BREAKING NEWS
Search

ஒருவாரம் கழித்து டிடிஎச்சில் விஸ்வரூபம்… கட்டணத்தை குறைப்பதாக கமல் அறிவிப்பு!

ஒருவாரம் கழித்து டிடிஎச்சில் விஸ்வரூபம்… கட்டணத்தை குறைப்பதாக கமல் அறிவிப்பு!

vishwaroopam_press-meet-stills

சென்னை: தியேட்டர்களில் வெளியான ஒரு வாரத்துக்குப் பிறகு விஸ்வரூபம் படம் டிடிஎச்சில் வெளியாகும் என்றும், இந்தத் தாமதத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும் கமல் ஹாஸன் அறிவித்துள்ளார்.

கமல் ஹாஸன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்துள்ள விஸ்வரூபம் படம் கடந்த இரு மாதங்களாக சர்ச்சைகளுக்குள்ளாகிவந்தது.

இந்தப் படம் கமல் எதிர்ப்பார்த்த அளவுக்கு பிஸினஸ் ஆகாததால், முதலில் ஜனவரி 10-ம் தேதி இரவு டிடிஎச் மூலம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் போவதாக கமல் அறிவித்தார். அடுத்த நாள் தியேட்டர்களில் வெளியிடப் போவதாகக் கூறினார். இப்படி டிடிஎச்சில் பார்க்க தமிழுக்கு ரூ 1000 கட்டணமும், தெலுங்கு – இந்திக்கு ரூ 500 கட்டணமாகவும் அறிவித்தார்.

கமலின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததோடு, படத்தை திரையிட முடியாது என்று கூட்டாக அறிவித்தனர். இன்னொரு பக்கம், டிடிஎச்சில் கமல் எதிர்ப்பார்த்த மாதிரி புக்கிங் நடக்கவில்லை. சில ஆயிரம் பேர் மட்டுமே பணம் செலுத்தியிருந்தனர். படத்தை வாங்கிய ஜெயா டிவியும் பின்வாங்குவதாக அறிவித்தது.

மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கிய கமல், படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதிலிருந்து பின்வாங்கிக் கொள்வதாக திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பேச்சு வார்த்தைகள் நடந்தன.

தொடர்ந்து ஐந்து தினங்கள் பேச்சுகள் நடந்தன. மூன்று முறை பிரஸ்மீட் வைத்து, ஒருவழியாக, விஸ்வரூபம் படத்தை முதலில் திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுவதென்று அறிவித்தனர். ஜனவரி 25-ம் தேதி தமிழகம் முழுவதும் இந்தப்படம் வெளியாகிறது.

ஆனால் டிடிஎச்சில் வெளியிடுவதைப் பற்றி பின்னர் அறிவிப்பதாகக் கூறினார். கமலின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்துக்குப் போகத் தயாராகின.

பிப்ரவரி 2-ம் தேதி

இந்த நிலையில் அவர்களிடம் தீவிர சமாதான முயற்சி மேற்கொண்ட கமல் தரப்பு, இன்று சமரச உடன்பாட்டுக்கு வந்துள்ளது.

அதன்படி, தியேட்டர்களில் வெளியாகி 7 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2-ம் தேதி டிடிச்சில் விஸ்வரூபம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார் கமல். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழியிலும் இதே தேதியில் படம் டிடிஎச்சில் வெளியாகிறது. இந்தியில் ஒரு நாள் முன்பு திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கிறது. ஆனால் திரையரங்குகள் எத்தனை என்பது இன்னும் முடிவாகவில்லை.

கட்டணம் குறைப்பு

டிடிஎச் ரிலீஸ் அறிக்கை

டிடிஎச் ரிலீஸ் அறிக்கை

விஸ்வரூபம் தியேட்டர்களில் வருவதற்கு முன்பு டிடிஎச்சில் வெளியாகும் என்று கூறி ரூ 1000 வசூலித்தனர். இப்போது தியேட்டர்களில் வெளியான ஒரு வாரத்துக்குப் பிறகுதான் டிடிஎச் ரிலீஸ் என்பதால், கட்டணத்தைக் குறைக்க அல்லது பார்க்க விரும்பாதவர்களுக்கு அவர்கள் கணக்கில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளப் போவதாக கமல் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தனை தாமதம் மற்றும் குழப்பங்களுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் கமல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-என்வழி சினிமா செய்திகள்

 
12 thoughts on “ஒருவாரம் கழித்து டிடிஎச்சில் விஸ்வரூபம்… கட்டணத்தை குறைப்பதாக கமல் அறிவிப்பு!

 1. Raj

  எப்படியாவது எந்திரன் வசூலை முறியடிக்கவேண்டும் என்று நினைத்தார் ஆனால், கடைசியில் ஆப் ஆகிவிட்டார். ஒரு வாரத்திற்குள் ஏகப்பட்ட திருட்டு விசிடி வந்துவிடும். ஒரே காமெடி போங்கள்.

 2. Mahesh

  வினோ,

  இந்த வாரம் குமுதமில் வந்த கடுரையை படித்தீர்கள ?? தலவைரை விமர்சித்து உள்ளார்கள் .. அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

  கேள்வி பதில் பகுதியிலும் விமர்சித்து உள்ளார்கள்.

  இப்பொழுதுதான் ரஜினி ஸ்பெஷல் வெளியிட்டார்கள் . குமுதம் ரேபோட்டர் இல் ரஜினி அரசியல் பற்றியும் எழுதி உள்ளார்கள் அனால் குமததில் விமர்சிக்கிறார்கள்..??

 3. bahrainbaba

  ஒரு வாரம் கழிச்சா .. ஓசிக்கு கூப்பிட்டு பார்க்க சொன்னா கூட ஒரு பய பார்க்க வர மாட்டானே.. இதுல கட்டணம் வேறயா..

 4. KH

  எப்படி இருந்தாலும் எந்திரன் ரெகார்ட்ஸ் முதல் வாரத்திலே முறியடிக்கபடும் சந்தேகமே இல்லை உலகநாயகன் சாதனை நாயகன்

 5. Karthik

  பிரமிட் சாய்மீராவுக்கு 10 கோடி கொடுக்கணும் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் தற்கொலை முயற்ச்சி செய்ய வைத்தது கலைப்புலி தாணுவ நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது, வேற தயாரிப்பாளர் பணத்தில 50 கோடி செலவு செய்து 40% படம் எடுக்கிறது தன் பணம் எண்டு வந்த உடனே 10கோடில மிச்சம் 60% படத்த எடுத்து முடிக்கிறது இப்பிடி இந்த மாதிரி சோதனைகள் சாரி சாதனைகள் சண்டியர் கமலால மட்டும் தான் நிலை நாட்ட முடியும்

 6. malar

  ஹி….ஹி…..ஒரே நகைச்சுவை தான் போங்க…..

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 7. Raja

  KH அவர்களே முதல உங்க படம் collection எந்திரன் படத்தோட ஆடியோ collection ah அடிக்குத பாருங்க

 8. mugilan

  Kh அவர்களே இந்த கமல் அஜித் விஜய் படத்தோட வசூல கூட முறியடிக்க முடியாது இவர்லா தலைவர் படத்தோட வசூல முரியாடிபரா இவர முதல்ல சிவாஜி படத்தோட வசூல இல்லல இல்லல mangatha படத்தோட வசூல முறியடிக்க ச்சொளுங்க இதுவே ஜாஸ்தி

 9. srikanth

  நம் அன்புத் தலைவர் நடித்த சிவாஜி முப்பரிமாணம் இன்னும் எங்கள் ஊரில் வெளியாக வில்லை அதை நம் இணைய தள நண்பர்கள் பார்த்து விட்டீர்களா? படம் எப்படி இருக்கிறது? படம் பார்த்த நண்பர்கள் அதைப் பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்.

 10. Mahendran

  வினோ,

  இந்த விஷயத்தில் கமலுக்கு நம் தலைவர் உதவவில்லை என்று சிலர் எழுதி வருகின்றார்கள். பாபா, குசேலன் பிரச்சினைகளின்போது அவருக்காக யார் குரல் கொடுத்தார்கள்? எப்போதுமே தலைவர் தன் பிரச்னைகளை தானேதான் பார்த்துக்கொள்வார். அவர் என்றைக்கும் தயாரிப்பாளர்களின் லாபத்தில் அக்கறை உள்ளவர். ஆனால் கமலால் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தன் வியாபார எல்லை தெரியாமல் அவராக மாட்டிக்கொண்டதற்கு அவர்தானே பொறுப்பாக முடியும்? இந்த நிலையில் ரஜினி குரல் கொடுத்தால் அது தியேட்டர்காரர்களுக்கு நியாயமாக இருக்காதே?

 11. mugilan

  சரியான பதில் மகேந்திரன் அவர்களே இந்த கமல் தன்னை தலைவர் ரஜினி என்று நினைத்து கொண்டு வேலை செய்கிறார் தலைவருக்கு நிகர் தலைவர் தாண்டா

 12. kamal kannan

  தியேட்டரில் மட்டும் போட்டால் முதலும் கிடைக்காது…..
  டிடிஹெச்சில் போட்டால் தியேட்டர் கிடைக்காது….
  ரெண்டும் சேர்ந்து கொண்டால் நஷ்டம் வராது….
  கமல ஹாசன் பிழைப்பை சொல்ல முடியாது….
  (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடலின் ராகத்தில் பாடி மகிழவும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *