BREAKING NEWS
Search

9 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி தெரிவித்த ‘வருத்தம்’ இது… ஆனால் அதை மீடியா வெளிப்படுத்திய விதம்??

அன்று நடந்ததை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை சத்யராஜ்!

thalaivar smile

2008-ம் நடந்த காவிரிப் பிரச்சினைக்காக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் அத்தனை நடிகர்களும் பங்கேற்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமலும் வழக்கம்போல பிரதானமாக அமர்ந்திருந்தனர்.

அந்த போராட்டத்தின்போது மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தார் ரஜினிகாந்த். காரணம் அவரை மேடையில் வைத்துக் கொண்டே மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டார் சத்யராஜ். அந்த மேடையில் ஒவ்வொரு நடிகரும் ரஜினி பெயரைச் சொன்னபோது, வந்திருந்த கூட்டம் ஆர்ப்பரித்து அடங்கியது. அதில் கடும் எரிச்சலான சத்யராஜ், “நடிகர் (ரஜினி) பெயரைச் சொன்னதும் கைத்தட்டல் கிடைக்கிறது. ஆனால் நான் சொல்லமாட்டேன். நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன்..” என்று ஆரம்பித்து கடுமையாகப் பேசினார். ரஜினி காதுபடவே ஆபாச வார்த்தைகள் சிலவற்றையும் அவர் பேசினார்.

ரஜினியின் முறை வந்தது. கர்நாடகத்தில் பேருந்துகளைக் கொளுத்தும், வன்முறை வெறியாட்டம் போடும், தண்ணீர் தரவிடாமல் தடுக்கும் வன்முறையாளர்களை உதைக்க வேண்டாமா? என கொந்தளித்துவிட்டார்.

இந்த போராட்டம் முடிந்த அடுத்த சில தினங்களில் குசேலன் படம் வெளயாகவிருக்கிறது. அங்கே கன்னட வெறியர்கள் ரஜினிக்கு எதிரான போராட்டங்களை வரிசையாக ஆரம்பித்து வன்முறையாட்டம் போட்டார்கள். ரஜினி படங்களை எரித்தார்கள். ஆனால் தமிழ் சினிமாவிலிருந்து ஒரு குரல், ஒரே ஒரு குரல் கூட காவிரி நீருக்காக ஆவேசமாகப் பேசிய ரஜினிக்கு ஆதரவாக எழவில்லை.

நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமாரைக் கேட்டபோது, ரஜினி எங்களிடம் வந்து உதவி கேட்டால் செய்வோம் என்றார். படம் வெளியிட முடியாத சூழல்… பெங்களூரில் நிலவரம் கலவரமாக இருந்த சூழலில், ரஜினி ஒரு கடிதம் எழுதினார் கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலாவுக்கு. அதில் படம் வெளியாக உதவுங்கள் எனக் கேட்டிருந்தார். வேறு எதுவும் அவர் விளக்கம் தெரிவிக்கவில்லை. மன்னிப்போ, வருத்தமோ கூட கேட்கவில்லை.

அடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கிறார். முழுக்க கன்னடத்தில் பேசிய ரஜினி சொன்னது இது:

குசேலன் படம் தொடர்பாக நான் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதில் குசேலன் படத்தை வெளியிட ஒத்துழைப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.

இந்த நிலையில் சில கன்னட அமைப்பினர் நான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருவது என் கவனத்துக்கு தெரியவந்தது.

rajini-cauvery

நான் கன்னட மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் “உதைக்க வேண்டும்” என்று சொன்னது, பஸ்களை கொளுத்தியவர்களுக்கும், பொதுச் சொத்துக்களை சேதம் விளைவித்தவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். மற்றவர்களை பொதுவாக குறிப்பிட்டு அப்படிச் சொல்லவில்லை.

ஓசூர் ரோட்டில் போராட்டம் நடந்தபோது வன்முறையில் ஈடுபட்டவர்களை, பஸ்களைக் கொளுத்தியவர்களை நான் கண்கூடாகப் பார்த்தேன். ஆனால் அவர்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல. கன்னட மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

நான் ஒரு பேச்சாளனோ, அரசியல்வாதியோ கிடையாது. எனவே பேசும்போது தவறுகள் ஏற்படுவது சகஜம். இதன் மூலம் கன்னடர்களிடம் நான் புதிய பாடம் ஒன்றை கற்றுக் கொண்டேன்.

ஏதோ நடக்காதது நடந்து விட்டது. இனிமேல் இதுபோல் நடக்காது. இனி நான் பேசும்போது யாருடைய மனதும் நோகாதபடி கவனமாகப் பேசுவேன்.

என் படங்களுக்கு கர்நாடகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரும் பணம் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பாதிக்கக் கூடாது. எனவே, குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக ஒத்துழைப்பு கொடுங்கள். நீங்கள் கன்னடத்துக்காக போராடுங்கள். உங்கள் போராட்டத்துக்கு ஊக்கம், ஒத்துழைப்பு கொடுக்க தயார். நான் இன்று பணம், புகழோடு இருப்பதற்கு காரணம் நான் ஆரம்பத்தில் பார்த்த கண்டக்டர் வேலைதான். கண்டக்டராக வேலை செய்ததை நான் இன்னும் மறக்கவில்லை…”

– ஆனால் இதை மீடியா எப்படித் திரித்தது தெரியுமா?

“ரஜினி கன்னடர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார்!”

“குசேலன் பட ரிலீசுக்காக கன்னடர்களிடம் சரணடைந்த ரஜினி”

-இதுபோல பல நூறு தலைப்புகளில் செய்திகளை திரித்து வெளியிட்டு வெறுப்பைப் பரப்பினார்கள். அப்போது பிரபலமாக இருந்த ப்ளாக்குகள் மற்றும் அப்போதுதான் பரவ ஆரம்பித்திருந்த பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் அப்படி ஒரு வெறுப்பைப் பரப்பிக் கொண்டிருந்தனர் இந்த செய்திகளை மட்டுமே நம்பி.

விளைவு… குசேலன் படத்துக்கு தமிழகத்திலும், ஆந்திரத்திலும் கன்னடத்திலும் ஆதரவில்லாமல் போனது. அமைதியாக இருந்தார் ரஜினி.

இன்று சத்யராஜ் செய்திருப்பது என்ன? ரஜினி ஒரு இடத்தில்கூட மன்னிப்பு என்றோ வருத்தம் என்றோ குறிப்பிடவே இல்லை. இவர் தெளிவாகச் சொல்கிறார்… ‘பாகுபலி 2 வெளியாக வேண்டும். யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது. எனவே கன்னடர்கள் மனம் என் பேச்சால் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று.

இதுதான் பக்கா சந்தர்ப்பவாதம் என்பது. உண்மையிலேயே மானத் தமிழன் என்றால், சத்யராஜ் என்ன செய்திருக்க வேண்டும்?

“முடியாதுய்யா… வேணும்னா என் காட்சிகளை வெட்டி எறிந்துவிடு… இந்தா எனக்கு நீ தந்த சம்பளம்… அல்லது கர்நாடகத்தில் ரிலீஸ் பண்ணாதே… அந்த நஷ்டத்தை நான் தருகிறேன்…” சொல்வாரா… சொல்லத்தான் முடியுமா?

இன்று சத்யராஜை சமூக வலைத் தளங்களில் மக்கள் இப்படி வறுத்தெடுக்கக் காரணம், அன்று நடந்ததையெல்லாம் அத்தனை சுலபத்தில் யாரும் மறந்துவிடவில்லை என்பதுதான்.

-என்வழி
8 thoughts on “9 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி தெரிவித்த ‘வருத்தம்’ இது… ஆனால் அதை மீடியா வெளிப்படுத்திய விதம்??

 1. Guhan Ranganathan

  Even Now I cannot forget the way this fellow scolded our SuperStar…

  Even Now I could see this fellow is Jealous of SuperStar
  In Nerupuda Audio release you can see his face was so arrogant when Vivek was praising SuperStar..

  Time will teach everybody and I hope this fellow realises his mistakes…

 2. Nanda

  Good recall.. Sathyaraj is funny guy. It’s time to realize his mistake. He over talked beyond the issue..

 3. சக்திகுமார் எல்

  சின்ன வயதில் இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம் எனப்படித்தது வெறும் கிரிக்கெட் பார்க்க மட்டும்தான் எனத்தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றனர் பலர்….

  வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதாலையே இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் என பெருமையாக சொல்லி கொண்டிருந்தோம்.
  அந்த பெருமைக்கான நிகழ்வுகள் அபோது 100% இல்லை எனினும் 70% தாராளமாக இருந்தது !

  அதற்கு 1950க்கு பழைய வரலாறு,செத்திகள் பார்த்தால் தெளிவாகப்புரியும். அந்த சதவிகிதம் இப்போ படிப்படியாக குறைந்து 20% கூட இல்லை என்பதை பார்க்கும்போது மிகவும் வேதனை அளிக்கிறது.
  (ஆனால் நான் பெருமையுடன் கூறிக்கொள்குறேன் 20% ல் நானும் ஒருவன் காரணம் என் தலைவன்)!

  உலகம் எனப்பேசும்போது ஆசியன்
  ஆசியன் எனப்பேசும்போது இந்தியன்
  இந்தியன் எனப்பேசும்போது இந்து முஸ்லீம் கிறித்தவன்…
  திராவிடம் எனப்பேசும்போது தமிழன்,தெலுங்கன், கன்னடன் , மலையாளி!
  இதற்கெல்லாம் காரணம்
  திடீர் போராளி… !!

  படித்தவர்களையும் முட்டாளாக்கி
  ஒரு குறிப்பிட்ட மொழியின் பேரைச்சொல்லி அந்த மொழியில் உள்ள வெறியர்களை(கூமுட்டைக்களை)
  தன் சுய லாபத்திற்காக பயன்படுத்துகிற
  சீமான்
  வேல்முருகன்
  வாட்டல் நாகராஜ் போன்ற அலப்பறைகள்
  அவர்களுக்கு சப்போர்ட் பண்ணும்
  சத்தியராஜ் போன்ற அல்லக்கைகள்!!

  இப்போ சமிபத்திய பிரச்சனை
  சத்தியராஜ் வருத்தம் தெரிவித்தது….
  ஒன்பது வருடம் முன் நடந்த பிரச்சனைக்கு அந்த சம்பவம் நடந்த ஒரு வாரகாலத்தில் வந்த படத்திற்காக அதன் தயாரிப்பாளர்களுக்காக ரஜினி வருத்தம் தெரிவித்தார் அதற்கு இரண்டு முக்கிய காரணம்
  1.அந்த படம் ரஜினியை முன்னிலைபடுத்தி எடுக்கப்பட்ட படம் ரஜிக்காக மட்டுமே கர்நாடகாவில் ஓடக்கூடியபடம்
  2.பிரச்சனை வந்து ஒரு வாரத்தில் ரீலிசாக வேண்டிய படம் அதனால் பிரச்சனையின் வீரியம் அதிகம்

  ஆனால் இன்று சத்தியராஜின் நிலைபாடு வேறு
  1.சத்தியராஜை முன்னிலை படுத்தி வெளியிடப்படுகின்ற
  படம் இல்லை… சத்தியராஜ் வருத்தம் தெரிவிக்கவிட்டாலும்
  இயக்குனர் தரப்பில் இருந்து இனி சத்தியராஜை புரக்கணிக்கிறோம் எனக்கூறி அறிவிப்பு விட்டால் கூட ரீலிஸ் ஆகி இருக்கும்

  2. 9 வருடம் கழித்து பிரச்சனையுன் வீரியம் சுத்தமாக இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே அப்படி இருக்கும் போது இப்படி பக்கம் பக்கமாக விளக்கமளிக்க அவசியம் எதும் இல்லை
  அந்த விளக்கத்துக்கு சொம்பு தூக்குறவங்களுக்கு புரிதலும் இல்லை.

  3. 9 வருடம் முன்பே சத்தியராஜ் என் படங்கள் இந்த சிறு நடிகனின் படங்கள் இனி கர்நாடகத்தில் ரீலிஸ் ஆகாது என அறிவித்து இருக்கலாமே
  இதுவரை இன்னைக்கு வரை உனக்கு இருக்கிற மார்க்ர்ட்டுக்கு ஏற்றால் போல கல்லாகட்டிகிட்டு தானே இருக்க.

  சரி விசயம் தான் என்ன….
  1.பொறாமையின் உச்சம்.
  எப்படி இவன் இவ்ளோ பெரிய ஆள் ஆனால்
  நாமளும்தான் நடிச்சோம் ஆடினோம் பாடினோம் சிவப்பா இருக்கோம்
  நமக்கு ஒன்னும் பெருசா இல்லையே….

  2.எளிமையான விளம்பரம்.
  இதற்கு செலவு இல்லாமல் தமிழகத்தில் ஏன் இந்தியாவில் இருக்கிற ஒரே வாய்ப்பு ரஜினி என்கிற மனிதர்….
  தன்னை எவன் எவன் எப்படித்திட்டினாலும்
  கடவுள் இருக்கிறான் என்ற ஒற்றை நம்பிக்கையில்
  அமைதியாக இருக்கும் குணம்.

  அதனால் தான் ஈமுக்கோழி வாங்கினால் கோடீஸ்வரன் ஆகலாம் என கோடி வாங்கி விளம்பரத்தில் நடித்து விட்டு கோடிபேரை நஸ்டத்தில் தள்ளும் போது மூடிகிட்டு இருந்த வாய் இப்போ அதே சத்தியராஜ்க்கு சால்றா போடுகிறது.

  இவனுங்க என்னதான் பண்ணினாலும்
  தமிழ்ன்,கன்னடன்,தெலுங்கன்,மலையாளி,குஜராத்தி, மராட்டி,பஞ்சாபி எனப்பாரபட்சம் இல்லாமல் ரசிகர்களின் ஆதரவு.. சமூக ஆர்வகளின் ஆதரவு பொது மக்களின் ஆதரவு எனப்பெற்று இன்று இந்திய ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும் அளவிற்கு பேசப்படுகிற அளவுக்கு வளர்ந்து இருப்பதற்கு காரணம்
  தன்னை மதிக்காதவரை தரக்குறைவாக பேசாமல்
  சமயம் வரும்போது அவர்களுக்கும் உதவும்
  எளிமையின் சிகரம்
  எங்கள் தலைவரின் நற்குணங்களால் மட்டுமே சாத்தியம்.

  தலைவர் தமிழ்நாட்டில் தான் இருப்பார்
  பிடிக்கலைனா ஓடிப்போய்ருங்க எங்க ஓடிப்போவீங்க??
  ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும் அவரை மட்டம் தட்டும் போது வார்த்தையால் பதில் காரணம் இது நீங்க பிறந்த ஊர்….
  மத்த இடத்தில் மரண அடிதான்.

  ஆகையால்
  அவர் வளர்ச்சியை கண்டு பொறாமையில் பொங்காமல்
  பொங்கல் தின்னுட்டு ஓரமாக இருக்கவும்.

  நீண்ட இடைவெளிக்குப்பின்
  மகிழ்ச்சியுடன்
  -சிட்லு அஜய் ரஜினி.

 4. Krishnan

  Hope the time would have taught something to Sathyaraj. He should realize that blood is a blood and not Tomato chutney… Karma does its job!!!

 5. Rajagopalan

  Thalaivarunnu Thakali Chutney, avurukunna Rathama????
  Who supported thalaiver in that time?
  Today Kamal is giving a statement which states Mannipu Kepavan Periya Manidhan.
  Except our fans, all guys are backstabbing thalaivar…
  What to say?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *