BREAKING NEWS
Search

ஜெயலலிதா அவர்களே… ஊழலற்ற அரசின் முதல்வரா நீங்கள்? – வைகோ கேள்வி

கோடிக் கணக்கில் முதல்வரிடம் நிதி கொடுக்கிறார்களே அமைச்சர்கள்… எங்கிருந்து வருகிறது? – வைகோ கேள்வி

சங்கரன் கோயில்: முதல்வரிடம் கோடிக் கணக்கில் நிதி என்ற பெயரில் அமைச்சர்கள் சூட்கேஸ்களில் வைத்துக் கொடுக்கிறார்களே… இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? யாரிடம் பறித்துத் தருகிறார்கள்? துறையின் பணம் என்றால் அதற்கு என்ன கணக்கு? என்று கேள்வி எழுப்பினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

சங்கரன் கோயிலில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் வைகோ. அரசியலுக்காக யாரும் கண்டபடி பேசக்கூடாது, தேவையில்லாமல் திமுக, தேமுதிகவை விமர்சிக்கக் கூடாது, நியாயமான பிரச்சினைகளை மட்டுமே பேசத வேண்டும் என தனது கட்சியினருக்கு கட்டளையாக இட்டிருக்கிறார் வைகோ.

சங்கரன் கோயில் தொகுதிவாசிகளிடம் நேற்றைய பிரச்சாரத்தின்போது வைகோ பேசுகையில் ஜெயலலிதாவின் நிர்வாக சீர்கேடுகளை வெளுத்துக் கட்டினார்.

“ஆறுமுறை அமைச்சரவையை மாற்றினீர்களே? என்ன தவறு செய்தார் அந்த அமைச்சர்? அமைச்சரின் தவறு அப்படியே வைத்து மறைக்கிறீர்களா?

தவறான ஒருவரை அமைச்சராக்கும் உங்களின் நிர்வாகத் திறன் எப்படிப்பட்டது? யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்று கூட தெரியாமல், பொம்மைகளை மாற்றிக் கொண்டிருக்கும் விளையாட்டைச் செய்பவரா முதல்வர்? இது தான்தோன்றித் தனமான போக்கு… ஆணவப் போக்கு.

இன்னொரு பக்கம் ஒரு கோடி… ஒன்றரை கோடி என்று உங்களிடம் நிதி கொடுக்கின்றார்களே அமைச்சர்கள்? இந்தப் பணம் எப்படி வந்தது? வெளிப்படையாகவே அவர்களால் இவ்வளவு பணம் கொடுக்க முடிகிறதென்றால், இதைவிட நூறு மடங்கு உங்களுக்கு கப்பம் கட்டினார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஊழலற்ற அரசின் முதலமைச்சர் என்று நீங்கள் எப்படி சொல்லிக் கொள்ளலாம்!

தி.மு.க. அரசில் நிர்வாகச் சீர்கேடு என்றீர்களே… இப்போது உங்கள் ஆட்சியிலும் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றார்களே… ஆனால், சென்னையைச் சுற்றிலும் பெரும் தொழிலதிபர்கள் நடத்துகின்ற  கம்பெனிகளுக்கு இந்த அளவுக்கு பாதிப்பில்லையே.. ஏன்? எந்தக் கப்பம் உங்கள் தோட்டத்துக்கு வந்து சேர்கிறது?

பிரேக் இல்லாத வாகனமாகச் சென்று கொண்டிருக்கிறது அ.தி.மு.க. ஆட்சி. அதற்கு  பிரேக் போடவேண்டும் இந்தத் தொகுதி மக்கள். வெற்றி பெற்று பிரேக்கை இயக்குபவராக இருப்பார் எங்களின் வேட்பாளர் சதன் திருமலைக்குமார்.

என் கொள்கையில் தவறு இருந்திருக்கலாம். எங்கள் அணுகுமுறையில் விமர்சனம் எழுந்திருக்கலாம். ஆனால்…  என் சொந்த வாழ்க்கையை சுகபோகமாக்கிக் கொள்வதற்காக நான் இம்மியளவும் நெறி தவறியதில்லை. அப்படி ஒரு அரசியல் செய்வதை விட சும்மா இருப்பேன்.

இங்கே சங்கரன் கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தைக் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் தோழர்களே. அது எனக்காக அல்ல.. உங்களுக்காக!,” என வைகோ முடித்தபோது  மக்கள் பெரும் ஆரவாரத்துடன் அவர் பேச்சை வரவேற்றனர்.

கிராமங்களில் பெரும் வரவேற்பு

சங்கரன் கோயில் தொகுதி கிராமங்களில் பிரச்சாரத்துக்கு செல்லும் வைகோவை மக்கள் பெரும் திரளாக வந்து வரவேற்கிறார்கள். அவர் பேச்சை ஆர்வத்துடன் கவனித்துவிட்டுச் செல்கிறார்கள்.

-இசக்கி
8 thoughts on “ஜெயலலிதா அவர்களே… ஊழலற்ற அரசின் முதல்வரா நீங்கள்? – வைகோ கேள்வி

 1. மிஸ்டர் பாவலன்

  ///சங்கரன் கோயில் தொகுதி கிராமங்களில் பிரச்சாரத்துக்கு
  செல்லும் வைகோவை மக்கள் பெரும் திரளாக வந்து
  வரவேற்கிறார்கள். அவர் பேச்சை ஆர்வத்துடன்
  கவனித்துவிட்டுச் செல்கிறார்கள்.////

  வை.கோ சிறந்த தலைவர், பேச்சாளர். அவரது வேட்பாளர்
  வெற்றி பெற்றாலும் அது ஆரோக்கியமான ஜனநாயக
  அரசியலுக்கு நல்லது. ஆனாலும், பேச்சுக் கேட்க வரும்
  கூட்டம் வோட்டுப் போடுமா எனச் சொல்ல முடியாது.

  MGR-கருணாநிதி காலத்தில், கருணாநிதி பேச்சுக் கேட்க
  பெருந்திரளாய் மக்கள் வந்து கைதட்டிக் கேட்பார்கள்.
  ஆனால் வோட்டுப் போடும் போது – புரட்சித் தலைவர்
  அவர்கள் முகம் தோன்ற – இரட்டை இலைக்கு வோட்டு
  போட்டு வருவார்கள். அது போல் இந்த தேர்தலிலும்,
  வை. கோ. பேச்சு ரசிக்கும் படி இருந்தாலும், தேர்தல் நாளில்
  மக்கள் வோட்டு இரட்டை இலைக்கு விழலாம்.

  -=== மிஸ்டர் பாவலன் ===

 2. muthu

  வைகோ விற்கு விஜயகாந்த் இந்த ஒரு தேர்தலிலாவது ஆதரவு தரலாம் . தேமுதிக கம்யூனிஸ்ட் புதிய தமிழகம் வைகோ விற்கு அதரவு தந்து பிரசாரத்தில் ஈடு பட்டால் வைகோ தனது சொந்த தொகுதியான சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவார் என்பது மட்டும் நிச்சயம் .

  தேமுதிக மதிமுக ஆகிய இரு கட்சிகள் கூட்டணி வைத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டி இட்டால் மக்கள் வரவேற்பார்கள் ( இருவரும் நேர்மையானவர்கள் என்பது மக்கள் அறிவார்கள் ) கம்முநிச்ட்களில் ஆதரவும் இவர்களுக்கு இருப்பதனால் ஜெயலலிதாவின் கொட்டத்தை அடக்கலாம்

 3. karthik

  நமது நியமான பேராசை நிறைவேறும ? வைகோ வெல்லுவார ?

 4. enkaruthu

  //MGR-கருணாநிதி காலத்தில், கருணாநிதி பேச்சுக் கேட்க
  பெருந்திரளாய் மக்கள் வந்து கைதட்டிக் கேட்பார்கள்.
  ஆனால் வோட்டுப் போடும் போது – புரட்சித் தலைவர்
  அவர்கள் முகம் தோன்ற – இரட்டை இலைக்கு வோட்டு
  போட்டு வருவார்கள். //

  அதெல்லாம் மக்கள் ஒன்னும் தெரியாத இருந்த காலத்தில். இது யாருக்கும் பொருந்தும் போன பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிற்குகும் கூட்டம் வந்தது மன்னிக்கவும் கூட்டப்பட்டு வந்தது.அனால் ஒட்டு போடும்பொழுது இரட்டை இலையும் ஜெயலலிதா முகமும் யாருக்கும் நியாபகம் வரவில்லை.

  இது மீடியா உலகம். கூலி வேலை செய்யும் மனிதர்கள் கூட இன்று தினசரி பத்திரிகையை பார்த்து விட்டுதான் செல்கிறார்கள்.வைகோ உண்மையாலுமே அவர் சொன்னதுபோல் அவர் கொள்கையில் கட்சி தொண்டருக்காக மாறி இருந்தாலும் கை சுத்தகாரர்.என் கல்லூரியில் அவர் ஒரு முறை உரை ஆற்ற வந்தார்(அதற்க்கு முன்பு அவர் ஒரு காமெடி பீஸ் என்றெல்லாம் நான் ஒட்டிருக்கிறேன் ) அந்த உரை ஐயோ சூப்பர்.ஒட்டு மொத்த கல்லூரியும் ஒரு அரை மணி நேரம் அமைதியாக இருந்து கேள்வி பட்டது உண்டா. நான் பார்த்தேன் அன்று .அதே போல்தான் g.k வாசனும் .ஆனால் இருக்க கூடாத இடத்தில இருக்கிறார்.எனக்கு கூட ஒரு ஆசை உண்டு தலைவர் அரசியலுக்கு வர விருப்பம் இல்லையென்றால் வைகோ தலைமையில் வாசன்,கம்யூனிஸ்ட் நல்லமுத்து போன்ற நல்ல மனிதர்கள் கூட்டணிக்கு தலைவர் அதரவு குடுக்கலாம் .அல்லது தலைவர் தலைமையில் இவர்கள் எல்லாம் வரலாம்.அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் மக்கள் ஏன் ஜெயா மற்றும் கருணாநிதிக்கு ஒட்டு போடா போகிறார்கள்.

 5. தினகர்

  “தேர்தல் நாளில் மக்கள் வோட்டு இரட்டை இலைக்கு விழலாம்.” – விழ வேண்டும் என்பது தானே பாவலன் நோக்கம் 🙂

 6. மிஸ்டர் பாவலன்

  மகாபாரதத்தில் வரும் கர்ணன் நல்ல பாத்திரம்.
  அவனிடம் பல அற்புதமான திறமைகள் உண்டு.
  அர்ஜுனனையும் மிஞ்சும் வில் ஆற்றலும் உண்டு.
  இருந்தாலும் உறவையும், பெயரையும் ஈட்ட
  முடியாமல், ‘நட்புக்கு இலக்கணம்’, ‘கொடை வள்ளல்’
  என்ற பெயர்களுடன் அவன் காலம் முடிந்தது.

  “செஞ்சோற்று கடன் தீர்க்க
  சேராத இடம் சேர்ந்து
  வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.. கர்ணா,
  வஞ்சகன் கண்ணனடா.. ”
  என கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

  அரசியலில் ஒரு கர்ணன் – வை.கோ. அண்ணாவிற்குப் பிறகு
  கலைஞர் தலைமையில் தி.மு.க. தொடர்ந்த போது கட்சிக்காக
  அர்ப்பணித்து நல்ல பணி செய்து வந்தார் வை.கோ. முன்னணி
  பேச்சாளராக இருந்தார். ஆனால் ‘வை.கோ. இருந்தால் ஸ்டாலின்
  தலைவராக முடியாது’ என்று கலைஞர் நினைத்து வை.கோ.-வை
  கட்சியை விட்டு நீக்கினார். எம்.ஜி.ஆருக்கு சினிமா செல்வாக்கு
  இருந்ததால் கட்சி நீக்கம் அவரை வளர்த்தது. எம்.ஜி.ஆருக்கு
  ஆர்.எம். வீரப்பன் பெரும் உதவி செய்தார். வை.கோவிற்கு
  நாஞ்சில் சம்பத் பெரும் உபத்திரவம் செய்தார். பாட்டுப் பாடி
  காமெண்டை முடிக்கிறேன்.

  “அண்ணாவின் கொள்கை காக்க
  தி.மு.க. கட்சியில் சேர்ந்து
  வஞ்சத்தில் வீழ்ந்தாரடா.. வை.கோ..
  வஞ்சகன் கலைஞரடா..”

  -====== மிஸ்டர் பாவலன் =====-

 7. மிஸ்டர் பாவலன்

  ///“தேர்தல் நாளில் மக்கள் வோட்டு
  இரட்டை இலைக்கு விழலாம்.” – விழ வேண்டும்
  என்பது தானே பாவலன் நோக்கம் :)////

  பாவலன் (குமரனிடம்) : “Your honour! I object to this comment.”

  (ஜட்ஜ்) குமரன்: “Objection sustained. Counsel is advised to refrain
  from making personal comments.”

  பாவலன்: “Thank you, my Lord!”

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 8. மிஸ்டர் பாவலன்

  நான் தமிழில் படித்த சிறந்த நாவல்களில்
  “ஜஸ்டிஸ் ஜகன்னாதன்” என்ற நாவல்.
  இது தேவன் அவர்களால் எழுதப்பட்டது.
  சட்டம் தெரியாதவர்களும் கூட சட்ட
  நுணுக்கங்களை தெரிந்து கொள்வதற்கு இது
  உதவும். பின்னால் வந்த சுஜாதாவின் கணேஷ்-
  வசந்த் நாவல்களை விட இதில் சட்டம் அதிகம்.
  முழுக்க முழுக்க கோர்ட்டில் தான் இந்த நாவல்
  நடக்கிறது. நுங்கம்பாக்கத்தில் ஒரு முதியவர்
  இறந்து விடுகிறார். (Excess dosage of sleeping pills).
  அவரது மருமகன் – வரதராஜன் – குற்றவாளியாக
  கூண்டில் நிற்கிறார். பாகம் ஒன்றில் ப்ராக்யுஷன்
  தரப்பில் கேஸ் வைக்கப் படுகிறது. சாட்சிகள்
  ஒவ்வொருவராக கூப்பிட்டு பப்ளிக் ப்ராசிக்யுட்டர்
  கருணாகரன் கேசிற்கு வலு சேர்கிறார். இரண்டாம்
  பாகத்தில் டிபன்ஸ் கவுன்சில் ஈஸ்வரன்
  வரதராஜன் நிரபராதி என நிரூபிக்க சாட்சிகளை
  அழைத்து விசாரிக்கிறார். பிராசிக்யூஷன் வாதங்களை
  முறியடிக்கிறார். அதாவது Circumstantial Evidence என்ற
  அடிப்படையில் கைதியின் மீது வழக்கு புனையப்பட்டிருக்க
  இதே போல் Circumstantial Evidence அந்த கதையில் வரும்
  வெங்கடேஸ்வரன் என்பவருக்கும் இருக்கிறது என
  தாக்கல் செய்கிறார். கதையின் ஹீரோ ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
  Circumstantial Evidence பற்றி சட்டம் என்ன சொல்கிறது என
  விளக்கி விட்டு, ஒரு sum-up கொடுத்து “குற்றவாளி தான்
  கொலை செய்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி
  நிரூபிக்கப் பட வில்லை என்றால் அந்த சந்தேகத்தின் பலனை
  அவருக்கு கொடுக்கப் பட வேண்டும்” என ஜூரிகளுக்கு அட்வைஸ்
  கொடுக்க பின் ஏகமனதாக அவர்கள் கைதியை “நிரபராதி” என
  பரிந்துரைக்கிறார்கள். ஹி..ஹி.. முழு கதையையும் போட்டு
  உடைச்சுட்டேன். அதாவது, உண்மையில் என்ன நடந்தது
  என்பது கதையாசிரியர் தேவனால் சொல்லப்படவில்லை.
  விசாரணையை வைத்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்!

  -==== மிஸ்டர் பாவலன் ====-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *