BREAKING NEWS
Search

‘என்ன இது.. புலி பத்தி நான் எதுவுமே சொல்லலையே… அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே!!’

இதுக்குப் பேர்தான் டகால்டி!

0 R

0 R

‘என்ன இது.. புலி பத்தி நான் எதுவுமே சொல்லலையே… அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே!!’

– புலி படத்தைப் பார்த்து, சூப்பர் ஸ்டார் ரஜினி ஓஹோன்னு பாராட்டினதா செய்திகள் குவிந்ததில்லையா… ஆனால் தலைவர் அப்படி எதுவுமே சொல்லவில்லையாம்!

இந்தப் படத்தைப் பார்க்குமாறு ரஜினியை புலி தயாரிப்பாளர் தரப்பில் கேட்டுக் கொண்டார்களாம்.

தலைவரும் தன் வீட்டில் உள்ள மினி திரையரங்கில் படம் பார்த்தார். பார்த்து முடித்ததும் ‘குழந்தைகளுக்கு படம் பிடிக்கும். பாராட்டுகள்’னு போனில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை வைத்து இப்படி ஒரு செய்தியை படத்தின் பிஆர்ஓ உருவாக்கி அனுப்பிட்டார்.

இதை மீடியாவில் படித்து அதிர்ச்சியான ரஜினி, கபாலி பட பிஆர்ஓகிட்ட (புலிக்கும் அவர்தான் பிஆர்ஓ) மேலே தலைப்பில் பார்த்தீர்களே… அப்படிக் கேட்டிருக்கார்!

‘ஸார்… அது வந்து… அது அப்படித்தான் சார்.. படத்தைக் காப்பாத்த உங்க பேரை யூஸ் பண்ணிட்டாங்க… ஸாரி ஸார்…’-னு விளக்கம் சொன்னாராம்.

நேற்றுதான் இந்த விஷயமே நமக்குத் தெரியவந்தது.

உடனே கவுண்டமணியின் கரகாட்டக்காரன் வசனம்தான் நினைவுக்கு வந்தது!

-வினோ
15 thoughts on “‘என்ன இது.. புலி பத்தி நான் எதுவுமே சொல்லலையே… அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே!!’

 1. jegan N

  நடக்கபோகும் நடிகர் சங்க தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு குறித்து பல விமர்சனங்கள். அவர் சுயநலவாதி, குழப்பவாதி என்று..
  முதலில் ரஜினி ஏன் அவர் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்?? இரு அணியில் யார் ஜெயித்தாலும் ஒன்றும் ஆகபோவதில்லை, மேலும் இந்த தேர்தலுக்கு இவ்வளவு பில்டப்பே ரொம்ப ஓவர். தமிழக அரசியல் கட்சி போல தான் அதுவும்.. நமக்குறிய வாய்ப்பு ‘Choose the less worst’ அவ்வளவே. இப்டி இருக்கும் பட்சத்தில் தன் ஆதரவை அவர் ஏன் ஏதோ ஒரு அணிக்கு தெரிவிக்க வேண்டும்??? ஒருவேளை அவர் தம் ஆதரவை விஷால் அணிக்கு தெரிவிக்க, சரத் ராதாரவி போன்றோர் அவரை விம்ர்சிக்க ரசிகர்கள் கொதித்தெழ இதெல்லாம் தேவையா??தான் மன்னனாக வாழும் தமிழ்திரைத்துறையில் அவர் பக்குவமாக இருக்கிறார். இதையும் மீறி ஆங்காங்கே எஞ்சியிருக்கும் கமல் ரசிகர்களுக்கு அவர் சுயநலவாதியாக தெரிந்தால் தெரிந்துவிட்டு போகட்டுமே

 2. குமரன்

  இனிமேல் தலைவர் இப்படிப் பட்ட விஜய் படங்களைப் பார்க்க ஒப்புக் கொள்ளக் கூடாது. இவர்கள் வியாபாரத்துக்குத் தலைவரைப் பயன்படுத்திக் கொள்வது கேவலம்.

 3. rajagopal

  நீங்கள் உளறவது எப்படி உண்மை என்பதை நாங்கள் நம்புவது நீங்கள் தலை இரசிகர இருக்கலாம் இந்த மாத்ரி தவறான நியூஸ் கூட போடலாம் என்ன நான் சொல்றது

 4. மிஸ்டர் பாவலன்

  வர இருக்கும் நடிகர் சங்கம் தேர்தலில் தைரியமாக பாண்டவர் அணிக்கு
  உலக நாயகன் கமல் ஆதரவு தெரிவித்து தான் ஒரு “அஞ்சா நெஞ்சன்” என
  நிரூபித்துள்ளார்.. சிங்கம் சிங்கம் தான் !

  -== மிஸ்டர் பாவலன் ==-

 5. S VENKATESAN, NIGERIA

  பத்து சகோதரர்கள் இருப்பதாக நினையுங்கள். அதில் இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். உண்மையான நடுநிலையான சகோதரன் சண்டை பெரிதாக ஆக கூடாது என்று நினைப்பான். சுயநலம் கொண்ட ஒருவன் ஒரு பக்கம் சார்ந்து சண்டை பெரிதாக வேண்டும் நினைப்பான். வெப்துனியா போய் பார்த்தால் இந்த மொத்த சண்டைக்கும் காரணமாக இருக்கும் பெயர் தெரியும்.

 6. Thalaivar fan

  Thalaivar support everyone w/out any prejudice, not only tht idiot.
  All are equal to him.
  frm kamal, asith,vsay,surya,vikram to dhanush,simbu,sivakarthigeyan,etc..etc ..all r using his name & fame shamelessly and selfishly..aana avarukku tan kedtha peyar.

  Letting flop stars to remake his movies and
  jaggubai, vishvaoroopamku support pannavar suyanalavathi..
  Lingaa pirachinaiyil oru varthai kudhe sollathe ivanggayellam pothunaalavathiya?
  ithulle singamnu vere oru comedy

 7. மிஸ்டர் பாவலன்

  சரத் அணியின் சார்பாக நடந்த ப்ரெஸ் மீட்டில் ராதிகா பேச்சு கண்டேன்.
  ரஜினி படங்களில் நடித்த ராதிகாவிற்கும் (நல்லவனுக்கு நல்லவன்),
  நேரில் பேசிய நடிகை ராதிகாவிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.
  அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆக – நிழல் வேறு, நிஜம் வேறு…

  இந்த நடிகர் சங்க தேர்தல் பலரது சுய ரூபத்தை காட்டி உள்ளது…
  (ராதாரவி, சரத் குமார், மற்றும் ராதிகா).. “வால்” பற்றி நான் குறிப்பிட
  விரும்பவில்லை.. “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என இவர் தனக்கு தானே
  பட்டப்பெயர் சூட்டிக் கொள்ளாத வரை என்ன வேண்டுமானாலும்
  பேசிவிட்டு போகட்டும்!

  மிஸ்டர் பாவலன் ஆதரவு – இளைஞர் அணிக்கே.. இவர்களுக்கு “பாண்டவர்
  அணி” என ராதாரவி பெயர் சூட்டியதில் இருந்தே வெற்றி யாருக்கு என்பதை
  சூசகமாக தெரிவித்துள்ளார். (பாண்டவர் அணி ஜெயிக்கும் என்று நன்கு
  தெரிந்த பின்னர் உலகநாயகன் நாசரை முன் மொழிந்தது குறிப்பிடத்
  தக்கது)..

  சினிமாவில் உள்ள ஸ்டன்ட் காட்சிகளை விட விஷால்-சரத், கார்த்தி-சரத்,
  விஷால்-ராதாரவி, கார்த்தி-ராதாரவி, கார்த்தி-சிம்பு ஸ்டன்ட் காட்சிகள்
  சுவாரசியமாக உள்ளன.. இவர்கள் நேரிலேயே இதே போல் ரோல்களை
  திரைப்படங்களில் செய்தால் – படம் பார்க்கும் ரசிகர்களுக்கு யார் ஹீரோ, யார்
  வில்லன் என்ற சஸ்பென்சை விட ஹாலிவுட் சண்டைகளையும் (Matrix
  மாதிரி படங்கள்) மிஞ்சும் அளவிற்கு ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும் என்பதில்
  சந்தேகம் இல்லை..

  நடக்கும் வேடிக்கைகளை நாமும் பார்த்து வைப்போம்.. நன்றி..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. mike

  ” நடக்கபோகும் நடிகர் சங்க தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு குறித்து பல விமர்சனங்கள். அவர் சுயநலவாதி, குழப்பவாதி என்று..
  முதலில் ரஜினி ஏன் அவர் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்?? ”

  ஏன்? எதற்கு தெரிவிக்கணும்? லிங்கா பிரச்சனையில் ஒரு மயி…… ஆண்டியும் தலைவருக்கு சப்போர்ட் பன்னல. திருச்சி டிச்ற்றிபுட்டர், அந்த பன்…..னாடையை எதிர்த்து ஒரு நா……வது பேசினாங்களா. சரத், விசால், நாசர், ஏன் நான் சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கமானவன் என்று சொல்லி கொள்ளும் உலக…. (ஊம்…..) நாயகனெல்லாம் எங்கே போனார்கள்? தலைவருக்கு சப்போர்ட்டா இருந்தது நம் கோடான கோடி உயிரினும் மேலான ரசிக கண்மணிகள் மட்டுமே. நடிகர் சங்க தேர்தலில் எவனுக்கு சப்போர்ட் என்பதை தலைவர் சொல்ல தேவை இல்லை.

 9. mike

  “வர இருக்கும் நடிகர் சங்கம் தேர்தலில் தைரியமாக பாண்டவர் அணிக்கு
  உலக நாயகன் கமல் ஆதரவு தெரிவித்து தான் ஒரு “அஞ்சா நெஞ்சன்” என
  நிரூபித்துள்ளார்.. சிங்கம் சிங்கம் தான்”

  சிங்கமா….. ஹாஹாஹாஹாஹா……….இதெல்லாம் தலைவர் ரஜினி முன்னாடி அசிங்கம்தான்.

  விஸ்வரூபம் வெளியீட்டின் போது “மீண்டும் என்னை சீண்டினால் இந்தியாவை விட்டு ஓடுவதை தவிர வேற வழியில்லை” என்று சொல்லி அசிங்கபட்ட்து.

 10. raghul

  Nadigar Sangam Election is just a Sangam Election and no news to common men or fans- better not to comment too much.
  By the by Thalaivar is definitely a breed and class apart and one who understands him will know him he will never make enemies by himself. He prefers to embrace those who even spew venom on him.. Long LIVE Aatchi..

  Always a proud ardent follower of Thalaivar..

  Excerpts from Rediff on Puli:

  PULI
  The effects, to be fair, aren’t all hideous.

  The animatronic creatures are well rendered, with frogs pointing out directions and birds laughing at poor jokes, and the horses in this film wear suitably intimidating gear, but that’s about all we can say in terms of positives.

  Oh, and the second half, full of long one-on-one duels, is significantly better than the first — but that’s largely because Sridevi’s around and because the eternally insufferable Shruti Haasan is bound and (invisibly) gagged through most of it.
  A big part of the problem with this fantasy is the hero, Vijay, a childish looking fellow we are supposed to believe is a hardcore warrior and a highly strategic thinker.

  None of this comes across as we first see him walking out on screen bored and pouting, as if already wary of all this tacky cosplaying.

  As it stands, Puli is merely exhausting, and — speaking as someone who has never watched a Vijay film before — exposes him as a tremendously limited leading man, utterly lacking in the charisma a role like this requires.

  -Raja Sen in rediff.com

 11. மிஸ்டர் பாவலன்

  புலி படத்தில் விஜய் ஜீரோ என்றாலும் படத்தில் அவர் தான் ஹீரோ!

  சுருதி ஹாசன், ஹம்சிகா, ஸ்ரீதேவி இவர்களுக்காக இந்தப் படத்தை
  ஒரு தடவை பார்க்கலாம்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 12. S VENKATESAN, NIGERIA

  MIKE அவர்கள் சொல்வது பெரும்பாலான ரசிகர்களின் கருத்து

 13. srikanth1974

  என் ஓட்டு எந்த காட்டானுக்கும் இல்லை
  என் ஓட்டு நோட்டாவுக்கு மட்டுமேன்னு
  ஓர் சீட்டில் எழுதி வாக்குப் பெட்டியில்
  போடுங்கள் தலைவா!

 14. jegan N

  V VAANATHIN KEEZHE…
  Known is the Drop… Unknown is an Ocean!
  Saturday, September 6, 2008
  ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!

  கண்டவர் விண்டிலர்… விண்டவர் கண்டிலர் என்று ஒரு சொலவடை சொல்வார்கள் சிவனடியார்கள்.

  ரஜினி பற்றிய உண்மைகள் அல்லது வதந்திகள் இரண்டுக்குமே இது சாலப் பொருந்தும்.

  ரஜினி தமிழ்நாட்டில் சம்பாதித்து கர்நாடகத்தில் முதலீடு செய்கிறார் என்று நீண்ட காலமாகவே சொல்கிறார்கள்… சொல்கிறார்கள்… சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

  அரைகுறை பத்திரிகை நிருபர்கள் முதல் மெத்தப் படித்த அஞ்ஞானிகள் வரை இதே புலம்பல்தான்.

  அட உண்மையாகத்தான் இருக்குமோ… என்ற ஒரு மயக்கத்தில் நானும் ஒசூர் எல்லையிலிருந்து மைசூர், ஹம்பி வரை நெடுஞ்சாலை, குறுஞ்சாலை எல்லாம் ஒரு வார பயணம் கூட செய்து பார்த்துவிட்டேன். இதில் நமக்குத் தெரிந்த உண்மை ஒனறுதான், பெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய சொத்து வைத்திருக்கும் விஐபிக்களில் நிறையப் பேர் தமிழர்கள் என்பதே அது!

  அவர்களில் சிலரது பெயரை இங்கே வெளியிடுவதில் நமக்கு எந்த பயமும் இல்லை.
  கர்நாடகத்தில் சொத்துக் குவித்து வைத்திருக்கும் தமிழர்களில் முதலிடம் பிடிப்பவர்கள்… சந்தேகமே வேண்டாம், தமிழக முதல்வர் மாண்புமிகு கருணாநிதியின் குடும்பத்தினர்தான்.

  நாளைய முதல்வர் எனப் புகழப்படும் ஸ்டாலின் தொடங்கி, அங்கேயே செட்டிலாகிவிட்ட செல்வி – செல்வம் தம்பதிகள் வரை கணக்கில்லாமல் நிலங்களாக, எஸ்டேட்டுகளாக, தொழிற்சாலை பங்குகளாக, பங்களாக்களாக, அலுவலகக் கட்டிடங்களாக இவர்களது சொத்துமதிப்பு பல நூறு கோடிகளைத் தாண்டுகிறது.

  கோவையைச் சேர்ந்த பெரும் தொழ்லதிபர்கள் இருவருக்கு இந்தப் பகுதிகளில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.2000 கோடியைத் தாண்டுகிறது.

  டிவிஎஸ் நிறுவனம், இந்து, அதிமுகவின் தம்பி துரை, ஏசி சண்முகம் இவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கில் சொத்துக்கள். அட நம்ம முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல ஏக்கர் நிலங்கள், ஓட்டல்கள் பெங்களூர் மற்றும் புதிய ஏர்போர்ட்டைச் சுற்றித்தான் அமைந்துள்ளன.

  மைசூர், ஹாசன், மங்களூரிலெல்லாம் இவர்களுக்குச் சொத்துக்கள் உள்ளன.
  கூர்க், ஷிமோகா பகுதிகளில்கூட சொத்துக்கள் வைத்துள்ளனர் சில தமிழர்கள்.

  பெங்களூரிலிருந்து ஹாசன் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரஜினிக்கு பல பேக்டரிகள், சந்தன எண்ணெய் ஆலைகள் இருப்பதாக பலர் கூறிய வண்ணம் உள்ளனர். நாம் விசாரித்தவரையில் ரஜினி நேரடியாகத் தொடர்புடைய எந்த ஆலையும், அலுவலகமும் அங்கில்லை என்பதே உண்மை.

  வேண்டுமானால் சில தொழில்களில் பங்குதாரராக இருக்கலாம். அதுகூட நமது யூகம்தான். ஆனால் பங்குதாரர் ஆவது அத்தனை பெரிய பாவ காரியம் அல்ல. அது ஒரு சாதாரண விஷயம். ஒரு லட்ச ரூபாய் இருந்தால் நீங்களும்கூட கர்நாடகத்தில் பிரபலமாயிருக்கும் பல கம்பெனியின் ஷேர்களை வாங்கி பங்குதாரராகி விட முடியும்.

  சில இடங்களில் ரஜினி நிலம் வாங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். கர்நாடகத்தில் சரத்குமாருக்கு இல்லாத நிலமா!

  பெங்களூர் போனால் இப்போதும் ரஜினி தங்குவது இந்திரா நகரில் உள்ள ஒரு சாதாரண பிளாட்டில்தான். அங்கு ரஜினிக்கு துணை ஒரேயொரு உதவியாளர். ரஜினி இங்கு வருவதும் போவதும்கூடத் தெரியாது என்கிறார்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

  ஆனால் ரஜினி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை தமிழகத்தில்தான் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவை எல்லாமே மிக நாணயமான முதலீடுகள் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும், பொது வாழ்க்கைக்கு அவர் எந்த அளவுக்குத் தகுதியானவர் என்பதைப் புரிந்து கொள்ள…

  அதெல்லாம் கிடக்கட்டும்…

  ரஜினி அங்கே நிலம் வாங்கினார்… இங்கே இடம் வாங்கினார்… அவர் பதிவு அலுவலகம் போகாமல் வீட்டிலிருந்தபடியே பத்திரப் பதிவு செய்தார் என்றெல்லாம் டெஸ்க் ஒர்க் செய்யும் புலனாய்வுப் புலிகள், கர்நாடகத்தில் ரஜினிக்குச் சொந்தமான ஏதாவது ஒரு தொழிற்சாலைக்காவது ஆதாரம் தந்திருக்கிறார்களா…

  உண்மையில் அப்படி ரஜினிக்கு கர்நாடகம் முழுக்க சொத்துக்கள் இருந்திருந்தால், பேனைப் பெருமாளாக்கும் கலையில் வித்தகர்களான இவர்கள் எப்படியெல்லாம் எழுதிக் கிழித்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.

  ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் (காஷ்மீர் தவிர- அதைக் கேட்க ஒரு பயலுக்கும் துப்பில்லை!). சட்டம் அதனை அனுமதிக்கிறது. அந்த சட்டத்தை வைத்துக் கொண்டுதான் தமிழ் பணக்காரர்கள் மற்ற மாநிலங்களில் சொத்து வாங்கிக் குவிக்கிறார்கள். ஆனால் ரஜினி மட்டும் தமிழ்நாட்டு பார்டரைத் தாண்டக்கூடாது…

  நல்ல நியாயம்…

  இதுவல்லவா வந்தாரை வாழவைத்துக் கிழித்த உத்தம தமிழ்க் குணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *