BREAKING NEWS
Search

லிங்காவின் கேரள உரிமையையும் வாங்கியது வேந்தர் மூவீஸ்!

லிங்காவின் கேரள உரிமையையும் வாங்கியது வேந்தர் மூவீஸ்!

lingaaad

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தின் தமிழக உரிமை (கோவை தவிர்த்து) மட்டுமல்ல, அதன் கேரள உரிமையையும் வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ்.

இந்தியத் திரையுலக வர்த்தகத்தில் புதிய மைல் கல்லாகத் திகழ்கிறது ரஜினியின் லிங்கா விற்பனை.

ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள லிங்கா படத்தை ஏற்கெனவே பெரும் விலைக்கு வாங்கிவிட்டது ஈராஸ் நிறுவனம்.

இப்போது மாநிலவாரியாக படத்தை விற்று வருகிறது. தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையை வேந்தர் மூவீஸ் கேட்டு வந்தது. சில தினங்களுக்கு கோவை தவிர்த்த தமிழகத்தின் விற்பனை உரிமையைப் பெற்றது. கோவை உரிமை மட்டும் லலிதா ஜூவல்லரி நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது லிங்காவின் கேரள உரிமையையும் வேந்தர் மூவீசே வாங்கியுள்ளது.

-என்வழி

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *