BREAKING NEWS
Search

தலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்!


ன்று நேற்றல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாம் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் இது. ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பதை ஆணித்தரமாகச் சொல்லி வந்தது என்வழி.

இதனை சக ரஜினி ரசிகர்களே நம்பவில்லை. வாட்ஸ் ஆப் குழுக்களில் அதை நக்கலடித்து பலரும் பதிவுகள் செய்ததை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா?

இன்றோ, நாங்களும் ரஜினியின் போர்ப்படைத் தளபதிகள்தான் என்று பங்காளிகளாக வருகிறார்கள். வாங்க… உங்களால் என்ன முடியுமோ முயன்று பாருங்கள்.

அடுத்து… ரஜினியின் கட்சிக்கு வரவிருக்கும் பெரும் தலைகள் மற்றும் பிரமுகர்கள் பற்றிய ஒரு முன்னறிவிப்பு.

இன்றைக்கு ரஜினியை எதிர்த்து சவுண்ட் விட்டுக் கொண்டிருப்பவர்களில் பாதிப்பேர் நிச்சயம் ரஜினியைச் சந்தித்து காலில் விழுந்து ஆசி வாங்கும் காட்சியை விரைவில் காணப் போகிறது தமிழகம்.

அடுத்து தலைவர்கள்.

அதிமுக மற்றும் திமுகவின் பெரும் தலைகள் – முக அழகிரி உள்பட- ரஜினியின் அப்பாயின்ட்மென்டுக்காகக் காத்திருக்கிறார்கள். இதைக் கேட்டால் உங்களுக்கும் ஒரு நிமிடம் தலை சுற்றும்…. தலைவருடன் சேர மிகவும் ஆர்வமாக இருக்கிறார் அந்த இளம் தலைவர்.. ஒரு காலத்தில் படப்பெட்டியைக் கொளுத்திய வாரிசு. ஆனால் ரஜினியோ மௌனமாக புன்னகையை மட்டுமே அவர்களுக்கு பதிலாக அளித்துள்ளார்.

திரைத் துறையில் சத்யராஜ் போன்ற சிலர்தான் ரஜினிக்கு எதிராகப் பேசுகின்றனர். ஆனால் பெரும்பாலான நட்சத்திரங்கள் தலைவருக்கு ஆதரவான மன நிலையில்தான் உள்ளனர். இவர்களில் பலரும் ரஜினியைத் தொடர்பு கொண்டு, இப்போதே இணைந்துவிடவா.. கட்சி ஆரம்பித்ததும் வரவா? என்றுதான் கேட்கிறார்களாம். ‘கட்சி அறிவிக்கப்படும்போது அந்த மாநாட்டில் பார்த்துக் கொள்ளலாம்.. அமைதியா இருங்க.. உங்களுக்கு தொழில் ரீதியா ஏதும் பிரச்சினை வேணாம்’ என்று சொல்லி வைத்திருக்கிறாராம் ரஜினி.

ரஜினி கட்சி அறிவிக்கும்போது, ‘அட, இவர் ரஜினி ஆளா?’ என்று வியக்கும் அளவுக்கு சில முக்கிய பிரபலங்கள் ரஜினிக்கு மாலை அணிவித்து சேரும் காட்சியைக் காணலாம் என்கிறார்கள் மிக மிக நம்பகமான தலைவரின் நண்பர்கள்!

-என்வழி




6 thoughts on “தலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்!

  1. சௌந்தர்

    கேட்க படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. ஆனா எதோ அடிச்சு விடுகிற மாதிரியும் தோனுது. நடந்தா மகிழ்ச்சி தான்.

  2. Singaravel

    nallavar kellam ethirkalame nambikai vaithal vanthu serathaa
    ada indraikum endraikum nall nal than!

  3. Fan

    Thank you for this wonderful site about SuperStar. RSS feed is not working. Please fix it if you can so that we could get update whenever you post an article. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *