BREAKING NEWS
Search

தேசிய விருதுகள் அறிவிப்பு: தேசிய அளவில் சிறந்த படம் பான் சிங் தோமர்… தமிழில் வழக்கு எண்!

தேசிய விருதுகள் அறிவிப்பு: தேசிய அளவில் சிறந்த படம் பான் சிங் தோமர்… தமிழில் வழக்கு எண்!

 

award-filmsடெல்லி: 2012-ம் ஆண்டு சிறந்த படங்கள், சிறந்த திரைக் கலைஞர்களுக்கான 60 வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வழக்கு எண் 18/9 மற்றும் விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு தலா இரு விருதுகள் கிடைத்துள்ளன.

பாசு சட்டர்ஜி தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ள இந்த விருதுகளில் அகில இந்திய அளவில் சிறந்த படமாக பான் சிங் தோமரும், சிறந்த பொழுதுபோக்குப் படமாக விக்கி டோனர் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்

பான் சிங் தோமரில் நடித்ததற்காக இர்பான் கான் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராத்தி படம் தாக்-ல் நடித்த உஷா ஜாதவ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த துணை நடிகர் விருது விக்கி டோனரில் நடித்த அனுகபூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இஷாக்காதே படத்தில் நடித்த பரிநிதி சோப்ராவுக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

வித்யாபாலன் நடித்த கஹானிக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதும், அக்ஷய் குமார் நடித்த ஓ மை காட் படத்துக்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதும் தரப்படுகிறது.

சிறந்த இயக்குநர்

மராத்தியில் வெளியான தாக் (Dhag) படத்தை இயக்கிய ஸ்ரீ சிவாஜி லோட்டன் பட்டேலுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது.

வழக்கு எண் 18/9

பிராந்திய மொழிப் படங்களில் பாலாஜி சக்திவேல் இயக்கி வெளிவந்த வழக்கு எண் 18/9 படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப்படம் மற்றும்  சிறந்த ஒப்பனைக்கான விருதுகள் கிடைத்துள்ளன.

கமல்ஹாஸன் இயக்கி தயாரித்து நடித்த விஸ்வரூபம் படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த நடனத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பரதேசி படத்துக்கு சிறந்த உடையமைப்புக்கான (பூர்ணிமா ராமசாமி) விருது கிடைத்தது.

சங்கர் மகாதேவன்

சிறந்த பாடகருக்கான விருது சிட்டகாங் படத்தில் இடம்பெற்ற போலோ நா பாடலைப் பாடிய சங்கர் மகாதேவனுக்கு

paansingh-story-big1

கிடைத்துள்ளது.

சிறந்த பாடகிக்கான விருது, மராத்தியில் வெளியான ஆர்த்தி அங்க்லேகர்ட்கேகர் படத்தில் இடம்பெற்ற நா மூன் டான் பாடலைப் பாடிய சம்ஹிதாவுக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த இசை

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது மராத்தி இசையமைப்பாளர் ஷைலேந்திர பார்வேவுக்கு கிடைத்துள்ளது. படம்: சம்ஹிதா.

சிறந்த பின்னணி இசைக்கான விருது மலையாளப் படம் கலியாச்சனுக்கு இசையமைத்த பிஜி பாலுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடலுக்கான விருது சிட்டகாங்கில் இடம்பெற்ற போலோ நா பாடலுக்குக் கிடைத்துள்ளது.

usha

சிறந்த சுற்றுச் சூழல் படத்துக்கான விருது பிளாக் ஃபாரஸ்ட் மலையாளப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஓட்டல் படத்தின் வசனத்தை எழுதிய அஞ்சலி மேனனுக்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்துள்ளது.மலையாளம்

தெலுங்கில் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கிய ஈகா (நான் ஈ) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

-என்வழி செய்திகள்

 




One thought on “தேசிய விருதுகள் அறிவிப்பு: தேசிய அளவில் சிறந்த படம் பான் சிங் தோமர்… தமிழில் வழக்கு எண்!

  1. மிஸ்டர் பாவலன்

    -== செய்தியும், கருத்தும் ==-

    ராஜன்: எவர் ஸ்டார் என இருக்கும் வலையில் பவர் ஸ்டார் போல் வந்து
    பட்டையைக் கிளப்பும் பாவலன் அவர்களே!
    பாவலன்: இப்படி ஒரு intro எனக்கு தேவையா?
    மனோ: நீ எழுதறதுக்கு அதாவது கிடைக்குதுன்னு சந்தோசப்படுவியா!
    ராஜன்: பாவலன் கலக்கீட்டார்..
    மனோ: கிச்சன்ல ஏதாவது மாவரைச்சுக்கிட்டு இருந்தாரா?
    பாவலன்: யாருப்பா இந்த மனோவைக் கூப்பிட்டது? ராஜன்.. நீங்க சொல்லுங்க..
    ராஜன்: விஸ்வரூபம் படத்திற்கு விருது கிடைச்சிருக்கு!
    பாவலன்: அப்பவே நான் சொன்னேன்ல..அப்பவே நான் சொன்னேன்ல?
    சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த நடனம், சிறந்த இசை, சிறந்த
    தயாரிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த பைட்டிங் – இதுல ஏதாவது கிடைச்சுதா?
    மனோ: ஏதாவது விட்டுட்டானா பாரு? மொத்தத்தையும் அடுக்கறான்?
    ராஜன்: (செய்தியை படிக்கிறார்)
    Kamal Haasan’s Vishwaroopam won best production design and best choreography for Pandit Birju Maharaj.
    பாவலன்: நான் பிர்ஜு மஹராஜுக்கு விருது கிடைக்கும்னு அப்பவே சொன்னேன்!
    மனோ: அப்போ சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் இதெல்லாம்
    என்னாச்சு?
    பாவலன்: விஸ்வரூபம் படத்தோட பார்ட்-2 வருதுல்ல? அதுக்கு
    கொடுத்துடுவாங்கன்னு நினைக்கிறேன்!
    ராஜன்: (பாடுகிறார்)..கனவு காணும் வாழ்க்கை யாவும்..
    பாவலன்: நிறுத்துடா.. அபசகுனமா பாடிக்கிட்டு? சந்தோசமா பாடுவோம்..

    யார் என்று புரிகிறதா ?
    இவன் தீயென்று தெரிகிறதா ?
    தடைகளை வென்றே,
    சரித்திரம் படைத்தவன்,
    ஞாபகம் வருகிறதா ?

    யாருக்கும் அடிமை இல்லை,
    இவன் யாருக்கும் அரசன் இல்லை.
    காலங்கள் தாண்டி கடக்கிற பொழுதும்,
    காற்றுக்கு காயம் இல்லை. (எவன் என்று நினைத்தாய்?)

    முருகன்: “தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்..” நல்ல வரிகள்.

    மனோ: சார்.. பாவலனை இன்னிக்கு பிடிக்க முடியாது.. இதே பாட்டை
    நாள் முழுக்க பாடிக்கிட்டு இருப்பான்.. நாம கிளம்புவோம்..

    (விஞ்ஞானி பாவலன் – repeat play – செட்டிங் செய்து work செய்கிறார்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *