BREAKING NEWS
Search

‘ஆணியாகப் பிறந்தாய்… உனக்கு அடிகள் புதிதில்லை!’ – சிலிர்க்க வைக்கும் லிங்கா பாட்டு

‘ஆணியாகப் பிறந்தாய்… உனக்கு அடிகள் புதிதில்லை!’ – சிலிர்க்க வைக்கும் லிங்கா பாட்டு

Lingaa-audio

லைவருக்கு பாட்டெழுதுவது என்றால் வைரமுத்துவுக்கு அப்படி ஒரு உற்சாகம். லிங்காவில் அவர் எழுதியுள்ள உண்மை ஒரு நாள் வெல்லும் பாடல், தலைவரின் குணத்தையும் அனுபவத்தையும் ஒருங்கே சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

அந்தப் பாடல்…

உண்மை ஒருநாள் வெல்லும் இந்த
உலகம் உன்பேர் சொல்லும் – அன்று
ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா

பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று
நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே
கலங்காதே
கரையாதே

ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை
உனக்கோ அழிவில்லை

ஆணியாகப் பிறந்தாய் – உனக்கு
அடிகள் புதிதில்லை
கலங்காதே
கலங்காதே
கரையாதே

சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு

பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் – அதன்
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது
சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா

மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம்தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானே!
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் – அவன்
புன்னகையைக் கொள்ளையிட முடியாது

-என்வழி




5 thoughts on “‘ஆணியாகப் பிறந்தாய்… உனக்கு அடிகள் புதிதில்லை!’ – சிலிர்க்க வைக்கும் லிங்கா பாட்டு

  1. Manoharan

    பின்னிட்டார் வைரமுத்து..அல்டிமேட் மாஸ்…

  2. kumaran

    ராமனும் அழுதான் தர்மனும் அழுதான் ஆனால் நீயோ அழவில்லை – சூப்பர்

  3. anbudan ravi

    பொன்னாடை போர்த்திவிட்டு
    உன்னாடை அவிழ்ப்பதுண்டு

    நிகழ்கால சம்பவங்கள்…..நேர்த்தியான வரிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன…..ஞாயிறு விடியலுக்காக காத்திருக்கிரும் தலைவா….

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *