BREAKING NEWS
Search

வைகோ…. சறுக்கிய நம்பிக்கை!

வைகோ.. ஏன் இப்படி?

vaiko
ந்தத் தேர்தல் பல சுவாரஸ்யமான முடிவுகளைத் தரும் என்ற நம்பிக்கை இருந்தது.

எந்தக் கட்சி வெல்லும், யார் தலைமையில் ஆட்சி என்ற அரசியல் சார்புகள் தாண்டி, வைகோ, திருமாவளவன், சீமான் போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட தலைவர்கள் சட்டசபைக்குச் செல்ல ஒரு வாய்ப்பிருக்கிறது… சட்டசபையில் மக்களின் உண்மையான விருப்பங்களைப் பிரதிபலிப்பதைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

வைகோவின் முடிவு அந்த நம்பிக்கையைத் தடதடக்க வைத்திருக்கிறது.

அவரது குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலில்லை. திமுக தோற்கிறதோ ஜெயிக்கிறதோ… வைகோ காணாமல் போக வேண்டும் என்பது கருணாநிதி மற்றும் அவரது கட்சியின் லட்சியம். அதை பல சந்தர்ப்பங்களில் மதிமுகவை உடைத்து உடைத்து விளையாடிக் காட்டி வந்திருக்கிறது திமுக.

இப்போது அந்த லட்சியத்தை திமுகவுக்கு எந்த சிரமமும் இல்லாமல் வைகோவே நிறைவேற்றிக் கொடுத்துவிடுவார் போலிருக்கிறது. ‘பி டீம்’ பிரச்சாரத்துக்கு இன்னும் உரமேற்றும் வகையில்தான், கடைசி நேரத்தில் தேர்தலிலிருந்து பின்வாங்கும் முடிவை வைகோ அறிவித்துள்ளார்.

இனி இந்த முடிவை வைகோ மாற்றிக் கொண்டாலும் பலன் கிட்டுமா தெரியவில்லை.

நந்தவனத்துக்குள் ஒரு ஆண்டி கதையாகிவிடக் கூடாதே என்ற கவலை, அரசியல் நடுநிலையாளர்களுக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த அணியில் திருமா மீதுதான் சற்று நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்!

-வினோ
என்வழி
4 thoughts on “வைகோ…. சறுக்கிய நம்பிக்கை!

 1. குமரன்

  வைகோ மீதான நம்பிக்கை எனக்கும் சில மாதங்களுக்கு முன்னரே தகர்ந்து விட்டது.

  ஜெயாவின் B team ஆகத்தான் செயல் படுகிறார் என்பது எப்போதோ வெளியே வந்து விட்டது.

  ஜெயா கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே தனது திரை மறைவு வேலைகளை ஆரம்பித்து விட்டார் என்ற எனது சந்தேகம் சிறிது சிறிதாக வலுப்பெற்று இப்போது முழுமையாக வெளிவந்துவிட்டது.

  ஜெயாவின் கட்சியில் இல்லாமல் அவரது புகழ்பரப்பும் விதமாக மாஃபா பாண்டியராஜன், சுமந்த் ராமன் போன்றோர் தொலைக்காட்சி விவாதங்களில் சொன்னவற்றைக் கூர்ந்து கவனித்து வந்தவர்களுக்கு இது நிச்சயம் உண்மை எனப் புரியும். குறிப்பாக சுமந்த் ராமன் வெளிப்படையாக ஒப்புக் கொண்ட ஒரு விஷயம் பி.ஜெ.பி.யின் வாக்குகள் ஜெயாவுக்கு விழுகின்றன என்பதுதான்.

  சென்ற பாராளுமன்றத் தேர்தலில் மோடி அலையின் மொத்த வாக்குகளையும் ஜெயா திருடிக் கொண்டார் என்பதுதான் உண்மை. பி.ஜெ.பி வெல்லும் வாய்ப்பு இல்லை, அதற்குப் போட்டால் தோற்றுப் போய் போட்ட “வாக்கு வீணாகிவிடும்” என்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். நம் மக்களின் “தோற்கும் கட்சிக்குப் போடப்படும் வாக்கு வீண்” என்ற தேர்தல் கால மூட நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாக்கி, அதே நேரம் நானும் மோடியும் ஓடிப் பிடித்து விளயாடும் அளவுக்கு ஃப்ரெண்ட்ஸ் தோற்றத்தையும் உருவாக்கி வாக்குகளைத் திருடி 37 இடம் வென்றார். ஆனால் மக்களிடம் தனக்குத் தான் செல்வாக்கு என்ற புளுகைப் பத்திரிகைகள் மூலம் வெளியிட வைத்தார்.மோடிக்கும் ஜெயாவின் கபட நாடகம் தெரியவில்லை, இன்னமும் தெரியவில்லை. அந்தத் தேர்தலில் மோடி எதிர்ப்பு அரசியல் செய்வது போல நாடகம் நடத்த, 2011 முதலே அல்-உம்மா நிறுவனர் ஜவஹிரிருல்லாவை உபயோகித்துக் கொண்டார். அவரை சட்ட மன்ற உறுப்பினர் ஆக்கினார்.

  2013 பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும், பா.ஜ.க விஜயகாந்த்துக்கு/ அன்புமணிக்கு/ வைகோவுக்கு/ அவர்களது கட்சிக்கு எந்தப் பதவியும் தராது போனது ஜெயாவுக்கு வசதி ஆகிவிட்டது.

  வைகோவை முதலில் பா.ஜ. கூட்டணியிலிருந்து வெளியே கொண்டுவந்தார். அன்புமணி தானே வெளியேறினார். சீமான் நல்ல முறையில் ஜெயாவுக்கு வேலை செய்தார். வேல்முருகன், சுந்தரராஜன், மாஃபா பாண்டியராஜன், பரிதி இளம் வழுதி, நாஞ்சில் சம்பத் என்று பல பேரை கட்ந்த ஐந்தாண்டுகளில் மாற்றுக் கட்சிகளில் இருந்து இழுத்து தொடர்ந்து எதிரணியினர் வாக்குகள் சிதற வகை செய்தார்.

  பலமான கூட்டணி திமுகவுக்கு அமையக் கூடாது, மூன்றாவது அணியாக மதிமுக, பாஜக, விஜயகாந்த், பாமக சேரக் கூடாது என்பதுஅவரது நோக்கம்.

  எப்படி வைகோ சட்டமன்றத்துக்கு வந்துவிடக் கூடாது என்று இப்போது திமுக நினைக்கிறதோ, அதுபோலவே வைகோவும் திமுக, குறிப்பாக ஸ்டாலின், பதவிக்கு வர விருப்படப்படவில்லை என்பதுதான் ஜெயாவின் சாதகமான அம்சம். அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, வாசனையும், கம்யூனிஸ்டுகளையும் தன்னிடம் இருந்து ஓட்டி விட்டு, வைகோவுக்குப் பொருளாதார ஆதரவு கொடுத்து, விஜயகாந்தை வளைத்து, ஒரு வலுவான கூட்டணி போன்று தோற்றமளிக்கும் கிச்சடியை உருவாக்கி விட்டார். இத்தனையும் செய்தது ஜெயாதான். ஆனால் என்வழி கூட விஜயகாந்திடம் இருந்து சந்திரகுமார் பிரிந்ததற்கு, கருணாநிதியைக் குறைசொல்லும் அளவுக்கு மாயத் தோற்றம் உருவாகி விட்டது.

  ஜெயா தனக்கு எதிரான வாக்குகளைச் சிதற வைக்க எடுத்த திட்டம்தான் வைகோ ஒருங்கிணைப்பாளரான கேப்டன்-மக்கள் நலக் கூட்டணி- வாசன் உள்ள அணி.

  எப்போதும் இல்லாத அளவுக்கு- அதுவும் 2011 இல் கூட இல்லாத அளவுக்கு – கருணாநிதியின் இந்துவிரோத உளறல்களைப் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் அதிகம் ரசிக்கவில்லை. புதிய தலைமுறை இப்போது உருவாகிவிட்டது, அந்தத் தலைமுறைக்கு இப்படிப்பட்ட வெறுப்புப் பேச்சுக்கள் ரசிக்கவில்லை. அதன் வெளிப்பாடுதான் அதிக எண்ணிக்கையில், கட்டுமரம் என்றும், பலவிதமாகவும் உருவாகும் மீம்ஸ் மற்றும் கேலிச் சித்திரங்கள். இதை அறுவடை செய்யத்தான் தான் வளர்த்து ஆளாக்கிய ஜவஹிரிருல்லாவை இப்போது ஜெயா கருணாநிதியிடம் அனுப்பி இருக்கிறார். கருணாநிதிக்கு இந்த சதிகார அரசியல் தெரியாமல் போய் விட்டதாஎன்பது புரியவில்லை. ஜெயாவின் தில்லு முல்லு அரசியல் இந்த முறை 2016 இல் மக்களிடம் எடுபடாது என்பது எனது நம்பிக்கை. எடுபடக்கூடாது என்பது இறைவனிடம் நான் வைக்கும் பிரார்த்தனை.

  குமாரசாமியின் பொய்க்கணக்கின் தயவில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் சரியான நேர்மையான முறையான தீர்ப்பை வழங்கி ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அவரது வேட்புமனு நிராகரிக்கப் பட வகை செய்தால் அதுவே தமிழ்நாட்டின் பொற்காலத் துவக்கம் ஆகும்.

 2. குமரன்

  2013 பாராளுமன்றத் தேர்தலில் பி.ஜெ.பி வாக்குகளை ஜெயா திருட வசதியாக ஜவஹிரிருல்லா அப்போது மட்டும்திமுக பக்கம் சாய்ந்தார். பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஜெயா ஆதரவானார். இப்போது சட்டமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்னர்தான் திமுக பக்கம் வந்தார். அவரும் ஜெயாவின் கைப்பாவையாகத் தான் செயல் படுகிறார் என்பதைக் கருணா நிதி உணரவில்லை.

  குறிப்பாக ஐந்து தொகுதிகளைக் கேட்டுப் பெற்ற ஜவஹிரிருல்லா, உளுந்தூர்ப் பேட்டையை மட்டும் திமுகவுக்குத் திருப்பித் தரக் காரணம் என்ன? அவருக்கு அங்கே விஜயகாந்த் B team சார்பாகப் போட்டி இடப் போவது ஜெயாவின் உளவுத் துறை மூலம் முன்னரே தெரியும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஜவஹிரிருல்லா ஜெயாவின் உளவாளி என்பதைக் கருணாநிதி உணர்வது திமுகவுக்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *