BREAKING NEWS
Search

மத்தியப் பிரதேச எல்லையில்… நள்ளிரவில் நடுச்சாலையில் மெழுகுவர்த்தியுடன் வைகோ அறப்போர்!

மத்தியப் பிரதேச எல்லையில்… நள்ளிரவில் நடுச்சாலையில் மெழுகுவர்த்தியுடன் வைகோ அறப்போர்!


போபால்: லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து மத்தியப் பிரதேச எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

நள்ளிரவு நேரத்தில் நடுச் சாலையில் மெழுகுவர்த்திகளைக் கொளுத்தி வைத்து அமர்ந்து போராடி வரும் அவருக்கு ஆதரவாக நாடெங்கிலும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் மட்டுமின்றி பிற மாநில மக்களும் திரண்டுவருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு 21ம் தேதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே. அங்கு சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேலத்தில் விஜயராஜ் என்ற ஆட்டோ டிரைவர் ராஜபக்சே வருகையைக் கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்துள்ளார்.

ஆனால் மத்திய அரசும், மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக அரசும் ராஜபக்சே வருகையை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டன. இதையடுத்து ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் வைகோ.

மேலும் தனது தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஏராளமான பேருந்துகளிலும் ரயிலிலும் சாஞ்சிக்கே கிளம்பினார்.

புதன்கிழமை மாலையில் வைகோ உள்ளிட்டோர் மத்தியப் பிரதேச மாநில எல்லையை அடைந்தனர். அங்கு மகாராஷ்டிரா – மத்தியரப் பிரதேச எல்லையில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பந்துர்னா (கட்சிசோலி) என்ற ஊரை அவர்கள் அடைந்தபோது போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து அம்மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக போலீசார் கூறியதும், ஆவேசப்பட்ட தொண்டர்களை அமைதிப்படுத்திய வைகோ, “நாங்கள் இந்திய குடிமக்களா இல்லையா ? எங்களை தடுத்து நிறுத்திவிட்டு கொலைக்காரன் ராஜபக்சேவை வரவேற்கிறீர்களா ?”‘ , என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நாக்பூர் – போபால் நெடுஞ்சாலையில் மனிதச் சங்கிலியாக அமைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 2000 போலீசார் சூழ்ந்திருக்கும் நிலையில், தங்களை ஜனநாயக முறையில் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்ட அனுமதிக்க வேண்டும் அல்லது கைது செய்தால் திருமண மண்டபங்களில் வைக்கக் கூடாது, காவல் நிலையங்களுக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதால், நள்ளிரவு நேரத்திலும் சாலையில் மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்து அமர்ந்தபடி கம்பீரமாக தனது போராட்டத்தை நடத்தி வருகிறார் வைகோ!

இவ்வளவு நடந்தும்கூட, ஒரு சிறு சட்டமீறலைக் கூட நிகழ்த்தாமல், கட்டுக்கோப்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மதிமுகவினர்.

வைகோ போபாலுக்கு வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும் அவருக்கான ஆதரவை வழங்க நாடெங்கிலும் உள்ள பல்வேறு கட்சியினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்திய பிரதேசம் நோக்கி திரண்டு வருகின்றனர்.

-என்வழி செய்திகள்




17 thoughts on “மத்தியப் பிரதேச எல்லையில்… நள்ளிரவில் நடுச்சாலையில் மெழுகுவர்த்தியுடன் வைகோ அறப்போர்!

 1. ilaiyaraja

  இவருக்கு ஓட்டு போடாத அனைவரும், சுயநலவாதிகள் . மனிதர்கள் அல்ல மாக்கள் . ஜடங்கள்.

 2. anbudan ravi

  தனது போராட்ட குணத்தால் அரசியல் சாராதோரை வெகுவாக ஈர்த்து வருகிறார் திரு வைகோ அவர்கள். எதிர்ப்பு தெருவிக்க வேறு மாநிலமே சென்று போராடும் உங்களை என்னவென்று பாராட்டுவது? மெய் சிலிர்க்கிறது. தமிழ் மக்கள் அனைவரின் பார்வையும் உங்கள் மீது விழட்டும். அதிமுக திமுகாவிற்கு மாற்று இனி நீங்கள்தான்.

  அன்புடன் ரவி.

 3. vilupuram pandiyan

  இல.கணேசன் அவர்கள் சொல்வது போல, ஒரு நேர்மையான , வீரமான மனிதர், அரசியல்வாதி முத்துராமலிங்கம் அவர்களை அடுத்து வை.கோ அவர்களை பார்கிறேன். திரு.வை.கோ அவர்கள் வாழும் காலத்தில்,நானும் வாழ்வதை பெருமையாக கருதுகிறேன். மற்ற அணைத்து கட்சிகளை(ஜே, மு.க, ப.ஜ.க, காங்கிரஸ்) போல , ஈழ பிரச்சனையை(மற்றும் அணைத்து மக்கள் பிரச்சனையை)வெறும் அரசியல் பிரச்சனையாக மட்டும் எண்னாமல், பல ஆயிரம் மக்களின் உயிர் பிரச்சனையாக கருதி அவர்களுககவே வாழும் ஒரே தலைவர் திரு.வை.கோ மட்டும் தான்.

  அடுத்து வரும் தேர்தலிலாவது, பணம் வாங்கினாலும், வாங்கவிட்டலும், வை.கோ அவர்களுக்கு ஓட்டு போடவேண்டும். மற்றும், நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும்.

 4. தினகர்

  நாற்பது பேருந்துகளில் வந்தவர்களை, மாநிலத்திற்கு உள்ளே அனுமதிக்க மறுத்த போதே, வைகோ வென்று விட்டார், மத்திய பிரதேச முதல்வர் தோற்று விட்டார்.

  மெழுகுவர்த்தி ஏற்றி நடுச்சாலையில் அமர்ந்து தர்ணா செய்யும் வைகோவின் மன உறுதி பாராட்டுதலுக்குரியது.

  மும்பை, குஜராத்திலிருந்தும் தமிழர்கள் ரயில் மூலம் போபாலுக்கு செல்ல விருப்பதாக, மும்பை நண்பர் ஒருவர் தெரிவித்தார். வைகோ குழுவினர் கூட அதே போல், ரயில் மூலம் போபாலுக்கு செல்ல முயற்சி செய்ய வேண்டும்.

  முந்தைய ஜெ ஆட்சியில், பல்லாவரத்தில் மண்டபத்தில் தங்கியிருந்து போக்கு காட்டி விட்டு, காவல் துறையினரின் கண்பார்வையில் மண்ணைத்தூவி விட்டு, அண்ணா சமாதி வரை நடைப்பயணம் சென்று நிறைவு செய்தவர் அல்லவா!. அதே போல் ஏதாவது திட்டம் வைத்திருப்பார் என நம்புகிறேன்.

 5. arulnithya

  மிகசிறந்த தலைவரிகளில் ஒருவர். தமிழினத்திற்காக போராடும் உறுதிமிக்க தலைவர்களில் ஒருவர்

 6. Priya

  போராட்டம் எல்லாம் சரிதான் மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கனும்…..

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 7. malar

  வைகோ எப்போதும் நல்லதுக்காகவே மட்டும் போராடுகிறார்…நாம் எல்லாரும் அவர் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும்….

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

 8. தினகர்

  ”ராஜபக்சே வருகை கண்டித்து மத்திய அரசில் இருந்து திமுக விலக வேண்டும்: பாஜக ”- செய்தி

  பாஜக தலைவர் பொன் ராதா கிருஷ்ணனுக்கு மூளை குழம்பி போய் விட்டதா?

  ராஜ பக்‌ஷே வை அழைத்து விருந்து வைப்பதுஅவரது கட்சி முதல்வர். ஆனால் அவர் இந்தியாவை வருவதை கண்டித்து திமுக மத்திய அரசிலிருந்து விலக வேண்டுமாம்?..

  பொது வாழ்விற்காக, திருமணம் கூட செய்து கொள்ளாமல், தென் மாவட்டத்தில் செல்வாக்கோடு இருந்த வரை நல்லாத்தான் இருந்தார். மாநிலத்திற்கு தலைவர் ஆன பிறகு தான் தலை கிறுகிறக்க ஆரம்பித்து விட்டது போலும்.

  இவரை போபாலுக்கு அனுப்பி வையுங்கப்பா. வைகோவுடன் கைகோர்த்து அரசியல் செய்தவர் தானே. அவருக்கு துணையாக ஒரு தடவை செல்லட்டுமே..

  அமெரிக்காவில் குடியரசுக்கட்சி வேட்பாளரான ராம்னியின் அணுகுமுறை பிடிக்காமல், அவரது சொந்த கட்சியினரே அவரை விமரிசிக்கின்றனர். இந்தியாவில் மட்டும் , கட்சிக்காரன் செய்தது எல்லாம் சரி என்று விவாதம் செய்யும் நிலை. இவரைப்போன்ற நல்ல மனிதர்கள் கூட அதற்கு பலியாகிவிடுகிறார்கள்.

 9. srini

  Till now i am not so interested in politics.

  But many times i watched vaiko integrity and his hard work for the people……henceforth i will cast my vote only to this great leader who strive for the people without selfish.

  Great human being and genuine politician…..he should be supported by super star for the up liftment of tamil nadu people…we will be proud…even if thalaivar does not come to politics show the right person.

 10. srini

  தனது போராட்ட குணத்தால் அரசியல் சாராதோரை வெகுவாக ஈர்த்து வருகிறார் திரு வைகோ அவர்கள். எதிர்ப்பு தெருவிக்க வேறு மாநிலமே சென்று போராடும் உங்களை என்னவென்று பாராட்டுவது? மெய் சிலிர்க்கிறது. தமிழ் மக்கள் அனைவரின் பார்வையும் உங்கள் மீது விழட்டும். அதிமுக திமுகாவிற்கு மாற்று இனி நீங்கள்தான். 100% true

 11. Srini

  நமக்காக போராட்டும் ஒரே தலைவர் வைகோ அவர்கள் மட்டும் தான் !!

 12. Muthu

  By all the ways, tamil makkal need to support Vaiko. If we think, we can change history. DMK & ADMK must be eliminated. Vaiko’s party should be elected for ruling tamil nadu. By doing this, tamilan will again get name and fame and our sin due to simply saw the eala tamil people murders also will be washedout…

 13. குமரன்

  ///வைகோ குழுவினர் கூட அதே போல், ரயில் மூலம் போபாலுக்கு செல்ல முயற்சி செய்ய வேண்டும்.///

  வைகோ பஸ்ஸில் பயணிப்பது என்ற முடிவெடுத்தவுடனே அவர் ஏன் ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுக்காமல், உடலை வருத்தும் பஸ் பயணத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

  ரயில் என்றால் அவர் செல்லும் ரயிலை ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக்கிக் கிட்டத்தட்ட ஒரு நாள் தாமதமாகவே சாஞ்சி கொண்டு சேர்த்து அவரது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விடுவார்கள். எனவே தான் அவர் பஸ் பயணத்தைத் தேர்ந்தெடுத்தார்.

  சென்னை அவருக்குப் பழக்கமான ஊர். நடந்தே சென்றடைந்து விடுவார். ஆனால் ம.பியின் எல்லையிலேயே நிறுத்திவிட்டதால் சாஞ்சி சென்றடைவது சாத்தியமில்லை.

  ஆனால் ஜனநாயக நாட்டில் ஒரு அறப் போராட்டத்தை முடக்க, சாதரணமான முறையில் நம் எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூட விடாமல் தடுக்க இப்படிப்பட்ட வழிமுறைகளைக் கையாளும் மத்தியப் பிரதேச பா.ஜ. அரசு வெட்கக் கேடான நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதை அந்தக் கட்சி உணர வேண்டும். சும்மா வந்து அங்கே ஆர்ப்பாட்டம் நடத்துவதாலும், கறுப்புக் கோடி காட்டுவதாலும் ராஜபக்சேக்கோ அல்லது ம.பி.அரசுக்கோ என்ன குறைந்து போய்விடும்? அப்படியாவது இதைத் தடுத்து என்ன சாதிக்கிறார்கள் இவர்கள்? அசிங்கமான அடக்கு முறை எங்களுக்கும் தெரியும் என்று சொல்வதாகத்தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது.

 14. குமரன்

  இன்று காலையே எனது குடும்பத்தில் அடுத்த தேர்தலில் வைகோவுக்குத்தான் எங்கள் ஒட்டு என்று தீர்மானித்து விட்டோம், கொள்கைப் பிடிப்போடு மிக நாகரீகமான அரசியல் செய்து வருகிறார்.

 15. யாழ்

  இத்தனை காலம் அரசியலுக்காய் விததை காட்டித் திரிபவர் என்று எண்ணினேன். இன்று அவரது உயர்ந்த எண்ணத்தைக் கண்டு தலைவணங்குகிறேன். தூரத்தில் நானிருந்தாலும் உங்கள் அருகில் உங்களுடன். உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

 16. குமரன்

  ஒரு செய்தி:

  ///ராஜபக்ஷேவின் விஜயத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவதற்கு முன், அவரது விஜயம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்தது.

  மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபாவில் புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தனிப்பட்ட பயணமாக அவர் வரவிருந்தார். இவரது பயணம், மத்திய அரசின் அழைப்பு அற்ற தனிப்பட்ட பயணம் என்ற விதத்தில், தடுக்கப்படலாம் என்ற சாத்தியம் இருந்தது.

  எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இலங்கை ஜனாதிபதியின் பயணம், மூன்று நாள் ராஜாங்க விஜயமாக மாற்றப்பட்டது.

  அந்த விதத்தில், மத்திய அரசின் அழைப்பில் இன்று வந்து இறங்கியுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷே, நாளை (வியாழக்கிழமை) காலை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார். நாளை மாலை பிரதமர் மன்மேபகன் சிங்குடன் சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. 21-ம் தேதி, சிறப்பு விமானம் மூலம், சாஞ்சி செல்கிறார்.///

 17. மு. செந்தில் குமார்

  ” ஜனநாயக நாட்டில் ஒரு அறப் போராட்டத்தை முடக்க, சாதரணமான முறையில் நம் எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூட விடாமல் தடுக்க இப்படிப்பட்ட வழிமுறைகளைக் கையாளும் மத்தியப் பிரதேச பா.ஜ. அரசு வெட்கக் கேடான நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதை அந்தக் கட்சி உணர வேண்டும். சும்மா வந்து அங்கே ஆர்ப்பாட்டம் நடத்துவதாலும், கறுப்புக் கோடி காட்டுவதாலும் ராஜபக்சேக்கோ அல்லது ம.பி.அரசுக்கோ என்ன குறைந்து போய்விடும்? அப்படியாவது இதைத் தடுத்து என்ன சாதிக்கிறார்கள் இவர்கள்? அசிங்கமான அடக்கு முறை எங்களுக்கும் தெரியும் என்று சொல்வதாகத்தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது.” திரு. குமரன்.

  இந்த அறிவும் பார்வையும் எல்லா மக்களிடமும் இருந்தால், இதுபோல் நம் மக்களை தகுதியடயச்செய்தால் – நாம் புலம்பலில் இருந்து வெளிவந்து விடலாம்.

  (புண்ணியம் யாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாரதி அனுபவிக்காமலா சொல்லிருப்பார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *