BREAKING NEWS
Search

‘தலைவரோட நாம புகைப்படம் எடுத்துக் கொள்வது எப்போது?’

‘தலைவருடன் போட்டோ… நமக்கு எப்போ சான்ஸ் கிடைக்கும்?’

fans-id

சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களை வரவழைத்து அவர்களுடன் படமெடுத்துக் கொள்கிறார் என்ற செய்தி பரவிய உடனே, பரபரப்புடன் ரசிகர்கள் கேட்கும் கேள்விதான் மேலை நீங்கள் படித்த தலைப்பு.

கவலைப்பட வேண்டாம். எல்லோருக்குமே ஒரு வாய்ப்புக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இப்போது ரஜினி தன் ரசிகர்களுடன் படமெடுத்துக் கொள்வது முதல் கட்டம்தான். இந்த மாதம் 5 நாட்களை ஒதுக்கி 15 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். எப்படியும் 8000 பேர்வரை இதில் கலந்து கொண்டு படமெடுத்துக் கொள்ளப் போகிறார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு அடுத்த கட்ட படமெடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மீதியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்களுடன் ரஜினி படமெடுத்துக் கொள்வார்.

ஆன்லைனில் இயங்கும், மன்றங்கள் சாராமல் தனிக் குழுக்களாக இயங்கும் ரசிகர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கும் திட்டமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

-என்வழி ஸ்பெஷல்




7 thoughts on “‘தலைவரோட நாம புகைப்படம் எடுத்துக் கொள்வது எப்போது?’

  1. hemnath

    அது எப்போ, ஏதேனும் வாய்ப்பு உண்ட சார் ..

  2. ஸ்ரீகாந்த்.1974

    கடவுளே தலைவரோடு புகைப்படம் எடுக்கும் ஒரு வாய்ப்பை
    எனக்கும் ஏற்படுத்திக்கொடுங்கள்.
    __________

    சில வாரங்கள் அல்லது மாதங்கள் பொறுத்திருங்கள்.

    -என்வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *