BREAKING NEWS
Search

கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை! – தயாரிப்பாளர் முரளி மனோகர்

கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை! – தயாரிப்பாளர் முரளி மனோகர்

murali manohar

சென்னை: கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் தொடர்பில்லை. அந்தக் கடனை நாங்களே திருப்பிச் செலுத்திவிடுவோம், என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறினார்.

சமீப நாட்களாக ‘கோச்சடையான்’ சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தைத் தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அவர் பேசும்போது, “நான் இங்கே  சில உண்மைகளை பகிர்ந்து கொள்ளவே உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். உங்கள் முன் யதார்த்தத்தை சொல்லவே வந்துள்ளேன்.

குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் ஒரு பொது நிறுவனம். இதுகடந்த பத்தாண்டுகளாக  செயல்பட்டு வருகிறது. இது படத்தயாரிப்பு, பட விநியோகம், திரையீடு என பலவிதமான தளங்களிலும் இயங்கிவருகிறது.

படத் தயாரிப்பை எடுத்துக் கொண்டால் ஐஸ்வர்யா ராய், மிராண்டா ரிச்சர்ட்சன் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த “provoked” போன்ற சர்வதேச தரத்திலான படங்களையும் சர்வதேச சந்தைக்குச் கொண்டு சென்றிருக்கிறது. தமிழில்’ஜீன்ஸ்’ ‘மின்னலே’ ‘தாம் தூம்’ போன்றவற்றைத் தயாரித்தோம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை எங்களுக்கு சொந்தமானவை, குத்தகை என்று 30 திரையரங்குகள் உள்ளன. இந்த வரிசையில் மேலும் சில திரையரங்குகளைக் கொண்டுவர ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் சமமாக்கி ஒரு சுதந்திரமான சங்கிலியாக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

நம் நாட்டு பிரபலங்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக 1988 லேயே ‘ப்ளட் ஸ்டோன்’ எடுத்தேன். அதே போல ‘கோச்சடையான்’ படத்தை சர்வதேச தரத்துடன் எடுக்க நினைத்தோம்.  இங்கென்றால் வியாபார லாபம் நஷ்டம்  உடனே  தெரிய வரும். நம்  பிரபலங்களை உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல் வியாபார லாபம்  சற்று தாமதம் ஆகும்.

கோச்சடையான்’ படத்தைப் பொறுத்தவரை அதை பல வெளிநாட்டு மொழிகளில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆங்கில மொழியாக்கம் தொடர்பான வேலைகள் இப்போதுதான் நடக்கின்றன.

கோச்சடையான் தொழில் நுட்பரீதியிலான ஒரு நல்ல முயற்சி. ஆனால் அப்போது நிதிப் பிரச்சினை ஏற்பட்டது.

மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் 20 கோடி ரூபாய் சட்டத்திற்கு உட்பட்டுதான்  கடன் வாங்கியது. இதை தனது சுயமான திருப்பிச் செலுத்தும் சக்தியுடன் வாங்கியது. அப்போது உத்தரவாதத்துக்காக திருமதி லதா ரஜினிகாந்த் எங்களுக்கு  உதவ எங்களுடன் இணைந்தார்.

உண்மையில் இந்நிறுவனம் 31.3.2015 க்குள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இருக்கிறது. இதை முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2014ல் வங்கியுடன் சுமுகமாக முடிந்துள்ளன.

வங்கிக்கான வட்டியை ஜூன் 2014 வரை முறையாக தொடர்ச்சியாக செலுத்தியே வந்துள்ளோம்.

நிதிப் பிரச்சினை எல்லாருக்கும் வருவது சகஜம்தான். எங்களுக்கும் வந்தது. அதிலிருந்து மறு சீரமைப்பு செய்து  வேறு வேறு வரவு ஆதாரங்கள் மூலம் மீளும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் உத்திரவாதம் அளித்தவர் மட்டுமே. ஆனால்அவரை சம்பந்தப்படுத்தி செய்திகள் வருகின்றன.

எனவே உத்திரவாதம் அளித்த அவருக்கு தொந்தரவு தராதபடி நாங்களே கடனை அடைத்து விடுவோம். தவறான செய்திகளை நம்ப வேண்டாம்,” என்றார்.

என்வழி
One thought on “கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை! – தயாரிப்பாளர் முரளி மனோகர்

 1. yaseenjahafar

  வணக்கம் சார்,

  நான் சமீபத்தில் உங்களது படம் லிங்கா சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நடித்த படம் பார்தேன் நான் கடந்த 20 வருட காலமாகா துபாயில் வசித்து வருகிறேன் உங்களது படம் நன்றாக வந்து இருக்கிறது நல்ல ரிசல்ட் வந்து இருக்கிறது இந்த படத்தின் பட்ஜட் 120 கோடி என்றும் அதை ஈரோஸ் நிருவனத்திற்க்கு விற்று வித்தாகவும் அவர்கள் 210 கோடி வியாபாரம் பார்த்ததாகவும் செய்திகள் வேந்தர் மூவீஸ் 80 கோடி வித்தாகவும் செய்திகள் அவர்கள் வினியோஸ்தகர்கள் கைக்கு மாரீ பிறகு தியேட்டர் காரர்களுக்கு போய் கிடைக்கிறது எப்படி பார்த்தாலும் படம் நஷ்டம் கிடையாது சார் துபாயில் முன்பெல்லாம் ரஜினி படம் கமல் படம் மட்டும் தான் வரும் தமிழ் படங்களை சொல்கிறேன் அப்படி வந்தால் 6 முதல் 8 தியேட்டர் தான் வரும் ஆனால் தர்பொழுது வந்து உள்ள லிங்கா படம் ஒரு துபாய், ஷர்ஜாஹ், அஜ்மான் , அபுதாபி, ராஸ் அல் கைமா, உம்மால் குயீன், புஜைரஹ் போன்ற இடங்களில் படம் ரிலீஸ் ஆனது இது இல்லாமல் பெரிய மால்களில் எல்லாம் 45 பிரிண்ட் வெளியானது ஒரு டிக்கெட் விலை 30 திரஹம் முதல் 35 திரஹம் வரை இருக்கும் அப்படி என்றால் பார்த்து கொல்லுன்கால் முதல் முன்று நாள் வரை நல்ல கூட்டம் ஒரு ஷோ 600 சீட் என்று வைத்து கொல்லுன்கால் 600.x 35 = 21,000.00 திரஹம் அதை அப்பாடியே x 17 = 3,57,000.00 ருபீஸ் ஒரு ஷோ காலக்ஷ்சன் ஒரு நால் வசூல் 5 ஷோ நடக்கும் அப்படி என்றல் ஒரு நாள் வசூல் 3,57,000.00 x 5 = 17,85,000.00 இது ஒரு தியேட்டர் ஒரு நாள் வசூல் இந்தியன் ருபீஸ் அப்படி என்றல் பார்த்து கொல்லுன்கால் எப்படி படம் வசூல் பண்ணி இருப்பார்கள் என்று இத போல் எத்தனை நாட்டில் படம் வசூல் பண்ணி இருக்கும் வினியோஸ்தகர்கள் தியேட்டர் காரர்களும் பொய் கூறி கொண்டு இருக்கிறார்கள் ரஜினி படம் என்றல் முதல் முன்று நாட்கள் வசூல் ஆகி விடும் பல விமர்சனம் வரும் பொழுது மனது ரெம்பவும் வேதனை அடைகிறது ரஜினி சார் மேல் உள்ள பாசத்தாலும் ரவி குமார் சார் மேல் உள்ள பாசத்தாலும் இந்த மெசேஜ் உங்களுக்கு சமர்ப்பணம் மேலும் ஒரு வேண்டுகோல் ரவி குமார் சார், ராக் லைன் வெங்கடேஷ், வேந்தர் மூவீஸ்,வினியோஸ்தகர்கள், தியேட்டர் உரிமையாளர், அனைவரும் ஒன்று கூடி ஒரு பிரஸ் மீட் ஜெயா டிவிக்கு கொடுக்க வேண்டும் அப்பா தான் மீடிய அமைதியகா இருப்பார்கள் அப்பதான் உங்களது இமேஜ் பார்த்து கொள்ள முடியும் இதை தான்கால் செய்வீர்கள் என நம்பிக்கை உள்ளது

  பிரிய விடை பெரும்

  ப்ரியமுடன்

  யாசீன் ஜெஹபர் தீன் T.M.

  Eanvazhi publisher please this matter should bring the top of the People like Rajini sir and K.s. Ravi Kumar as such a position should know about the director

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *