BREAKING NEWS
Search

ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு – சாஞ்சி நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புறப்பட்ட வைகோ கைது!

ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு – சாஞ்சி நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புறப்பட்ட வைகோ கைது!


போபால்: இனியொரு முறை ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்கு முன் நிச்சயம் ஒன்றிற்கு பல முறை யோசிக்கும் மத்திய அரசு. அப்படியொரு எதிர்ப்பைக் காட்டியுள்ளார் வைகோவும், அவரது மதிமுக தொண்டர்களும்.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவைவுக்கு கறுப்புக் கொடி காட்ட மத்திய பிரதேசம் சென்ற மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அம்மாநில எல்லையான சிந்த்வாராவின் பட்சிசோலி கிராமத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார். ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு காட்ட சாஞ்சி நோக்கி புறப்பட்டபோது வைகோ கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா- மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாராவில் வைகோ மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மூன்று நாட்களுக்கு முன்பே தடுக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக தடுத்து வைக்கப்பட்ட இடத்திலே உண்டு உறங்கி தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை சிந்த்வாராவில் இருந்து இன்று காலை சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார்.

ஆனால் வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் உரத்த குரலில்,

மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்!
மத்திய அரசை மன்னிக்கமாட்டோம்!
மத்திய பிரதேச பாஜக அரசையும் மன்னிக்க மாட்டோம்!!

– என்று முழக்கமிட்டனர்.

கைது நடவடிக்கையின்போது போலீசாருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.

அப்போது பேசிய வைகோ, “தமிழர்கள் விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் மக்களின் மன ஓட்டைத்தைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றன. இரண்டுமே மக்கள் விரோதிகள் என்பதை நிரூபித்து வருகின்றனர். இது உச்சகட்ட வேதனையான விஷயம்,” என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் வேன்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

இன்று முக்கிய அறிவிப்பு

இந்தக் கைது தம்மை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று மாலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக வைகோ அறிவித்துள்ளார்.

-என்வழி செய்திகள்




2 thoughts on “ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு – சாஞ்சி நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புறப்பட்ட வைகோ கைது!

  1. s venkatesan, nigeria

    இது வரை எனக்கு இப்படி தோன்றியதில்லை. இவர் ஒரு நாள் முதல்வர் ஆவார். இவர் மேல் எனக்கு சில வருத்தங்கள் உண்டு என்றாலும், இவர் முதல்வர் ஆனால் தமிழ்நாட்டிற்கு நல்லது.

  2. தினகர்

    பக்கத்து நாட்டில் அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை, இந்தியாவிலுள்ள பிறமொழியினரும் தெரிந்து கொள்ள வைகோ ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தொடர்ந்து மொழிபெயர்ப்பு மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்தால், வடக்கு மக்களின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும்.

    மக்கள் ஆதரவு பெருகும் போது அரசுகளின் பார்வையும் மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *