BREAKING NEWS
Search

லிங்கா.. தமிழக உரிமையை வாங்கியது வேந்தர் மூவீஸ்.. கோவை தவிர மற்ற ஏரியாக்களுக்கு ரூ 70 கோடி!!

லிங்கா.. தமிழக உரிமையை வாங்கியது வேந்தர் மூவீஸ்.. கோவை தவிர மற்ற ஏரியாக்களுக்கு ரூ 70 கோடி!!

lingaa-bo
ஜினியின் லிங்கா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரூ 70 கோடிக்கு வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ்.

இதன்படி கோவை தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடும்.

லிங்கா படத்தின் தமிழக உரிமையைப் பெற கடும்போட்டி நிலவி வந்தது. இதில் முந்திக் கொண்ட வேந்தர் மூவீஸ், தமிழகம் மற்றும் கேரளாவுக்கான உரிமையைப் பெற ரூ 80 கோடி வரை விலை பேசி வந்தது.

ஆனால் இந்த விலைக்குத் தர ஈராஸ் நிறுவனம் தயாராக இல்லை. அதே சமயம் கோவையைச் சேர்ந்த நகைக் கடை நிறுவனம் ஒன்று கோவை பகுதிக்கான உரிமையை மட்டும் பெரும் விலைக்குக் கேட்டு வந்தது.

lingaa-movie-stills-20

கேரள உரிமைக்கும் ரூ 10 கோடிக்கு மேல் தர விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தனர்.

எனவே கோவை பகுதி நீங்களாக தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை மட்டும் வேந்தர் மூவீசுக்குக் கொடுத்துள்ளனர் ஈராஸ் நிறுவனத்தினர். இதற்கு விலையாக ரூ 70 கோடியைத் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மாநிலத்தில் படத்தை வெளியிடும் உரிமைக்காக இவ்வளவு பெரிய தொகை தரப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
9 thoughts on “லிங்கா.. தமிழக உரிமையை வாங்கியது வேந்தர் மூவீஸ்.. கோவை தவிர மற்ற ஏரியாக்களுக்கு ரூ 70 கோடி!!

 1. saro

  சீமான் அவர்களே நீங்கள் விஜயை ஏன் முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைகின்றீர்கள் இப்பொழுது வந்த சிறுவர்கள் எல்லாம் முதல்வர் ஆக எண்ணம் உள்ள பொழுது தமிழக மக்களே ஆவலோடு குரல் எழுப்பி உள்ளனர் நீங்கள் கூறிவிட்டால் எல்லாம் முடிந்து விடுமா இலங்கைக்கு எதிரான உண்ணா விரத போராட்டத்தில் ரஜினி அவர்கள் மிக பகிங்கரமாக குரல் கொடுத்தார் அது உங்களுக்கு தெரியாதா.திரு.ரஜினியை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் உங்களுக்கு பொழுது போகாதா திரு .பிரபாகரனின் தம்பிகள் ரஜினி ரசிகர்களாகிய தமிழ்நாட்டில் அனைவரும் உள்ளார்கள் அது அனைவருக்கும் தெரிந்த விடயம் நீங்கள் உங்கள் நாவை அடக்கினால் போதும்

 2. குமரன்

  சீமான் என்று மரியாதைக் குறைவாகக் கூறாதீர்கள்:

  அவரை “சீமாறு” என்று மரியாதையாகக் கூறுங்கள்.

 3. மிஸ்டர் பாவலன்

  அரசியலுக்கு ரஜினி வர மாட்டார் என்றாலும், பாரதிராஜா, சீமான்
  போன்றவர்கள் கொடுத்து வரும் கடும் விமர்சனங்களை ரஜினி படித்திருப்பார்
  என்பதால் – “அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே இப்படின்னா..
  வந்துட்டா என்ன ஆகுமோ? இப்போதைக்கு சைலன்ட்டாகவே இருந்திடுவோம்” என அவர் அமைதி காப்பார் எனவே நான் நினைக்கிறேன்..

  -==மிஸ்டர் பாவலன் ==-

 4. M.MARIAPPAN

  பாரதிராஜாவை, சீமானை யாரும் அரசியலுக்கு வாங்க என்று கூப்பிட வில்லை .இதுவரைக்கும் வந்த அரசியல்வாதிகள் யாரும் நல்லது பண்ணவில்லை .ஆகவே தலைவர் வந்தால் நல்லது பண்ணுவார் என்று மக்கள் நம்புவதால் கூப்பிடுகிறார்கள்

 5. srikanth1974

  தெரு.சீமாறு.போன்ற குப்பைகளுக்காகவே இன்னொருமுறை கண்டிப்பாக
  எமர்ஜென்சி வரவேண்டும்.

 6. yaseenjahafar

  ரஜினி பற்றி சத்தியராஜ் பேசியதை இங்கா பதிவு செய்ய வீரும்புகீரன்

  சத்யராஜ் பெருசா பேசுகிறார் ரஜினிகாந்தை பத்தீ ஏன் MGR பற்றி பேசா வில்லை ஜெயலிதவை பற்றி பேசா வில்லை இவர்கள் எள்ளுரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள இல்லை அதை பற்றீ யாரும் ஒரு வார்த்தை
  பேசவது கூட கிடையாது ஏன் என்றல் பயம் சத்யராஜ் , வன்னியர் ராமதாஸ்
  சீமான் , பாரதி ராஜா போன்றவர்கள் இது மதிரி செய்திகளை பேசி கொண்டு
  இருக்கிறார்கள் பஸ் கன்ராக்டர் இருந்தவர் உழைப்பால் உயர்வது தப்பா
  போரமியில் பேசுகின்ற பேச்சு மதரீ பேசுகிறார்கள் நீ வேண்டும் என்றல் உனது பெயரை கூடத்தில் சொல்லி பாரு கை தட்டல் கெடைக்குமா எஆன்று
  பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *