BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நூறாண்டு இந்திய சினிமாவின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது – மத்திய அரசு அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நூறாண்டு இந்திய சினிமாவின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது – மத்திய அரசு அறிவிப்பு

thalaivar123

டெல்லி:  நூறாண்டு இந்திய சினிமாவின் சிறந்த திரை ஆளுமைக்கான விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்குகிறது மத்திய அரசு.

45-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இத் தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நேற்று அறிவித்தார்.headlines

நவம்பர் 20-ம் தேதி தொடங்கவுள்ள இந்த விழாவில் தலைமை விருந்தினராக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொள்கிறார். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 75 நாடுகள் பங்கேற்கின்றன. 60-க்கும் மேலான அயல்நாட்டு திரைப்படங்களும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 7 திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கின்றன.

ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்ட செய்தி நேற்று மாலை வெளியானதிலிருந்து சமூக வலைத் தளங்களில் மிக அதிக அளவு பகிரப்பட்டது. ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

-என்வழி ஸ்பெஷல்
11 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நூறாண்டு இந்திய சினிமாவின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது – மத்திய அரசு அறிவிப்பு

 1. Lakshmikanth K

  தேரே இச் தி ஆபீசியால் ற்றச்க்லிஸ்ட் ஒப் தலைவர்’ச லிங்கா
  1. Oh Nanba
  Singers: S.P. Balasubramaniam, Aaryan Dinesh Kanagaratnam
  Vairamuthu
  2. En Mannavva
  Singers: Srinivas, Aditi Paul
  Vairamuthu
  3. Indianne Vaa
  Singers: A.R. Rahman
  Vairamuthu
  4. Mona Gasolina
  Singers: Mano, Neeti Mohan, Tanvi Shah
  Karky
  5. Unmai Orunaal Vellum
  Singers: Haricharan
  Vairamuthu

 2. Saktheeswaran

  விருதால் தலைவருக்கு பெருமையில்லை
  தலைவரால் தான் விருதுக்கு பெருமை

 3. srikanth1974

  விருதுக்கு பெருமை சேர்த்த எங்கள் வெண்தாடி வேந்தனே! வாழ்த்துக்கள்.

  உருவில் லிங்கா
  உறுமலில் சிங்கா
  உன்புகழ் என்றும் மங்கா

 4. மிஸ்டர் பாவலன்

  அரசியல் தொடர்புகள் ரஜினிக்கு இது போல் விருதுகள் பெற
  பெரிதும் உதவுகின்றன.. அரசியலில் இருந்து உலக நாயகன் அறவே
  விலகி இருப்பதால் அவருக்கு இது போன்ற விருதுகள் பெற நல்ல
  தகுதி உடையவர் என்றாலும் சற்று தாமதமாக வருகின்றன..

  -== மிஸ்டர் பாவலன் ==

 5. L. Ganesan

  தலைவர் யார் வலையுளும் சிக்க மாட்டார்

 6. குமரன்

  தலைவருக்கு அரசியல் தொடர்பு என்பதும், அதனால் அவருக்கு இதுபோன்ற விருதுகள் வருகின்றன என்பதும் ஏற்புடையதல்ல.

  அரசியலார், தமது சொந்த அரசியல் ஆதாயம் கருதி தலைவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதனால் பயன் அடைகின்றனர் என்பதுதான் உண்மை. கருணாநிதி, ஜெயலலிதா, சோ, முப்பனார், மோடி, வாசன், இளங்கோவன், ஸ்டாலின் என்று ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் ஆதாரத்துக்காக மட்டுமே தலைவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர் என்பதுதான் உண்மை. மாறாகத் தலைவர் அத்தொடர்புகளைத தமக்காக ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

  ஆனால், கமலஹாசன் செய்வது அப்பட்டமான மதவாத அரசியல், எதுவுமே தெரியாதது போல ஒரு நாடகம் வேறு. அவருக்குக் கருணா நிதி, ஜெயலலிதா, மோடி, வீரமணி, சுப.வீரபாண்டியன், சோ என்று ஒவ்வொருவருடனும் தொடர்பு இருக்கத்தான் இருக்கிறது.

  கமலஹாசன் தொடர்ந்து இந்துமதத்தைத் தாக்கி வருவது அவரது அப்பட்டமான மதவாத அரசியல். இதுதான் அவரை விஸ்வரூபம் எடுத்துக் குழியில் தள்ளியது என்றால் அது மிகை அல்ல.அவருக்கு விருதுகள் எதுவும் தாமதமாக ஒன்றும் வரவில்லை.அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *