளிவிடுவது எதற்காக? இதுவரை இவர்கள் வைத்த 5 பிரஸ் மீட்டுகளுக்கும் செலவழிக்கப்பட்ட தொகையே கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

இவர்களை ‘அந்த ஆண்டவன் பாத்துப்பான்’ என அப்படியே விட்டுவிடப் போகிறார்களா ரஜினியும் அவர் ரசிகர்களும்?

-வினோ
என்வழி.காம்
37 thoughts on “இது தனியாள் செஞ்சதில்ல.. கூட்டு சதி! – பகுதி 2

 1. Sk

  Am in tears !!!! Unfortunately most mainstream media is also behind this..
  I only hope that all these happenings have a reason behind and truth will triumph.
  I wish thalaivar full of peace…
  Vino sir, pls help to put down all the names connected with this backstabbing. People will need to know the truth and they’ll punish all these idiots

 2. arulnithyaj

  அண்ணா ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று நினைத்தாலும் மிக கேவலமாக இருக்கிறது இவர்களின் நடவடிக்கைகள். நிச்சயம் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா அவர்கள் தண்டனை பெறுவார்கள். அப்பொழுது தலைவர் வந்து விட கூடாதுன்னு இவர்கள் அனைவரும் இந்த வேலையை செய்கிறார்கள். நீங்கள் சொன்னது போல் அவரின் சினிமா image- ஐ தகர்த்தால் அவரது அரசியல் நுழைவையும் தடுக்கலாம் என்ற மன நிலையில் செய்கிறார்கள். இவர்கள் செய்யும் அத்துணை செயல்களும் தலைவரின் வருகையை அதிகபடுத்த, உறுதிபடுத்த தான் போகிறது. உண்மை நிச்சயம் வெல்லும் இது சரித்திரத்தில் எப்பொழுதும் உறுதிப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினை தலைவரின் ரசிகர்களை ஒன்று படுத்த உதவட்டும். உண்மை நிச்சயம் வெல்லும்

 3. Murali

  So far nobody has legally taken any action against these scoundrels . I think thats the only possible recourse we have. Now-a-days media can’t be fully trusted. They are supporting and spoiling everybody’s name equally. There is no point in depending on media to work for truth anymore. Now we are in a new world order. If Superstar realizes this quickly, as I trust his vision to be far superior from ours , he would need to change his approach and decision making in a new way.

 4. ganesh

  Sir,
  The entire episode you are explainig has to be brought the eyes of public through the true and real media.Either Sir has to speak or his well wishers like S.V.Ramanan,Cho Nakkeran Gopal.Thanu and Avm saravanan should try to impress thalaivar to speak in this regard.More over why they have not fixed 16 date on which by election result is coming.This nasty episode trying to damage thalaivars reputation should not take place.

 5. s santhanakumar

  I also want to fuck that all idiots pls thalaiva do not be patience pls come out like a lion we will eat this all idiots ,we r waiting fr thalaivar words

 6. parthi

  enakku THALAIVARA nenaikkun pothu NARNIA ASLAN LION than ninaivukku varuthu.

  aslan a romba kevalapaduthuvanga

  ana win agarathu aslan than

  Pathavi vendamnu amaithiya thedi porathum aslan than
  namma thalaivaru Singam da Aslan da

  evanavathu !!!!!!!!!!!!!
  pongada poittu kozhathaigala padikka vaingada

  mudinja dam kattunga
  dam katta solra padatha thadukatheenga

 7. srinivas Raghavan

  லிங்கா படத்தால் லாபம் adaindha எல்லா தியேட்டர் ஒனர்களையும் அழைக்க முடியுமா வினோ? இல்லை , அவர்களை மிரட்டி வரவிடாமல் செய்வார்கள?

 8. V. SURESH

  நேற்று நான் ஹிந்து websitela படிதர்தற்கும் இன்று காலை தந்தி பேப்பர் படித்ததற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் சொன்னதுபோல் இதுதான் பத்திரிகை தர்மம்?

 9. Muru

  Its all for good. Something big is to going to happen for good . It’s just matter of time . Just be patient and wait and watch!

 10. Rajan

  தலைவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நினைத்த ரசிகன் தான் நான் . அவர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக . இப்போது அவருக்கு எதிரான இந்த சதியை பார்க்கும் போது அவர் மேலே கை கட்டி எப்போதும் சொல்லிய அந்த நேரம் நெருங்கி விட்டது என்று …. கடவுளின் ஆணை !

  ராஜன்

 11. THAMEEZ

  மிகுந்த வேதனை தரும் விஷயம். நீங்கள் போட்ட லிங்கா படம் அருமை. நண்பர் ஒருவர் சொன்னது போல ஏன் எ,வி,எம் சரவணன் இதில் இறங்கவில்லை, தாணு இறங்கவில்லை. அவர்கள் ஒரு சேர ஒரு கூட்டம் வைத்தால் மாற்றம் எய்திர்பார்கலாம்.

 12. raja paris

  நண்பர்களே உற்று நோக்கினால் தெரியும் உண்மை …..இதில் மிக பெரிய ஜெயா டிவி க்கு உண்டு …ஒன்றுமில்லாத படத்துக்கு கூட நிறைய ப்ரொமோட் கொடுத்து ஓடவைக்கும் சன் டிவி & விஜய் டிவி எங்கே …கோச்சடையன் னையும் & லிங்கா வையும் வாங்கிய ஜெயா டிவி என்ன பண்ணியது யோசித்து பாருங்கள் அதிக பணம் கொடுத்து படத்தை வாங்கி ரஜினியின் பெயர் இல்லாமல் பண்ணுவது தான் இவர்கள் குறிக்கோள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு தலைவரின் பெயரையும் புகழையும் ஜெயா டிவி அடமானம் வைத்த eros நிறுவனத்து மிக்க நன்றி ( ஆண்டவன் இருக்கான் ) கண்கொள்ள சில உண்மை நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கோம் ….பணத்தாசை பிடித்த தயாரிப்பாளர்கள் என்னும் பூனைகளுக்கு யார் மணி கட்டுவது அடுத்த படத்தை யாவது ஜெயா டிவி இடம் போகமால் தடுப்பதே ஒவ்வொரு ரசிகனின் கடமை …இதை நண்பர் ***வினோ ** தலைவர் காதுக்கு எடுத்துசொல்லவெண்டும்…

 13. Rajagopalan

  Jaya Tvs non publicity.
  For “I”, they are promoting , but for Linga, nothing.
  Also Vendhar Movies, Eros etc nobody is coming with any statements.
  But all fans are just putting comments in facebook, twitter…
  Rajini fans are not active like before . This has to be accepted….

  See all these Kosu fans… How they are promoting the kosu movie…

 14. Rajagopalan

  I dont know how many of you have read todays Dhina Malar..
  There is a article regarding the issues surrounding Lingaa.
  In that , they had put as , Rajini is not going to act in movies after Lingaa.
  After seing that, iam totally mood out…
  Please Thalaiva do something ….

 15. குமரன்

  வினோ சொல்வதுபோல ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைக்கும் அரசியல் தலைவர்கள் செய்வதுதான் இது. ஜெயலலிதா மட்டமான நச்சுப் பாம்பு மோசமான சூழ்ச்சி அரசியல் செய்வதில் சிறந்தவராகத் திகழ்கிறார்.

  ராஜா பாரிஸ் சொல்வதில் உண்மை இருக்கிறது.

  எனக்குக் கிடைத்த அதிமுக உயர் வட்டத்தகவல் ஒன்றுடன் இது ஒத்துப் போகிறது.

  லிங்காவில் மோனா மோனா மோனா பாடல் தொடர்ந்து கேட்டால், நமோ நமோ என்று வருவது போல இருப்பதாக ஜெயா அபிப்பிராயம். அந்த டிசம்பர் 12,13 தேதி வாக்கில் அவர் உள்ளிருந்து வெளியே வந்தும் கூட வீட்டை விட்டு வெளிவரமுடியாத நிலைமை. ரஜினி பா.ஜ.க பக்கம் சாய்கிறார் என்ற பேச்சு வேறு அவ்வப்போது வந்த நேரம். மோடி சென்னை வந்து ரஜினி வீட்டுக்குப் போனதால் பொறாமை வேறு. எனவே அமைதியும் கருணையும் மட்டுமே வடிவமான ஜெயா, தனது சில்லரைப் புத்தியைக் காட்டி இருக்கிறார்.

  ஜெயாவின் கொத்தடிமைகளாக அறிக்கை கொடுப்பதும், அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதுமாக இருந்து வரும் சீமானும், வேல்முருகனும் இந்த அயோக்கியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதும் கூட, ஜெயாவின் ஆணைப்படியே.

  ஜெயா தொடர்ந்து கமல், விஜய், ரஜினி என்று எல்லா முன்னணி நடிகர்களும் அரசியல் பக்கம் வந்துவிடக் கூடாது என்று அவர்களது படங்களுக்குப் பிரசினை உண்டுபண்ணி வருகிறார்.

  அஜித் செத்த பாம்பு, அதை ஜெயா அடிப்பதில்லை. ரசிகர் மன்றத்தைக் கலைத்தது அஜித்தின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

 16. குமரன்

  அவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினால், அவர்கள் முகத்தில் எச்சை துப்பும் போராட்டத்தை அந்த இடத்திலேயே நாம் நடத்த வேண்டும்.

 17. Sakthi

  நீங்கள் கூறிய வீடியோவை நானும் பார்த்தேன். அந்த நாய் அறிக்கையை வாசிக்கும் பொழுது ஏனோ நாகி ரெட்டி அவர்கள் உழைப்பாளி படத்திற்காக தலைவர்க்கு 101 பொற்காசுகள் வழங்கும் காட்சி என் மனதில் தோன்றியது. எப்பேர்பட்ட மனிதர் அவர். ஏவிம், சிவாஜி புரொடக்சன்களுக்கெல்லாம் மறுவாழ்வு அளித்தவர். தயாரிப்பாளர் விநியோகச்தர்களுக்கு என்ன ஆனால் என்ன, தனக்கு பெயர்/விருது கிடைத்தால் போதும் என்று இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் கடந்த 35 ஆண்டுகளாக தன்னால் யாரும் பணத்தை இழந்துவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தவர். அப்பேர்பட்ட மாமனிதருக்கு கயவர்கள் களங்கம் ஏற்படுத்த முயலும் போது தலைவரால் லாபம் அடைந்தவரெல்லாம் மௌனமாக இருப்பது அந்த ஆண்டவனுக்கே பொருக்காது. எத்தனை பத்திரிக்கையாளர்கள் விலை போனாலும், உங்களைப் போல் தலைவரை நேசிக்கும் ஒருவர் போதும் அண்ணா, முடிந்தவரை மக்களிடத்தில் உண்மையை எடுத்துச் செல்லுங்கள் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 18. rajkumar

  கோச்சடையன் னையும் & லிங்கா வையும் வாங்கிய ஜெயா டிவி என்ன பண்ணியது யோசித்து பாருங்கள் அதிக பணம் கொடுத்து படத்தை வாங்கி ரஜினியின் பெயர் இல்லாமல் பண்ணுவது தான் இவர்கள் குறிக்கோள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு தலைவரின் பெயரையும் புகழையும் ஜெயா டிவி அடமானம் வைத்த eros நிறுவனத்து மிக்க நன்றி ( ஆண்டவன் இருக்கான் ) கண்கொள்ள சில உண்மை நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கோம் ….பணத்தாசை பிடித்த தயாரிப்பாளர்கள் என்னும் பூனைகளுக்கு யார் மணி கட்டுவது அடுத்த படத்தை யாவது ஜெயா டிவி இடம் போகமால் தடுப்பதே ஒவ்வொரு ரசிகனின் கடமை …இதை நண்பர் ***வினோ ** தலைவர் காதுக்கு எடுத்துசொல்லவெண்டும்… இது திட்டமிட்ட சதி அதிமுக பிஜேபி பமாக சோதனை வரும் சாதனை ஆகும் பாபா படத்துக்கு முன்னாடி என்னக்கு ராமதாஸ் அஹ யாருனே தெரியாது ,

 19. rajkumar

  ப்ளிஸ் லிங்கா வெற்றி விழா எடுங்க முதல, pl dnt give money to singaravelan, may be that rajini give donate poor people trust

 20. மிஸ்டர் பாவலன்

  //அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு தலைவரின் பெயரையும் புகழையும் ஜெயா டிவி அடமானம் வைத்த eros நிறுவனத்து மிக்க நன்றி//

  ஈரோஸ் நிறுவனத்தை நடத்துவது சூப்பர் ஸ்டார் இளைய மகள் சௌந்தர்யா..

 21. raja paris

  லிங்கா பிரச்னை: விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்: நடிகர் சங்கம் மவுனம்

  ரஜினிகாந்த் தயாரிப்பாளர் சங்கத்தில் மட்டுமல்ல தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் தவறாமல் வாக்களித்திருக்கிறார். சங்கத்தின் முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்று இருக்கிறார். ஆனால் இந்த பிரச்னை பற்றி இதுவரை நடிகர் சங்கம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. “சின்ன பிரச்னைகளுக்கு கூட தினமும் அறிக்கை வெளியிடும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இந்த பிரச்னையில் மவுனமாக இருப்பது ஏன் என்றும் புரியவில்லை” என்கிறார்கள் மற்ற முன்னணி நடிகர்கள்.

 22. s venkatesan, nigeria

  சும்மா பேசி கொண்டு இருப்பதால் எந்த பலனும் இல்லை. போயஸ் கார்டனில் ஒரு லட்சம் பேர் திரண்டு நிற்க வேண்டும். என்ன செய்வார்கள் பிச்சை எடுப்பவர்கள்? சென்னை மற்றும் புற நகர் பகுதி ரசிகர் மன்றங்கள் இதை முன்னெடுக்க வேண்டும்.

 23. rajkumar

  T.R gets more profit from rajini film. Distribution. Avm saravan also.they share profit to rajini? Before business. They watched they movie. Then y they distributed. Ok the arasiyal. I given 100 Rs for kathi But film not good I get money. From theatre. Or vijay. Pl make strike opposite. Of singaravelan. He want nantes name so he touch rajini.like ramadoss

 24. Karthikeyan

  தலைவர் ஏன் இன்னும் அமைதியா இருக்கார்… அவர எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்துறங்க… நாம ஏன் அமைதியா இருக்கோம்… அறவழியில கூட போராட கூடாதா நாம….

 25. மிஸ்டர் பாவலன்

  //அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு தலைவரின் பெயரையும் புகழையும் ஜெயா டிவி அடமானம் வைத்த eros நிறுவனத்து மிக்க நன்றி//

  EROS நிறுவனத்தை நிர்வாகம் செய்வது ரஜினியின் இளைய மகள்
  சௌந்தர்யா அவர்கள் தான்.. லிங்கா படம் அவசரமாக எடுக்க காரணமாக
  இருந்தவரும் சௌந்தர்யா தான்.. அதிக விலைக்கு லிங்கா படத்தை
  விற்றது சௌந்தர்யா தான்.. வேந்தர் மூவீஸ் தேர்வு செய்தது சௌந்தர்யா
  தான்.. ஜெயா டி.வி.-யை தேர்வு செய்ததும் சௌந்தர்யா தான்.. ரஜினி மகள்
  என்பதால் சௌந்தர்யாவை யாரும் குறை சொல்லாமல் அதிமுக-வையும்,
  J.J. அவர்களையும் குற்றம் சொல்வது சரி அல்ல.. நன்றி..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 26. Venkat

  கடைகோடி தலைவர் ரசிகர் வாக்குமுலம், தலைவர் இதில் இறங்கவில்லை என்றால் பல ரசிகர்கல் தற்கொலை செய்ய போகிறோம்.

 27. மிஸ்டர் பாவலன்

  சிங்கார வேலன் சூழ்ச்சிக்கு சில ரஜினி ரசிகர்கள் சோரம் போய் இருப்பது
  மிகவும் வருத்தமாக இருக்கிறது.. கேவலம் பணத்திற்காக இப்படி இவர்கள்
  பொய்யான அறிக்கை விட்டிருக்கவேண்டாம்…

  செய்தி கீழே.. (இவர்கள் அறிக்கையை வருத்தத்துடன் கீழே தருகிறேன்..)
  ——————-
  ரஜினிகாந்த் நடித்த “லிங்கா” படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு வழங்க கோரி போராடி வருகின்றனர்.

  இந்நிலையில் பட்டுக்கோட்டை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதவாது, “மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களை தெய்வமாக பாவிக்கும் கோடானுகோடி ரசிகர்களில் நாங்களும் அங்கம் வகிக்கிறோம். ‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரத்தை தொடர்ச்சியாக கவனித்து வருகிறோம்.

  பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளதால் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். ‘லிங்கா’ திரைப்படம் பட்டுக்கோட்டையில் அன்னபூர்ணா, அருண் என இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இரண்டு தியேட்டர்களிலும் முதல் நாள் காட்சியை நமது ரசிகர் மன்றம் சார்பில் எடுத்திருந்தோம். இரண்டு திரையரங்களிலும் மொத்தமாக 8 காட்சிகளுக்கும் சேர்த்து 4600 பேர் படம் பார்க்கலாம்.

  இதனை கருத்தில் கொண்டு 7,70,000 ரூபாய் கொடுத்து மொத்த டிக்கெட்களையும் முதல்நாளே வாங்கி கொண்டோம். மறுநாள் திரையரங்கிற்கு சென்றால் கடும் அதிர்ச்சி. படம் வெளியான நாளில் இரண்டு திரையரங்குகளிலும் படம் பார்த்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1600 மட்டுமே. வசூலான தொகை 3,60,000/- மட்டுமே. எங்களுடைய இழப்பு 4,10,000/- ரூபாய். மன்றத்திற்கு நிதி திரட்டும் வகையில் வட்டிக்கு வாங்கி காட்சிகளை எடுத்திருந்தோம்.

  நஷ்டத்தை தாங்கி கொள்ள வழியில்லாததால் இரண்டு திரையரங்கு நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டு நஷ்டத்தை திருப்பி தர கோரினோம். ஆனால் கணக்கில் ஏற்றிவிட்டதாகவும், தங்களால் உதவ முடியாது எனவும் தெரிவித்துவிட்டனர்.

  வேறு வழியில்லாததால் எங்கள் பகுதி விநியோகஸ்தர் சிங்காரவேலனை சந்தித்து எங்களுடைய நிலையை கூறியதுமே, உடனடியாக ஒரு லட்ச ரூபாயை கொடுத்து “எதற்கும் கவலைப்பட வேண்டாம். மீதித் தொகையையும் விரைவில் தருகிறேன். என்று உத்தரவாதம் அளித்தார்.

  கண்ணீரோடு நன்றி சொல்லிவிட்டு வந்தோம். அவர் போராடுவது அவருக்காக மட்டும் அல்ல. எங்களை போன்ற பலருக்காகவும் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மன்றத்திற்கு நிதி திரட்ட ஆசைப்பட்டு நஷ்டமடைந்த எங்களுக்கு அவர் ஏன் உதவவேண்டும். அதற்கு பெயர்தான் மனிதாபிமானம்.

  அவரால் தாங்கக்கூடிய நஷ்டத்தை அவர் நிச்சயம் தாங்குவார். அளவு அதிகமாக இருக்கும் போது போராடுவது இயற்கைதான். எனவே நாங்கள் வணங்கும் தெய்வமாகிய நீங்கள் இதில் தலையிட்டு நிவாரணம் கிடைக்க செய்தால் எங்களின் கஷ்டமும் நீங்கும் என்பதை இந்த தருணத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.”

  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 28. Tiger

  கடைகோடி தலைவர் ரசிகர் வாக்குமுலம், தலைவர் இதில் இறங்கவில்லை என்றால் பல ரசிகர்கல் தற்கொலை செய்ய போகிறோம்.

  ——————————————-

  Good decision please do this ASAP, All the world will thankyou guys. what a waste human life

 29. Rishi

  Mr. Pavalan, don’t post negative news here about soundarya and few traitors in the name of fans. There are other forums for your purpose.

 30. Thiagarajan

  This is very sad news to know about the actor. It is coward act of some people who try to tarnish the image of the actor and also seeking political support. It is truly intentional.The fans of the actor unite and warm these kind of people. Only then these people will keep quit.

 31. Thalaivar Fan

  Mr pavalan,
  So, soundarya is the big culprit, but that old hag is a very harmless butterfly, isnt she?
  R u the insider of eros? Wat hv she to do with selecting those idiots?

  //சில ரஜினி ரசிகர்கள் சோரம் போய் இருப்பது
  மிகவும் வருத்தமாக இருக்கிறது.//
  Romba feel pannatingga. Intha mathiri black sheeps yevalavo parthuthom. (Including u)
  Btw, Rajini yen nanban-nu vai kusamal sonna unga local nayaganku vaipunna? Cat got his tongue?
  If u dare cmmnt abt this first b4 putting useless comments

 32. மிஸ்டர் பாவலன்

  நானும் ஒரு ரஜினி ரசிகர் தான்.. என்னை ‘black sheep’ என்ற கடும் சொல்லால்
  சிலர் தாக்குவதால் இனி இந்த வலையில் கருத்துக்களை எழுதுவதை
  தவிர்த்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 33. நாஞ்சில்மகன்

  நானும் ஒரு ரஜினி ரசிகர் தான்.. என்னை ‘black sheep’ என்ற கடும் சொல்லால்
  சிலர் தாக்குவதால் இனி இந்த வலையில் கருத்துக்களை எழுதுவதை
  தவிர்த்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

  இந்த முடிவை நான் என்றோ எடுத்து விட்டேன். கடந்த ஒன்றரை வருடங்களாக நான் எந்த கருத்தும் பதிவிடுவதில்லை. சில சமயம் அந்த கட்டுபாட்டையும் மீறி உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை பதியவிட்டால் நடுநிலைவாதி, நேர்மையின் சிகரம் வினோ அவர்கள் பிரசுரிப்பதில்லை. இத்தனைக்கும் தவறான வார்த்தைகள் என் கருத்துகளில் இடம் பெற்றது இல்லை. நன்றி பாவலன் அவர்களே…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *