BREAKING NEWS
Search

ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை! – மத்திய அமைச்சர்

 ‘பெருமை பத்மபவிபூஷணுக்குத்தான்!’

thalaivar-thanks

ஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை! – மத்திய அமைச்சர்

கோவை: ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குதான் பெருமை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 2–ந்தேதி கோவை வருகிறார். அன்று அவர் கோவை சிங்காநல்லூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் கோவை கொடிசியாவில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

விழா ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை.

ரஜினி சிறந்த நடிகர். மக்கள் ரசிக்கும் சூப்பர் ஸ்டார். நடிப்பைத் தாண்டி தலைமுறை தலைமுறையாக அவரை மக்கள் நேசிக்கிறார்கள்.

வருங்கால சந்ததியினரும் அவரது நடிப்பை ரசிக்கிறார்கள். காரணம், அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் ஆவார். அவருக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை,” என்றார்.

-என்வழி
4 thoughts on “ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை! – மத்திய அமைச்சர்

 1. jegan N

  அவார்டுகள் கொடுப்பதில் அரசியல் இருக்கிறதா?? நிச்சயம் இருக்கிறது..

  வெளியுறவுக் கொள்கையில் Hard power(ராணுவம்) மற்றும் Soft power(பண உதவி) என்று இரண்டு விஷயங்கள் உண்டு. அதை செவ்வனே வலிமையான நாடுகள் மற்ற நாடுகள் மீது உபயோகப்படுத்தும்.

  அதே போல் உள்துறையில், CBI உபயோகிப்பது தவிர்க்க முடியாதது ஆகிறது.. அது சரியா, தவறா என்ற வாதம் வேறு.. எல்லாம் சரியாக, சீராக நடத்து கொண்டிருக்கும் உலகில் நாம் இல்லை.. அது எப்போதும் வரப் போவதும் இல்லை.. நேர்மையை, மிகச் சீராக அரசியலில், அதுவும் இன்றைய அரசியலில் கடைபிடித்தால், காமராஜர் போன்று சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்படுவீர்கள் என்பதே எதார்த்தம்..

  கையில் போலீஸ் இல்லாத ஜெயலலிதா பெரிய புலியா… கொடநாட்டில் பதுங்கி நெலியும் புழு.. அவர் போலீஸை தன் சுயநலத்திற்கு உபயோகப்படுத்தினால், என்னா கெத்து என்று கொக்கரிக்கும் ‘நடுசென்டர்கள்’, மத்திய அரசு, அவர்கள் அதிகாரத்தை உபயோகப்படுத்துவதை கேள்வி கேட்கக் கூடாது.

  அவார்டுகளும் அது போல ஒன்று தான். சரி ரஜினிகாந்த் விக்ஷயத்திற்க்கு வருவோம். பத்ம விபூஷன் விருது கிடைக்க, என்ன செய்தார் ரஜினி என்று பரவலாக ஒரு கேள்வி.. இதன் மூலம் அரசு அவார்ட்கள் என்றாலே, சமுதாயத்திற்கு ஏதோ செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே முகநூல் ‘போராளிகளுக்குள்’ இருக்கிறது. ஆனால் அனைவரும் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள்.. அவரவர் துறையில் சாதித்தவர்களுக்கும் இந்த அவார்டுகள் வழங்கப்படுகிறது. பத்ம விபூஷன், கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொதுப்பணி, வியாபாரம் போன்றவற்றில் பெரிய அளவில் சாதித்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சினிமாவில் ரஜினிகாந்த் மிகப் பெரிய சாதனையாளர் என்பதற்க்கு மாற்றுக் கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன். அதை கொடுத்ததில் பாஜக ஆதாயம் தேடப் பார்க்கிறதா என்றால் இருக்கலாம். இது தேர்தல் நேரம் வேறு..

  சச்சினுக்கு பாரத ரத்னா கொடுப்பதற்க்கு ஒரு பிரச்சனை வந்தது. ஏனென்றால் பாரத ரத்னா கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொது சேவை பிரிவுகளில் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் விளையாட்டு என்ற பிரிவு இல்லாததால் சச்சினுக்கு கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அவருக்காக சற்று மாற்றம் கொண்டு வரப் பட்டு, பாரத ரத்னா சச்சினுக்கு கொடுக்கப்பட்டது. இதை எதற்கு கூறுகிறேன் என்றால், அவார்டுகள் கொடுப்பதில் ஏதேனும் அரசியல் இருந்தாலும், பேப்பர் வொர்க்குக்காகவாவது சட்டம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

  இதற்கெல்லாம் மேல், ரஜினுக்கு பத்மபூஷன் 2000லேயே வழங்கப் பட்டு விட்டது.. இப்போது கொடுப்பது அடுத்த லெவல்தான்.. and அவார்டுகளை தங்கள் பெயருக்கு முன்னால் போடக்கூடாது என்பது சட்டம். அதை போடாத ஒரு ஆள் ரஜினிகாந்த். கமல்ஹாசன் இதை தெரியாமல் உபயோகப்படுத்தி இருக்கலாம். அவர் சினிமாவில் டைட்டில் கார்டில் எல்லாம் பத்மஸ்ரீ கமலஹாசன் என்று போட்ட காலம் உண்டு…

  அது மட்டுமில்லாமல், எம்ஜிஆர் பல்கலைக் கழகமும், புதுச்சேரி பல்கலைக் கழகமும் , ‘டாக்டர்’ பட்டம் கொடுக்க முன்வந்த போது, அதை தவிர்த்தவர் ரஜினிகாந்த், என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

  எண்பது வயதில் ஹீரோவாக நடித்தாலும் ஓபனிங்கும், கலெக்ஷனும் குறையவே போகாத ரஜினிகாந்திற்க்கும், நரசிம்ம ராவ் முதல் மோடி வரை, பிரதமர்களே வீடு தேடி வரும், நடிகர் எம்ஜிஆருக்கே கிடைக்காத, பாக்கியம் பெற்ற ரஜினிகாந்திற்க்கும், இந்த அவார்ட் ஒன்றும் extra பெருமை சேர்த்து விடப் போவதில்லை.. அது இந்த கலைஞனுக்கு செலுத்தப்படும் ஒரு மரியாதை. அவ்வளவே..

  சினிமா படச் செய்தியை முதல் பக்கத்திலும், டிக்கட் ரிசர்வேஷன் அன்று இடையூறு வரும் என்று பஸ் ரூட்டுகளையே மாற்றி விட கட்டாயம் ஏற்படும் அளவிற்கான சூழ்நிலையை, ஒரு படம் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு நடிகருக்கு, பத்ம விருதுகளும், ரத்னங்களும் பெரிதல்ல, அவருடைய ரசிகர்களுக்கு முன்னால்…

  ‪#‎Only‬ Rajni and even he cannot replicate himself again…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *