BREAKING NEWS
Search

லிங்காவுக்கு குவிகிறது கூட்டம்.. அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை! – டி சிவா அறிக்கை

லிங்காவுக்கு குவிகிறது கூட்டம்.. அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை! – டி சிவா அறிக்கை

10347096_892139904143677_7205235809283059251_n
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்துக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் குவிகிறார்கள். இந்த நேரத்தில் படம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேந்தர் மூவீஸ் சார்பில் டி சிவா எச்சரித்துள்ளார்.

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் வெளியான லிங்கா படம் பெரும் வசூலைக் குவித்து வருகிறது.

ஆனால் சிலர் வேண்டுமென்றே படத்துக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டுள்ளனர். படத்தில் நேரடியாக சம்பந்தப்படாத இவர்கள், தாங்கள்தான்  கோடிக் கணக்கில் பணம் கொடுத்து லிங்காவை வாங்கியதாகக் கூறி வருகின்றனர். ஆனால் விசாரிக்கையில் சில மீடியேட்டர்கள் (சினிமா புரோக்கர்கள்) திட்டமிட்டு இந்த மாதிரி பொய்யை கட்டவிழ்த்துள்ளது தெரிய வந்து, அவர்கள்  மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது லிங்கா குழு.

இந்த நிலையில் படத்தின் தமிழகம் மற்றும் கேரள வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள வேந்தர் மூவீஸ், இதுபோன்ற போலி ஆசாமிகளின் புகார்கள் மற்றும் அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வேந்தர் மூவீஸ் சார்பில் டி சிவா வெளியிட்டுள்ள அந்த அறிக்கை:

கடந்த இரண்டு நாட்களாக லிங்கா படத்தின் வசூல் பற்றிய தவறான விபரங்களை சில தவறான நபர்கள் பரப்பி வருகிறார்கள்.

லிங்கா வெளியான சமயத்தில் தமிழகமெங்கும் அரையாண்டுத் தேர்வு நடப்பதாலும், தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 600 அரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்டதாலும், எதிர்ப்பார்த்ததை விட சற்று வசூல் குறைந்தது. ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் திரையரங்குகள் நிரம்பி வருகின்றன. இதுவே படத்தின் வெற்றிக்கு சாட்சி.

vendhar
லிங்கா மக்களுக்குப் பிடித்த படம். விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாகவும் நிச்சயம் இருக்கும். எனவே படத்தின் வசூல் பற்றிய எல்லா விபரங்களும் நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது.

மேலும் லிங்கா பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு தயாரிப்பாளர் டி சிவா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “லிங்காவுக்கு குவிகிறது கூட்டம்.. அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை! – டி சிவா அறிக்கை

  1. குமரன்

    என்ன கொடுமை சரவணா இது?

    வேந்தர் மூவிஸ் இப்படிப்பட்டவர்கள் மீதான ஆதாரங்களை இப்போதே திரட்டி வைத்துக் கொண்டு, சில மாதங்கள் கழித்துக் கண்டிப்பாக இவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கைகளை எடுத்தால்தான் இந்த அசிங்க வேலைகளை மீண்டும் செய்யாமல் இருப்பார்கள்.

  2. Murali

    ரஜினிபான்ஸ்.காம் இல் பொய் பிரச்சாரம் செய்தவன் போட்டோ உள்ளது . அவனை கண்டிப்பா அர்ரெஸ்ட் பண்ணவேண்டும் .

  3. jegan

    black sheep’s are more now against thalaivar…………hereafter thalaivar has should be very carefull in many things

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *