BREAKING NEWS
Search

மத்திய பிரதேச சாலையில் நடுங்கும் குளிரில் தூங்கி, கொளுத்தும் வெயிலில் போர் முழக்கமிடும் வைகோ!

மத்திய பிரதேச சாலையில் நடுங்கும் குளிரில் தூங்கி, கொளுத்தும் வெயிலில் போர் முழக்கமிடும் வைகோ!

சாஞ்சி: ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச எல்லையில் நடுசாலையில் அமர்ந்து பெரும் போராட்டம் நடத்தி இந்தியாவையே ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

விடிய விடிய குளிரில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ, தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் போர்முழக்கமிட்டு வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய துவக்க விழாவில் பங்கேற்க இனப் படுகொலைகாரன், இலங்கை அதிபர் ராஜபக்சேவை வருந்தி வருந்தி அழைத்துள்ளது வெட்கம் கெட்ட காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகள்.

இன்று டெல்லியில் முகாமிட்டுள்ள ராஜபக்சே, நாளை சாஞ்சிக்கு வருகிறார். அவருக்கு சாஞ்சியில் வைத்தே கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பினைத் தெரிவிக்க,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேருந்துகளில் மத்தியபிரதேசம் சென்றுள்ளனர்.

இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார் வைகோ.

அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவித சம்பாவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு குவிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான போலீசாரும் அவர்களுக்கு எதிரிலேயே அமர்ந்துள்ளனர். ஆனால் மதிமுகவினர் எந்த சட்டமீறலிலும் ஈடுபடாமல் மிகுந்த கட்டுக்கோப்புடன் நடந்து, மபி மாநில போலீசாரை ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர்.

நேற்று இரவு முழுக்க விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டம் நடைபெற்றது. வைகோவும் நடுச்சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினார். உடன் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் இரவு உணவு அங்கேயே சமைத்து பரிமாறப்பட்டது.

ராஜபக்சேவின் கொடுமைகளை பற்றியும் சொந்தத் தமிழ் உறவுகளுக்கு இந்திய மத்திய அரசும் மாநில அரசும் செய்த துரோகங்கள் பற்றியும் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை அங்குள்ள கிராம மக்களுக்கு தொண்டர்கள் விநியோகம் செய்தனர்.

நடுச்சாலையில் தொண்டர்களுடன் உறங்கிய தலைவன்


இதனையடுத்து நள்ளிரவில் கொட்டும் பனியில் நடுரோட்டில் தொண்டர்களுடன் வைகோ படுத்து உறங்கினார்.

காலையில் உள்ளூர் மக்கள் தாங்களாக விரும்பி வந்து உணவும், நீரும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். கொளுத்தும் வெளியில் பேராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் கூட்டத்தில் பேசிய வைகோ, ராஜபக்சேவுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மட்டுமல்லாது பாஜகவும் ஆதரவு தருவதாக குற்றம் சாட்டினார்.

மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தம்மிடம் கூறிவிட்டு தற்போது எல்லையிலேயே தடுத்து நிறுத்திவிட்டது சரிதானா என்று கேட்டவர், இந்தியாவின் பிரஜையை வெளியில் நிறுத்திவிட்டு, ஒரு கொலைகாரனை உபசரிப்பது என்ன வகை நியாயம் என்றார்.

“தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்காக ஒரு உயிர் வேறு போயிருக்கிறது. தங்களை தடுத்து நிறுத்தினாலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை. என்னைக் கைது செய்தாலும் கவலையில்லை,” என்றார் வைகோ.

-என்வழி செய்திகள்
24 thoughts on “மத்திய பிரதேச சாலையில் நடுங்கும் குளிரில் தூங்கி, கொளுத்தும் வெயிலில் போர் முழக்கமிடும் வைகோ!

 1. Ganesh

  உண்மை தமிழன் !…
  தோளில் போடும் துண்டு மட்டுதான் கருப்பு ! ..
  அவர் அரசியல் வாழ்க்கை சுத்த வெள்ளை !

 2. mannaisenthil

  திரு இளங்கோ..
  விஜயகாந்தோடு வைகோவை ஒப்பிடாதீர்கள். அவர் பிறப்பால் தமிழன்தான்
  அவர் வீட்டில் தெலுகு மாட்லாடவில்லை… விஜயகாந்த் கதை வேறு.. பாரதிராஜா பேட்டி படியுங்கள் புரியும். ரஜினி வீட்டில் தமிழ்தான் பேசுகிறார்கள் ஆனால் அங்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
  வைகோ தெலுகுவாய் இருந்தாலும் பரவாயில்லை.. முக வை விட ஏன் அப்துல்கலாமை விட மிக உயர்ந்தவர். சுய மரியாதை இருப்பதை உணர்த்திய பெரியாரை தெலுகு நாயுடு என்று ஒதுக்கும் அவமானம் தமிழினத்தில் இருந்தால் தமிழனாய் இல்லாமல் இருப்பதே மேல்!!!

 3. mannaisenthil

  நம் தலைவனையும்..இவரையும் யாரவது இணைத்து வைத்தால்.. வாழும் காலத்தில் சில நன்மைகளை கண்டு விட முடியும்..வினோ முயலுங்களேன்

 4. குமரன்

  மீண்டும் ஒரு முறை அன்பர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

  தமிழ் மொழி தமிழர்களுக்கு மட்டும் தாய் மொழி அல்ல, தமிழ்மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் தாய் மொழியே ஆகும். ஆக தமிழ் மொழிகளின் தாய்.

  தாய்மை உணர்வோடு நாம் மற்ற தென்னிந்தியர்களை அணுக வேண்டும்.

  மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இயற்றிய நமது தமிழ்த்தாய் வாழ்த்தில் கீழ்வரும் பகுதியை நீக்கியவர்களை நான் குறை கூறுவதன் காரணம் இப்பகுதியை நீக்கியதால் உண்மை இருட்டடிப்புச் செய்யப் படுகிறது. தமிழின் வளமையும் தாய்மையும் கூட மறுக்கப் படுகிறது என்பதால்தான்.

  நீக்கிய பகுதி இதோ:

  பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

  முழுப்பாடல் இதோ:

  நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
  சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
  தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
  அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
  எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
  பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
  சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

 5. குமரன்

  தினகர்

  ///ஏன் இளங்கோ இந்த ‘சாதி’ வெறி….///

  சாதி வெறி என்பது பல பரிமாணம் உடையது. நீக்குதல் வெகு கடினம்.

 6. குமரன்

  ///இந்தியாவின் பிரஜையை வெளியில் நிறுத்திவிட்டு, ஒரு கொலைகாரனை உபசரிப்பது என்ன வகை நியாயம் ///

  எத்தனை வலிமை மிக்க கேள்வி?

  இதைக் காதில் வாங்கும் தகுதி கூட இங்கிருக்கும் வேறெந்த அரசியல் தலைவருக்கும் இல்லை. வெறுமனே ஒரு தனியார் மனையில் கூட்டம் நடத்தி அதற்கு மாநாடு என்று பெயர் கொடுத்து உலகெங்கும் பரப்புரை செய்து, “உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்” என்று பிறரை விட்டுத் தனது புகழ் பாட வைப்பவர்கள் காதில் இந்தக் கேள்வியின் தாக்க எதிரொலிக்க வேண்டும்.

 7. Gokuldass

  நம் தலைவனையும்..இவரையும் யாரவது இணைத்து வைத்தால்.. வாழும் காலத்தில் சில நன்மைகளை கண்டு விட முடியும்..வினோ முயலுங்களேன்

  ————————————-
  நல்ல விஜயம் நடந்தால் நல்லாருக்கும்

 8. மு. செந்தில் குமார்

  இந்தியாவின் பிரஜையை வெளியில் நிறுத்திவிட்டு, ஒரு கொலைகாரனை உபசரிப்பது என்ன வகை நியாயம் என்றார்.

  இது என்னை பாதித்த வரி (திரு. குமரன் முன்பே கூறிவிட்டார்)

  எத்தனை வலிமை மிக்க கேள்வி? என்று.

 9. karthik

  எந்த விளம்பரத்தையும் எதிர்பார்க்காத மக்கள் தொண்டு.. வாழ்க வைகோ அவர்கள்..

 10. தினகர்

  ஆயிரம் பேரை மா நில எல்லையில் தடுத்து நிறுத்திய போதே, வைகோ வெற்றி பெற்று விட்டார்.

  ஒரு மா நிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு இப்படி செல்பவர்களை (முதல்வரிடம் பேசி அனுமதி பெற்றதாக வைகோ சொல்கிறார்) எல்லைக்கு வெளியே தடுத்த நிறுத்த சட்டத்தில் இடம் இல்லை.

  சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனை என்றால் கைது செய்திருக்க வேண்டும். மாநிலத்திற்குள் நுழைவதை தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமையை மீறிய செயல்.

  தடுத்து நிறுத்தி பெரும் வெற்றி பெற செய்தவகையில் முதல்வரும் தோற்று விட்டார்.சாஞ்சி சென்றிருந்தால் கருப்புக்கொடி போராட்டம் என்று சாதாரணமாக போயிருக்கலாம். இப்போது, வட இந்தியாவிலும் வைகோவின் போராட்டம் தெரியவந்துள்ளது.

  வைகோ, இத்துடன் இந்த பிரச்சனையை விடக்கூடாது.. மாநில எல்லையில் தடுத்து நிறுத்திய அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து வழக்கு தொடரவேண்டும். அதன் மூலம் இந்த பயணத்தின் நோக்கம் உலகெங்கும் சென்றடையும்.

 11. anbudan ravi

  தேவை இல்லாத அல்லது சிறு செய்திகளை தலைப்புச்செய்திகளாய் வெளியிடும் பல ஊடகங்கள் (என்வழி விதிவிலக்கு), தமிழ் இனத்திற்காக சாலையில் புரண்டு கொண்டிருக்கும் நேர்மையான தலைவரை பற்றி சிறு செய்திகள் கூட வெளியிடவில்லையே என்று நினைக்கும்பொழுது நெஞ்சு வலிக்கிறது.

  ராஜபக்ஷே என்கிற கொடூரனை கல்லால் அடித்து ஓட ஓட விரட்டவேண்டும்.

  அன்புடன் ரவி.

 12. Kumar

  Good to see the support for Vaiko by Envazhi and also the readers….

  நம் தலைவனையும்..இவரையும் யாரவது இணைத்து வைத்தால்.. வாழும் காலத்தில் சில நன்மைகளை கண்டு விட முடியும்..வினோ முயலுங்களேன்

  ————————————-

  Very true, even though Vaiko is a leader for the people, MDMK is a sinking ship now. If Rajini lends his support to Vaiko it will create huge ripples……நடக்குமா?
  நடந்தால்…… ஆஹா நினச்சு பாக்கவே அருமையா இருக்கு….

 13. குமரன்

  வைகோவின் போராட்டம் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது.

  இந்தியாவின் பிற மாநிலங்கள் அவரது அறவழிப் போராட்டத்தை உணர்ந்துள்ளன. மக்களும் ஓரளவு நம் பக்கம் உள்ள நியாயத்தை அறிய இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. அவரது உரையை அவருடன் இருந்த அருணகிரி என்ற தொண்டர் இந்தியில் மொழிபெயர்த்து அங்குள்ளவர்களிடம் பேசியிருக்கிறார் என்பது இந்த செய்தி சேரவேண்டிய விதத்தில் சேர்ந்து விட்டது என்ற மகிழ்வை ஏற்படுத்துகிறது.

  மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானும் வைகோவிடம் தொலைபேசியில் பேசி தமது நிலையைக் கூறியிருக்கிறார் என்ற செய்தி எந்த அளவுக்கு வைகோ அங்கே நேர்மறையான (positive ) தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

 14. Manoharan

  வைகோவும் அவரது தொண்டர்களும் நடத்தும் இந்த போராட்டம் மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. எந்த சுயநலமும் இல்லாமல் ஒரு வடமாநிலம் சென்று போராட்டம் நடத்துவது சாதாரணமான காரியமே அல்ல. எந்நேரமும் ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்யும் வியாதிகளுக்கு நடுவே ஒரு உண்மையான தலைவன் வைகோ. சென்ற தேர்தலில் அவர் பாராளுமன்றம் சென்றிருந்தால் இந்நேரம் கதையே வேறு. வரும் தேர்தலில் அவர் கண்டிப்பாக பாராளுமன்றம் செல்லவேண்டும். அதுதான் நம் தமிழ் சமூகத்துக்கு நன்மை பயக்கும். பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *