BREAKING NEWS
Search

தலைவர் 12.12.12… பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கிய சோளிங்கர் ரசிகர்கள்!

தலைவர் 12.12.12… பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கிய சோளிங்கர் ரசிகர்கள்!

சோளிங்கர்: சரித்திரச் சிறப்பு வாய்ந்த தலைவர் ரஜினியின் பிறந்த தினமான 12.12.12-ஐ மிக அமர்க்களமாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர், ரசிகர்கள்.

அனைவருக்கும் முன்னோடியாக வேலூர் மாவட்டம் சோளிங்கர் ரசிகர்கள் டிசம்பர் முதல் தேதியிலிருந்தே கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.

மாவட்ட பொருளாளர் என் ரவி தலைமையில் ஏராளமான ரசிகர்கள் டிசம்பர் முதல் நாள் அன்று, வேலூரில் உள்ள பார்வையற்ற மாணவ மாணவியருக்கு உதவிகள் வழங்கி, அவர்களுடன் தலைவருக்காக தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் கேக்கை  வெட்டி, பிறந்த நாள் வாழ்த்துப் பாடி கொண்டாடினர்.

பார்வையற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் பிரத்தியேகமான எழுதுபொருள்கள், உடைகள் மற்றும் இனிப்பு வழங்கினார் சோளிங்கர் என் ரவி.

தொடர்ந்து 12 தினங்கள் வித விதமான நிகழ்ச்சிகளுடன் தலைவர் பிறந்த நாளைக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர் சோளிங்கர் ரசிகர்கள்.

அதற்கான நிகழ்ச்சி நிரல்…

-என்வழி ஸ்பெஷல்

மேலும் படங்கள்…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *