BREAKING NEWS
Search

விஜய் நடித்த தலைவா 20-ம் தேதி ரிலீஸ்… தாமதத்துக்கான உண்மையான காரணத்தைச் சொல்வார்களா?

விஜய் நடித்த தலைவா 20-ம் தேதி ரிலீஸ்… தாமதத்துக்கான உண்மையான காரணத்தைச் சொல்வார்களா?

sstt

சென்னை: விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து, தமிழகத்தில் மட்டும் வெளியாக முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த தலைவா படம், வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த இரு வாரங்களாக இந்தப் படம் குறித்து கிளம்பிய பல்வேறு பரபரப்புகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளன.

இந்தப் படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை இதுவரை நடிகர் விஜய்யும் சரி, இயக்குநர் விஜய் அல்லது இப்போது நெஞ்சு வலி என மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளரும் சரி சொல்லவே இல்லை.

நாயகன், சர்க்கார், தளபதி, பாட்ஷா என பல சூப்பர் ஹிட் படங்களைக் காப்பிடியத்து எடுக்கப்பட்ட தலைவா படத்தை,  மாணவர்களிடம் பகல் கொள்ளை நடத்தும் எஸ்ஆர்எம் குழுமத்தின் பச்சமுத்துவின் வேந்தர் மூவீஸ் வெளியிடுதால், அந்தப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு குண்டு வைப்போம் என ஒரு மாணவர் அமைப்பு மிரட்டியதால், படத்தை வெளியிட முடியாது என்ற காரணத்தைக் கூறித்தான் ஆரம்பத்தில் திரையரங்க உரிமையாளர்கள் பின்வாங்கினர்.

ஆனால் அரசு இந்தப் படத்துக்கு வரிவிலக்கு சான்றிதழ் தராததுதான் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் படத்தின் தலைப்பு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள்தான் படம் வெளியாகாததற்கு உண்மையான காரணம் என்றார்கள்.

இவ்வளவு நடந்தும் விஜய் தரப்பு, படத்தை ரிலீசாக விடுங்கள் என்று அரசைப் பார்த்து பொத்தாம் பொதுவாகக் கூறி வந்தார்களே தவிர, இதுதான் காரணம் என்று கடைசி வரை கூறவே இல்லை.

இந்தப் படம் ஏன் ரிலீசாகவில்லை என்ற கேள்விக்கு படம் தொடர்பான யாரிடமும் எந்த பதிலும் இல்லை.

‘இந்தப் படத்தின் ரிலீசுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சினிமாவை வெளியிடுவது சினிமாக்காரர்கள் ஏரியா.. அதில் போலீசை இழுக்காதீர்கள்’ என்றும் டிஜிபி கூறிவிட்டார்.

படத்தை வெளியிட வேண்டிய வேந்தர் மூவீஸோ வாயைத் திறக்கவில்லை. நடிகர் விஜய்யும், இயக்குநர் விஜய்யும், சந்திரபிரகாஷ் ஜெயினும் மாற்றி மாற்றி அறிக்கை, பேட்டி, வீடியோ க்ளிப் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

அவற்றில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இந்தப் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். முதல்வரைச் சந்திக்க அனுமதியும் கோரி வந்தனர்.

ஆனால் முதல்வர் இதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. இந்தப் படத்துக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மிகத் தெளிவாக அவர் உணர்த்திவிட்டார்.

உச்சகட்டமாக, தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு நெஞ்சுவலி என்ற நாடகத்தையும் அரங்கேற்றிப் பார்த்தார்கள்.

இந்த நிலையில்தான், “தலைவா படத்துக்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. என்னிடம் கொடுங்கள் நான் நாளையே 300 தியேட்டர்களில் வெளியிட்டுக் காட்டுகிறேன்,” என்று பகிரங்கமாக அறிவித்தார் திமுக எம்எல்ஏவும், புதிதாக தயாரிப்பாளரானவருமான ஜெ அன்பழகன்.

திமுகவின் ஒரு எம்எல்ஏவே, இதில் அரசுக்கு சம்பந்தமில்லை என அறிவித்த பிறகுதான் படத்தை வெளியிட விஜய்யும் வேந்தர் மூவீஸும் வேலைகளில் இறங்கினர்.

இப்போது படம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி, செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்றும், ஞாயிற்றுக் கிழமையிலிருந்து முன்பதிவு தொடக்கம் என்றும் வேந்தர் மூவீஸ் அறிவித்துள்ளது.

ஆனால் படத்தை மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் திரையிட மாட்டோம் என்றும், சதவீத அடிப்படையில் வெளியிடுகிறோம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தே படத்தை வெளியிடுகின்றனர்.

இப்போது ரசிகர்கள், செய்தியாளர்கள், பார்வையாளர்கள் அனைவரும் விஜய் தரப்பிடம் கேட்கும் கேள்வி…

‘படம் வெளியாக இரு வாரங்கள் தாமதமாக உண்மையான காரணம் என்ன? என்னமோ தமிழக அரசு இவர்களைப் பழிவாங்குவது போல நாடகமாடியது எதற்காக? அதைச் சொல்லும் நேர்மை, தன்னைத் தானே தலைவா என அழைத்துக் கொள்ளும் விஜய் மற்றும் அவரது தந்தைக்கு இருக்கிறதா?’

-என்வழி செய்திகள்

விரைவில்..

தலைவா படப் பிரச்சினைக்குக் காரணம் முதல்வர் ஜெயலலிதாவா? – ஒரு அலசல்

 
13 thoughts on “விஜய் நடித்த தலைவா 20-ம் தேதி ரிலீஸ்… தாமதத்துக்கான உண்மையான காரணத்தைச் சொல்வார்களா?

 1. SIVA

  படம் ஓடாது என தெரிந்து நடத்திய நாடகம் இது…. விஜய்க்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது அவர் தன் ரசிகர்பலம் காண நடத்திய ஒரு நாடகம் இது ….

 2. குமரன்

  /// அதைச் சொல்லும் நேர்மை, தன்னைத் தானே தலைவா என அழைத்துக் கொள்ளும் விஜய் மற்றும் அவரது தந்தைக்கு இருக்கிறதா?’///

  நேர்மைக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  எஸ்.ஏ. சந்திரசேகரும் விஜயும் வளர்ந்தது கருணாநிதியின் வெளிப்படையான ஆதரவில்தான். அவர்களையே தூக்கி எறிந்தவர்களை எவரும் நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் இந்த விஷயத்தில் யாரும் விஜய்க்காகக் குரல் கொடுக்க வில்லை.

  பஞ்ச் டயலாக் என்ற பெயரில் தனது ஆசைகளைத் திரைப்படம் மூலம் சொல்வதை விஜய் வழக்கமாக வைத்திருக்கிறார். அஜீத்தைத் தொடர்ந்து சீண்டி வந்த அவரை அஜீத் தனது பெருந்தன்மையான போக்காலும், முதிர்ச்சியான நிலைப் பாட்டாலும் தன் வழிக்கே வராமல் பார்த்துக் கொண்டுவிட்டார். ஜெயா கூட இந்த சில நாட்களில் இந்த விஷயத்தில் எந்தத் தலையீடும் செய்யாமல் முதிர்ச்சியான செயலாக்கத்தைக் காட்டி இருக்கிறார். அதனால் விஜய்க்கு இத்தனை சிக்கல்.

  இதற்குக் காரணம் விஜயும் சந்திரசேகரும்தான் என்றே தோன்றுகிறது. வீண் விளம்பரத்துக்காகவும் தன்னை அரசியலில் முன்னேற்றிக் கொள்ளவும் இவர்களே இப்படி மொட்டைக் கடிதத்தையும் மிரட்டல் தொலைபேசிகளையும் செட்டப் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

  பிசுபிசுத்து விட்டது!

 3. kumaran

  எல்லோரும் பாதிக்க பட்ட விஜயை மட்டும் சாடி கொண்டிருகிறீர்கள் ! உண்மையான காரணம் அரசு தான் .

 4. நாஞ்சில் மகன்

  வழக்கமா விஜய் படத்துக்கு நடக்கற வியாபாரத்தை விட, இந்தப் படத்துக்கு அதிக வியாபாரம் நடந்துருக்கு. வேந்தர் மூவிஸ் இந்தப் படத்தை 80 கோடிக்கு வாங்கியிருக்கறதா இன்டஸ்ட்ரியில பேச்சு. இந்த சூழல்ல 100 கோடியை படம் தொட்டாதான் லாபம் பாக்க முடியும். பாட்ஷா பட நூறாவது நாள் விழாவுல ரஜினி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு வெளியான முத்து படத்துல ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போற மாதிரியே சில வசனங்கள் வைக்கப்பட்டிருந்தது. வைரமுத்து பாடல் வரிகள்ல கூட, ரஜினி வருகைக்காக தமிழகமே காத்துக்கிட்டிருக்கிற மாதிரி எழுதுனாரு. இதெல்லாம் ரஜினியோட வியாபார தந்திரம்.

  இதே மாதிரி தலைவா படத்துக்கும் ஒரு ‘ஹைப்’ உருவாக்கி படத்தை 100 கோடியை தாண்ட வைக்கணும்னு ஒரு திட்டம் போட்டாங்க. அந்த திட்டத்தின் அடிப்படையிலதான் விஜய்யோட அப்பா, விஜய் அரசியலுக்கு வர்ற மாதிரி பேசிக்கிட்டு இருந்தாரு.

  பல கோடி ரூபாய் முதலீடு பண்ண விநியோகஸ்தர்கள் இதை கொஞ்சமும் விரும்பலை. ஆனா அரசாங்கம் இந்தப் படத்தை பெருசா எடுத்துக்கலை. யாரோ ஒரு சிலர் போட்ட மொட்டை கடுதாசியை பெருசா எடுத்துக்கிட்டு, திரையரங்க உரிமையாளர்கள் நாங்கள் இந்தப் படத்தை திரையிடனும்னா அரசாங்கத்துக்கிட்ட இருந்து ஏதாவது ஒரு உறுதிமொழி வேணும்னு எதிர்ப்பார்த்தாங்க. வாண்டடா வந்து வண்டியில ஏறி விஜய் மாட்டிக்கிட்டா அம்மாவுக்கு என்ன கசக்கப் போகுதா ? இது நமக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சினை. இதுல நாம ஏன் தலையிடணும்னு முடிவெடுத்துட்டாங்க. ”

  விஸ்வரூபம் விவகாரத்துல, கமல்ஹாசனுக்கு, திரையுலகம் மற்றும் பொதுமக்கள்கிட்ட ஆதரவு இருந்துச்சு… ஆனா, விஜய்க்கு இந்த விஷயத்துல சுத்தமா ஆதரவு இல்லை.

  படம் மற்ற மாநிலங்கள்லயும், வெளிநாடுகள்லயும் ரிலீஸ் ஆயிடுச்சு. இன்டர்நெட்டுலயும் ஏத்திட்டாங்க. படம் மொக்கைன்னு ரிவ்யூ வந்துடுச்சு. இனிமே தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆனாலும், வியாபாரம் ஆகறது கஷ்டம்.”

  நன்றி சவுக்கு

 5. மிஸ்டர் பாவலன்

  MGR… அவர் பின் சூப்பர் ஸ்டார்..அவர் பின்.. .???

  சிவாஜி.. அவர் பின் உலக நாயகன்.. அவர் பின்… ????

  -== மிஸ்டர் பாவலன் ==-

 6. மிஸ்டர் பாவலன்

  ‘கமல் 50’ நிகழ்ச்சியில் ‘என்னையும், ரஜினியும் போல் திரையுலகில்
  நண்பர்கள் முன்பு இருந்ததில்லை’ என்று கமல் பாராட்டியது மிகவும்
  நெகிழ்ச்சியாக இருந்தது. ‘விஸ்வரூபம்’ தடை பட்ட போது உடனே
  உதவி செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினி முன் வந்து அவர் லெட்டர் பாடிலேயே
  கடிதம் எழுதி கமலஹாசனை பாராட்டி படம் வெளிவர முன்வந்தார்.
  ஆட்சேபமான காட்சிகளை நீக்கி விடலாம் எனவும் ஆலோசனை தந்தார்.
  விஜய் ‘தலைவா’ பட விஷயத்தில் ரஜினி அவர்களும், கமல் அவர்களும்
  மௌனம் காத்தது பாராட்டத் தக்கது.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. soundar

  @நாஞ்சில் மகன்,

  1996 ல சூழ்நிலை அப்படிதான் இருந்தது..கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் அரசியலால் அலுத்துப்போன மக்கள் அன்று ரஜினியை எதிர்பாதுதான் இருந்தார்கள்..ஏன் இன்றும் கூட தமிழ் மக்களுக்கு ரஜினியின் மீது ஒரே ஒரு கோவம் என்றால் , அது அரசியலுக்கு தலைவர் இன்னும் வராமல் இழுத்தடிப்பதுதான்…தலைவரை…இந்த அணிலுடன் ஒப்பிட்டு பேசுவது மற்றும் அரசாங்கத்துக்கும், அணிலின் படத்துக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று சொல்வதிலிருந்து தெரிகிறது…நீங்கள் பதிந்த (சவுக்கின் ?) கருத்து அரைவேக்காட்டுதனமானது என்று…

 8. soundar

  விஸ்வரூபம் விவகாரத்துல, கமல்ஹாசனுக்கு, திரையுலகம் மற்றும் பொதுமக்கள்கிட்ட ஆதரவு இருந்துச்சு… ஆனா, விஜய்க்கு இந்த விஷயத்துல சுத்தமா ஆதரவு இல்லை.
  —————–
  @நாஞ்சில் மகன்,
  ஒரு வேலை, விஜயும் கமலை போல, மீடியாவ கூப்டு வுக்காரவேச்சு, வீட்ட அடமானம் வெச்சு தான் படம் எடுத்தேன், அதனால படம் ரிலீஸ் ஆகலேன்னா இந்திய வ விட்டு போய்டுவேன்னு சொல்லி பொலம்பியிருந்தா…விஜய்க்கும் ஆதரவு பெருகியிருக்கும்..

 9. Jegan

  If somebody clarifies the real reason for the films delay, v can comment., but who knws d real reasn?

 10. kabilan.k

  நாஞ்சில் மகன் சார்,இன்னொரு தளத்தில் போட்ட பதிவை இங்க போட வேண்டிய அவசியம் என்ன சார்.??

 11. RAVI

  திரு Vinoo அவர்களே ,

  தங்களிடம் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நம் வெப்சைட்-ல் இவன் செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நமக்கு ஒரே குல தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான். வாழ்க இதய தெய்வம் ரஜினி அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *